Monday, August 27, 2012

பதிவர் சந்திப்பு வெற்றிக்கு " இது " காரணமா???

பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்கிறது என்பதை முடிவு செய்தவுடன் இதற்காக வாரம் வாரம் சந்திப்பு நடத்தி அதற்காக திட்டமிட்டு கொண்டு இருந்தனர் என்றால் அது மிகையாகது.

சந்திப்பை நடத்துபவர்களும் சந்திப்பைப்பற்றி பதிவிட்டு வரவேற்றனர். கடைசியாக பதிவர் சந்திப்பிற்கு வருபவர்கள் என 120 பேர் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது ஆனால் வந்தபவர்கள் நிச்சயம் 200 பேரை தாண்டி இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது இச்சந்திப்பு.

கடந்த வாரத்திற்கு முன் வரை தமிழ்மணத்தில் பதிவுகளில் பரபரப்பு இல்லை. முதன்முதலாக மனிதாபிமானி தளத்தில் பதிவர் சந்திப்பு குறித்து ஒரு பதிவு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நண்பர் ஆரூர் முனாவும், நாய் நக்ஸ் நக்கீரன் போன்றோர் எதிர் பதிவிட்டு இருந்தனர். இந்த 3 பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டம் கிட்டத்தட்ட 500 இருக்கும். அப்போது தான் மீண்டும் பதிவுலக வருகை அதிகரித்தது.

நிறைய பின்னூட்டங்கள் எதிர்ப்பு பின்னூட்டம் ஆதரவு பின்னூட்டம் என ஒவ்வொரு பதிவும் களை கட்டியது இதே சமயத்தில் பதிவர் சந்திப்பை தலைப்பில் கலந்து நான் ஒரு விதமாக ஒரு பதிவும், நண்பர் அஞ்சா சிங்கம் ஒரு பதிவும் போட சந்திப்பு நாட்கள் நெருங்கி வர பதிவிட்ட எனக்கே கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது இப்படி சண்டை போடுகிறார்களே பதிவர்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட வருமா என்றும் இல்லை அதிகம் வரும் என்று கடைசி நேரத்தில் நண்பர்களுக்குள் கலந்து கொண்டோம்..

எனக்கு எதிர் பதிவாக நண்பர் மெட்ராஸ் பவன் ஒரு பதிவிட நாம் சண்டை போட்டால் இன்னும் வேடிக்கை பார்க கூட்டமும் வரும் ஆனா சந்திப்புக்கு கூட்டம் குறைந்து விட்டால் என்ன செய்வது என்று நாங்கள் இருவரும் நம் விவாதத்தை நிறைவு செய்வோம் நேரில் பேசுவோம் என்று ஒப்புதலோடு அந்த பதிவில் பின்னூட்டத்தை விட்டுவிட்டோம்..

மீண்டும் அடுத்த நாள் வருண் ஒரு பதிவிட்டு இருந்தார் வருணிடம் போய் பேச அங்கு 300 பின்னூட்டத்திற்கு பக்கத்தில் போக அந்த பதிவு மிக அதிகம் பார்வையாளரால் பார்க்கபடுபவராக இருந்தது. அங்கே காரசாரமான விவாதம் நடக்க பீதிவில் இருந்து பேஸ்புக், டிவிட்டர் மூலம் இந்த பதிவுகள் பரவ சந்திப்பு இன்னும் அதிக பேரை சென்றடைந்தது.

நேற்று நண்பர் ஒருவர் எனக்கு சந்திப்பு நடப்பது தெரியாது அதிகமாக திரட்டிகளில் படிப்பதில்லை ஆனால் தீடிரென தமிழ்மணம் பக்கம் போனேன் அங்கே சரக்கு பற்றி அதிக விவாதம் போய்க்கொண்டு இருந்தது அதுவும் சந்திப்பில் என்று போட்டு இருந்தது சென்னை பிரபல பதிவரிடம் போன் செய்து கேட்டேன் ஆமாம் வா என்றார் அப்புறம் தான் வந்தேன் என்றார்.

