Thursday, August 8, 2013

அஞ்சறைப்பெட்டி 08.07.2013



  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........


இந்த வருடம் ஆடி மட்டுமல்ல பொங்கலும் சிறப்பாக கொண்டாடுவோம் அந்த அளவிற்கு தமிழக விவசாயிகளை காவிரித்தாய் குளிர்வித்துவிட்டாள். நிறைய தண்ணீர்கள் கடலில் கலந்தது தான் வருத்தமாக உள்ளது. விரைவில் பவானி சாகர் அணையும் நிரம்பும் என்ற எதிர்பார்க்கலாம். எல்லா அணையும் எப்பவும் நிரைந்திருந்தால் எப்போதும் நிறைந்திருக்கும் விவசாயிகளின் மனது.



.......................................

தமிழகத்தில் இருந்த பிரச்சனைகளில் மிகமுக்கியமான ஒன்று மின்வெட்டு சமீபத்தில் பெய்த மழையால் அணைத்து அணைகளும் நிரம்பி அங்கெல்லாம் மின்சாரம் தயாராக ஆரம்பித்தது மிக்க மகிழ்ச்சிக்கு உரிய விசயம். தமிழகம் மின் மிகை மாநிலம் ஆகும் போது தான் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.
 .......................................
இந்திய எல்லையில் ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் பாகிஸ்தான் இந்திய தென்கோடியில் இலங்கை என நம்மை சுற்றி இருக்கும் நாட்டவர்கள் எல்லாம் நமக்கு ஏழரை கொடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தான் சீறுவோம் அதனால் பல சிரமங்கள் வரும் என்பதை உணராமல். பேச்சு வார்த்தை தான் தீர்வென்றாலும் நம் வீரர்களின் கண்காணிப்பையும், நவீன ஆயுதங்களை நாம் தயாரிக்கும் போது தான் நம் மேலான பயம் வரும்.. ஆனால் நவீன ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் நம் மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்துக்குகூட நாம் பதிலடி கொடுப்பதில்லை என்பது தான் வருத்தப்படவேண்டிய விசயம்..

.......................................

நடிகர் சேரன் தனது மகளின் காதலுக்கு ஆதரவு தருகிறாராம் ஆனால் நல்ல பையனாக இருக்கும் பட்சத்திலாம் என்ன லாஜிக் இது என்று புரியவில்லை நிறைய பேர் பல கெட்ட பழக்கங்களை கொண்டு இருந்தும் திருமணத்துக்கு பின் மனைவி வந்து திருத்தியவர்கள் தான் இங்கு ஏராளம். அதனால் விவகாரத்து பெற்றவர்கள் குறைவாகத்தான் இருப்பர். சேரனின் படங்களே இதைத்தான் சொல்கின்றன. பையன் நல்லவன் இல்லை என்று குத்தம் சொல்ல ஆரம்பித்தால் இங்கு திருமணங்கள் குறைந்துவிடும். பையன்கள் கிடைப்பதே அரிதாகிவிடும்.
 
....................................... 

காலையில் இருசக்கர வாகனத்தில் அடித்து பிடித்து வரும்போது மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் ஒருவர் நின்று இருந்தார் கூடவே டிராபிக் போலீசாரும், லைசென்ஸ் செக்கப் போய்க்கொண்டு இருந்தது என்னைய நிற்கசொல்வில்லை இருந்தாலும் அந்த இன்ஸ்பெக்டர் மிக பழகிய முகமாக இருந்தது ஒரு வேளை கார்த்தியாக இருக்குமோ என்று ஒரு டவுட்டு சரி யார் என்று பார்ப்போம் என்று வண்டிய திருப்பி அந்த இன்ஸ்பெக்டர் பக்கத்தில் போனேன் எல்லோரும் என் வண்டிய பார்க்க நான் அவர் பெயர் பொறித்த பேட்ஜை பார்த்தேன் கார்த்திகேயன் என்று இருந்தது..

