Wednesday, July 17, 2013

ஆடிமாதமும் குதிரைசந்தையும்... நோம்பிக்கு வந்திருங்க...



 
ஆடி மாதம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது புதிதாக திருமணம் ஆனவர்களை பிரித்து வைச்சிருப்பாங்க என்பது தான் ஆனால் அது எல்லாம் நினைவுகள் ஆகிவிட்டது. கிராம பின்னனியில் இருந்து வருபவர்களுக்க ஆடி மாதம் என்றால் திருவிழாக்கொண்டாட்டம் தான் நினைவுக்கு வரும்.
 
ஊரில்  உள்ள முனியப்பன் கோயிலில் எல்லாம் திருவிழா இக்காலத்தில் தான்.  சிறிய வயதில் இருந்தே ஆடி மாதம் என்றால் திருவிழாக்கள் தான் ஞாபகம் வரும். திருவிழாக்கள் மட்டுமல்ல ஆடி 1ம் தேதி துடங்கி ஆடி 18 ஆடி 28 மற்றும் ஆடி அம்மாவாசை என இந்த மாதத்தில் பல விசேசமான நாட்கள் உண்டு.
 
அடுத்ததாக ஆடி என்றால் துணிக்கடைகாரர்களுக்கத்தான் கொண்டாட்டம்  துணிக்கடை எல்லாம் ஆடி தள்ளுபடி என்ற பெயரில் இருக்கும் துணிகளை பல மடங்கு விலை ஏற்றி தள்ளுபடி என்ற பெயரில் அதே விலைக்கு விற்கும் ஒரு வியாபார தந்திரம் தான் இந்த ஆடி தள்ளுபடி என்பது என் கருத்து.
 
அடுத்து ஆடியில் எங்கள் பகுதியில் இருந்து அதிகம் பேர் செல்லும் இடம் குற்றாலம். ஊரில் இருந்து ஒரு 20 பேர் ஒன்று சேர்ந்து 4 நாட்கள் சென்று 3 வேளையும் விதவிதமாக சமைச்சு சாப்பிட்டுவிட்டு குத்தாட்டம் சீட்டாட்டம் என கச்சேரி களை கட்டும். தினமும் இரவு பகல் என்று ஒவ்வொரு அருவியாக குளிச்சு அனுபவிப்போம் என்னைப்போல சின்னவர்கள் எல்லாம் நான் 2 முறை சென்று இந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன். வேலைப்பளு காரணமாக குற்றாலம் இப்ப மறந்தே போச்சு...

 
 
திருவிழாக்கள்

ஆடி கடைசியில் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு கடந்த வருடம் 6 லட்சம் பேருக்கு மேல் கூடினார்கள் என அறிவித்துள்ளனர் அந்த அளவிற்கு ஈரோடு மாவட்டத்தில் பிரசக்தி பெற்றது இந்த தேர்த்திருவிழா.
 
இத்திருவிழாவை ஒட்டி நடக்கும் குதிரைச்சந்தையும், மாட்டுச்சந்தையும் இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். ஹைதர் அலி காலத்திற்கு முன் இருந்து இந்த சந்தை நடை பெற்று வருகிறது. இதைப்பற்றி வருடா வருடம் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் இந்த வருடமும் திருவிழா வந்து விட்டது.

கடந்த வருடம் நண்பர்கள் நிறைய அடுத்த வருடம் முன்னமே சொல்லுங்கள் வர முயற்சிக்கிறோம் இதைப்போல திருவிழாவை காணுவது அறிது என்றனர் அவர்களுக்காக இந்த அழைப்பிதல் பதிவு..


தேர்த்திருவிழா, குதிரைசந்தை, மாட்டுச்சந்தை என அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 7, 2013 அன்று தொடங்கி 10, 2013 வரை நான்கு நாட்களுக்கு வெகு விமர்ச்சியாக நடைபெறும். இந்த வருடம் 3000 குதிரைகளும், 10 ஆயிரம் மாடுகளும், 10000 ஆடுகளும், சாரட் வண்டிகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் மட்டுமல்லாமல் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்...