இந்த சரக்கு விவாதத்தை நேரில் பலர் விசாரித்தனர் என்றால் அது மறுக்கமுடியாத உண்மை...

விவாசதம் முடிந்தது ஆனால் எத்தனை பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து பதிவர்களிடம் பலத்த வரவேற்பாக இருந்தது மண்டபம் நிரம்பி வழிவதை அனைவரும் முகமகிழ்வோடு இருந்தோம் இறுதி வரை...

காலையில் மண்டபத்தில் நண்பர் ஆஷிக் அவர்கள் வந்து நாய் நக்கிடம் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தவர் பதிவிட்ட நாம் எல்லாம் ஒரு போட்டோ எடுக்கலாம் என்று முடிவு செய்தோம் அப்புறம் அப்புறம் என்று அது நடக்காமலே போனது. பின் என்னிடம் வந்து அமர்ந்த ஆஷிக் மிக விபரங்களாக அனைத்து தகவலுடன் வந்திருந்தார் உங்களை எல்லாம் பார்க்கனும் பேசனும் அந்த பதிவை பற்றி பேசனும் என்று பாண்டியில் இருந்து வந்தேன் என்றார். நான் சொன்னேன் நண்பா அது பதிவு இப்ப நண்பர்கள் நாம் மீண்டும் இதைப்பற்றி பேசவேண்டும் எனில் அது பதிவில் தான் பேசவேண்டிய விசயம் இங்கும் நீயும் நானும் நண்பனே என்றேன் மிக்க மகிழ்ச்சியில் ஆம் என்றார்.

இப்ப சொல்லுங்க இந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த சர்ச்சைக்குரிய சரக்கு என்கின்றனர்... நீங்களே சொல்லுங்க ஆமாவா ?? இல்லையா??


சரக்கு பதிவை ஹிட்ஆக்கிய நண்பர்கள்...


ஆஷிக்
 நக்கீரன்
ஆரூர் முனா செந்தில், சங்கவி, அஞ்சா சிங்கம்

32 comments:

  1. ஆஆஆஆஆஆமாமாமாமாமாமமாமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

    ReplyDelete
  2. சங்கவி ,

    சரக்கானப்பதிவு தான்!

    ஹி..ஹி பின்னூட்டத்தில் கபடி ஆடிய என்னை மறந்துட்டிங்களே ,ஒரு வவ்வால் படத்தை புடிச்சு போடுறது ;-))

    ReplyDelete
  3. // வவ்வால் said...

    சங்கவி ,

    சரக்கானப்பதிவு தான்!

    ஹி..ஹி பின்னூட்டத்தில் கபடி ஆடிய என்னை மறந்துட்டிங்களே ,ஒரு வவ்வால் படத்தை புடிச்சு போடுறது ;-))//


    இதைப்பற்றி பதிவு போட்டவங்களைத்தான் நினைத்தேன் வவ்வால்...

    பின்னூட்ட புலி உங்கள மறந்துட்டேன்...

    ReplyDelete
  4. ம்ம் நடத்துங்க

    ReplyDelete
  5. உண்மை தான் சதிஷ்..
    பதிவுலகம் கொஞ்சம் டல்லாயிட்டு தான் வருது. ஆனா போனவாரம் நடந்த வாக்குவாதம் தான் ஹைலைட்.
    பழைய சுறுசுறுப்பைக் காண முடிந்தது.
    என்னதான் வேலைகளிலிருந்தாலும் பதிவர்களுக்குள் ஏதாவது விவாதம்னா வரிஞ்சுகட்டிகிட்டு களம் இறங்குறதப் பார்க்கும்போது சந்தோசமா இருந்துச்சு.
    250 முதல் 300 பின்னூட்டங்கள் வரை விவாதம் நீடிச்சது பார்க்கவே பிரம்மிப்பா இருந்துச்சு. (சந்திப்பு காரணமா விவாதத்தை வாலண்டரியா முடிச்சுகிட்டாங்க. இல்லனா இன்னும் போயிகிட்டேயிருந்துருக்கும்.).
    நடந்த விவாதம் எதனால்.. ஏன்.. யாரு ஜெயிச்சது.. யார் விட்டுக்குடுத்ததுங்குற விஷயத்தைத் தள்ளிவச்சுட்டு, அவர்களுக்குகள் நிகழ்ந்த ஒற்றுமையைப் பாராட்டியே ஆகணும்.

