Showing posts with label குதிரை. Show all posts
Showing posts with label குதிரை. Show all posts

Tuesday, August 12, 2014

வரலாற்று புகழ் மிக்க குதிரை சந்தை தொடங்கியது...


ஆடி மாதம் என்றாலே என் மனதில் நினைவிற்கு வருவது குதிரை சந்தை தான். எங்கு வேலை செய்தாலும் எப்ப இந்த திருவிழா வரும் 3 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் இதற்கு காரணம். பதிவுலகில் இந்த சந்தையை 5வது முறையாக பதிகிறேன். வருடா வருடம் இந்த குதிரை சந்தை பற்றியான பதிவுகளை பதிவிடுவதற்கு காரணம், நிச்சயம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. இந்த பதிவை பார்த்து சந்தைக்கு மக்கள் வருவார்கள் என்பதற்காக பதிவிடுவதில்லை. வர இயலாதவர்கள் இதைப்பாத்து திருப்தி அடையவேண்டும் என்பதற்காக இந்த பதிவு. கடந்த வருடம் 8 இலட்சம் மக்கள் இந்த நான்கு நாள் திருவிழாவில் கலந்து கொண்டதாக அறிவித்திருந்தனர். இந்த வருடம் ஆகஸ்ட் 15ம் நாள் திருவிழாவையோட்டியே வருவதால் இந்த வருடம் நிச்சயம் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்..

குதிரைசந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபு குதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப் பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டும் அந்தியூரும் அதன் சுற்று வட்டாரமும்.

இத்தளத்தின் வரலாறு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூஜாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூஜாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள், என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. 
 
கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகளும் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார்.
 
கோயில் சுற்றுப் பிரகார நடுப்பகுதியில் 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்ட குலுக்கை என்னும் பெட்டகம் உள்ளது. அதனுள் பூஜை பொருட்களை வைத்து வந்தனர். ஆடி மாதத் திருவிழாவில், விழாவிற்கு முந்திய நாள் குலுக்கையைத் திறந்து பூஜைப் பொருட்கள் எடுப்பது வழக்கம். இக்குலுக்கைக்கு நான்குபுறமும் வாசற்படிகள் இல்லை. மேல்பகுதி வழியாக ஆள் புகுந்து வரும் நுழைவாயில் உள்ளது. கீழே துவாரம் காற்றோட்ட வசதிக்கு அமைத்து அத்துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர். ஆகம விதிப்படி விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் அந்த பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பால் கடியுண்டு இறப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களால், தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் இட்டு வணங்குகின்றனர். இந்த குலுக்கை பார்ப்பதற்கு புற்று போல உள்ளது.
 
இங்குள்ள காமாட்சியம்மன் தவமிருக்க அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். மாய மந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன் என்பவர் அம்பாளுக்கு வனப்பகுதியை விட மறுத்தார். அவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் சண்டையிட்டு அழித்தார். அவன் அழியும் முன், “என் அகந்தையை அழித்த குருநாதா! உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜன்ம சாபம் நீங்கப் பெற்றேன். இவ்வனத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க, நீ இங்கேயே அருள்புரிவாய்” என்று வரம் கேட்டான். அந்த வரத்தை குருநாத சுவாமி கொடுத்தார். இதனடிப்படையில், அசுரகுணம் கொண்டவர்களுக்கு கூட குருநாத சுவாமி பூர்வ ஜன்ம சாபத்தையும், பாவத்தையும் தீர்ப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்தக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்துள்ளது. மக்களும், “குருநாதா. உன் குன்று வளர்வதைப் போல் என் குடும்பத்தையும் வாழ வையப்பா” என வேண்டுகின்றனர். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.
 
----------------------- 

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த திருவிழாவை கான வருபவர்களுக்கு ஈரோடு, கோபி, சத்தியமங்ளத்தில் இருந்து நிறைய சிறப்பு பேருந்துகள் உண்டு...


 படங்கள் எல்லாம் பழைய படங்கள், இந்த வருட படங்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து உங்களை தேடி வரும் இணையத்தில்....

Wednesday, August 7, 2013

அந்தியூரில் தொடங்கியது கோடிகளில் புரளும் குதிரை சந்தை...

