Wednesday, August 14, 2013

40 நிமிட பேருந்து பயணம்



புத்தகம் வெளியீட்டுக்கும், புத்தக கண்காட்சிக்கும் போகவேண்டும் என்று திட்டம் போட்டதும் சித்தாரில் இருந்து ஈரோட்டுக்கு பேருந்தில் போய் ரொம்ப நாள் ஆச்சு பேருந்தில் போகலாம் என்று முடிவு செய்திருந்தேன். பால்ய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை வீடு சுரேஷ் நான் ஈரோடு வந்து விட்டேன் என்றார் பக்கத்து வீட்டு அக்காவிடம் பேசிய பேச்சை கட் செய்து விட்டு துண்டு எடுத்து பொடக்காலிக்கு போய் ஒரு காக்கா குளியல் போட்டுகிட்டு, பேருந்தில் பொம்பள புள்ளைக எல்லாம் வரும் என்ற எண்ணம் மனதில் உதித்ததும் ஹமாம் சோப்பை நாலு தடவ மூஞ்சிக்கு போட்டு குளித்தேன் அப்பவும் அதே கலரு தான்..

ஜீன்ஸ் பேண்டை மாட்டிகிட்டு சட்டைய போட்டு நெற்றியில் திருநீரோடு நின்றேன் பஸ் வந்ததும் ஓடி வந்து முன்னாடி படிக்கெட்டில் தொத்தினேன் எனக்கு முன்னே ஏறிய பெண் மல்லிகைப்பூ இரண்டு முழம் வெச்சிகிட்டு நின்றாள் மல்லிகை வாசத்தில் மெய் மறந்து ஒரு கம்பியில சாய்ந்துகிட்டு மல்லிகைப்பூவின் வாசத்தில் கிறங்கி நின்னேன்.

டிரைவர் சீட்டில் இருந்து கடைசி சீட்டு வரை அப்படியே ஒரு நோட்டாம் போட்டேன் எத்தனை விதமான மனுசன்கள், அழகான பெண்கள் அழுக்கான பெண்கள் என களை கட்டியது பேருந்து.

டிரைவேர் பேனட்டு மேல் ஒரு நடுத்தர வயது பெண்மணியை உட்காரவைத்து ஊர் நாயம் உலக நாயம் எல்லாம் பேசினார் அடுத்த சீட்டில் குடுப்பமே தூங்க வழிந்தது. இரட்டை சீட்டில் வரிசையாக 3 ஜோடிகள் கண்ணுக்குளிராக ஈருஉடல் ஓருடளாக கடலையை வறுத்துக்கொண்டு இருந்தனர். பாதி பேர் காதில் ஹெட் போனை மாட்டிகிட்டு பூம்பூம் மாடு போல தலையசைத்தனர்.

நான் நின்ற சீட்டில் இருந்து தள்ளி 2 பெண்கள் உட்கார்ந்திருந்தனர் கருப்பு தான் என்றாலும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்த முகலட்சனம் சரி இன்னிக்கு ஈரோடுக்கு போறதுக்கு நல்லா பொழுது போகும் என்று பார்வையை சுழட்டி சுழட்டி அடித்தேன் எந்த ரியாச்னும் இல்லை கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் நம் பார்வை கரைக்கும் என்று கூவி கூவி பார்த்தேன் ஒன்னும் நடக்கல..

பவானி வந்ததும் இருவரும் ஏதோ பேசிக்கொண்டு ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தாள் அப்படியே மனசு பறந்தது.. தம்பி தம்பி ப்ளு கலர் சட்டை தம்பி என்று ஒரு குரல் யாரையோ என்று நினைக்க யோவ் தம்பி உன்னத்தானய்யா கடைசி சீட்டூ காலியா இருக்கு அங்க போய் உட்காரு என்று பேயடித்தது போல உட்கார வைத்தனர்.

அட்ப்பாவிகளா இப்ப தாண்டா பாத்தாங்க என்று நினைக்கையிலே கடைசி சீட்டு வா வா என்று அழைத்தது.....

1 comment:

  1. சூர்யா லுக் விட்டீங்களா ..இல்லையா?

    ReplyDelete