    மற்றபடி பதிவர் சந்திப்பு நல்லமுறையில் கலகலப்பாக முடிந்தமைக்கு சந்தோசமும் வாழ்த்துக்களும்.
    :-)

    ReplyDelete
  6. நேரலையில் கண்டுகளித்தேன், பதிவர் சந்திப்பு பிரமாண்ட வெற்றியடைந்ததிர்க்கு வாழ்த்துக்கள் (TM 3)

    ReplyDelete
  7. சரக்கு சரக்கு தான்..

    சரி..சரக்கு சந்திப்புக்கு போகும் முன் போட்டீங்களா.....சந்திப்புக்கு பின் போட்டீங்களா சொல்லவே இல்ல

    ReplyDelete
  8. hit aakkiya
    anaivarukkum

    NANRI...NANRI...NANRI...

    @ VAVVAAL...

    ungaliyum
    serththuttaa pochi.....

    ReplyDelete
  9. //{ நாய் நக்ஸ் - HMT TIME OF WORLD }

    @ VAVVAAL...

    ungaliyum
    serththuttaa pochi.....//

    எதுல...சரக்கடிக்கவா

    ReplyDelete
  10. //சரக்கு சரக்கு தான்..

    சரி..சரக்கு சந்திப்புக்கு போகும் முன் போட்டீங்களா.....சந்திப்புக்கு பின் போட்டீங்களா சொல்லவே இல்ல //

    நாங்க தான் சரக்கடிப்பதில்லையே...

    ReplyDelete
  11. ''சரக்கடிக்கும் பதிவர்கள் சங்கம்'' விரைவில் தொடங்க உள்ளது உலகளவில் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....அப்பாலிக்க வந்துட்டு குய்யோ முய்யோய் கூவ கூடாது இப்பவே சொல்லிட்டேன்...ஆங்

    ReplyDelete
  12. // மனசாட்சி™ said...

    ''சரக்கடிக்கும் பதிவர்கள் சங்கம்'' விரைவில் தொடங்க உள்ளது உலகளவில் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....அப்பாலிக்க வந்துட்டு குய்யோ முய்யோய் கூவ கூடாது இப்பவே சொல்லிட்டேன்...ஆங் //

    அப்படி தொடங்கினால் அங்க கூட்டம் பிச்சுக்கும்...

    ReplyDelete
  13. எப்படியோ ஒரு கலக்கு கலக்கீட்டீங்க! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    ReplyDelete
  14. ...கலக்குறீங்க பதிவச் சொன்னேன்.

    ReplyDelete
  15. இப்படியுமா? நொறுக்குங்க..!

    ReplyDelete
  16. sankavi. நான் உங்களை பேஸ்புக்க்கில் தான் சந்தித்திருக்கேன். இன்றைகு தான் என் முதல் வருகை உங்கள் வலைபூவ்க்கு. நான் வெளிநாட்டில் இருந்தாலும் எல்லா பதிவர்களின் உரையாடலகளையும் கண்டு கொள்ளா வாய்பளித்த உங்க எல்லாரின் லைவ் டெலிகாஸ்டுக்கு முதல் நன்றி. ஆனால் என்னால் இந்திய நேரப்படி லைவ் பார்க்க இயலவில்லை அதையும் விட்டு வைக்காமல் பார்க்க இயலாதவர்களுக்காக ஆதிமனிதன் என்கிற வலைதளத்தில் ரிக்காட்டிங் லிங்க் வழி அதையும் பார்த்து ரசித்தோம். நன்றி எல்லா வலையுலக நண்பர்களுக்கு. விழாவில கலந்துகொண்ட என் நண்பர்கல் எல்லாம் சொன்ன்னது மிக அருமையாக நடத்திட்டாங்க.குறை என்று இதுவரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒன்று மட்டும் சொல்ல தோன்றுகிறது. அடுத்த வருடம் அட்லீஸ்ட் ஒரு 6 மாததிற்க்கு முன் தோரயாம ஒரு டேட் சொன்னால் வெளிநாட்டில் இருக்கிறவர்களுக்கு கலந்துக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என் சொல்லி கொண்டு நன்றி கூறிகொள்கிறேன்.

