Monday, August 19, 2013

சென்னை பதிவர் மாநாடு (01.09.2013) நிகழ்ச்சி நிரல்....


வணக்கம் வலையுலக பங்காளிகளே...

நலமா, நலம் அறிய ஆவல்., சென்னையில் உள்ள பதிவர்கள் கடந்த வருடம் ஒரு மாநாட்டை சீறும் சிறப்புமாக நடத்தினார்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் பதிவுலகில் உள்ள அனைவரையும் முக்கியமாக பதிவு எழுதி அப்புறம் விடுமுறை விட்டு விட்டு சென்ற பதிவர்களை அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து சென்னை மட்டுமல்லாது தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் ஒரு குழு அமைத்து தமிழகம் மற்றும் பிற பகுதி பதிவர்களை அழைக்கவேண்டும் என்று ஒரு குழு அமைத்துள்ளனர் அந்த அந்த ஏரியாவில் உள்ள பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்ய வரவேற்பு குழுவினரை அழைத்து உறுதி செய்யும் பொழுது தான் தங்கள் உணவு மற்றும் தங்கும் இடத்தை ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்..

வரவேற்பு குழு ஒருங்கிணைப்பு ஆரூர் முனா செந்தில்.

அஞ்சாசிங்கம் செல்வின்
பிலாசபி பிரபாகரன்
மெட்ராஸ் பவன் சிவக்குமார்
தமிழ்வாசி பிரகாஷ்
திண்டுக்கல் தனபாலன்
கோகுல்
வீடு சுரேஷ்
சதீஸ் சங்கவி

உணவு ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பு ஆரூர் முனா செந்தில்

கேஆர்பி செந்தில்
கேபிள் சங்கர்
அஞ்சாசிங்கம் செல்வின்
பிலாசபி பிரபாகரன்
மெட்ராஸ் பவன் சிவக்குமார்
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
ராஜீ

மறக்காமல் தங்கள் பதிவை உறுதி செய்யுங்கள். அடுத்து மிக முக்கியமான ஒன்று நிகழ்ச்சி நடத்தவேண்டும் எனில் அதற்காக போதிய நிதிவசதி வேண்டும் மாநாடு நடத்துவதற்கு நிறைய வேண்டும் அதுவும் கடந்த வருடம் மக்கள் சந்தை நிதி உதவி செய்ததால் நிறைவாக இருந்தது இந்த வருடம் பதிவர்கள் தங்கள் மேலான நிதி உதவியை அளிக்க அழைக்கவேண்டிய நபர் ஜெய் மற்றும் மதுமதி தற்போது அழைத்து கொடுத்தாலும் நல்லது நிகழ்வு  நடக்கும் பொழுது அழைத்து கொடுத்தாலும் நன்று.. ஆனால் மறக்காமல் தங்களால் முயன்றதை அன்போடு கொடுக்கவும்...

நிகழ்ச்சி நிரல்..

பதிவர் சந்திப்பில் முக்கியமான ஒன்று நிகழ்வு வந்தோம், சந்தித்தோம், சாப்பிட்டோம், சந்தோசமாக இருந்தோம் என்பது மிக முக்கியமான ஒன்று ஆனால் அங்கு என்ன நடந்தது என்று தானே எல்லோரும் கேட்பர். தற்போது அனைவரும் அறிந்தது பதிவர் அறிமுகம், பதிவர்களின் புத்தகம் வெளியீடு இது மட்டுமே ஆனால் இது போதாது இன்னும் இன்னும் வேண்டுமென எல்லாரும் மண்டைய போட்டு குழப்பு யாரைக் கூப்பிடலாம் என்று ஒரு வழியாக முடிவு செய்து அவரை அழைத்தால் நிச்சயம் வருகிறேன்  பதிவர்களுடன் பேசி பலநாட்கள் ஆச்சு அதுவும் தற்போது பதிவு மட்டுமல்லாமல் முகநூலிலும் அனைவரும் நிறைய கருத்து சொல்றீங்க உங்ககிட்ட நிச்சயம் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்... யார் அந்த பேச்சாளர், எழுத்தாளர் சத்தியமாக எனக்கு தெரியாதுங்க... பொறுங்கள் நிச்சயம் அவரின் பேச்சு நமக்கு இன்னும் நிறைய எழுத ஏதுவாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை..

