Wednesday, August 28, 2013

களை கட்டும் சென்னை பதிவர் சந்திப்பும் +கிசு கிசு


வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் அன்னை... இது உண்மை தான் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஊரில் இருந்து வேலை தேடி புறப்படும்போது சென்னை போகிறேன் என்ற பெருமையாக பேசுவோம் உண்மையாவா பட்டணத்துக்கு போறியா என்பார்கள்..
இன்று தமிழகத்தில் பல இலட்சம் இளைஞர்கள் சென்னையில் தான் இருக்கின்றனர் என்றால் அது மிகையாகது.. தமிழில் எழுதும் பதிவர்கள் அநேகம் பேர் சென்னையில் தான் இருக்கின்றனர். சென்னையை பற்றியும் சென்னையில் உள்ள நம் பதிவர்கள் பற்றியும் எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அத்தனை சுவாரஸ்யங்கள் இருக்கும் ஒவ்வொரு பதிவர் நிகழ்விலும்.
சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு அற்புதமான பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் நிறைய குழுக்கள் அமைத்து அதன் மூலம் நிகழ்ச்சியை அற்புதமாக அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தும் வகையில் அமைத்து வருவது பாராட்டுக்குரியது.

இந்த முறை உணவு விசயத்தில் நிறைய அக்கறை எடுத்துக்கொண்டு அற்புதமான உணவை வழங்க இருக்கின்றனர் அதுவும் அந்த மெனுவை பார்த்ததும் இப்பவே நாக்கில் ஏங்குது.

விழாவில் அற்புதமான எழுத்தாளர்கள் பேச இருக்கின்றனர் என்பது தான் மிக முக்கியமான விசயம். ஏற்கனவே பல முறை பாமரன் அவர்களின் பேச்சை கேட்டுள்ளேன் அவர் பேச்சை கேட்க கேட்க அவருக்கு கொடுத்து நேரம் மிக குறைவு போல என்று தோணும் அந்த அளவிக்கு கலக்குவார்.

கண்மணி குணசேகரன் இவரின் நான் பேச்சை கேட்டதில்லை ஆனாலும் நண்பர்கள் எல்லாரும் கலக்குவார் இவரின் பேச்சில் என்று ஆவலை தூண்டு விட்டனர்.

அடுத்ததாக பதிவர்களின் மேடை நாடகம் ( அதப்பத்தி கிசு கிசுவில் பார்ப்போம்)

கடந்த வருட சந்திப்பில் 1 புத்தகமும் இந்த வருட சந்திப்பில் 4 புத்தகங்களும் வெளியாகிறது அதுவும் எனது வரிகளின் முதல் தொகுப்பு வெளியாகிறது இதழில் எழுதிய கவிதைகள் என்ற தலைப்பில் மிக்க மகிழ்ச்சியான ஒன்று இந்த வருட சந்திப்பு எனக்கு...
நாம் எழுதும் எழுத்தை படித்து பாராட்டும் ஊக்கமும், ஆக்கமும் தரும் நம் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேரும் போது நிச்சயம் நாமக்கு மிக மகிழ்ச்சிதான்.. வாங்க மக்களே சந்திப்போம்... 
நான் இன்று மாலையே மூட்டை முடிச்ச கட்டிகிட்டு சொந்த ஊருக்கு போய்ட்டு நாளைக்கு மதியம் நண்பர்களோடு சேர்ந்து கட்டுச்சோத்த கட்கிட்டு ஏற்காடு எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்னை பதிவர் சந்திப்பிற்காக சனிக்கிழமை காலை 4 மணிக்கே சென்ட்ரலுக்கு வந்து விடுவேன் என்பதை மகிழ்வோடு பகிர்கிறேன்...
நண்பர்களே மறந்தும் இருந்து விடாதீர்கள்...
சில கிசு கிசு
1. பதிவுலகின் பிரபல ஜம்புவான்கள் எல்லாம் அதாவது 2006 இல் இருந்து பதிவெழுதும் பதிவர்கள் நிறைய கலந்து கொள்கிறார்கள்.
2. யாரும் எதிர்பாராதா இவர்கள் வருவார்களா என்று நினைக்க முடியாத பதிவர்கள் 3 பேர் வருகின்றனர்.

3. பதிவர் சந்திப்பில் நடக்கும் நாடகத்திற்கு கதாநாயாகி தயாராம் அவருக்கு ஏற்ற நாயகனை தேடி வருகிறார்களாம்.

4. டைரக்டர் ஒருவர் கதநாயகனை தேடிக்கொண்டு இருக்கிறார் அவர் பதிவராக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பமாம்.

5. பதிவர் சந்திப்பில் புகைப்படம் எடுக்க தனியா புகைப்பட கலைஞரை நியமித்து இருக்கிறார் ஒரு பிரபல பதிவர்
6. பதிவர் சந்திப்புக்கு வரும் பன்னிக்குட்டி ராமசாமியை கண்டுபிடிக்க அவரின் நெருங்கிய நண்பர் ஒரு ஐடியா கொடுத்து இருக்கிறார். அது என்னவென்றால் அவருக்கு இடுப்பு கிள்ளுனா துள்ளி குதிச்சு ஓடுவாராம்.... (மக்களே தயாரகிக்குங்க பன்னியின் இடுப்பை கிள்ள)
7.  பிரபல பெண் பதிவர் ஒருவர் க்ளாசிக்கல் நடனம் ஆடுகிறார்.
8. பெங்களூர் சென்று அங்கிருந்து ப்ளைட் பிடிச்சு வருகிறார் ஒரு பிரபல பதிவர்.