ஏனுங்க நீங்களும் மறக்காம வந்திடுங்கோ., வர்ற மாதிரி தோணுச்சுன்னா முன்னாடியே எங்கிட்ட சொல்லுங்கோ...
 
 
திருவிழா நாள் ஆகஸ்ட் 2013ம் ஆண்டு 6 முதல் 10 தேதி வரை.

அருகில் உள்ள ரயில் நிலையம் ஈரோடு. 

ஈரோடு, கோவை, கோபி, திருப்பூர் பகுதியில் இருந்து அந்தியூருக்கு பஸ் வசதி உண்டு.

28 comments:

  1. ஆடி தள்ளுபடி விற்பனை 100% உண்மை...

    நேரம் வாய்த்தால் வந்திடுவோம்... அழைப்பிதலுக்கு நன்றி...

    இந்த வருடம் குற்றாலம் வரவில்லையா...? நல்ல சீசன்...!

    ReplyDelete
  2. இல்லங்க தனபாலன் குற்றாலம் வந்து 5 வருசம் ஆச்சு...

    ReplyDelete
  3. நீங்களூம் கூப்பிட்டுகிட்டேதான் இருக்கீங்க! வரணும் ஒருநாள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் வர முயற்சியுங்க...

      Delete
  4. அன்பின் சங்கவி - ஆடித்திருவிழாக்கள் சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - ஜமாய்ங்க - நாஙக் அயலகத்தில் இருக்கிறோம் - வர இயலாது - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் வாங்க...

      Delete
  5. பின் தொடர்வதற்காக

    ReplyDelete
  6. அழைப்புக்கு நன்றி.., திருவிழாவை பற்றிய பதிவுக்கு வெயிட்டிங்க்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் கிடா விருந்துடன் போட்டு விடுவோம்...

      Delete
  7. நல்ல தகவல்கள்! அழைப்பிற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete

  8. அரிதான திருவிழா பற்றிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  9. தகவல்கள் சிறப்பு. அழைப்புக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  10. i am from chithode but last 8 years i am unable to come to gurunadhar kovil function. enna vaalkai da ithu. around 20 people we used to go to kollimalai during aadi 18 and used to enjoy a lot. last 10 years unable to go to kolli maila. enna vaalkai ithu, not enjoying life

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சா இந்த வருசமும் வாங்க..

      Delete
  11. ஊருக்கு வந்தா கிடா விருந்துடன் சாப்பாடாவது போடுவீங்க... ம் அரபு நாட்டில் இருந்து எங்க குதிரை பார்க்க வர்றது...
    அருமையான பகிர்வு,,,,

    ReplyDelete
    Replies
    1. வரும்போது சொல்லுங்க ஒரு செம்ம விருந்து வெச்சிடலாம்...

      Delete
  12. எனக்கும் வரணும்னு ஆசையாத்தான் இருக்கு லீவுதான் கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை வரும் போது ஈரோட்டில் இறங்குங்க...

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ஆஹா.. ஆடி மாசம்.. திருவிழா.. ஜில்லுன்னு அம்மணிகள்..

    ReplyDelete
    Replies
    1. அம்மணிகள் மட்டுமா கிடா விருந்தும் உண்டு...

      Delete
  15. நேரம் வாய்த்தால் வந்திடுவோம்... அழைப்பிதலுக்கு நன்றி...

    ReplyDelete
  16. மகிழ்ந்திருங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அழைப்பிற்கு நன்றி சங்கவி....

    ஆனால் வர இயலாது! மாதக் கடைசியில் தான் வர முடியும்.......

    ReplyDelete
  18. நன்றி சங்கவி.. என்னால் வர இயலாது. ஆனால் எனது நண்பர் திரு. துரைராஜ் அவர்கள் குதிரை வளர்ப்பில் மிக ஆர்வம் கொண்டவர்.. இம்முறை அவசியம் அந்தியூரில் இருப்பார்..
    தங்களுடைய அழைப்பை அவருக்குத் தெரிவித்து விடுகிறேன். நனறி.. :)

    ReplyDelete