இது மட்டுமில்லாமல் இன்னொருத்தரும் பேசுகின்றாராம் அவரு யாருன்னும் தெரியாமலா போய்விடும்.. (ஜெய், மதுமதி நீர் எப்படியும் அழைப்பிதழில் சொல்லித்தானே ஆகவேண்டும்...

புத்தக வெளியீட்டு விழா..

இந்த வருடம் 3 பதிவர்களின் புத்தகம் வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

பிரபல பதிவர் மற்றும் என் இனிய நண்பர் சேட்டைக்காரன் அவர்களின் "மொட்டைத்தலையும், முழங்காலும்" என்ற நகைச்சுவை தொகுப்பு வெளியாகிறது..

அகநாழிகை வாசுதேவன் அவர்களின் அகவொளி பதிப்பகத்தின் வெளியீடாக
வீடு திரும்பல் மோகன் குமாரின் வெற்றிக்கோடு (கட்டுரைகள்) என்ற புத்தகம் வெளியாக இருக்கிறது..



அகவொளி பதிப்பகத்தின் வெளியீடாக எனது இதழில் உதிர்ந்த வரிகளை கொண்டு முகநூலில் நான் எழுதிய காதலையும் முத்தத்தை கலந்த கலவையாக இதழில் எழுதிய கவிதைகள் என்ற தலைப்பில் எனது வரிகளின் தொகுப்பு வெளியாக உள்ளது.

இவ்வளவு நிகழ்ச்சி நடக்க உள்ளது இது வரை வருவதாக 250க்குமேற்பட்ட பதிவர்கள் பெயர் கொடுத்துள்ளனர் அதனால் அனைவரும் வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்..

என்றும் அன்புடன்
தங்கள் வருகையை எதிர்நோக்கும்
சங்கமேஸ்வரன் (எ) சதீஸ் சங்கவி.,
 

12 comments:

  1. /// உங்ககிட்ட நிச்சயம் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்... ///

    யாருங்க அது...? அவர் இல்லை என்றால் எதுவும் நடக்காதா...? என்னவொரு பில்டப்பு...?

    இது வரை எவரின் எழுத்து உங்களை எழுத வைத்தது.....?

    ReplyDelete
    Replies
    1. அவர் யாருன்னு எனக்கு தெரியாதுங்க... எப்படியும் நன்றாக பேசுபவரையும், எழுதுபவைரையும் தான் அழைப்பாங்க என்று தெரியும்... சோ ஒரு பிட்ட போட்டு வெச்சேன்...

      இது வரை எவரின் எழுத்து உங்களை எழுத வைத்தது.....?

      நிறைய பேரை சொல்லாம் தனபாலன் சார், முதலில் பதிவ எழுதவந்ததே மற்றவர்களின் எழுத்தை பார்த்து தான்...

      Delete
  2. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. #சோ ஒரு பிட்ட போட்டு வெச்சேன்...#
    சோ தான் வரப்போகிறார் என்பதை தெரிந்து கொண்டேன் ...க்ளுகொடுத்ததிற்கு நன்றி சங்கவி !

    ReplyDelete
  4. மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    தங்களுக்கும் புத்தகம் வெளியிடும் நண்பர்களுக்கும் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. நான் கூட நிகழ்ச்சி நிரல் வெளிவந்துவிட்டதோ என்று ஆவலாய் வந்தேன் :-)

    ReplyDelete

  6. .
    தங்களுக்கும் புத்தகம் வெளியிடும் நண்பர்களுக்கும் நல்வாழ்த்துகள்!மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஆஹா, எங்கே ஒரு செய்தியையும் காணோமே, வாங்கி வச்ச டிக்கட்டை என்ன பண்றது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த என் வயிற்றில் பால் போல் பாய்ந்தது உங்கள் செய்தி.

    ReplyDelete
  8. விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள் (12)

    ReplyDelete
  10. விழா சிறக்கவும், உங்கள் புத்தக வெளியீட்டுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete