Wednesday, September 21, 2011

அஞ்சறைப்பெட்டி 22.09.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

ராஜபக்சே இனி இலங்கை, இந்தியாவைத் தவிர வேறு எங்கும் சுதந்திரமாக நடமாட முடியாது போல...

அமெரிக்கா போய் ஊர் சுத்தலாம் என்று இருந்தவர் மனதில் மண்ணை அள்ளிப்போட்டது அமெரிக்கா...

என்றைக்கு இருந்தாலும் நீ ஒரு லட்சம் உயிருக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் ராசபக்சே...


...............................................................................................


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை ஏற்று கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர். 127 பேர் தங்களை வருத்திக் கொண்டு நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்கிறது.

மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்... மக்களின் அமைதியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...

வட இந்திய மீடியாக்கள் எல்லாம் ஒரு பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு அதையே முன்னிறுத்தி நேரடி ஒளிபரப்பு செய்து சப்ப மேட்டரைக்கூட பெரிதாக்குகின்றனர். கூடங்குளம் பிரச்சனைக்கு தமிழக மீடியாக்கள் வடஇந்திய மீடியாக்கள் போல நடந்திருந்தால் இன்னும் வரவேற்பை பெற்று இருக்கும்....


...............................................................................................


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.  இனி எல்லார்த்துக்கும் சந்தோசம் தான்...


................................................................................................


மாநகராட்சி, நகராட்சியை விட ஊராட்சி மன்ற தேர்தல் தான் களை கட்டும். இதுவரைக்கும் மாமன், மச்சான்களை பார்க்காதவர்கள் கூட வழிந்து வழிந்து பேசுவார்கள்.

ஊராட்சி தலைவர் தேர்தலில் நிற்பவர்கள் வீட்டில் தினமும் கிடாக்கறியும், சரக்கும் நிச்சயம் உண்டு.

கிராமப்புறங்களில் வெட்டியாக பொழுதை கழிப்பவர்களுக்கு எல்லாம் தேர்தல் முடியும் வரை கொண்டாட்டம் தான்.

................................................................................................

முதல்வர் கொடுத்த இலவசங்கள் எந்த பொருளுக்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ மாணவர்களுக்கு கொடுத்த லேப்டாப்பிற்கு பலத்த வரவேற்பு..


எனக்கு தெரிந்த மாணவன் 12ம் வகுப்பில் கணிணி பிரிவை எடுத்து படிக்கிறான். பள்ளியில் இருக்கும் பழைய கணிணியில் எதோ தட்டியவனுக்கு புது லேப்டாப்பை கையில் வாங்கும் போது அவனது முகத்தில் ஏற்பட்ட ஒரு மலர்ச்சி இருக்கே நிச்சயம் இதற்காகவே அம்மாவை பாராட்டி ஆகவேண்டும்...


..................................................................................................


சுவீடனில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பக்கவாதம் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தினமும் 2 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 14 சதவீதம் பக்கவாத நோய் பாதிப்பு குறைய வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் 3 முதல் 4 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 17 சதவீதம், 6 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 7 சதவீதமும் பக்கவாத நோய் பாதிப்பு குறையும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
காபி குடிப்பதால் மூளையில் ரத்த உறைவு குறைந்து பக்கவாத நோய் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.


..................................................................................................

தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவமு மிகவும் வரவேற்கத்தக்கது..

இதில் அவர்கள் வாங்கும் ஓட்டுக்களைப்பார்த்த பின்னாவது பேசாமல் இருப்பார்களா என்று பார்ப்போம்..


தகவல்

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடுகளாக முறையே அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை உள்ளது. 4வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் கடுமையான நிலநடுக்கம் ஆகியவற்றால் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இதனால் 2011ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டு 3வது இடத்தை பிடிக்கும் என சர்வதேச நிதியம் தகவல் தெரிவிக்கிறது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் க.நா. கல்யாணசுந்தரம். கவிதை வாசல் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது.

http://kavithaivaasal.blogspot.com/

 
தத்துவம்



நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கபூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம், நம்பிக்கை.

எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரை தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்! 

13 comments:

  1. இனி எல்லார்த்துக்கும் சந்தோசம் தான்...// அரசியல் வாதிகளுக்கு மட்டும் தானே?

    இலவசங்களை எதிர்ப்பார்க்கும் நமக்குமா?

    ReplyDelete
  2. இது ராஜபக்சேவுக்கு மிகப்பெரிய அவமானம்...

    இன்னும் பெரிய அவமானம் சந்திக்க வேண்டும்

    ReplyDelete
  3. இந்தியா பொருளாதார முன்னேற்றம் வரவேற்ற வேண்டியமு...

    பெருமையும் கூட....

    அனைத்து தகவல்களும் சூப்பர்..

    ReplyDelete
  4. இந்த வார அஞ்சறைப்பெட்டி
    கூடலூரு குண்டுமல்லி வாசம்...

    இந்த வார அறிமுகப்பதிவர் க.நா. கல்யாணசுந்தரம். அவர்களின் வலைப்போ சென்று பார்த்தேன்.
    அருமையான அறிமுகம் நண்பரே.

    ReplyDelete
  5. பல்சுவை தகவல்கள் சூப்பர் ராஜா.....

    ReplyDelete
  6. ராஜபக்சே அதை நன்றாக உணர்ந்துவிட்டான்....இந்தியாவுக்கு வருவது காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே...

    ReplyDelete
  7. த.ம.7
    அஞ்சறைப்பெட்டியில் எல்லாமே இருக்கு!

    ReplyDelete
  8. ஒரு நாளைக்கு 4 காபி குடிப்பவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன தகவல் மகிழ்வு தந்தது. இந்த முறையும் அஞ்சறைப் பெட்டி சூப்பர் சார்!

    ReplyDelete
  9. அஞ்சறைப் பெட்டியில் பரமக்குடி சமாச்சாரம் மிஸ்ஸிங்

    ReplyDelete
  10. அஞ்சறைப்பெட்டி எல்லாமே நல்லா இருக்கு...

    ReplyDelete
  11. //மண்ணை அள்ளிப்போட்டது அமெரிக்கா//
    ஏங்க. செய்தியை சரியாப் படிக்கலையா?

    ReplyDelete
  12. கவிதை வீதி மாதிரி கவிதை வாசலா... ம்ம்ம் நடக்கட்டும்...

    ReplyDelete
  13. வழமை போல் சுவாரஸ்யம். உள்ளாட்சி தேர்தலை நானும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete