Friday, August 16, 2013

சுதந்திரநாடு சோத்துக்கு கேடு


சுதந்திரநாடு சோத்துக்கு கேடு

நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா? என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் அவர்களின் சுயநலமில்லாமல் நமக்கு பின் வரும் சந்ததியினர் சுதந்திரமாக வாழவேண்டும் என அடி உதை பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப்பட்டது சுதந்திரம். அவர்கள் வாங்கித்தந்த சுதந்திரத்தால் தான் நாம் இன்னும் இப்போதும் சுதந்திரமாக இருக்கிறோம்.

சுதந்திரமாக நாம் என்ன செய்கின்றோம் என்றால் நிறைய செய்கிறோம் நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற நிறைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் யாரைப்பற்றி வேண்டுமானலும் திட்டலாம், அவர்களும் நம்மை திட்டலாம் இது ஒரு வகை சுதந்திரம். வலைபதிவுகளில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.
 
ஊடகங்கள் இன்று சுதந்திரமாக செயல்படுகின்றன சட்டமன்ற உறுப்பினர் முதல் பிரதமர் வரை யாராக இருந்தாலும் செய்திகள் வெளியிடுகின்றனர். காரணம் இருந்தாலும் இல்லை என்றாலும் நீதிமன்றம் செல்லும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. பயந்து இருந்தவர்கள் எல்லாம் இன்று பயம் இல்லாமல் சுதந்திரமாக நிச்சயம் வாழ்கின்றனர் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
 

இன்னும் பல சுதந்திரங்கள்

தண்ணி அடித்துவிட்டு சுதந்திரமாக வாகனம் ஓட்டுவது. காவலரிடம் மாட்டினால் 100 கொடுத்து மீண்டும் சுதந்திரத்தை பெறுவது.

சிக்னல் விழுகும் போது குறுக்கே வாகனத்தை ஓட்டுவது. வெள்ளை கோட்டைத்தாண்டி வண்டியை நிறுத்துவது.

பரிசு கொடுத்து பல காரியங்களை செய்வது.

சுதந்திரமாக நடப்பது, ஓடுவது என பல வகையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கிறது வாகனத்தில் செல்லும் போது உச்ச வந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி உச்ச போவது என சொல்லிக்கொண்டே போகலாம்.


சோத்துக்கு கேடு

இச்சுதந்திர நாட்டில் நாம் வாழும் சுக வாழ்க்கை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் நமக்கு சோத்துக்கு வழி இல்லாமல் இருக்கப்போகிறோம். உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்த நாம் இனி இறக்குமதி செய்தால் தான் சோறு இல்லை எனில் நம் சோத்துக்கு கேடு தான். இன்று நம் நாட்டின் முக்கிய தொழில் விவசயாம் தான் இதில் நமக்கு பல பிரச்சனைகள் உண்டு அனைத்தையும் பின் தள்ளி நம் விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் தான் சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை சாப்பிட முடிகிறது. இல்லை என்றால் ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்து தான் சாப்பிடவேண்டும். இன்றைய காலகட்டத்தில் விளை நிலங்கள் எல்லாம் வீடு கட்டுவதற்கு பிரித்து போட்டு விற்பனை செய்கின்றனர் இது தான் இன்று கொடுகட்டி பறக்கும் வியாபாரம். விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர். விவசாய நிலங்களை எல்லாம் அளித்து தொழிற்சாலைகளும், வீட்டு மனைக்கும் விற்பனை செய்வது இன்னும் தொடருமானால் விரைவில் இந்த சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...

3 comments:

  1. இரண்டாவது மனதை பிசையுது.

    ReplyDelete
  2. சிந்திக்கச் செய்யும் பதிவு நண்பரே...

    ReplyDelete
  3. இன்னும் பல தந்திரங்கள் மனதுக்கு வேதனை அளிக்கும் விஷயங்கள் மக்கா....!

    ReplyDelete