    ReplyDelete
  17. பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 8)

    ReplyDelete
  18. தா.ம.ஒ. 7

    இனிமேல் இப்படியே பின்னூட்டம் போட்டு திண்டுக்கல் தனபாலனை விட பெரிய பிரபலம் ஆகலாம்ன்னு முடிவு பண்ணீட்டேன் ........................

    ReplyDelete
  19. தோ பாருடா டைப் அடிக்கிற கேப்புல வந்து மருந்து அடிச்சிருக்காரு பாருங்க ........
    அண்ணே உங்க கூட போட்டி போட முடியாது ......நான் தோத்துட்டேன் மன்னிச்சு ............

    ReplyDelete
  20. சரக்குப் பதிவு? சந்திப்புக்கு முன்னாலா? எப்படியோ மாநாடு வெற்றியடைந்து விட்டது!

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்,

    :-) :-) எல்லாரும் புகுந்து விளையாடுங்க.... :-) :-)

    பட் சகோஸ், மது குறித்து பதிவுலகம் கொண்டுள்ள இயல்பான நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். மது குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுத வேண்டாம் என்பது என் வேண்டுகோள். அப்படியே எழுதினாலும் ஒரு டிஸ்க்கியாக "மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உடலுக்கும் தீமை" என்று போட்டுவிடலாம்..

    நன்றி...இன்னும் நிறைய பதிவு வரும் போல...நடத்துங்க..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  22. பதிவர் சந்திப்பு சுமூகமாக முடிந்தது மகிழ்ச்சி.

    வவ்வால் சொல்வது போல் இடையில் வந்து பின்னூட்டத்தில் இவர் பண்ணும் குசும்புதான் பதிவை கலகலப்பாக்குகிறது. :-)

    எனவே வவ்வாலுக்கும் ஒரு பாராட்டை போட்டு வையுங்கள்.

    ReplyDelete
  23. ஆமாம்... ஆமாம்...
    உண்மைதான்...
    அப்படின்னு சொல்ல மாட்டேன்.

    ReplyDelete
  24. நிச்சயமா உரம் போட்டுச்சுனு சொல்லலாம்.

    ReplyDelete
  25. ஆஷிக் அகமது, ஆரூர் முனா செந்தில், நக்கீரன் மற்றும் இன்ன பிறரால் பதிவர் சந்திப்பு பலரையும் தொட்டுவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

    அரசியலில் இதெல்லாம் சாதரணம்மப்பா என சொல்லிக் கொண்டே அனைவரும் ஒன்றாக கலந்துரையாடியது மகிழ்ச்சியைத் தருகின்றது ..

    ReplyDelete
  26. வவ்வாலையும் சரக்கையும் மறந்துவிடக் கூடாது .. இருவர்களும் தான் இதில் ஹீரோ ஹீரோயின் ..

    ReplyDelete
  27. போட்டோல ஆஷிக் கண்ணு ரெண்டும் சொருகியிருக்கே! என்ன காரணம்? :) (தமாஷா எடுத்துக்கோங்க சகோ)

    எல்லோரையும் ஒன்றாகப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு!

    ReplyDelete
  28. குருவிக்கூட்டை கலைப்பது போல இவர்களின் பின்னூட்ங்களால் இந்த திருவிழாவை கலைத்துவிடுவார்களோ என்று நினைத்தேன். ஆனால் என் நினைப்பை மாற்றி அமைத்து சாதனை புரிந்துவிட்டார்கள் அனைவரும். அதற்க்காக அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    தமிழர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி அடையச் செய்தது இந்த நிகழ்ச்சி மட்டும்தான் என்பது எனது அசைக்க முடியாத கருத்து

    ReplyDelete
  29. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி.

    "மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?"

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

    ReplyDelete