Wednesday, May 1, 2013

அஞ்சறைப்பெட்டி 02.05.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவின் மது ஒழிப்பு காரணம் சரியான ஒன்று தான் ஆனால் இவர் நடைபயணம் செய்வதால் அரசாங்கம் டாஸ்மார்க்கை மூடவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது ஏமாற்றமே... அரசாங்கத்தின் பாதி வருமாணம் டாஸ்மார்க்கில் இருந்து தான் வருகிறது என்று அனைவருக்கும் தெரியும் இருந்தும் போராட்டம் நடத்துவது கட்சியின் விளம்பரத்துக்குத்தான் என்பது அனைவரும் அறியாதது இல்லை...

டாஸ்மார்க்கை மூட சொல்லி போராட்டம் நடத்துவதற்கு பதில் குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை நன்றாக விளக்கி ஒவ்வொரு குடிமகனையும் குடிப்பதை குறைக்க வைக்கலாம் நிச்சயம் அவர்கள் நிறுத்தமாட்டார்கள் ஆனால் குடியின் அளவை குறைக்கவைக்க முடியும்...
  ................................................................
மீண்டும் ஒரு ஜாதிப்பிரச்சனை வந்து தமிழகத்தில் பல இடங்களில் பொது சொத்துக்கள் சேதம் என்கிறது செய்தி... ஜாதி அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்பதை இன்னும் அறியாமல் இருக்கின்றனர் என்பது தான் வருந்தத்தக்க செய்தி...

..........................................................................................

நமது நட்பு நாடுகள் எல்லாம் நமக்கு துரோகங்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றன ஆனால் நாம் தான் அவர்கள் நம் நண்பர்கள் என்று தூக்கிப்பிடித்துக்கொண்டு இருக்கிறோம்... தவறுகள் ஏற்படும் போது நட்பு நாடுகளை கடுமையாக கண்டிக்க வேண்டுகிறோம்..
................................................................................................

டச்சு நாட்டில் இயங்கி வரும் லாப நோக்கமற்ற ஓர் நிறுவனம், வரும் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

'ஒருவழிப் பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம்' என 4 தினங்களுக்கு முன்னர் அந்நிறுவனம் விளம்பரம் செய்தது.

செவ்வாய் கிரகத்தில், ஆண்டின் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து பூமியை தாக்கும் சாதாரண புயலை விட 6 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், இந்த வானிலை அறிக்கையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான்கே நாட்களில் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து சுமார் 20 ஆயிரம் பேர் மனு செய்துள்ளனர்.

இவர்களில் 600 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
...............................................................................................

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி 'லிப்ட்' கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர்.

சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உடலுறவில் ஈடுபட்டனர்.

2 பெண்களும் அவருடன் 4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர். மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

ராணுவ வீரர் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தகவல்

துவைக்காமல், இஸ்திரி போடத் தேவையில்லாமல், தொடர்ந்து 100 நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சட்டையை அமெரிக்காவின் உல் & பிரின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உல்லன் நூல் கலந்த துணிகள் கசங்காது, வியர்வை வாடையை வெளியிடாத தன்மை கொண்டது. காட்டனைவிட ஆறு மடங்கு உழைக்கக்கூடியது என்பதால் இந்த வகைத் துணியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆழ்நீலகலரில் சிறிய கட்டங்கள் கொண்ட சட்டையை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

இதனை அணிந்து பார்க்க, நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தாங்கள் எப்படி உபயோகித்தாலும் சட்டைகள் புதிது போலவே இருக்கின்றன என்று கூறுகின்றார்கள். நிறுவன அதிபர் மாக் பிஷப் ஒரே சட்டையை 100 நாட்கள் அணிந்துகொண்டு தெருவில் அனைவரிடமும் அது குறித்த கருத்தினைக் கேட்பது போலவும் அவர்கள் அனைவரும் ஆதரவான கருத்தினை வெளியிடுவதுவும் போன்ற வீடியோ விளம்பரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எல்லோரும் விரும்பும் விதத்திலும், எப்போதும் அணியக் கூடிய வடிவத்திலும் ,சாதாரண விலைமதிப்பிலும் இந்த சட்டைகளை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

தத்துவம்

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ளவும், உழைக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்...


உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு...


கடமையை செய்யும்போது வெகுமதியை எதிர்பார்க்ககூடாது...

9 comments:

  1. நடைமுறையில் உள்ள தகவல்... (சிலர்)

    தத்துவங்கள் + பல தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. தகவல் பகிர்வு சிறப்பு! தத்துவங்கள் அருமை! நன்றி!

    ReplyDelete
  3. //டச்சு நாட்டில் இயங்கி வரும் லாப நோக்கமற்ற ஓர் நிறுவனம், வரும் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. //

    இண்டலக்சுவல் அறிவு வேண்டாம் சாதா அறிவே இதுக்கு போதுமே. அட அறிவியல் அறிந்தவர்களிடம் இது சாத்தியமா என்று கேட்டுவிட்டு வெளியீடு பண்ணிருக்கலாம்ல.( நான் பேசிக்கா மதுரைக்காரம்லா)

    திண்டுக்கல் அண்ணா அதனால தான் எப்போதும் இல்லாமல் இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார்.

    நான் பெரும்பாலன நேரத்தில் கடையில் தான் இருப்பேன் கூச்சப்படாமல் என்னிடம் கூட சந்தேகம் கேட்கலாம்.

    ReplyDelete
  4. மழையப் பார்த்து ஏங்கிடுச்சு
    கண்ணி ரண்டும் பூத்திடுச்சி
    மேக மெல்லாம் ஓடிப்போச்சு
    மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி


    குளமெல்லாம் வத்திப் போச்சு
    கொக்கு நாரை அதிகமாச்சி
    வயலெல்லாம் காஞ்சி போச்சு
    ஆடு மாடு மேஞ்சிடுச்சி


    நில மெல்லாம் மனைகளாச்சு
    நிறைய வீடு வந்திடுச்சி
    நில மற்று போனதாலே
    உழவன் வாழ்க்கை மடிஞ்சிடுச்சி


    மனதெல்லாம் மாறிபோச்சு
    மனிதநேயம் குறைஞ்சிடுச்சி
    பணத்துக்காக அடகு வச்சு
    கனத்த வட்டி வளர்ந்துடிச்சி


    இனத்துச் சண்டை வந்துடிச்சு
    இதய மெல்லாம் நொறுங்கிடுச்சி
    தேச நலன் குறைஞ்சிடுச்சி
    தேவை மட்டும் மாறிடுச்சு


    உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி
    உண்மையன்பு தேய்ந்சுபோச்சு
    உருப்படியாய் சேர்ந்து வாழும்
    உறவு மின்று செத்துடிச்சு

    ReplyDelete
  5. நுங்கும் நீரும்

    இளமையான
    நுங்கெடுத்து
    பதமாகப் பார்த்து
    சீவி

    அதுள்
    ஒரு விரலால்
    அழுத்தினால் உடனே
    ப்ளீச் என்று
    நீர் வரும்

    மீண்டும் மீண்டும்
    விரல் நுழைத்து
    வாயால் கவ்வினால்
    தீண்டும் சுவை
    தீராது

    மீண்டும் கேட்கும்
    மறுபடி
    அதையே நோக்கும்
    பின் ஆசையும்
    அப்போதே அடங்கும்
    மனமும் அமைதியாகும்

    ReplyDelete
  6. உண்மை சொல்ல முடியா
    உணர்வை காண தெரியா
    கண்ணு றக்க கனமே-நமது
    கனவு என்ற நிசமாம்

    சின்ன வயது நிகழ்வே
    சொல்லி வந்த வார்த்தை
    மெல்ல பேசும் உளறல்-மீண்டும்
    சொல்லி பார்க்க விடுமாம்

    வண்ண இளமை நாளை
    வாழ்ந்து முடிந்த வேளை
    திண்ணை தோறும் சென்று-அதை
    தெருவில் பேச விடுமாம்

    உண்ண முடியா விருந்தய்
    உறக்கம் கூட தொடரா
    வண்ண மேனி கனவே-காதல்
    வாசல் தேடி தருமாம்

    சின்ன பெரிய சனங்க
    சிரித்துப் பேசும் மனங்க
    எண்ணம் பேசும் நிசமே-காலை
    எழுமுன் வரும் கனவாம்