சார் நீங்க கார்த்திதானே என்றதும் பக்கத்தில் வந்து தலைகவசத்தை கழட்டினாதானே நீங்க யாருன்னு தெரியும் என்றார் கவசத்தை கழட்டி ஒரு வேளை நம்மை அடையாளம் தெரியவில்லை என்றால் இன்னிக்கு லைசென்ஸ் கவரை வேறு வீட்டில் வைத்து விட்டோம் என்று மனது அடித்துக்கொண்டாலும் தலைக்கவசத்தை கழட்டினேன் ஏய் சதீஸ் எப்படிடா இருக்க என்று அந்த மிடுக்கான அதிகாரியின் குரல் சந்தோசமாக பேசிவிட்டு சந்தித்து எத்தனை வருடம் இருக்கும் என்று யோசித்து கிட்டத்தட்ட 13 வருடம் ஆகியிருந்தது...

எத்தனை வருடம் ஆனாலும் நல்ல பதவியில் இருந்தாலும் நண்பனை கண்டதும் சந்தோசமாக அணைக்கும் நட்பை கொண்டாடும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்... நண்பேன்டா


..............................
தினமும் மாலை வீட்டுக்கு சென்றதும் அப்படியே ரிமோட்டை எடுத்து ஒரு ரவுண்டு வரும் போது செய்தி சேனல்களில் ஒரு 5 நிமிடம் தலையை நீட்டுவது தினமும் நடக்கும் ஒன்று. நான் வேலை விட்டு வீட்டுக்கு போகும் நேரம் ஒவ்வொரு சேனலிலும் விவாத நிகழ்ச்சி தொடங்குகிறது இந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கென சில தலைவர்கள் இருப்பாங்க போல. இவர்கள் தினமும் எதாவது ஒரு சேனலின் விவாத நிகழ்ச்சியில் நிச்சயம் இடம் பெறுகின்றனர் அதுவும் இவர்கள் தினம் ஒரு சேனலில் இருப்பதால் அவர்கள் பேசுவது திரும்ப திரும்ப பேசுவது போல உள்ளது. இப்ப இது தான் டிரண்ட்டு போல.. பேசுவது அவர்களுக்கு பிடித்த ஒன்று, விவாத நிகழ்ச்சியை நடத்துவது செய்தி சேனலுக்கு பிடித்த ஒன்று.. டக் என சேனலை மாற்றுவது நமக்கு பிடித்த ஒன்று....

..............................


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜனார்த்தன் ராய் தனது மனைவி கிரண்ராயுடன் (45) மராட்டிய மாநிலம் நல்ல சோபாரா என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் 13–ந்தேதி தகராறு ஏற்பட்டபோது ஜனார்த்தன் ராய் மனைவியை வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டி சென்று விட்டார். கணவன் மீது உள்ள கோபத்தில் மனைவியும் வீட்டுக்குள்ளேயே சாப்பிடாமல் படுத்துக்கொண்டார்.

கணவர் திரும்பி வருவார் என்று நினைத்து இருந்த மனைவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சாப்பிடாமல் பட்டினி கிடந்ததால் உடல் சோர்வடைந்த கிரண்ராய்க்கு எழுந்திருக்ககூட முடியாமல் படுத்த படுக்கையானார். ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் கணவர் திரும்பவரவில்லை. இந்த நிலையில் பட்டினி கிடந்த கிரண்ராய் கோமா நிலையை அடைந்து இறந்து விட்டார்.

கணவன்–மனைவி உ.பி.யைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சொந்த ஊர் சென்று இருக்கலாம் என்று அக்கம்பக்கம் வசிப்பவர்கள் கருதி இருந்தனர். இதற்கிடையே பூட்டி கிடந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு கிரண் ராய் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கணவரை காணவில்லை. அவர் சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்துக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது.

உடனே போலீசார் ஜனார்த்தன் ராயுடன் செல்போனில் பேசி, மனைவி உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கூறினார்கள். இதை நம்பி வந்த ஜனார்த்தன் ராயை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை வீட்டில் பூட்டி பட்டினி போட்டு கொன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்குள் போட்டு கணவர் பூட்டி சென்ற பின் மனைவி ஏன் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் உதவியை நாடவில்லை என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



 
தகவல்


அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், ஷெபோய்கன் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி மார்டின்(47). எப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் அடைத்து வைத்தாலும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதில் இருந்து 'எஸ்கேப்' ஆகிவிடும் கலையில் கைகோர்த்த சாகசக்காரரான இவரை அமெரிக்க மக்கள் 'டேர் டெவில்' என்று அன்புடன் குறிப்பிடுகின்றனர்.