திருவிழா தோன்றிய வரலாற்றை பற்றி பேசினால் பேசிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொருவரும் ஒரு வரலாற்றை சொல்வார்கள் ஆனால் கடைசியில் அந்த வரலாறு நிற்கும் இடம் சந்தோசம் தான். திருவிழாக்கள் நகர்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் விசேசமாக இருக்கும் அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதுபோலத்தான் ஈரோடு மாவட்டத்தில் மிக பேர் சொல்லும் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா குருநாதசுவாமி திருக்கோயில் திருவிழா.



தலவரலாறு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூஜாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூஜாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள், என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகளும் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார்.

 
கோயில் சுற்றுப் பிரகார நடுப்பகுதியில் 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்ட குலுக்கை என்னும் பெட்டகம் உள்ளது. அதனுள் பூஜை பொருட்களை வைத்து வந்தனர். ஆடி மாதத் திருவிழாவில், விழாவிற்கு முந்திய நாள் குலுக்கையைத் திறந்து பூஜைப் பொருட்கள் எடுப்பது வழக்கம். இக்குலுக்கைக்கு நான்குபுறமும் வாசற்படிகள் இல்லை. மேல்பகுதி வழியாக ஆள் புகுந்து வரும் நுழைவாயில் உள்ளது. கீழே துவாரம் காற்றோட்ட வசதிக்கு அமைத்து அத்துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர். ஆகம விதிப்படி விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் அந்த பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பால் கடியுண்டு இறப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களால், தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் இட்டு வணங்குகின்றனர். இந்த குலுக்கை பார்ப்பதற்கு புற்று போல உள்ளது.
இங்குள்ள காமாட்சியம்மன் தவமிருக்க அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். மாய மந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன் என்பவர் அம்பாளுக்கு வனப்பகுதியை விட மறுத்தார். அவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் சண்டையிட்டு அழித்தார். அவன் அழியும் முன், “என் அகந்தையை அழித்த குருநாதா! உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜன்ம சாபம் நீங்கப் பெற்றேன். இவ்வனத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க, நீ இங்கேயே அருள்புரிவாய்” என்று வரம் கேட்டான். அந்த வரத்தை குருநாத சுவாமி கொடுத்தார். இதனடிப்படையில், அசுரகுணம் கொண்டவர்களுக்கு கூட குருநாத சுவாமி பூர்வ ஜன்ம சாபத்தையும், பாவத்தையும் தீர்ப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்தக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்துள்ளது. மக்களும், “குருநாதா. உன் குன்று வளர்வதைப் போல் என் குடும்பத்தையும் வாழ வையப்பா” என வேண்டுகின்றனர். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.
குதிரை சந்தை
அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இக்குதிரை சந்தையில் பணம் கோடியில் புரளும் அந்த அளவிற்கு இன்றும் குதிரை விற்பனை நடைபெறுகிறது.
பழைய படம்

கடந்த ஆண்டு இத்திருவிழா பற்றி எனது பதிவில் பதிந்திருந்தேன் அப்போது பல நண்பர்கள் அடுத்த முறை திருவிழாவின் போது அழைக்க சொல்லி இருந்தனர். 
இன்றில் இருந்து குதிரை சந்தை தொட்ங்கிவிட்டது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருப்பர் அந்தியூரில். சனி ஞாயிறு களிலும் குதிரை சந்தை கடைசி நாளாக களை கட்டும். இந்த வருடம் ரம்ஜான் விடுமுறை வார இறுதி நாட்களில் சேர்ந்து வருவதால் 3 நாட்கள் சந்தோசமாக சுற்றப்போகிறேன் குதிரை சந்தையை வர விருப்பம் உள்ள நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் சந்தோசமாக சுற்றுவோம் சந்தையை..  இப்படி ஒரு திருவிழாவை நாம் காண இயலாது. கடந்த ஆண்டு கூடிய மக்கள் 6 இலட்சத்திற்கும் அதிகம் என்றனர் இந்த ஆண்டு இன்னும் அதிகமாக இருக்கும்..

Wednesday, July 17, 2013

ஆடிமாதமும் குதிரைசந்தையும்... நோம்பிக்கு வந்திருங்க...



 
ஆடி மாதம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது புதிதாக திருமணம் ஆனவர்களை பிரித்து வைச்சிருப்பாங்க என்பது தான் ஆனால் அது எல்லாம் நினைவுகள் ஆகிவிட்டது. கிராம பின்னனியில் இருந்து வருபவர்களுக்க ஆடி மாதம் என்றால் திருவிழாக்கொண்டாட்டம் தான் நினைவுக்கு வரும்.
 
