Tuesday, July 17, 2012

கிராமத்து மனசு....2


கிராமம்  வயலும் வயலைச்சார்ந்த இடமும் வலதுகரை வாய்க்கால் தண்ணீர் பாய்ச்சலில் செழிப்பான கிராமமிது.. இந்த ஊரில் வாழம் மக்களில் பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்து பெயரைச் சொன்னலே பக்கத்து கிராம மக்கள் அனைவரும் கொஞ்சம் பயப்படுவர் அந்த அளவிற்கு ஒற்றுமை இந்த ஊர் ஒரமாக உள்ள முனியப்பன் கோவிலும்  அங்கே அமைந்துள்ள ஆலமரமும் அதில் தூரிகட்டி அடும் அழகை என்றும் ரசிக்கலாம்.

அந்த அழகான கிராமத்து பள்ளியில் அமர்திருக்கையில் காயத்திரி மட்டும் அன்று பள்ளிக்கு வரவில்லை. சரவணனுக்கு வருத்தம் என்ன ஆச்சு ஏன் இன்று இன்னும் பள்ளிக்கு வரவில்லை என்று குழப்பத்தோடு காணப்பட்டான். அன்று மாலை அவன் வீட்டுக்கு பின் 4 வீடு தள்ளி இருக்கும் காயத்திரி வீட்டுக்கு போய் பார்க்கலாம் என்று முடிவு செய்து எப்படா மணி 5 ஆகும் வீட்டுக்கு போவோம் என்று காத்திருந்தான்..

வீட்டுக்கு சென்ற போது அவன் அம்மா அப்பத்தான் வீட்டுக்குள் நுழைந்தாள். வாப்பா இப்பத்தான் உங்கூட படிக்குதே காயத்திரி அவுங்க வீட்டுக்கு போய்ட்டு வந்தேன் காயத்திரி பெரிய மனுசி ஆகிட்டாப்பா இனி மேல் எல்லாம் உங்க கூட வந்து விளையாட வரமாட்டாள் என்று வீட்டினுள் நுழைந்ததும் அவன் திக்கு தெரிந்தாமல் விழி பிதுங்கினான்...

தினமும் விளையாடிய காயத்திரி அன்று முதல் விளையாட வரவில்லை அந்த பகுதியில் பெண் பெரியவள் ஆனால் நிறைய பேர் படிப்பை நிறுத்தி திருமணத்தை நடத்துவர்கள் ஆனால் காயத்திரியின் அப்பா ஊரின் முக்கியஸ்தர் நிறைய நல்லது செய்துள்ளார் பெண் பிள்ளை மேல் உள்ள பாசத்தில் பள்ளியில் படிக்க அனுப்பினார். பள்ளியில் காயத்திரியை பார்த்ததும் சரவணனுக்கு சந்தோசம். ஆனால் முதல் மாதிரி இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கண்ணால் பேச ஆரம்பித்தான் சரவணன்.

பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதியதும் தனது காதலை சொல்ல காயத்திரியிடம் காத்திருக்குபோதும் சொல்ல இயலவில்லை எப்படி சொல்வது என்று நிறைய சந்தர்ப்பங்களை எதிர்பார்த்தான். ஊர்த் திருவிழாவில் அவள் இவனுக்காகவே காலை மாலை என இரு வேளையும் கம்பத்து தண்ணீர் ஊற்றினாள் காயத்திரி ஆனால் பேசும் சந்தர்ப்பம் அதிகம் அமையாமல் காத்திருக்கும் போது சைக்கிள் ஓட்டி பழகிய கொண்டிருந்த காயத்திரியிடம் பக்கத்தில் வந்து தன் காதலை சொல்லி இவன் ஓடுகையில் சைக்கிளை கீழே போட்டு விழந்து சிரித்துக்கொண்டி இருந்தாள்.. கால ஓட்டத்தில் காதல் கடிதத்தில் வளர்ந்தது காதல்.

இவன் பிஇ படிக்க வெளியூர் செல்ல அவள் டீச்சர் டிரெயினிங் படித்து உள்ளுரிலேயே அரசு பள்ளியில் வேலையில் சேர்ந்தால் இவன் கல்லூரி விடுமுறை காலங்களில் ஊருக்கு வரும் போது கிணற்று மேட்டிலும், சோளக்காட்டிலும், ஆலமர தூரியிலும் வளர்ந்தது இவர்கள் காதல்.

சரவணன் படித்து முடிந்து வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து திருமண பேச்சை வீட்டில் எடுத்த போது தன் காதலை தன் அம்மாவிடம் சொல்ல அம்மா அப்பாவிடம் சொல்ல சிறு எதிர்ப்பிற்குப்பின் சம்மதித்தனர். காயத்திரியின் தகப்பனாரிடம் யாரை அனுப்பி பேசலாம் என்று யோசிக்கும் போது குண்டுமணியை அனுப்பலாம் என்றும் அவர் ஊர் பெரியவர் மட்டுமல்ல கொஞ்சம் சண்டியர் நியாத்துக்கு போராடுபவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் சரவணன் படிப்பிற்கு கொஞ்சம் உதவியர் என்பதல் சரவணின் அப்பா அவரிடம் விசயத்தை சொல்ல எத்தனை வருட காதல் என்று கேக்க 12 வருடம் என்றதும் கொஞ்சம் அசந்து போனார் குண்டுமணி..

கிடட்டத்தட்ட 8 வருடங்கள் வெளியூரில் இருந்தாலும் தன் முதல் காதலித்த பெண்ணையே கரம் பிடிக்க எண்ணிய சரவணனுக்கு உதவ காயத்திரி அப்பாவிடம் பேசினார். அவர் நாளை இதைப்பற்றி பேசலாம் என்றவர் வீட்டில் சென்று மனைவியை அழைத்து 12 வருடமாக காதலிக்கிறாளாம் உனக்கு தெரியாதா? பிள்ளை என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று கூட பார்க்காமல் என்ன வளர்த்தாயோ என்றதும் நீங்க தான் அவளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தீங்க இப்ப என்ன கேக்கறீங்க என்ற திரும்ப பேச என்ன செய்வது என்று விடிய விடிய யோசித்தார் ஆனால் தன் ஆசை மகளை ஒரு வார்த்தை கூட கேக்கவில்லை..

சரவணனும், காயத்திரியில் அலைபேசியில் பேசும் போது எங்கப்பா என்னை கேட்டால் நான் சரவணனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெளிவாக சொல்லிவிடுகிறேன் என்றாள் அவர் கேட்காததால் இருவருக்கும் குழப்பம்.

அடுத்த நாள் குண்டுமணியை சந்தித்த காயத்திரியின் அப்பா நீங்க சொல்வது சரிதான் நான் அந்த பையனிடம் தனியாக பேசவேண்டும் எப்ப ஊருக்கு வருவான் என்றார் வரும் வார இறுதியில் வருவான் என்றதும் சரி தோட்டத்துக்கு வரச்சொல்லிடுங்க கூட நீங்களும் வாங்க என்றார்.

ஞாயிறு அன்று தோட்டத்தில் சந்திக்க செல்லும் போது சரவணன் தனது அலைபேசியில் அழைத்து காயத்தியிடம் பேசிவிட்டு அவளும் எங்க அப்பா பேசுவதை நானும் கேட்க வேண்டும் என்று ஆன் செய்தே வை என்றாள்..

தோட்டத்துக்கு சென்றதும் அன்போடு விசாரித்த காயத்திரியின் அப்பா வேலை மற்ற விபரங்களை எல்லாம் கேட்டுவிட்டு உன்னை சிறுவயது முதலே எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் காதலிப்பதும் எனக்கு நன்றாக தெரியும் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவள் தேர்வு சரியாக இருக்கும் என்பதற்ககாக மட்டுமல்ல உங்க குடும்பம் நல்ல குடும்பம் என்பதற்காகவும், இந்த வயதில் உங்களை மிரட்னால் நன்றாக படிக்க மாட்டீங்கள் எனவும் நான் உங்களை எந்த கேள்வியும் கேட்கவில்லை..

நீ படிக்கும் ஊரில் ஓரிருமுறை உன்னை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது அப்போது தான் தெரிந்து கொண்டேன் உன்னிடம் எந்த கெட்டபழக்கமும் இல்லை என்று. நன்றாக படித்துள்ளாய் நல்ல வேலையில் உள்ளாய் நீ ஏன் வேறு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்றார் நிதானமாக.... சரவணன் கண்ணில் நீர் பொழ பொழ வென்று வந்தது.

காயத்திரியை சந்தோசமாக வைத்துக்கொள்ளத்தான் நான் இந்த அளவிற்கு முன்னேறினேன். இன்று நன்றாகவும் இருக்கின்றேன் இப்படி சொல்கிறீர்கள் என்றான்.

குறிக்கிட்ட குண்டுமணி என்னய்யா பேசற இவ்வளவு நேரம் பாரட்டிட்டு கடைசியில் இப்படி சொல்கிறாய் நீ சாதி பார்க்கமாட்டாய் என்று தெரியும் அதுவும் சரவணன் உன் சாதிதான் என்ன நெருங்கிய உறவு கிடையாது அப்புறம் ஏன் இப்படி சொல்ற நீ ரொம்ப தப்பு செய்கிறாய் என்று அவர் அதட்ட...

இல்ல மணி நான் சரவணன் நன்றாக இருக்கவேண்டும் என்தற்காகத்தான் சொல்கிறேன் அவன் என் மகளை திருமணம் செய்தால் நன்றாக வாழ இயலாது அதனால் சொன்னேன் என்றான். ஏனய்யா வாழ முடியாது அவனுக்கு சொத்து பத்து இல்லையா இல்ல உனக்குத்தான் சொத்து பத்து இல்லையா என்று குண்டு மணி கோபமாக பேச...

அவளுக்கு இதயமே இல்லையா என்று கதறினார் காயத்திரி அப்பா... இது வரை யாருக்கும் ஏன் காயத்திரிக்கே தெரியாது பார் அவளின் டாக்டர் ரிப்போட்டை என்று புல்லட்டில் வைத்திருந்த அவளது 12 வயதாகும் போது எடுத்த ரிப்போட்டை கான்பித்தார் அதில் காயத்திரிக்கு சிறுவயதிலேயே இதய வால்வுகள் சரியான அளவு வேலை செய்யவில்லை இந்த ரிப்போட்டை நான் கான்பிக்காத மருத்தவர்  30 வயது வரை தான் இருப்பாள் எனவும் இதயத்தை மாற்றினாள் இன்னும் ஒரு வருடம் சேர்ந்து இருப்பாள் என்று சொல்றாங்க.. தெரிஞ்சு எப்படியா கட்டி வைப்பேன்..

இதைக் கேட்ட காயத்திரி திக்கெற்று நின்றாய் நெஞ்சில் சளி அப்படின்னு தானே இத்தனை நாளும் அப்பா மருத்துவமனைக்கு கூட்டி சென்றார் என்று ரிப்போட்டை தேடி பார்த்தாள் ஆனால் அவளால் புரிந்து கொள்ள இயலலில்லை...

அவள் இருக்கும் வரை அவளைப்பார்துகொண்ட இருக்கிறேன் என்று இன்றும் மும்பையில் வேலை செய்யும் சரவணன் திருமணம் செய்து கொள்ளவில்லை..

சரவணின் திருமணத்திற்காக தனது சம்பளத்தை தனியாக அவன் பேரில் வங்கியில் போட்டுவைத்த காயத்திரி சரவணன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வான் என்று கடந்த மூன்று மாதமாக படுத்த படுக்கையாக நம்பிக்கையோடு இருக்கிறாள்...

கிராமத்து மனசு....

9 comments:

  1. என்னாடாது கதை எவ்வித குழப்பமுமில்லாமல்
    சீராகப் போகிறதே என சந்தோஷப்பட்டுப்
    படித்துக் கொண்டிருந்த வேளையில்
    திடுமென போட்ட குண்டு சங்கடப்படுத்திவிட்டது
    முடிவு கதைத் தலைப்பை அர்த்தப்படுத்திப் போகிறது
    சரளமான நடை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சவக்குழிதனில்
    பிணியால் பாவம்
    சடுதியில் கொண்டேற்றும்
    வியக்குமிலம்
    உளலாமே!!

    காதலைப் பற்றிய சித்தர் வாக்கு....

    ஜடாமுனி அன்னிக்கே கரீட்டாத்தான் சொல்லீர்க்கான்யா!!!

    ஆனாலும், காதலின்றி உலகேது?

    ReplyDelete
  3. நடத்துங்க ஜார்!!!!

    இந்த கிராமத்து மனசு காத்துக்கெடக்கு....

    ReplyDelete
  4. கதை அருமை .உங்களின் கதைக்கு நான் முடிவு சொல்லக்கூடாதுதான் இருந்தாலும் சொல்கிறேன். சரவணன், காயத்திரி சாகும்போது என் மனைவியாக சாகட்டும் என்று கூறியிருந்தால் அந்த கிராமத்து காதல் மனசு இன்னமும் உயர்ந்திருக்கும். அந்த மாதிரி திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி எனக்கு தெரிந்ததால் சொல்கிறேன். இன்று அறிவியல் முன்னேற்றத்தால் உடல் நலமாகி ஆனந்தமான வாழ்க்கை நடத்துகின்றனர்

    ReplyDelete
  5. முடிவு...
    கிராமத்து மனசு கிராமத்து மனசுதான்
    என்று சொல்ல வைக்கிறது நண்பரே...

    ReplyDelete
  6. கிராமத்து மனசு கலக்கல்.

    ReplyDelete
  7. ezhuthu nadai!

    nantraaka ullathu!

    karpanai entraal -
    mikka santhosam!

    unmaiyentraal....

    vendaam pinnoottathil kuruppida vendaam!

    ReplyDelete
  8. Satish,

    Neat narration, i feel very bad after reading the end of the post..... thanks for sharing.

    ReplyDelete