Thursday, August 30, 2012

சென்னை பதிவர் சந்திப்பில் இப்படியும் நடந்தது...


சென்னை பதிவர் சந்திப்பு என்றதும் நிச்சயம் போக வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் மட்டுமல்ல எங்கள் கோவை நண்பர்களும் வருகின்றேன் என்றனர். பின் எல்லோரும் சென்னை பயணித்தோம்...

சனிக்கிழமை மதியமே சென்று அப்படியே சுத்திவிட்டு மாலை மண்டபத்துக்கு சென்றோம். இரயிலில் வரும்போது அஞ்சா சிங்கமும், ஆரூர் மூனாவும் எங்கே இருக்கின்றீர்கள் என்று கேட்டுகிட்டே இருந்தனர் எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியது. மண்டபத்துக்கு வரும் முன் மீண்டும் வெளியே காத்திருந்து காரில் இருந்து இறங்கியதும் வா நண்பா என்று கட்டி அணைத்து வரவேற்ற அஞ்சாசிங்கத்தையும், எப்போதுமே அதிகம் பேசாத ஆனால் அன்று பேசிய பிரபாகரன் அணைத்து வாங்க வாங்க என்று வரவேற்றதும் அத்தனை மகிழ்ச்சி.

நாம் எண்ண சிறுவயதில் இருந்து படித்தவர்களும் இல்லை, சொந்தக்காரனும் இல்லை ஆனால் சொந்தக்காரனை விட பாசம் அதிகம் நண்பனிடம் தான் என்று சொல்வார்கள் அதற்காகத்தான் விழாவிற்கு நிச்சயம் செல்ல வேண்டும் என்று சென்றேன் அந்த பாசத்தில் மகிழ்ந்தேன்..

உள்ளே அண்ணன் மோகன், பால கணேஷ், பட்டிக்காட்டானை முதலில் அன்று தான் பார்த்தேன் ஆனால் ஏதோ பல வருட நட்பு போல பேசியது மனமகிழ்ச்சியே.. மதுமதி, ஐயா இரமானுஜம் ஆகியோரை சந்திதித்து விட்டு இரவு விடை பெற்று தங்கும் இடம் வந்தோம்...

காலை பரபரப்பு எத்தனை பேர் வரப்போகிறார்கள் யார் யாரை எல்லாம் சந்திக்க இருக்கிறோம் என்று காரில் செல்லும் போதே உள்ளுர மகிழ்ச்சி. வரவேற்று பெயர் பதிந்தார்கள் ஒவ்வொருவரையும் விடியோவில் பேச வைத்து உள்ளே அனுப்பினர் நிகழ்ச்சிநிரல்கள் எல்லாம் சரியாக நடந்து கொண்டு இருந்தது. இப்போது தான் வெள்ளை சட்டையும், கலர் கதர் வேட்டியில் ஒருவர் வந்தார் என்னை பார்த்ததும் சிரிப்பு மட்டுமல்ல அன்பான அணைப்போடு வரவேற்று வந்ததில் மகிழ்ச்சி என்றார் அன்பர் ஆரூர் மூனா.

திடீரென நீதான் சங்கவி என்றார் ஆம் என்றேன் நான் தாய்யா சேட்டை என்றார் எதிர்பார்க்கவில்லை அவரை சந்தித்தது ஓர் இன் மகிழ்ச்சியே..

ராஜி வந்து எப்படி இருக்கீங்க என்று அழைத்ததும் அகமகிழ்ச்சி.

வேடந்தாங்கல் கருண் மற்றும் கவிதை வீதி சௌந்தரை முதன் முதலாக அப்போது தான் சந்தித்தேன் ரொம்ப நாள் பழக்கம் அன்று தான் சந்திக்க முடிந்தது. 

அப்போது தான் சரக்கடிக்காத கோபத்தில் வந்தார் மாம்ஸ் நாய் நக்ஸ் ஏன்டா நைட்டு வரல வருவீன்னு எதிர்பாத்தேன் என்று நக்ஸ்க்கு செல்ல கோபம் என் மேல்..

கீழே நின்று கொண்டு இருந்த போது ரஹிம் கசாலி, சிராஜீதீன், இரண்டு பெண் பதிவர்கள் வந்தனர்.. அவர்கள் என்னை பார்த்ததும் சங்கவிதானே நிறைய படித்திருக்கிறேன் என்றார் அந்த அம்மா மிக்க மகிழ்ச்சியாக இருந்தது...

