Tuesday, July 2, 2013

இப்படியும் இருக்கு கள்ள "காதல்கள்"

 


"கணவனின் நண்பனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கள்ளக்காதலி"

"மனைவியையும் கள்ளகாதலைனையும் ஓட ஓட வெட்டிய கணவன்"

"கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த மகனை அம்மிக்கல்லால் கொன்ற தாய்"

"குழந்தையையும் கணவனையும் விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி"

இதெல்லாம் இன்றைய பத்திரிக்கைகளில் அதிகம் மன்னிக்க தினமும் படிக்கும் தலைப்புகளில் ஒன்று. தலைப்பு வெவ்வேறாக இருந்தாலும் இதன் கருப்பொருள் கள்ளக்காதல் தான். காதலுக்கு கண் இல்லை என்று சொலவடை உண்டு. கள்ளக்காதலுக்கு இதயமே இல்லை என்று சொல்லலாம்.

கள்ளக்காதல் இன்று இந்தளவிற்கு பரவியதற்கு சினிமாவை விட சின்னத்திரை நாடகங்கள் தான் அதிகம் களை கட்டுகிறது இந்த நாடகத்தில் ஒருத்தருக்கும் ஒரு மனைவி என்பதே இருக்காது போல அப்படி இருந்தா அது தாத்தா பாட்டிக்கு மட்டும் இருக்கும் .

தம்பிமனைவியை அடைவது எப்படி, அண்ணியை கவர்வது எப்படி, அக்கா கணவரை மச்சினி மயக்குவது எப்படி, கொழுந்தனை அண்ணி எப்படி வளைத்து போடலாம், அண்ணன் மகனை அத்தை வளைப்பது எப்படி, பள்ளிக்கூட டீச்சரை எப்படி காதலிப்பது, வாத்தியாரை மாணவி எப்படி காதலிப்பது, என்று இன்னும் கள்ளக்காதலில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனை விசயத்திற்கும் நாடகங்கள் தெளிவாக பாடம் நடத்தியது. இதுபோக நம்முடைய சமூக அமைப்பு, அதாவது ''அண்ணன் பொண்டாட்டி அரை  பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தாம் பொண்டாட்டி'' என்று அந்த காலத்திலேயே பழமொழி சொல்லப்போக, அதை தவறாக விளங்கிய தவறானவர்கள் அண்ணைக்கு  அடுத்து இன்னொரு அண்ணையாக  மதிக்க வேண்டிய அண்ணியை வேறு பார்வை பார்க்கிறது. தன் மகளைப்போல் நினைக்க வேண்டிய மச்சினியை 'மயக்கப்'பார்வை பார்க்கிறார்கள்.

மச்சான், கொழுந்தன், அண்ணி, மச்சினிச்சி, என்று கேலி பேச்சும் கும்மாளமும் சிலரை சிலநேரங்களில் வழிதவற செய்கிறது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களில் சிலர் ஆடம்பரத்தை அடையும் நோக்கில் வசதிபடைத்த சிலரின் கள்ளக்காதல் வலையில் விழுகின்றனர். இவ்வாறான பெருகி வரும் கள்ளக்காதலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற முயல்வதை சமீபத்திய செய்தி நமக்கு சொல்கிறது.

கள்ளக்காதலை யாரும் தடுக்க இயலாது தானாக தடுத்தால் தான் உண்டு.  எங்கள் நெருங்கிய நண்பன் எப்போதும் எங்களோடு ஊர்சுற்றுபவன் நண்பர்கள் சுற்றுலா என்றால் முதலில் வருபவன் கொஞ்ச நாட்களாக சந்தோசமாக சுற்றினான் பின் ஒவ்வொரு நகைகளாக அடமானம் வைத்தான் எங்களுடன் பேசுவது குறைந்தது அவன் நடவடிக்கை சரி இல்லை என்று அவனுடன் இருப்பவன் கூறினான் நாங்கள் போன் செய்து கேட்கையில் அப்படி எல்லாம் ஒன்னுமில்லை மச்சி வேலை அதிகம் அதனால பேச முடியவில்லை என்றான்.

கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் அவன் நிறைய கடன் வாங்குவது அறிந்தோம் ஆனால் அவன் இல்லை என்றான் அப்புறம் அவனாகவே வழிய வந்து பக்கத்து ஆபிசில் வேலை செய்யும் பெண்ணும் நானும் நண்பர்கள் ஆனோம் அவளுக்கும் திருமணம் நடந்துவிட்டது அதனால் அப்பப்ப ஊர் சுற்றுவோம் என்னிடம் நிறைய பணம் வாங்கிவிட்டால் அவள் மேல் இருந்த போதையில் எல்லாத்தையும் கொடுத்து விட்டேன் இப்ப கேட்ட பணம் கொடுக்க முடியாததால் 2 ஆட்களை கூட்டிவந்து என் மனைவியிடம் பேசுகிறேன் என்று மிரட்டுகிளாள் அவன் யார் என்று கேட்டதற்கு கணவனும் அவன் நண்பன் என்கிறாள் பயமா இருக்கு மச்சி என் வீட்டுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என் வாழ்க்கை நரகமாகிடும் ஏதோ தப்பு செய்துவிட்டேன் இப்ப என்ன செய்வது என்று தெரியவில்லை என்றான்..

எங்கள் நண்பர்களில் 5 பேர் வக்கீல்கள் 3 பேர் ப்ராக்டீஸ் செய்கின்றனர் மற்ற இருவர் விவசாயத்தில் ஈடுபாடுகின்றனர். இதில் அந்த பெண் யார் என்று விசாரிக்கும் போது இன்னொரு நண்பனின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண் தான் அறியவந்தது. அப்புறம் அவன் கணவனிடம் பேசி மனைவியிடம் பேசி இதுவரை 4 லட்சத்துக்கு மேல் கொடுத்துள்ளான் என்று பேச அவர்கள் மசியவில்லை அப்புறம் வக்கில் நண்பர்கள் அழைத்து பேச அவள் கணவன் சரி எங்களுக்கு 25 ஆயிரம் மட்டும் கொடுங்க இருவரும் உள்ள போட்டோ அவர் வாங்கி கொடுத்த கிப்ட் எல்லாத்தையும் கொடுத்துவிட்டு  எங்கள் மகன் படிக்கும் ஊருக்கு குடி போய்விடுகிறோம் என்றனர்..

பணம் எல்லாம் கொடுக்க முடியாது என்று வாதிட நண்பன் பிரச்சனை தீர்ந்தால் போதும் என இன்னொரு செயினை அடகு வைத்து 20 ஆயிரத்தை கொடுத்து சனியன் தொலைந்தது என்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.. இப்ப நண்பனுக்கு விளம்பர போன் வந்தாக்கூட பையன் ஆளவிடுங்கடா சாமி என்று போனை கட் செய்து விடுகிறான்.

இப்படியும் பணம் பிடுங்குபவர்களை என்ன செய்ய நாம தான் முன் எச்சரிக்கையாக இருந்துக்கோனும்...

20 comments:

  1. பணம் என்னவெலாம் செய்கிறது...!

    ஊருக்கு ஊரு புது விதம்... சமூகச் சீரழிவு அதிகமாகிக் கொண்டு வருவதும் உண்மை...

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. சமுகச் சீரழிவிற்கு இதுவும் காரணம்...

      Delete
  2. Replies
    1. என்ன செய்வது தல... அப்படித்தான்னு போய்கிட்டே இருக்கவேண்டியது தான்...

      Delete
  3. உண்மைதான்...

    கள்ளக்காதல்கள் இன்று மலிந்து விட்டதற்கு இணையமும் ஒரு காரணம்தானே...

    ReplyDelete
  4. தானாய் திருந்தனும். இதுக்கு டிவி, செல்போன், இணையம்ன்னு ஆயிரம் சப்பை கட்டு கட்டுனாலும் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட நபரே பொறுப்பு

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சுயகட்டுப்பாடு வேண்டும்...

      Delete
  5. மத்தவங்க வாழ்க்கையில இருந்து பாடம் கத்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு சொல்லுவங்க... ஆனா இன்றைக்கு, பெரும்பாலானவர்கள் அனுபவப்பட்டுத்தான் திருந்துறாங்க...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க...

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  6. சில மணி நேர சபலம்! இந்த வேதனைக்கு வழி வகுத்துள்ளது! சுயக்கட்டுப்பாடு இல்லையெனில் இப்படி சீரழிய வேண்டியதுதான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆம் சுயகட்டுப்பாடு மிக முக்கியம்....

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

      Delete
  7. உங்களின் நண்பருக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்.

    ReplyDelete
  8. /இப்படியும் பணம் பிடுங்குபவர்களை என்ன செய்ய நாம தான் முன் எச்சரிக்கையாக இருந்துக்கோனும்...///


    உங்கள் நண்பர் பணம் கொடுத்தது மிக தவறு. சரி கொடுத்ததுதான் கொடுத்தார் இன்னொரு செயினை விற்றாவது ஆளை ஏற்பாடு பண்ணி அந்த பெண்ணின் கைகால்களையாவது உடைத்துவிட்டு வந்து இருக்க வேண்டும் அல்லது அந்த பெண்ணிற்கு உடந்தையாக இருந்த கணவனின் கைகால்களையாவது உடைத்து ஏறிந்து இருக்க வேண்டும்

    ReplyDelete
  9. ellathukkum aasai than karanam

    ReplyDelete
  10. நண்பர் விட்ட தவறால் வந்த விளைவுகள்தான்.

    ReplyDelete
  11. நண்பர் செய்தது பெரிய தவறு. கள்ளக்காதலைப் பற்றிச் சொல்லவில்லை. மிரட்டுவோரை போலீசில் பிடித்துக் கொடுக்காததைச் சொல்கிறேன். இன்னொரு பலியாட்டுக்கு வழி செய்திருக்கிறார். சுயநலம் பிடித்தவர்?

    ReplyDelete