Friday, May 24, 2013

MLA வும் மக்கள் மனசும்.... (புதிய தலைமுறை)

புதிய தலைமுறை செய்திகள் இன்றும் பரவலாக அனைத்து மக்களும் தினமும் பார்க்கும் ஒரு செய்தி சேனலாக இருக்கின்றது.. செய்தின் தரங்களும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பும் பாராட்டப்படவேண்டியது.. கோவை தீ விபத்து சமையத்தில் உடனடியாக அனைத்து மக்களை இந்த செய்தி சென்றடைந்ததற்கு மிக முக்கிய காரணம் புதிய தலைமுறை என்பது மறுக்க முடியாத உண்மை...

புதிய தலைமுறையில் கடந்த நான்கு நாட்களாக என்னை விரும்பி பார்க்க வைத்த நிகழ்ச்சி 234 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களில் முதல் 50 பேர் யார் என்ற தொகுப்பு மிக கவர்ந்தது...

நாம் பள்ளியில் படிக்கும் போது நாம் என்ன செய்தோம் என்பதற்காக டெஸ்ட் வைத்து ரேங்க கொடுப்பர் அதுவுமில்லாமல் தற்போது எல்லாம் நிறுவனங்களில் பயிற்சி கொடுத்தால் அந்த பயிற்சி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு தரவரிசை கொடுப்பது வழக்கமான ஒன்று தான்.. அது போல் சட்டமன்ற உறுப்பின்ர்களுக்கு தரவரிசை என்பது நிச்சயம் வேண்டும் அப்போது தான் அந்த உறுப்பினர்கள் தம் தொகுதி மக்கள் நம் மேல் என்ன நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அவர்களுக்கும் இவர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கலாமா வேண்டாமா என்று தலைமையும் முடிவெடுக்க பயன்படும்..

என்னைப்பொறுத்த வரை 234 தொகுதிகளில் முதல் 50 இடங்களைப்பிடித்த அனைவருமே மக்கள் மனதில் இடம் பிடித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தான். இதில் அதிக முறை எம்எல்ஏக்கள்களாக உள்ளவர்கள் மற்றும் புதியவர்கள்  இடம் பெற்றுள்ளனர் என்பது மகிழ்வான செய்தி..

சட்டமன்ற உறுப்பினர்கள் போல மக்களவை உறுப்பினர்களுக்கும் இதை போல மக்கள் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிய எங்களுக்கெல்லாம் ஆவா...

மக்களிடம் எப்படி கேள்வி கேட்டு எந்த மாதிரி தேர்ந்தெடுத்தார்கள் அதற்கு என்ன மதிப்பெண் கொடுத்தார்கள் என்பதை பற்றி பார்ப்போம்...

1.வாக்குறுதியை நிறைவேற்றுதல் - இதுக்கு 20 மார்க்

2.தொகுதிக்கு வருதல் -இதுக்கு 10 மார்க்

3.அணுக முடிவதில் (அதாவது அந்த MLA-வை எவ்ளோ எளிமையா அணுகலாம்) -இதுக்கு 20 மார்க்

4.இவரின் நிறை குறைகள் - இதுக்கு 10 மார்க்

5.இவரை பற்றிய மக்களின் அபிப்ராயம் -இதுக்கு 40 மார்க்

மொத்தமா 100 மார்க்

இந்த வகையில் கேள்விகளை பிரித்து மக்களிடம் கருத்தை கேட்டுள்ளனர்.. அதில் சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடு மற்றும் மதிப்பெண் கொடுத்துள்ளனர்...

இந்த நிகழ்ச்சியில் அரசியல் விமர்ச்சகர் ஞாநி அவர்களின் பார்வையில் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவனாகவும் அரசியல் பார்வையாளர்கள் அறியவேண்டியதும் நிறைய உள்ளது...

அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் நிச்சம் நம்ம சட்டமன்ற உறுப்பினர் வருவரா என்று ஏங்கிப்பார்த்தவர்களில் நானும் ஒருவன்...

கருத்துகணிப்பு சரியோ தவறோ ஆனால் நம்ம ஊர் சட்டமன்ற உறுப்பினரில் செயல் பாட்டால் அவர் டாப் 50இல் இருக்கிறார் என்றாம் நமக்கு சந்தோசம் தானே...  

3 comments:

  1. நல்ல அலசல் பகிர்விற்கு நன்றி.

    உங்களுக்கு ஒரு கவிதை தந்துள்ளேன் படித்துப் பாருங்கள்.


    நட்பில் நானும் மிதந்தேன்
    நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
    பேச வேண்டித் துடித்தேன்
    பேசிய பின்பு தவித்தேன்

    சொற்களைக் கண்டு மலைத்தேன்
    சொல்ல முடியாது திகைத்தேன்
    இன்னும் சொல்ல நினைத்தேன்
    இன்முகம் தேடி அலைந்தேன்

    அகத்துள் நினைவில் வைத்தே(ன்)
    அன்றே காண விழைந்தேன்
    வரவைக் கண்டு மகிழ்ந்தேன்
    வாய்ப்புத் தேடித் துடித்தேன்

    சொல்லிப் புகழ விழைந்தேன்
    சொல்லில் தடுமாறி நின்றேன்
    மெல்ல முறுவல் முகிழ்த்தேன்
    மீண்டும் மனத்தில் நினைத்தேன்

    வீரம் கண்டு சிலிர்த்தேன்
    தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
    நேரில் காண இருந்தேன்
    நேரம் இன்றித் தவித்தேன்

    தொலைவில் இருப்பை அறிந்தேன்
    தூய நட்பால் நெகிழ்ந்தேன்
    தமிழைத் தாயாய் துதித்தேன்
    தாகம் தணியப் படித்தேன்

    ReplyDelete
  2. இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியை தவற விட்டுவிட்டேன் போல! எங்க ஊரு எம் எல் ஏ ஜீரோ மார்க்குதான் வாங்கியிருப்பாருன்றது வேற விசயம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. முள்ளு முள்ளாய் இருக்குமாம்
    முக்கனியுள் பெருத்து வளருமாம்
    வேலிபோட்ட காவல் தாண்டி
    வேண்டியது இனிப்பாய் மணக்குமாம்

    வண்ணம் ஒன்றே மஞ்சளாம்
    வாசனை எப்போதும் கெஞ்சலாம்
    வண்ணப் போர்வைப் போர்த்தியே
    வாழும் நாளோ சேர்த்தியாம்

    எல்லா நாளும் கிடைக்குமாம்
    எல்லோர் மனதும் விரும்புமாம்
    இல்லா மக்கள் மனதுமே
    இதனை சுவைக்க விரும்புமாம்
    தின்னத் தின்ன திகட்டுமாம்

    தேனாய் சுவையாய் இனிக்குமாம்
    திரும்பத் திரும்பக் கேட்குமாம்
    தேனில் ஊறியே சாப்பிட்டால்
    தேனமுதாய் மனதும் மகிழுமாம்

    எல்லை யில்லா மகிழ்ச்சியே
    எல்லோர் மனதில் இருக்குமாம்
    பிள்ளைமுதல் கிழவர்வரை
    கொள்ளைப் பிரியம் விரும்புமாம்


    ---பெயரென்ன???

    ReplyDelete