மோகன் அண்ணா அழைத்து மக்கள் டிவியில் பேட்டி பேசுடா என்றார் எங்க குழும நண்பர்களையும் அழைத்துக்கிறேன் என நான் ஜீவா, அகிலா, சரளா என்று பேட்டி கொடுத்தோம் (காத்திருக்கிறேன் வருமா வராதா என்று)

அடுத்து என் தல என்று எப்போதும் நான் அழைக்கும் மணிஜியும், அகநாழிகை வாசு, கேபிள்  அளவாடிக்கொண்டு இருந்தேன்.. இந்நிகழ்வில் என்னையும் அங்கிகரித்து மேடை ஏற்று பதிவர் அறிமுகத்துக்கு தொகுத்து வழங்க வாய்ப்பளித்த விழாக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

இடையில் ரிட்டன் டிக்கெட்டுக்காக வெளியே சென்றிருந்துவிட்டு பின் தான் வந்தேன் வந்ததும் என் முகநூல் நண்பர்கள் அன்பே சிவம், செல்வக்குமார், பிரபாகரன், ஜெயராஜ் பாண்டியன், மகேந்திரன், தீபா வெண்ணிலா, வேலண்டைனா, சிவா போன்றோரை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி இதில் எனக்கு புத்தகம் பரிசளித்த சகோதரி தீபா வெண்ணிலாவிற்கு இரட்டிப்பு நன்றி.

அதன் பின் தான் பார்த்தேன் என் அன்பு பங்காளி பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கியை அடிக்கடி பேசினாலும் பார்க்கும் போது உள்ள சந்தோசம் என்றும் கிடைக்காது..

சாப்பாட்டு சாப்பிடும் இடத்திற்கு சென்றதும் பளீரென சினிமா உலகம் ஒரு ஹிரோவை மிஸ் செய்தது போல இருந்தது அவரைப்பார்த்ததும் அவரை எனக்கு தெரியும் என்னை தெரியுமா என்று பார்க்க போய் எதிரில் நின்றேன் பார்த்து சிரித்தவர் சங்கவி தானே என்றார்.. (அனுஷ்கா ரேஞ்சிற்கு எதிர்பார்த்திருப்பார் போல) நிறைய முறை அவர் கோவை வந்தாலும் என்னை சந்தித்ததில்லை இனி சந்திப்பார் என நினைக்கிறேன்...

ரோஸ்விக், ஜாக்கி, சேட்டையுடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். அதன் பின் தான் வந்தார் உலக சினிமாவை தன் விமர்ச்சனத்தால் பின்னி பெடலெடுத்த அண்ணன் சூர்யா.. அவரை 3 வருடத்திற்கு முன் பார்த்தது மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியே ( அண்ணே மீண்டும் எழுத வாங்க.. முகநூலுக்காவது வாங்க).

கவியரங்கிற்கு உள்ளே செல்ல அங்கே சித்தப்பு எப்படா வந்த ஒரு போன் கூட செய்யமுடியாது என்று கடித்துக்கொண்டார் சித்தப்பு உண்மை தமிழன்.. அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது பின்னூட்டப் புகழ் நட்புடன் ஜமால் அப்ப அப்ப என் கவிதையை நக்கலடிக்கும் நாயகன்.. ரொம்ப எதார்த்த மனிதன்...

பிகேபி பேசி முடித்ததும் நிகழ்ச்சி முடிந்தது நன்றி உரை என்றனர் ரொம்ப வருடங்களுக்கு பிறகு நாட்டுப்பண் முழுவதும் பாடினேன்.

என்னடா இது அதற்குள் மணி 6 ஆகிவிட்டது அவ்வளவு தானா சந்திப்பு இனி மீண்டும் பின்னூட்டத்தில் தான் சந்திப்பா என பிரிய மனம் இல்லாம் பிரிந்தேன் புண்ணியக்கோடி மண்டபத்தில் இருந்து... 

நிகழ்ச்சி அழகாக திட்டமிடப்பட்டு குறித்த நேரத்தில் நடந்தது. வெளியூர் செல்பவர்கள் கால தாமதம் ஆகக்கூடாது என்று 5.30க்கு எல்லாம் நிகழ்ச்சியை முடித்து எந்த சிரமமும் இல்லாமல் செல்ல வழிவகுத்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்...

ஓர் அருமையான நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கு கோவை குழும நண்பர்கள் சார்பில் அன்பான வாழ்த்துக்கள்...

என்றும் உங்கள்
அன்பு நண்பன்
சதீஸ்.... சங்கவி....

26 comments:

  1. ஓர் அருமையான நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கு கோவை குழும நண்பர்கள் சார்பில் அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒரு நேரடி ஒளிபரப்பை பார்த்தது போல் இருந்தது உங்கள் கட்டுரை. அதே வேகத்தில் கோவை பதிவர் சந்திப்பையும் நடத்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நிகழ்வு சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  4. நெகிழ்ச்சியான பதிவு..
    படிச்சுட்டு கண்ணு கலங்கிட்டேனா பாத்துக்கங்களேன்..
    ஷ்ஷ்ஷ்ப்ப்பா.. ம்ம்ம்முடியல.

    ReplyDelete
  5. Jokes apart..

    முகம் தெரியா பதிவர்களை நேரில் சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
    நிறைவான பதிவு சதிஷ்.
    :-)

    ReplyDelete
  6. பதிவு மறுபடியும் சந்தித்தது போல் இருந்தது... நன்றி...

    ReplyDelete
  7. சங்கவி,

    தெளிவா ,எளிமையா சொல்லிட்டிங்க,

    ஹி...ஹி ரெண்டு டிக்கெட் மட்டும் தானே வாங்கப்போனிங்க?:-))

    ReplyDelete
  8. இதமாக இருந்தது,,நன்றி!!

    ReplyDelete
  9. மிக எளிமையா. உணர்வுபூர்வமா சொல்லியிருக்கீங்க நண்பா. உங்களுடன் அறிமுகமாகி நட்பானது எனக்கு இந்த விழா தந்த அரிய பரிசு. தொடரணும் நட்பு.

    ReplyDelete
  10. வவ்வால்

    //ஹி...ஹி ரெண்டு டிக்கெட் மட்டும் தானே வாங்கப்போனிங்க?:-))

    மீதிய விட்டுட்டீங்க...

    ReplyDelete
  11. உங்களை சந்தித்தது மகிழ்ச்சி கோவை சந்திப்பிற்கு காத்திருக்கிறேன் ..........

    ReplyDelete
  12. ஜில்லுன்னு ஒரு பதிவு! :-)

    ReplyDelete
  13. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  14. சதிஸ்,
    நேரடியாவே கேட்கிறேன், நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னு ஒரு பதிவாவது போடுவீங்களா? ஆரம்பம் முதல் முடிவு வரை?

    நீங்க அசிங்கமா திட்டமாட்டீங்க அப்படிங்கிற முறையில கேட்கிறேன்.

    ReplyDelete
  15. //{ ILA(@)இளா } at: August 31, 2012 5:01 AM said...

    சதிஸ்,
    நேரடியாவே கேட்கிறேன், நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னு ஒரு பதிவாவது போடுவீங்களா? ஆரம்பம் முதல் முடிவு வரை?

    நீங்க அசிங்கமா திட்டமாட்டீங்க அப்படிங்கிற முறையில கேட்கிறேன்.
    //

    இது வரைக்கும் யாரும் அப்படி போடலீயா இளா... தெரிஞ்சிருந்தா நான் போட்டு இருப்பேனே...

    நிறைய பதிவுகள் இருந்ததால் சரி நாம் சந்தித்தவர்களை மட்டும் பதியலாம் என்று சந்தித்தவர்களை மட்டும் பதிந்தேன்...

    ReplyDelete
  16. உங்களை சந்திச்சது மிக்க மகிழ்ச்சி பாஸ்..

    ReplyDelete
  17. இது வரைக்கும் யாரும் அப்படி போடலீயா இளா.//

    ஒன்னே ஒன்னு காட்டுங்க சதிஸ். உண்மையாவே வெக்கப்படுறது இதுக்குத்தான், பதிவர் சந்திப்பைப் பற்றி ஒரு பதிவுமில்லாதது. வெறும் படங்கள் மட்டும்தான் பதிவுன்னா நாம Flickrகு போயிடலாம்.

    நான் படிக்காம இருக்கேன்னா நீங்களுக்கு சுட்டிக் காட்டுங்களேன், உதவியா இருக்கும். அப்படி ஒரு பதிவு வரலைன்னு உங்களுக்கு தெரியும்போது வரும் ஒரு அதிர்ச்சி :)

    ReplyDelete
  18. உங்களை சந்தித்தது மகிழ்ச்சி.
    கோவை சந்திப்பிற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. பதிவர் சந்திப்பைப் பதிவு செய்த விதம் மிக அருமை.

    ReplyDelete
  20. அன்பு சங்கவி,
    பதிவர் சந்திப்பில் உங்களை நேரடியாக சந்திக்கவில்லை என்றாலும் உங்களை அடையாளம் கண்டு கொண்டேன்.
    முதல் சந்திப்பு என்பதால் சிறிது சங்கோஜம் இருந்தது.
    அடுத்த முறை கட்டாயம் உங்களுடன் பேசவேண்டும் காத்திருக்கிறேன்.
    என் பதிவைப் படிக்க: ranjaninarayanan.wordpress.com
    அன்பு,
    ரஞ்ஜனி

    ReplyDelete
  21. முகமறியா நண்பர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு இனிப்பாகவே இருக்கும்!

    ReplyDelete
  22. நன்றி ; அடுத்த சனிக்கிழமை Sep 8th- மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும்; மற்ற நண்பர்களிடமும் சொல்லிடுங்க உங்களையும் மற்ற நண்பர்களையும் (குறிப்பா ஹீரோ ஜீவா) சந்தித்ததில் மிக மகிழ்ச்சி

    உங்கள் ப்ளாக் ஓபன் ஆக நெடு நேரம் ஆகுது இன்ட்லியால் போல

    ReplyDelete
  23. சுவையான பகிர்வு....

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  24. சே ,நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன் .அடுத்தமுறை கண்டிப்பா கலந்துகொள்ள வேண்டும் ,,
    பகிர்வுக்கு நன்றி சங்கவி சார்

    ReplyDelete
  25. // இரண்டு பெண் பதிவர்கள் வந்தனர்..//

    அதுல ஒன்னு நான் தானுங்கோ :-)

    வரவேற்றதற்கும் இங்கே மறக்காமல் குறிப்பிட்டதற்கும் நன்றி :-)

    ReplyDelete