Thursday, August 1, 2013

அஞ்சறைப்பெட்டி 01.08.2013



  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........




தற்போது எங்கும் பேச்சு அடுத்த பிரதமர் பதவி வேட்பாளராக பாஜக மோடியை அறிவிப்பது கிட்டத்தட்ட உறுதியாக்கப்பட்டுவிட்டது. அதே போல் ஊரில் இருக்கின்ற மீடியாக்கள் எல்லாம் வாரத்துக்கு ஒரு முறை இவரைப்பற்றியான செய்தி ஒன்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு விவாதித்து மக்கள் மனதில் இவரது பெயரை பதியவைத்தது இவரின் வெற்றிக்கு மிக உதவும் என நினைக்கிறேன். மோடியும், ராகுலும் நேரடியாக மோதும் போது நிறைய நலத்திட்டங்கள் அறிவிப்புகளாக இரு கட்சிகளும் போட் போட்டுக்கொண்டு அறிவிப்பனர் என்பது மட்டும் நிச்சயம்.


.......................................

தனித்தெலுங்கானவிற்கு ஆதரவு அளித்து மத்திய அரசு அந்த மாநிலம் உருவாக்குகிறோம் என்று அறிவித்ததும் ஆந்திராவை விட்டு பிரிக்க வேண்டாம் என்று இன்னொரு தரப்பு  போராடுகிறது இதில் அப்பட்டமாக தெரிவது என்ன வென்றால் அரசியல் இலாம். யாருக்கு இலாபம் கிடைக்கும் என்பதற்காக போட்டி இடுகின்றனர் என்றே சொல்லலாம். யாருக்கு இலாபம் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்..

 .......................................


நிரம்பி வரும் மேட்டூரால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிக மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த இரு வருடங்களாக ஆடி 18க்கு வறண்ட காவிரையை பார்த்த நம் மக்கள் இந்த வருடம் நீர் நிறைந்த காவிரியில் ஆடி பெருக்கை கொண்டாடடுவோம் என்பதில் மிக்க மகிழ்ச்சியே.

.......................................

மீண்டும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை இதை எதிர்ப்பவர்களும், கண்டனம் தெரிவிப்பவர்களும் தெரிவித்துக்கொண்டே இருப்போம்.. நிச்சயம் மாற்றம் இருக்காது என்பதை அறிந்து. மொத்தமாக ஒரு தொகையை உயர்த்திவிட்டு 5 வருடங்களுக்கு மீண்டும் உயர்த்த மாட்டோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்...
 

....................................... 

காலையில 5 மணிக்கு ஒரு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது எடுத்து பார்த்தால் வணக்கம் டார்லிங் என்று இருந்தது அத பார்த்ததும் பாதி தூக்கத்துல அப்படி ஒரு மகிழ்ச்சி யாரா இருக்கும் என்று மனது குத்தாட்டம் போடுகிறது நினைவுகள் ஊட்டியில் டூயட் பாடுது ஊட்டியா கொடைக்கானல என்று சரியா வேற தெரியல... அவுங்க முகம் அம்புட்டு பிரகாசம்.

மெத்தையில் உருண்டு உருண்டு கனவு கண்டேன் திடீர் என் அப்பபாபான்னு சத்தம் பக்கத்தில் இருந்த பையன் கைமேலே உருண்டு விட்டேன் போல அப்புறம் அவன சமாதானப்படுத்தி மீண்டு வந்தேன் கனவுலகிற்கு யாரு அனுப்பி இருப்பான்னு படாத பாடு பட்டது மனது...
யார் என்று அறியவில்லை என்றால் மண்டை வெடிச்சிடுமே போன போட்டு பேசலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போது மணி 6 சரி வாக்கிங் போகும் போது பேசலாம் என்று போனை தூக்கிட்டு வாக்கிங் நடக்கும் போது என்றும் இல்லாத வேகம் இன்று நடையில் அந்த அளவுக்கு குதுகலம் அப்புறம் ஒரு வழியா போனை போட்டு பேசினேன்..

நீங்க யார் என்றால் என் விபரத்தை சொன்னதும் ஐயய்யோ அங்கிள் உங்களுக்கு அனுப்பிட்டனா.. சாரி அங்கிள் நான் என் நண்பனுக்கு அனுப்புவதற்கு பதில் உங்களுக்கு அனுப்பிட்டேன் போல சாரி சாரி அங்கிள்...

சாரி என்பது கூட பரவாயில்லீங்க... அங்கிள் அங்கிள் என்று வார்த்தைக்கு வார்த்தை கூப்பிட்டது தான் ஏத்துக்குமுடியல




..............................


கிராஸ்கட் ரோட்டில் உள்ள லஷ்மி காப்ளக்சில் உள்ள டாய்ஸ் கடையில் குடும்பம் சகிதமாக சென்று மகனுக்க டாய்ஸ் வாங்கிவிட்டு பில் கொடுக்க நின்று இருந்தேன் வீட்டம்மாவும் மகனும் அடுத்த செலவு என்ன செய்யலாம் என்று வெளியே நின்று கொண்டு இருந்தனர் அப்போது தன் மகனுடன் வந்த அந்த பெண்ணுக்கு 35 வயதிருக்கு ஜீன்ஸ். டாப்ஸ் என கலக்கல் உடையில் வந்து கடையில் இருப்பவர்களின் கண்ணுக்கெல்லாம் குளிர்ச்சியை ஊட்டியது எனக்கும் தான்.. அடுத்து அந்த பெண் ஒரு டாய்ஸ் வாங்கிவிட்டு என்னைப்பார்த்து How much Cost என்றது நான் திரும்பி பார்த்து விட்டு சிரித்துவிட்டு திரும்பிவிட்டேன்... அந்த பெண் மீண்டும் இது எவ்வளவுங்க என்றது அப்போதும் என்னைய பார்த்து தான்..(வெளியில் நின்ற என் மனைவிக்கு சிரிப்பு தாங்கல) இது கூட பரவாயில்லீங்க அந்த கடைக்காரங்கிட்ட போய் என்னங்க ஆள் வெச்சிருக்கீங்க கடையில் விலைய கேட்டா பேசாமாட்டீங்கிறார் என்று புகார் செய்துடுச்சு.. கடைக்காரர் இவர் கஷ்டமர் என்றதும் அந்த பொண்ணு சாரி சாரி என்று சொன்னாலும் வீடு வருகிற வரைக்கும் எங்கவீட்டு அம்மணி சிரிப்ப அடக்கல...

அந்த பொண்ணுகிட்ட நீங்க ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று குறுக்கு கேள்வி கேட்டுடாதீங்க மக்களே... ஏன் என்றால்.........


..............................


போலீசாரின் மெத்தனத்தால் 5 நாட்களாக குடிக்க தண்ணீர் கூட இன்றி சிறையில் அடைபட்டு கிடந்து, தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு அமெரிக்க அரசு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை தடுப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியபோது கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த டேனியேல் சாங்(25) என்ற இளைஞரை கைது செய்தனர். அவரை 4 1/2 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 5 அடி உயர தனிமை சிறையில் அடைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கேயே வைத்து பூட்டிவிட்டு சென்றனர்.

தங்களது கட்டுப்பாட்டில் ஒரு கைதி இருப்பதை 5 நாட்களாக மறந்து விட்ட போலீசார் வழக்கமான மற்ற பணிகளில் கண்ணும் கருத்துமாய் ஈடுபட தொடங்கினர்.

ஜன்னல் வசதி ஏதுமில்லாத காற்றோட்டமற்ற அந்த குறுகிய அறையில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்த அந்த வாலிபர் தனது சிறுநீரையே பிடித்து குடித்து உயிரை காத்துக்கொண்டார்.

5வது நாள் போலீசார் அந்த அறையை திறந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சிறுநீரகம் பழுதடைந்து சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் 5 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார். அவரது நிலைமை குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது.

டேனியேல் சாங் தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல், 'எனது கட்சிக்காரருக்கு நேர்ந்த கொடுமை இந்த உலகத்தில் எவருக்குமே நேரக் கூடாது. அவருக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும்' என்றார்.

வாத - பிரதிவாதங்களை கேட்ட பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய இழப்பீட்டை வழங்கி சமரசம் செய்துக் கொள்ளும்படி அரசுக்கு ஆலோசனை கூறினார்.

இதனையடுத்து, டேனியேல் சாங்குக்கு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கி கோர்ட்டுக்கு வெளியே அமெரிக்க அரசு சமரசம் செய்து கொண்டது.

..............................



தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.............................. 


சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயிர் கொல்லியான ‘எய்ட்ஸ்’ நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.

அதில் சோயாபீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ‘எச்.ஐ.வி.’ கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெனிஸ்டின் செல்களில் எச்.ஐ.வி. கிருமிகள் ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
  

தகவல்


இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த்தை சேர்ந்தவர் மாத்யூகிரீன் (42). கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது.

அதைத்தொடர்ந்து பாப்வெர்த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக இதயம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பழுதடைந்த அவரது இதயம் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெளியில் இருந்தபடியே ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சும் வசதி செய்யப்பட்டது.

அதன் மூலம் இதயம் இல்லாமல் சுமார் 2 ஆண்டுகள் மாத்யூகிரீன் உயிர் வாழ்ந்தார். இந்த நிலையில் சமீபத்தில்தான் அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்தப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரீன் ''நான் மிக அதிர்ஷ்டசாலி என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஏனெனில் இருதய மாற்று ஆபரேசன் மூலம் நான் 3–வது தடவையாக உயிர் பிழைத்து இருக்கிறேன்'' என்றார்.



தத்துவம்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
இந்த மாபெரும் உலகத்தின் மகத்தான அதிசயங்கள் இரண்டுதான். ஒன்று புத்தகம், மற்றொன்று உயிருள்ள மனிதன்.
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.

28 comments:

  1. பிரகாசமான முகம்....! அங்கிள் அங்கிள்... சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. யூத்த அங்கிள்ன்னு சொன்னா எப்படிங்க தனபாலன்....

      Delete
  2. அதான் வாரிசு வந்துட்டுதுல்ல இனி நீங்க அங்கிள்தான் சங்கவி!

    ReplyDelete
    Replies
    1. அங்கிளா... யூத்து யூத்து...

      Delete
  3. இதயமில்லாம ஒரு மனிதன் 2 வருசம் வாழ்ந்தாரா?! ஆச்சர்யம்தான்

    ReplyDelete
    Replies
    1. Raji,Idhayam Illamey Irundhar oru acharymana vishyama illai. Namma Neraya Arasiyalvadhiunga ,Pala Varushama, Adhu illamey than irukkanga

      Delete
    2. அனானிம்ஸ் சொல்றதும் உண்மை தானே அக்கா...

      Delete
  4. மீடியா மோடிய பத்தி வெளியிடுறது இருக்கட்டும் நீங்க அடிக்கடி அவர பத்தின செய்திய போட்டுகிட்டே இருகின்களே அண்ணே.....

    எனக்கும் இதுபோல எஸ் எம் எஸ் வந்து பல்பு வாங்குவது உண்டு தல

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அவர் பிரதமர் ஆகனும்ன் ஆசைதாங்க...

      பல்பு வாங்கலீனா சுவாரஸ்யம் குறைவாகிடும் பாஸ்...

      Delete
  5. // அப்பபாபான்னு சத்தம் பக்கத்தில் இருந்த பையன் கைமேலே உருண்டு விட்டேன் போல //

    அப்புறம் என்ன? அங்கிள் தான்

    ReplyDelete
    Replies
    1. யூத் உருளக்கூடாதா மாணிக்கம் சார்...

      Delete
  6. இந்த மாபெரும் உலகத்தின் மகத்தான அதிசயங்கள் இரண்டுதான். ஒன்று புத்தகம், மற்றொன்று உயிருள்ள மனிதன்

    தத்துவம் அருமை..!

    ReplyDelete
  7. மீடியா மோடிய பத்தி வெளியிடுறது இருக்கட்டும் நீங்க அடிக்கடி அவர பத்தின செய்திய போட்டுகிட்டே இருகின்களே அண்ணே.....

    எனக்கும் இதுபோல எஸ் எம் எஸ் வந்து பல்பு வாங்குவது உண்டு தல

    ReplyDelete
  8. அருமையான தகவல்கள்...

    எனக்கும்..அங்கிள்..அங்கிள் ஒரு ஷாக் தான்.. முதல் முறை கேட்ட போது.. :( அப்புறம் ரெண்டு, மூணு பேரு சொல்லவும்..சரி.. நாம அங்கிள் ஆயிட்டோம் போலனு சமாதானம் செய்து கொண்டேன்.. (இல்லனாலும் !!!) :(

    அன்பு ராஜி
    இதயம் இல்லா மனிதர்கள் பல நாடுகளையே ஆண்டு வந்து இருக்கின்றனர்.. :(

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  9. //அதான் வாரிசு வந்துட்டுதுல்ல இனி நீங்க அங்கிள்தான் சங்கவி!//Repeat....

    ReplyDelete
    Replies
    1. ஐய்யய்யோ... நான் யூத்துங்க..

      Delete
  10. இதயமில்லாம ஒரு மனிதன் 2 வருசம் வாழ்ந்தாரா?!

    இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை இதயம் இல்லாமலே வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தவர்கள் பலர் இன்னும் நம் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதில் பல தலைவர்களும் அடக்கம்தான். உதாரணமாக டில்லியில் பஸ்ஸில் ஒரு பெண்ணை கற்பழித்தவர்கள் இதயம் இல்லாதவர்கள் தானே நம் நாட்டை வெளினாட்டிற்கு அடிமைபடுத்த துடிக்கும் நம் தலைவர்களும் இதயம் இல்லாதவர்கள் தானே?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  11. சோயா பீன்ஸ்ம் தத்துவமும் பிடித்தது.இதயமில்லா மனிதனும் இருந்திருக்கிறான்.ஆச்சரியம்தான் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஹோமா

      Delete
  12. சாரி என்பது கூட பரவாயில்லீங்க... அங்கிள் அங்கிள் என்று வார்த்தைக்கு வார்த்தை கூப்பிட்டது தான் ஏத்துக்குமுடியல//

    போனை தூக்கி வீசலையாக்கும் ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
    Replies
    1. மக்கா அனுபவமாக்கும்...

      Delete
  13. காலையில 5 மணிக்கு ஒரு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது எடுத்து பார்த்தால் வணக்கம் டார்லிங் என்று இருந்தது அத பார்த்ததும் பாதி தூக்கத்துல அப்படி ஒரு மகிழ்ச்சி //

    எனக்கு ஒரு நாள் ஸ்வீட் ட்ரீம்ஸ்னு ஒன்னு வந்துச்சி. யார்றா இதுன்னு நினைச்சிக்கிட்டு 'ஊ ஈஸ் திஸ்?'னு பதில் அனுப்பிச்சேன். பதிலே வரலை. ஆனால் என்னோட பேலன்ஸ்லருந்து ஏர்டெல் காரன் 30ரூ குறைச்சிட்டான். அப்புறந்தான் தெரிஞ்சிது இது ஒரு வேல்யூ ஆடெட் சர்வீஸ்னு. அதாவது காலையில குட்மார்னிங், ராத்திரியில ஸ்வீட் ட்ரீம்ஸ்.. என்ன பொழப்புடா இதுன்னு நினைச்சிக்கிட்டேன். இப்பல்லாம் நமக்கு தெரிஞ்ச நம்பர்லருந்து வந்தாத்தான் ரெஸ்பான்ஸ். இல்லன்னா நேரா டெலிட்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா இந்த அனுபவம் சூப்பருருருரு....

      Delete
  14. நல்ல தகவல்கள்.......

    அங்கிள்.... :)

    ReplyDelete
  15. நல்ல காரசாரமான, சுவையான அஞ்சறை பெட்டி !! நம்ம ஊரு போலீஸ் கையில அந்த ஆளு மாட்டலை...... சுட சுட செய்திகளும், கருத்துக்களும் சூப்பர் சதீஷ் !

    ReplyDelete