Thursday, April 7, 2011

அஞ்சறைப்பெட்டி 07.04.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தேர்தல் கமிஷனின் அதிரடி உத்தரவு பட்டையை கிளப்புகிறது கடந்த திங்கள் மாலை ஊரில் இருந்து கோவை காரில் திரும்பிக்கொண்டு இருக்கும் போது நாங்கள் வந்த வாகனம் கிட்டத்தட்ட 6 இடங்கிளில் சோதனைக்கு உள்ளானது.

அனைத்து இடத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் 5 படையினர் ஒரு கேமரா மேன் சகிதமாக காரில் இருக்கும்  பொருட்களை செக் செய்து அனுப்புகின்றனர். நிறைவாக இருந்தது அவர்கள் சோதனை.

தேர்தல் நேரத்தில் இவ்வளவு கோடிகள் கணக்கில் வராமல் சிக்குகிறது என்றால் மற்ற நேரங்களில் சோதனை செய்தால் எவ்வளவு பணம் சிக்குமோ????

...............................................................................................
 
மீண்டும் கிரிக்கெட் திருவிழா இந்த திருவிழா கிரிக்கெட் வாரியம் பணம் சம்பாரிப்பதற்காக நடத்தும் திருவிழா. உலக போப்பைக்கு கொடுத்த வரவேற்பை இதற்கும் கொடுத்து கிரிக்கெட் வாரியத்தை பணத்தால் வாழவைப்போம்.

...............................................................................................

திருச்சி ஆம்னி பஸ்ஸில் அநாதையாக கிடைத்த 5 கோடி இது தான் ஊரெல்லாம் பேச்சு எப்படி வந்தது 5 கோடி அதை எப்படி கண்டு பிடிச்சாங்க இதை யோசித்தாலே தலை சுற்றுகிறது..

........................................................................................................

வாக்குச் சாவடிகளில் நாம் செல்வதற்கு முன்பே வேறு யாரும் சென்று கள்ள ஓட்டு போட்டு விட்டால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

தேர்தல் அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி வாக்காளர்கள் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய்யலாம். இதற்காக வாக்குச் சாவடிகளில் ஓட்டுச் சீட்டும் வைக்கப்பட்டு இருக்கும்.

நல்ல விசயம் தேர்தல் முடிந்ததும் எத்தனை கள்ள ஓட்டுக்கள் விழந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க உதவும்.

........................................................................................................

தேர்தல் பிரச்சாரம் களை கட்டுவது நடிகர், நடிகைகளால் தான் இவர்கள் அவர்களை திட்டுகிறார்கள் அவர்கள் இவர்களை திட்டுகிறார்கள் மொத்தத்தில் கூட்டம் கூடி களை கட்டுகிறது பிரச்சாரம்....

நாட்டு நடப்பு
எந்த இடத்தில் பார்த்தாலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டுகிறது அந்த அளவிற்கு தேர்தல் கமிஷனின் உத்தரவும், கெடுபிடியும் வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையாகது.

தகவல்

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதை விடுத்து அதிக நேரம் வேலையிலேயே செலவு செய்தால் தேவையற்ற உடல் நலக் கோளாறு ஏற்படும் குறிப்பாக 11 மணி நேரம் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தகவலை லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் கள் அங்குள்ள ஒயிட்ஹால் அலுவலகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக 7 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.   இந்த கால கட்டத்தில் அவர்கள் வேலை பார்த்த நேரத்தை கணக்கிட்டனர்.

மேலும் இருதயம் மற்றும் உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கையை ஆராய்ந்தனர். அவர்களில் 192 பேர் மாரடைப்பு நோயாளிகளாக இருந்தனர். அவர்கள் நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிந்தவர்கள் இவர்கள் ஒயிட்ஹால் அலுவலகத்தில் மட்டுமின்றி வெளியிலும் கூடுதலாக வேறு வேலைகள் செய்து வந்தனர்.

எனவே 11 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை பார்த்தால் மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் என் செய்வேன் என்ற தலைப்பில் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார். அனைத்தும் அனைவரும் அறிய வேண்டிய விசயங்கள்..
http://www.tamiltel.in/

தத்துவம்

வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்; குறைவாக பேசுங்கள்; நிறைய நேரம் செயல்படுங்கள்.

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது
.

20 comments:

  1. வடை? போண்டா? பஜ்ஜி?

    சுடச்சுட தந்த தகவல்களை சூட்டுடனே படிச்சாச்சு!!

    ReplyDelete
  2. இன்றைய அஞ்சறைப்பெட்டி சூப்பர்

    ReplyDelete
  3. 400வது பின்தொடர்பவர்களுக்கு வாழ்த்துகள் தலைவா..!!

    ReplyDelete
  4. வழக்கத்தை விட இன்றைய அஞ்சறைப்பெட்டி தகவல்கள் கூடுதல் சுவாரஸ்யம். இந்தியா கோப்பையை வென்றதும் பதிவுகளில் அதை படிக்கும்போது மேலும் ஆர்வங்கள் தொடர்கிறது.....

    ReplyDelete
  5. தத்துவம் மகிவும் அருமை. நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  6. //வெற்றிபெற //ஓட்டு போடுங்க

    ReplyDelete
  7. ம்.. அசத்தல்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. அஞ்சறைப் பெட்டியின் ஒவ்வொரு அங்கமும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. சங்கவி.. நம்ம வக்கீல் ஓட்டு போட சொல்றது அவர் பிளாக்கிலா? ஹா ஹா

    ReplyDelete
  10. நண்பா அஞ்சறைப்பெட்டி சூப்பர்!

    ReplyDelete
  11. தேர்தல் அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி வாக்காளர்கள் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய்யலாம். இதற்காக வாக்குச் சாவடிகளில் ஓட்டுச் சீட்டும் வைக்கப்பட்டு இருக்கும்//

    வரவேற்க்கதகுந்த மாற்றம்...

    ReplyDelete
  12. கலக்கல் பாஸ்!

    ReplyDelete
  13. //நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதை விடுத்து அதிக நேரம் வேலையிலேயே செலவு செய்தால் தேவையற்ற உடல் நலக் கோளாறு ஏற்படும் குறிப்பாக 11 மணி நேரம் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. //

    பத்து மாசமா லீவே இல்லாமல் பனிரெண்டு மணி நேரம் வேலை பார்த்துட்டு இருக்கேன் [கட்டாயம்] ஏன்யா இப்பிடி பயங்காட்டுகிரீர்..

    ReplyDelete
  14. //எனவே 11 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை பார்த்தால் மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.// என்னங்க, இப்படிப் பயமுறுத்துறீங்க!

    ReplyDelete
  15. தத்துவங்கள் வாசனை !

    ReplyDelete