Tuesday, September 6, 2011

கருத்தரிக்கும் ஆற்றலை குறைக்கும் வேப்பிலை...


சிறுவயது முதல் அனைவரும் அறிந்த மரம் வேப்பமரம். சிறுவயதில் மாரியாத்தா கோவிலில் நோம்பி என்றால் மஞ்சளும் வேப்ப இழையும் தான் உடனே ஞாபகம் வரும். கோயிலில் நட்டு வைத்துள்ள கம்பத்தின் மேல் வேப்ப இழையைப் வைத்து அதன் மேல் மஞ்சள் நீரை ஊற்றுவோம். இதற்கு கம்பத்துக்கு தண்ணீர் ஊற்ற செல்கிறேன் என்று செல்வோம்.

ஊரில் யாருக்காவது அம்மை நோய் வந்து விட்டால் வேப்பிலைமேல் ஒரு வெள்ளை வேஷ்டி விரித்து அம்மையால் பாதிக்கப்பட்டவரை படுக்க வைத்திருப்போம் வீட்டுக்கு வெளியே வேப்பிலை குத்தி வைத்திருப்பார்கள்.


கிராமத்தில் இருந்த போது வாரம் இரண்டு அல்லது 3 முறை வேப்பங்குச்சியில் பல் விளக்குவோம். அப்போது வேப்பங்குச்சியை கடித்து மெல்லும் போது ஒரு கசப்பு இருக்கும் அந்த கசப்பு பல் இடுக்கில் உள்ள கிரிமைகளை அழிக்கும் என்று சொல்வார்கள்... இவ்வாறு வேப்ப இலை, மரம் என சிறுவயதில் இருந்து வேப்பமரத்துக்கும் நமக்கும் உண்டான உறவுகள் இன்று வரை உள்ளது.

அப்போதெல்லாம் தெரியவில்லை வேப்பிலை ஒரு கிரிமிநாசினி என்று.. வேப்பமரம் இயற்கை நமக்கு அளித்த கொடையில் மிக முக்கியமானது என்று சொல்லலாம். நிறைய கை வைத்தியங்களுக்கு வேப்பிலை மிகவும் உதவுகிறது.



வேப்பமரத்தின் பயன்கள்

தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்பநிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது.

மருந்துகள், பல வாசனைப் பொருட்கள், கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேப்பிலைகள் பயன்படுகின்றன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்

வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.

வேப்பம் பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்.

வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


உலகில், இந்தியாவில்தான் இப்போது அதிக வேப்ப மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேப்பமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேப்பமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன.

நாம் இருக்கும் வேப்பமரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான்!

மரங்களை வெட்டாதீர்... ஒரு மரத்தை வெட்ட வேண்டி வந்தால் 10 மரங்களை நடுவோம்....

17 comments:

  1. வேம்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. செய்திகள் ஏராளம்
    வேப்பமரத்தின் ஒவ்வொரு பயன்களையும்
    நன்கு விளங்குமாறு தெளிவாக
    அறிவியல் துணையுடன் அறியத் தந்திருக்கிறீர்கள்.
    இவ்வளவு விஷயமா என ஆச்சர்யமா இருக்குது.....
    நன்றி நண்பரே.


    தமிழ்மணம் 5

    ReplyDelete
  3. நண்பரே, நல்ல பதிவு, இது போன்று இன்னும் பல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிகவும் உபயோகமான பதிவு மக்கா..!!!

    ReplyDelete
  5. அருமை
    பகிர்வுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்


    (டெம்ளேட் கமெண்ட் போடணும்னு ரொம்ப நாள் ஆசை...)

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றிங்க மாப்ள!

    ReplyDelete
  8. வேம்பு பற்றிய அத்தனை தகவல்களின் மூலம் பதிவுலகத்திற்கு ஆவண படைப்பை தந்திருக்கிறீர்கள்.. நன்றிகள்..

    ReplyDelete
  9. நல்ல பதிவு!
    பயன்கள் இவ்வளவு தானா? இல்லை இன்னும் இருக்கிறதா?

    ReplyDelete
  10. // சிறுவயதில் மாரியாத்தா கோவிலில் நோம்பி என்றால் மஞ்சளும் வேப்ப இழையும் தான் உடனே ஞாபகம் வரும். கோயிலில் நட்டு வைத்துள்ள கம்பத்தின் மேல் வேப்ப இழையைப் வைத்து அதன் மேல் மஞ்சள் நீரை ஊற்றுவோம் //

    கோவிலில் உள்ள வேப்பிலையை அதன் சூழ்நிலையோடு ஒன்றி நுகர்ந்தால் ஒரு வித சொல்ல முடியாத அளவிற்கு எதோ ஒன்றை ஏற்படுத்துமே! யாராவது அனுபவித்திருக்கீறீர்களா? நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  11. அண்ணா நல்ல பதிவு அண்ணா . இந்த மரத்துல இவ்வளவு விஷயம் இருக்கா பகிவிர்க்கு நன்றி

    ReplyDelete
  12. வேம்பு பற்றிய தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  13. welcome back (for writing good health related articles)

    ReplyDelete
  14. நல்ல தகவல்கள் ....பயனுள்ளவைகள் அனைத்தும் ...நன்றி நண்பரே

    ReplyDelete