உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த இரண்டு நாட்களாக அலுவலகம் விடுமுறை இன்று அஞ்சறைப்பெட்டி எழுத நேரம் கிடைச்சது அதனால் ஒரு நாள் லேட்...
எல்லாரும் விடுமுறையை நல்ல கொண்டாடி இருப்பீர்கள் வாழ்த்துக்கள்....
எல்லாரும் விடுமுறையை நல்ல கொண்டாடி இருப்பீர்கள் வாழ்த்துக்கள்....
............................................................ .............................. .....
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய அம்மாவிற்கு வாழ்த்துக்கள்...
உண்மையான தமிழன் எல்லாம் அம்மா பின்னால் இருப்பதால் தமிழர்களுக்கு நல்லதே நடக்கும்....
இந்த தூக்கு தண்டனை பிரச்சனையை கிளப்பி அம்மாவை தூக்கம் இல்லாமல் செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இப்ப தூக்கம் இல்லையாம்... அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறாங்களாம்.... 5 வருடத்திற்கு அம்மாவை எவனும் ஒண்ணும் செய்ய முடியாது....
இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காக உயிரை இழந்த செங்கொடிக்கு என் வீர வணக்கங்கள்....
............................................................ .............................. .....
ஒரு வழியாக லோக்பாலுக்காக போராடிய 74 வயது இளைஞருக்கு வாழ்த்துக்கள்...
............................................................ .............................. ..............
இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் தனிப்பட்ட அதிகாரத்துடன் இயங்கி வருகிறது இதை விரைவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேர்க்கப்போறாங்களாம்...
இங்க என்ன என்ன ஊழலெல்லாம் நடந்திருக்கோ.... விநாயகருக்கே வெளிச்சம்....
அநேகமாக இம்மசோதா சரத்பவாருக்கு செக் வைக்க கூட இருக்கலாம்....
............................................................ .............................. ..............
இன்னும் கைது படலம் தொடர்ந்து கொண்டே இருக்கு... கைது செய்த போலீசாரை விட முன்னாள் அமைச்சர்கள் மேல் தைரியமாக புகார் கொடுத்த பொது மக்களை பாராட்டலாம்....
............................................................ .............................. ..............
தமிழகம் முழுவதும் இன்று முதல் அரசு கேபிள் வருகிறது. கேபிள் கட்டணக் கொள்ளைக்கு இன்றில் இருந்து விடிவுகாலம்.... அம்மாவின் ஆட்சியில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் நிறைவேறுவதில் மகிழ்ச்சியே...
தகவல்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஐந்தில் திருந்து இல்லையேல் ஐம்பதில் வருந்து என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
குழந்தையாய் இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.
குழந்தை ஆசையாய் கேட்கிறதே, அடம்பிடிக்கிறதே என்பதற்காக தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்றவற்றையும் வாங்கித் தரும் பெற்றோர் குழந்தைகளுக்குள் கான்சர் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 விழுக்காடு குழந்தைகள் அளவுக்கு மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று கவலையுடன் தெரிவிக்கிறது.
இப்படி அதிக எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு, இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது.
குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ்.
உடல் எடை அதிகரிப்பதால் வரும் கான்சர் வருடம் தோறும் தனது விழுக்காட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
வயிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழுப்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி விடுகிறது. நினைவில் கொள்ளுங்கள், மார்பகப் புற்று நோய் ஆண்களுக்கும் வரலாம் !
லிவர், சிறுநீரகம், கல்லீரல் போன்ற இடங்களில் கான்சர் வரவும் இந்த அதிகப்படியான கொழுப்பு காரணமாவதுண்டு.
சைட்டோகின்ஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள் கான்சரை எதிர்த்துப் போராடுகிறது, அதன் அளவை அதிகப்படியான கொழுப்பு குறைத்து விடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.
எனவே, பெற்றோர் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். குழந்தை இன்றைக்கு சிரிப்பதல்ல, என்றைக்கும் ஆரோக்கியமாய் வாழ்வதே முக்கியம்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் மகேந்திரன் வசந்த மண்டபம் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. இவரின் கவிதைகள் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.. அவர் கவிதையின் ஒரு சில வரிகள்...
சொகுசுக்காரை எடுத்துகிட்டு
கொஞ்சதூரம் போனாலும்
நறுமணம்தான் வீசுதைய்யா
மக்காத குப்பையெல்லாம்!!
http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post.html
தத்துவம்
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!
தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!
நல்ல தோரணம்.. அருமையா கட்டியிருக்கீங்க அண்ணா..
ReplyDeleteநல்ல பகிர்வு.....
ReplyDeleteபாரதியின் வரிகளை நேசித்தால் மட்டும் போதாது,
ReplyDeleteஎன்றும் சறுக்காமல் செய்திகள் தாங்கி வரும் அஞ்சறைப் பெட்டியில் இன்று பல செய்திகளில் சறுக்கி இருப்பது வருத்தமே..
இன்னும் லோக் பால் மசோதா நிறை வரவில்லை, ஜன லோக் பால் மசோதாவையும் விவாதத்திற்குள் எடுத்துக் கொள்வதாக தான் பேச்சு..
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வர இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் எதிர்ப்பு காட்டியதாலும், அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியதாலும் கிரிக்கெட் வாரியத்திற்கு விலக்கு அளிப்பது என்று அரசு முடிவெடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகிறது..
சட்டத்தில் ஒரு மாநில முதலமைச்சருக்கே தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து தெரிவித்த பிறகும், ஒரு நாள் கழித்து தீர்மானம் என்று போடப் பட்டது சால்ஜாப்பு வேலை என்றே தோன்றுகிறது...
தமிழனுக்கும் இந்தியனுக்கும் இருக்கும் கெட்ட பழக்கமே முதுகில் குத்து வாங்கியதை ஐந்து வருடம் கழித்து மறந்து விடுவது தான்...
அந்த தமிழன் பின்னால் இல்லா விட்டாலும் ஐந்து வருடத்திற்கு அம்மாவை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மை தவிர அனைத்து இடங்களிலும் சறுக்கி இருக்கிறது அஞ்சறைப் பெட்டி..
முதல் வரிகளில் இருக்கும் பாரதியின் வீரம் வார்த்தைகளிலும், எதிர் காலத்தில் அவசரத்தில் சறுக்காமல் பயணம் செய்யவும் அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன்..
வணக்கம் சூர்யஜீவா...
ReplyDelete//இன்னும் லோக் பால் மசோதா நிறை வரவில்லை, ஜன லோக் பால் மசோதாவையும் விவாதத்திற்குள் எடுத்துக் கொள்வதாக தான் பேச்சு..//
லோக்பால் வேண்டாம் என்று சொன்னவர்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டதே மிகப்பெரிய வெற்றி தானே...
விரைவில் நிறைவேறத்தான் போகிறது...
//தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வர இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் எதிர்ப்பு காட்டியதாலும், அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியதாலும் கிரிக்கெட் வாரியத்திற்கு விலக்கு அளிப்பது என்று அரசு முடிவெடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகிறது..//
அப்படி அரசு விளக்களித்தால் அதற்காக ஒரு சில பொதுநலவாதிகள் கோர்ட் படி ஏறப்போகிறார்கள் என்ற தகவலை படித்த பின்தான் பதிவேற்றினேன்...
..சட்டத்தில் ஒரு மாநில முதலமைச்சருக்கே தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து தெரிவித்த பிறகும், ஒரு நாள் கழித்து தீர்மானம் என்று போடப் பட்டது சால்ஜாப்பு வேலை என்றே தோன்றுகிறது.....
ஒரு நாள் கழித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு முக்கிய காரணம் தீர்மானம் நிறைவேற்றியதற்கு முந்தைய நாள் சட்டமன்றத்தில் அம்மா பேசிய பேச்சுதான்... அதாவது கடந்த ஆட்சியில் நளினியின் தூக்கு தண்டனை மற்றும் ரத்து செய்து விட்டு மற்றவர்களுக்கு தூக்கு கொடுக்கலாம் என்று கடந்த ஆட்சியில் நடந்த நிகழ்வு மக்களுக்கு தெரிய வேண்டும் என்று எடுத்துக்கூறி அடுத்த நாள் தீர்மானம் நிறைவேற்றி விட்டார்..
பாரதியின் வீரமும், வார்த்தையும் என்றுமே சறுக்காது தலைவரே...
அடுத்த அஞ்சறைப்பெட்டி இன்னும் காரசாரமாக இருக்க முயற்சிக்கிறேன்....
மதிப்பளித்து பதில் எழுதியமைக்கு நன்றி..
ReplyDeleteதமிழ்மணம் 3
ReplyDeleteநிகழ்வுகளையும் தகவல்களையும் அழகிய
கதம்பமாய் தொகுத்து
முகரச் செய்திருக்கிறீர்கள்.. நன்று.
என்னையும் என் வலைப்போவையும் அங்கீகரித்து
அறிமுகப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நண்பரே.
என்றும் போல் அசத்தல் .
ReplyDelete//ஒரு வழியாக லோக்பால் நிறைவேறியது 85 வயது இளைஞரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்...//
ReplyDeleteஅப்படியா? எப்போது?? எங்கே??? எப்படி???
யாரந்த 85 வயது இளைஞர்? :-))))
//அநேகமாக இம்மசோதா சரத்பவாருக்கு செக் வைக்க கூட இருக்கலாம்.... //
சரத்பவாரிடம் வம்புக்குப் போக மாட்டார்கள். இந்திரா, ராஜீவ் காந்திக்கே தண்ணி காட்டிய புண்ணியவான் அவர்!
தத்துவம் மூன்றுமே சூப்பர்!
மூன்று தத்துவங்களும் நச்
ReplyDeleteதற்போதெல்லாம் உடல்நலம் சார்ந்த பதிவுகள் உங்களிடமிருந்து அதிகம் காணோமே?
அருமை... வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெட்டி நல்லா இருந்தது மாப்ள நன்றி!
ReplyDelete//தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!// super!
ReplyDeleteஅட இன்னா பாஸ் நீங்க?
ReplyDeleteநம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!