ஊரில்  உள்ள முனியப்பன் கோயிலில் எல்லாம் திருவிழா இக்காலத்தில் தான்.  சிறிய வயதில் இருந்தே ஆடி மாதம் என்றால் திருவிழாக்கள் தான் ஞாபகம் வரும். திருவிழாக்கள் மட்டுமல்ல ஆடி 1ம் தேதி துடங்கி ஆடி 18 ஆடி 28 மற்றும் ஆடி அம்மாவாசை என இந்த மாதத்தில் பல விசேசமான நாட்கள் உண்டு.
 
அடுத்ததாக ஆடி என்றால் துணிக்கடைகாரர்களுக்கத்தான் கொண்டாட்டம்  துணிக்கடை எல்லாம் ஆடி தள்ளுபடி என்ற பெயரில் இருக்கும் துணிகளை பல மடங்கு விலை ஏற்றி தள்ளுபடி என்ற பெயரில் அதே விலைக்கு விற்கும் ஒரு வியாபார தந்திரம் தான் இந்த ஆடி தள்ளுபடி என்பது என் கருத்து.
 
அடுத்து ஆடியில் எங்கள் பகுதியில் இருந்து அதிகம் பேர் செல்லும் இடம் குற்றாலம். ஊரில் இருந்து ஒரு 20 பேர் ஒன்று சேர்ந்து 4 நாட்கள் சென்று 3 வேளையும் விதவிதமாக சமைச்சு சாப்பிட்டுவிட்டு குத்தாட்டம் சீட்டாட்டம் என கச்சேரி களை கட்டும். தினமும் இரவு பகல் என்று ஒவ்வொரு அருவியாக குளிச்சு அனுபவிப்போம் என்னைப்போல சின்னவர்கள் எல்லாம் நான் 2 முறை சென்று இந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன். வேலைப்பளு காரணமாக குற்றாலம் இப்ப மறந்தே போச்சு...

 
 
திருவிழாக்கள்

ஆடி கடைசியில் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு கடந்த வருடம் 6 லட்சம் பேருக்கு மேல் கூடினார்கள் என அறிவித்துள்ளனர் அந்த அளவிற்கு ஈரோடு மாவட்டத்தில் பிரசக்தி பெற்றது இந்த தேர்த்திருவிழா.
 
இத்திருவிழாவை ஒட்டி நடக்கும் குதிரைச்சந்தையும், மாட்டுச்சந்தையும் இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். ஹைதர் அலி காலத்திற்கு முன் இருந்து இந்த சந்தை நடை பெற்று வருகிறது. இதைப்பற்றி வருடா வருடம் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் இந்த வருடமும் திருவிழா வந்து விட்டது.

கடந்த வருடம் நண்பர்கள் நிறைய அடுத்த வருடம் முன்னமே சொல்லுங்கள் வர முயற்சிக்கிறோம் இதைப்போல திருவிழாவை காணுவது அறிது என்றனர் அவர்களுக்காக இந்த அழைப்பிதல் பதிவு..


தேர்த்திருவிழா, குதிரைசந்தை, மாட்டுச்சந்தை என அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 7, 2013 அன்று தொடங்கி 10, 2013 வரை நான்கு நாட்களுக்கு வெகு விமர்ச்சியாக நடைபெறும். இந்த வருடம் 3000 குதிரைகளும், 10 ஆயிரம் மாடுகளும், 10000 ஆடுகளும், சாரட் வண்டிகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் மட்டுமல்லாமல் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்...

ஏனுங்க நீங்களும் மறக்காம வந்திடுங்கோ., வர்ற மாதிரி தோணுச்சுன்னா முன்னாடியே எங்கிட்ட சொல்லுங்கோ...
 
 
திருவிழா நாள் ஆகஸ்ட் 2013ம் ஆண்டு 6 முதல் 10 தேதி வரை.

அருகில் உள்ள ரயில் நிலையம் ஈரோடு. 

ஈரோடு, கோவை, கோபி, திருப்பூர் பகுதியில் இருந்து அந்தியூருக்கு பஸ் வசதி உண்டு.