25 ஆண்டுகளாக இந்த சாகசத்தில் பல சாதனைகளை படைத்துள்ள இவர் நேற்று மேலும் ஓர் புதிய சாதனையை படைத்துள்ளார். கையில் விலங்கிட்டு ஓர் பெரிய பெட்டிக்குள் இவரது உடலை இணைத்து கட்டி, பெட்டியையும் பூட்டி 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து விமானம் மூலம் இவர் கீழே வீசப்பட்டார்.

பெட்டியுடன் ஒரு பாராசூட் இணைக்கப்பட்டிருந்தாலும் பெட்டி விழும் வேகத்தை பாராசூட்டால் கட்டுப்படுத்த முடியவில்லை. விமானத்தில் இருந்த வீசப்பட்ட பெட்டியை செங்குத்தாக நிலைநிறுத்த மேலும் 2 'ஸ்கை டைவிங்' வீரர்கள் கீழே குதித்தனர்.

மணிக்கு 193 கிலோ மீட்டர் வேகத்தில் அந்தோனி மார்ட்டின் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி பூமியை நோக்கி பாய்ந்தது.

இந்த பயணத்துக்கு இடையில் 40 வினாடிகளில் கை விலங்கை உடைத்துக் கொண்டு, பெட்டியின் பூட்டையும் உடைத்து, பெட்டியை திறந்து, பாராசூட்டை பிடித்தபடி பத்திரமாக தரையிறங்கி அனைவரையும் அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.



தத்துவம்

செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.

23 comments:

  1. அந்தோனி மார்ட்டினின் சாதனை அதிசயசயக்கத்தக்கது! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  2. அன்பின் சங்கவி - அஞ்சரைப்பெட்டி - உள்ளூர் முதல் உல்கம் வரை - அத்தனையும் அருமை - தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

      Delete
  3. தண்ணீர் ஓடோடி வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கு.ஆனா எவ்ளோ தண்ணீர் கடலுக்கு போயிடுமேன்னு நினைச்சா வேற வழியே இல்லையா??
    கிரண்ராய் மனநலம் குன்றியவராய் இருக்க வேண்டும்.சில பேர் எவ்ளோ உசந்த இடத்திற்கு சென்றாலும் நண்பர்களை மறப்பதில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்படி இருப்பது அபூர்வமே.

    ReplyDelete
    Replies
    1. ஆம்... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  4. வித்தியாசமான தகவல்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  5. சேரன் வீட்டு விவகாரத்துல உங்க கருத்துக்கு நான் முரண்படுறேன். குடி, சூது, பொய், களவு போன்ற விசயத்துல பையன் வீக்னெஸ்ஸா இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் திருந்திடுவான்னு சொல்லி கட்டி வைக்கலாம். ஒரு வேளை சேரன் சொல்றது மாதிரி பெண்களை ஏமாற்றுவதே பொழைப்பா அந்த பையன் வச்சிருந்தா கல்யாணம் ஆனா திருந்திடுவான்னு கட்டி வச்சா அப்ப்புறம் அந்த பொண்ணோட கதி?!

    ReplyDelete
    Replies
    1. முதலில் ஒருவன் கெட்ட பையன் என்று எப்படி முடிவு செய்யறீங்கன்னு புரியல அக்கா...

      இன்று குடி, சூது, பொய், களவு எல்லாம் செய்து விட்டு நான் ரொம்ப நல்லவன் என்று நடிப்பவர்கள் தான் ஏராளம்...

      குடிக்காதவனுக்குத்தான் பெண் கொடுப்பேன் என்றால் அப்புறம் அந்த பெண்ணுக்கு வயது முதிர்ந்த திருமணம் தான்....

      Delete
  6. இந்த வருடம் ஆடி மட்டுமல்ல பொங்கலும் சிறப்பாக கொண்டாடுவோம் அந்த அளவிற்கு தமிழக விவசாயிகளை காவிரித்தாய் குளிர்வித்துவிட்டாள்.

    மகிழ்ச்சி வாழ்த்துகள்...!

    ReplyDelete
  7. நிறைய தண்ணீர்கள் கடலில் கலந்தது தான் வருத்தமாக உள்ளது.

    வீட்டுக்கு ஒருவர் புறப்பட்டு வந்து கால்வாய்களை சீரமைக்கவேண்டும் ..!

    ReplyDelete
  8. இந்த அஞ்சறை பெட்டியின் தகவல்கள் சில சமயம் கலங்கவும், சில சமயம் மகிழவும், சிந்திக்கவும், சிரிக்கவும் செய்கிறது......அனைத்து தகவல்களும் அருமை சதீஷ் ! கலக்குங்க.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  9. அஞ்சறைப் பெட்டி தகவல் களஞ்சியம்.
    தத்துவம் அருமை.

    ReplyDelete
  10. //நடிகர் சேரன் தனது மகளின் காதலுக்கு ஆதரவு தருகிறாராம் ஆனால் நல்ல பையனாக இருக்கும் பட்சத்திலாம் என்ன லாஜிக் இது என்று புரியவில்லை நிறைய பேர் பல கெட்ட பழக்கங்களை கொண்டு இருந்தும் திருமணத்துக்கு பின் மனைவி வந்து திருத்தியவர்கள் தான் இங்கு ஏராளம்.//
    உங்கள் லாஜிக் தான் புரியவில்லை. நல்ல பையனாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறா? பெண்கள் எல்லோரும் ஆண்களின் கெட்ட பழக்கங்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்து தான் வாழ்வில் சுகப்படவேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே முதலில் அந்த பையன் கெட்டவன் என்று நீங்க எப்படி முடிவு செய்தீர்கள்.. அவனுடன் பழகிய நண்பன் சொன்னால் ஓரளவு ஏற்கலாம்...

      அந்த பையனை தவறு தவறு என்று சொல்ல சொல்ல அந்த பெண்ணுக்கு அந்த பையன் மேல் காதல் அதிகமாகத்தான் இருக்கும்...

      Delete
  11. சுவையான அஞ்சறைப் பெட்டி...

    ReplyDelete
  12. மனைவியை வீட்டில் பூட்டி பட்டினி போட்டு கொன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்குள் போட்டு கணவர் பூட்டி சென்ற பின் மனைவி ஏன் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் உதவியை நாடவில்லை என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.//

    அதானே, ஏன்?

    நடிகர் சேரன் தனது மகளின் காதலுக்கு ஆதரவு தருகிறாராம் ஆனால் நல்ல பையனாக இருக்கும் பட்சத்திலாம்//

    பையன் நல்லவனா, கெட்டவனான்னு பார்த்துட்டா காதல் வரும்? இவர அப்படித்தான் இவங்க வீட்டம்மா காதலிச்சாங்களா? இல்ல இவர கல்யாணம் செஞ்சிக்கிட்டப்போ இவர் கோடீஸ்வரனா இருந்தாரா? இவரும் அந்த பையனப் போல லாட்டரி அடிச்சிக்கிட்டு இருந்தவர்தானே. இத விட கொடுமை என்னன்னா கூட நாலஞ்சி பேர சேர்த்துக்கிட்டு டிவி காமரா முன்னால அழுது ஆர்ப்பாட்டம் பண்றதுதான். தான் ஒரு மன முதிர்வில்லாத நபர்னு க்ளியரா காட்டிட்டார்.

    இந்த பயணத்துக்கு இடையில் 40 வினாடிகளில் கை விலங்கை உடைத்துக் கொண்டு, பெட்டியின் பூட்டையும் உடைத்து, பெட்டியை திறந்து, பாராசூட்டை பிடித்தபடி பத்திரமாக தரையிறங்கி அனைவரையும் அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.//

    ஆச்சரியமாத்தான் இருக்கு. இதுக்கு ப்ராக்டிஸ் பண்றப்போ எத்தன தரம் அடிபட்டிருப்பார்னு நினைச்சா, முயற்சி திருவினையாக்கும்னு எப்பவோ படிச்சது ஞாபகத்துக்கு வருது.

    அருமையான நிகழ்வுகளை அருமையா குடுத்துருக்கீங்க.

    ReplyDelete
  13. அஞ்சறைப் பெட்டி செய்திகள் நன்று.

    உத்திரப் பிரதேச தம்பதி - மனதை வருத்திய செய்தி.

    ReplyDelete