    எண்ணம் போல வருமாம்
    இந்த உண்மை நிசமாம்
    வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு
    வாசம் கூட தருமாம்

    ReplyDelete
  7. மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே
    மகிழாதோர் இல்லை தினமே
    நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே
    நெஞ்சுருக மகிழ்வோர் பலரே

    வாயால் சிரிப்பவர் மனிதன்
    வானத்தை நோக்கி மரங்கள்
    நேசத்தைக் காட்டும் விலங்கு-மனிதன்
    நேர்மையற்ற குணத்தில் விலங்கு

    பேசத் தெரிந்த உணர்வுகள்
    போக முடியாத் தொலைவுகள்
    நேசமிழந்த மனித உறவுகள்-எங்கும்
    நேர்மையற்ற வருத்த நிகழ்வுகள்

    காணும் காட்சியே அவலங்கள்
    கண்டும் காணா உள்ளங்கள்
    தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே
    தேடிக் காணாத பிண்டமே

    வெறுமையான மனித உள்ளம்
    வேதனையில் தவிக்கும் இல்லம்
    வீண்பேச்சு சந்தேகம் விவாதம்-இன்று
    விதியல்ல இனிமை எல்லோர்க்கும்

    பணமில்லை சிலருக்கு வாழ
    குணமில்லை கொடுத்துப் பேச
    தினம் வருகின்ற தேவையே-என்றும்
    தீர்க்க முடியா ஆசைநோயே

    மனமே மீண்டும் வருந்தாதே
    மனிதனின் நிலையால் கலங்காதே
    குணமே இதுவென அழுவாதே-எல்லா
    குறைகளும் தீர்த்திடும் உணர்ந்தாலே

    ReplyDelete
  8. அவனா இப்படி மாறினான்
    அதையும் எப்படி நம்பினான்
    குணமே போற்றும் நல்லவன்-குறுகிக்
    குறைத்தப் பண்பே பொறாமையா

    ஆண்டுகள் பலநாள் பழகியதை
    அன்பாய் இருந்து மகிழ்ந்ததை
    தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம்
    தவறாய் நினைப்பது இதுவன்றோ

    கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும்
    கொள்கை மாறிப் போனவரும்
    தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே
    தானே வந்தது பொறாமையே

    அண்ணன் தம்பி உறவுகளும்
    அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும்
    எண்ணம் அதையே மாற்றியே-உறவில்
    ஏற்றத் தாழ்வை வளர்திடுமே

    தாத்தாப் பாட்டி உறவுகளை
    தள்ளி வைக்கும் நிலைமைக்கும்
    உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை
    எள்ளி நகைக்கும் நிலையாகும்

    பணியில் சிறந்தோர் பரிதவிக்க
    பாடாய் படுத்தும் இச்செயலால்
    தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு
    தூய்மை மனதையும் நசித்திடுவர்

    எளிதில் யாரையும் வசப்படுத்தும்
    எல்லா வயதினர் துணையாகும்
    பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி
    பொறாமை என்பதே வேண்டாமே



    ReplyDelete
  9. நெடுநெடுவென வளர்த்தவள்
    நேர்ப் பார்வை இல்லாதவள்
    சிடுசிடுவென இன்று எரிகிறாள்
    சினத்துடன் ஏனோத் தவிக்கிறாள்

    கடுகடுவெனும் காரணம் காணாது
    கண்ணைக் கசக்கி அழுகிறாள்
    விடுவிடுவென எதேயோ தேடி
    வழியை நோக்கியேப் பார்க்கிறாள்

    தடதடவென வண்டியில் அவன்
    தலையைக் கண்டதும் மகிழ்கிறாள்
    குடுகுடுவெனப் பாய்ந்து ஓடி
    கொஞ்சி அவனை அணைக்கிறாள்

    கிடுகிடுவென இடியின் சத்தம்
    கண்டு பயந்ததுபோல் நடிக்கிறாள்
    சலசலவென மழையைப் பார்த்ததும்
    சத்தமின்றி முத்தமும் கொடுக்கிறாள்

    சிடுசிடுவும் எங்கோ மறைந்தது
    சீக்கிரம் உண்மையும் தெரிந்தது
    படபடவென இதயம் துடித்ததும்
    பயமும் அவளுக்குத் தெளிந்தது


    ReplyDelete