Monday, August 20, 2012

குதிரை சந்தையும் படங்களும்...

 
6 இலட்சத்திற்கு வாங்கி நிறுத்தி உள்ளனர்.. இராஜஸ்தான் குதிரை
 
3 இலட்சம் பெறுமான குதிரை., ரேசுக்கு பயன்படுத்துகிறார்கள் 

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது

 
2 இலட்சம் பெறுமான குதிரை ஈரோடு லக்காபுரத்தில் இருந்து வந்தது...

 
6 இலட்சம் ரூபாய் பெறுமான இந்த குதிரை கர்நாடக மாநிலத்தில்


இருந்து வந்தது
 
ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் 4 இலட்ச ரூபாய்

 3 மாத குட்டியுடன் தாய் ஈரோடு அத்தாணியை சேர்ந்த குதிரை





4 இலட்ச ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர் புது முதலாளி என்பதால் அடங்காமல் செல்கிறது
6 இலட்சம் பெறுமான குதிரை திருச்சியை சேர்ந்தது


 
வெள்ளைக் குதிரை 8 இலட்சமாம்

 
இந்த குதிரை கிராசுக்காக கொண்டுவரப்பட்ட குதிரை..
ஒரு முறை கிராசுக்கு 7 ஆயிரம் ருபாய்




 
பின்னாடி நிற்கும் இரண்டு குதிரையும் தலா பத்து இலட்ச ரூபாய் மதிப்பு ஈரோட்டை சேர்ந்த குதிரைகள்...

முன்னாள் நிற்பது பவானியைச் சேர்ந்த குட்டி சிங்கங்கள்...

Monday, August 13, 2012

2000 குதிரைகளுடன் கோலாகலமாக நடந்த குதிரை சந்தை...

 
குருநாதசுவாமி கோயில் இந்த இடம் அந்தியூரில் இருந்து 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும் அள்ளி வந்துள்ளேன்.

குதிரை சந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
 
 குதிரைகள் விற்பனைக்காக போடப்பட்ட ஸ்டால் இதே போல் 5 வரிசையில் குதிரைகள் விற்பனைக்கா கொண்டுவரப்பட்டு இருந்தது..
 
ஸ்டாலில் இடம் இல்லாத குதிரைகள் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தது...
 
குதிரைக்கான கடிவாளங்கள், சாட்டைகளும், மாடுகளுக்கான சாட்டைகளும்

3 சுழி கொண்ட 1 மற்றும் 2 இலட்சம் விலையுள்ள குதிரைகள்
 
 4 சுழி கொண்ட 4 இலட்சம் விலையுள்ள குதிரைகள்

4 சுழி மற்றும் ஓட்டத்துக்கு பலக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் 4 இலட்சம் முதல்


2 முதல் 5 இலட்சம் வரை தரத்திற்கு தகுந்த குதிரைகள்


சாரட் வண்டிகளுக்கு பழக்கப்படுத்தப்பட்ட வண்டிகள்


 குதிரைகளை வாங்கலாமா என்று யோசிக்கும் பிரசன்னா...

 இந்த குதிரை விற்பனைக்கு அல்ல

அடுத்த பதிவில்
தரம் வாரியான குதிரைகளும் அதன் விலைகளும்...
காங்கேயம் காளைகளும் அதன் விலைகளும்...........
திருவிழா மற்றும் கிடாவிருந்து புகைப்படங்கள்...... விரைவில்...

Thursday, August 12, 2010

அந்தியூரில் தொடங்கியது இந்தியாவின் மிகப்பெரிய குதிரை சந்தை

அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா மற்றும் குதிரைச்சந்தை

ஆடி மாதம் கடைசி வாரத்தில் அந்தியூர் குருநாதசாமி திருவிழாவுடன் குதிரைச்சந்தையும் மாட்டுச்சந்தையும் தொடங்கும். இங்கு நடக்கும் குதிரை சந்தை இந்தியாவின் மிகப்பெரிய குதிரை சந்தை என்று கூறுவார்கள். அதே போல் மாட்டுச்சந்தையும். இந்த குதிரை சந்தை ஹைதர் அலி, திப்புசுல்தான் காலத்தில் தொடங்கப்பட்டது என்றும் போருக்காக குதிரை வாங்குவதற்கு இச்சந்தை மிக பிரபலம் என்பார்கள் ஆண்டு தோறும் 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள். இந்த வருடம் 5 இலட்சம் பேர் கூடுவார்கள் என்றும் அதற்கு தகுந்தாற் போல் தற்காலிக பேருந்து நிலையம், வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்படடுள்ளது என்று கோயில் அறங்காவலர்கள் கூறினர்.

தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான கால்நடைகள் வளர்ப்புப் பிராணிகளை வாங்கவும், விற்கவும் அதிகளவில் வருவர். இச்சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள குதிரைகள் ரகத்தில் காட்டியவாடி, நெக்ரா, நாட்டுக்குதிரை, மட்டக்குதிரை, ரேஸ் குதிரை, இங்கிலீஸ் பீட், பேபி குதிரை என பலவகை விற்பனைக்கு வந்துள்ளன. 

குதிரையின் கவர்ச்சியான நிறம், ஆளுமை மிக்க கம்பீரத் தோற்றம், சுழி, வயது, ராசி என பல அம்சங்களைக் கொண்டு அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சுமார் 7 அடி உயரமுள்ள 4 வயது காட்டியவார் குதிரை 6 லட்சம் வரை விலை போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வகை 6 மாத குட்டி 3 லட்சம் வரை விற்கப்படும். 

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம், பேரிரைச்சல் ஏற்படும் இடங்களில் கூட பதற்றமடையாமல் கம்பீரமாக அமைதியாக இருக்கும் "இங்கிலீல் பீட்’ குதிரைகள் விலை 3 லட்சம். இவ்வகை குதிரைகள் போலீஸôரின் ரோந்துப் பணிகள், பந்தயம், கடல்கரை, பூங்காக்களில் குழந்தைகளை அமர வைத்து உலா செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.  மாடுகளில் பர்கூர் செம்மறை மாடுகள், காளிகார், அம்ரித், ஆலாம்பாவி, தஞ்சை உம்பாச்சேரி, காங்கேயம் காளைகள் என பலவகை மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில், 6 அடிக்கு உயரமுள்ள காங்கேயம் காளைகள் ஜோடி 80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 

திருப்பூர் வாரணவாசியைச் சேர்ந்த கோபிநாத், காங்கயம் காளை ரகத்தில் மயிலைக் காளை, செவளைக்காளை ஜோடி 1.50 லட்சத்துக்கு கேட்கப்படுவதாக தெரிவித்தார். சந்தைக்கு புதுவரவான மைசூர் மலையான் மாடுகள் ஜோடி 75 ஆயிரம்.  விவசாயப் பணிகளில் எவ்வகையாக இருந்தாலும் அசராமல் செய்யும் ஆந்திரத்தின் ஓங்கோல் ரக மாடுகள் ஜோடி 1.50 லட்சம். இவ்வகை மாடுகள் பல்லவர் காலத்து சிற்பங்களில் இவ்வகை மாடுகளே இடம்பெற்றுள்ளதாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி தெரிவித்தார்.

அதிகம் பால் கறக்கும் ஜெர்சி, சிந்து ரக பசுக்கள், கன்றுகள் பொள்ளாச்சி, கோவை, மைசூர் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.  ஆடுகளில் 4 அடி உயரமுள்ள ஜமுனாபாரி, நாட்டு ஆடுகள், கலப்பின ஆடுகள் என பலவகைகளும், கோழிகளில் ஈமு கோழி, நாட்டுக் கோழிகள், சண்டைக் கோழிகள் என பார்வையாளர்களைக் கவர்கின்றன.

கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள் மூக்கணாங்கயிறு முதல் அரசியல் கட்சிகளின் நிறக் கொடிகளின் நிறங்களில் சாட்டைகள் என பல வண்ணங்களில் அணி வகுத்துள்ளன. மேலும், அலங்காரப் பொருள்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளுக்குத் தேவையான பொருள்கள், விவசாயக் கருவிகள் அதிகளவில் வந்துள்ளன.  விவசாயிகள் மற்றும் பல மாநில வியாபாரிகள், அதிகளவிலான கால்நடைகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், ஆயிரக்கணக்கில் அலை அலையாய் வரும் பார்வையாளர்கள் என கால்நடைச் சந்தை, விழாக் கோலம் பூண்டுள்ளது
.

குதிரை மற்றும் திருவிழா படங்கள் அடுத்த பதிவில்.....