9. சென்னையை சேர்ந்த கவிதாயினி  யாரும் எதிர்பார்க்க வண்ண்ம் மேடை யில் ஒரு நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் அசத்த இருக்கிறாராம்...
இது வரைக்கும் தெரிஞ்ச கிசு கிசு இவ்வளவு தாங்க..
 

26 comments:

  1. யாரும் எதிர்பாராதா இவர்கள் வருவார்களா என்று நினைக்க முடியாத பதிவர்கள் 3 பேர் வருகின்றனர்.//

    யார், யார்னு எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்களேன். எனக்கு தெரிஞ்ச ஆளுங்களான்னு பாக்கறேன் :/)

    ReplyDelete
    Replies
    1. அவுங்க ரொம்ப முக்கியமானவங்க... அவுங்க வந்தாவே எல்லோரும் கை தட்டுவாங்க... வேனும்னா பாருங்களேன்...

      Delete
  2. ஆஹா கிசு கிசு கண்ணை கட்டுதே..

    ReplyDelete
    Replies
    1. சந்திப்பில் நடந்தவற்றை கிசு கிசு வாக எழுத இருக்கிறோம்...

      Delete
  3. 7. பிரபல பெண் பதிவர் ஒருவர் க்ளாசிக்கல் நடனம் ஆடுகிறார்.//

    கலாசலா பாடலுக்கா??

    //8. பெங்களூர் சென்று அங்கிருந்து ப்ளைட் பிடிச்சு வருகிறார் ஒரு பிரபல பதிவர்.//

    இவர் யாருன்னு எனக்கு தெரியுமே..

    மற்றவை ஓரளவு ஊகிக்க முடிகிறது.. பதிவர் சந்திப்பில் பார்க்கலாம் சதீஷ்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதே பாடல் என்று தான் சொன்னாங்க...

      பெங்களூர் மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா...

      Delete
  4. //பெங்களூர் சென்று அங்கிருந்து ப்ளைட் பிடிச்சு வருகிறார் ஒரு பிரபல பதிவர்.//

    ஆட்டத்துல இது புதுரகமாவுள்ள இருக்குது..

    ReplyDelete
    Replies
    1. அவுங்க டிபனுக்கே பாம்போ போவாங்களாம்... அப்ப சாப்பாட்டுக்கு யோசிச்சுக்க மக்கா..

      Delete
  5. ஆமா யாரு அந்த 3 பேர் ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு க்ளு தரட்டுமா

      Delete
    2. அவங்க காதை உங்ககிட்ட கொடுத்துட்டா அப்புறம் அவங்க என்ன பண்ணுவாங்க?!

      Delete
    3. பதிவர் சந்திப்பில் நடக்கும் நாடகத்திற்கு கதாநாயாகி தயாராம் அவருக்கு ஏற்ற நாயகனை தேடி வருகிறார்களாம்.
      >>
      சீனு. மதுமதி தான் புது புது போஸ்ல எடுத்த போட்டோக்களை மூஞ்சி புக்குல அப்டேட் பண்ணுறாங்க. அதனால, அவங்களுக்கே முன்னுரிமை. வயசானாலும், உங்க ஸ்டைலும் அழகும் குறையலைன்னு எங்கண்ணனை கூப்பிட்டாலும் கூப்பிடலாம்!!

      Delete
    4. ஹா ஹா எங்கள் வாத்தியார் பாவம்

      Delete
  6. கிசுகிசுக்கள் ரொம்பக் கஷ்டமா இருக்கு ப்ரதர்... இவ்வளவு கஷ்டமாவா கொடுக்கறது? :)))

    ReplyDelete
    Replies
    1. இது கஷ்டமா.. மச்சி எல்லாருக்கும் தெரிஞ்ச வியந்தாங்க...

      Delete
  7. கிசு கிசு.... இப்பவே கண்ணை கட்டுதே..

    ReplyDelete
    Replies
    1. சந்திப்பு முடிஞ்சு இருக்குதய்யா பெரிய கிசு கிசு...

      Delete
  8. கிசு கிசுன்னா இதுதான் கிசு கிசு
    மண்டை காய்ந்ததுதான் மிச்சம்

    ReplyDelete
    Replies
    1. சார்... அங்கே வந்ததும் புரியும் பாருங்க..

      Delete
  9. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //பதிவர் சந்திப்பில் நடக்கும் நாடகத்திற்கு கதாநாயாகி தயாராம் அவருக்கு ஏற்ற நாயகனை தேடி வருகிறார்களாம்//
    எதுக்கு தேடிக்கிட்டு, தமிழ் சினிமாவில் இருந்து ஒரு பிரபல கதாநாயகரை பிடித்து போடுங்கள்.
    //எனது வரிகளின் முதல் தொகுப்பு வெளியாகிறது//
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  11. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் சங்கவி.

    ReplyDelete
  12. சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete