Friday, September 9, 2011

அஞ்சறைப்பெட்டி 09-09-2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு அதுவும் தலைநகரில் மிகவும் வருந்தத்தக்க செய்தி. மூன்றடுக்கு பாதுகாப்பு, நான்கு அடுக்கு பாதுகாப்பு என்று வாய் கிழிய சொல்கிறார்கள் ஆனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குண்டு வெடித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் ஆறுதல் சொல்லி புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் கொடுப்பதை குறைத்துக்கொண்டு அடுத்த முறை எங்கும் குண்டு வெடிக்காததது போல் நடவடிக்கை எடுங்கப்பா...

...............................................................................................

அடுத்து வருகிறது உள்ளாட்சித் தேர்தல். உள்ளாட்சித் தேர்தலில் எப்பவும் பணம் விளையாடும் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே விளையாடும் என எதிர்பார்க்கலாம். தேர்தல் கமிஷன் சட்டசபை தேர்தலில் பணத்தை தடுக்கவே கஷ்டப்பட்டார்கள். இதில் எப்படி தடுக்கப்போகிறார்களே பொறத்திருப்போம்...
...............................................................................................

உள்ளாட்சி தேர்தலில் வைகோவின் மதிமுக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் வரவேற்கத்தக்கது. 

உள்ளாட்சி தேர்தலில் மும்முனை போட்டி அல்லது நான்கு முனை போட்டியை எதிர்பார்க்கலாம். 

................................................................................................

பேரரிவாளன், முருகன், சாந்தானின் தூக்கு தண்டனையை தற்காலிமாக நிறுத்தி வைக்க செய்ய மிகவும் பாடுபட்டவர் வைகோ. ஆனால் நிறைய பத்திரிக்கைகள் அவர் இருந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.

யார் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் இந்த வழக்கை தினமும் கவனிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கிற்கு அரும்பாடுபட்டவர் வைகோ என்று....

................................................................................................

கோவையில் அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் கட்டப்பட்டு தற்போது முடிவிற்கு வந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு மண்ணில் புதைந்துள்ளது.

இதற்கு எப்படி அப்ரூவல் கொடுத்தானுகளோ, இதில் எவ்வளவு சுருட்டுனாங்களோ யாருக்குத் தெரியும்...

..................................................................................................

வீரபாண்டியார் நில அபகரிப்பு வழக்கில் ஜாமினில் வெளியே வந்தார் ஆனால் உடனே மீண்டும் அடுத்த வழக்கில் கைது..

இந்த வழக்கில் ஜாமின் வாங்கினால் மீண்டும் இன்னொரு வழக்கு என மாறி மாறி உள்ள தள்ளுவாங்க போலிருக்கே...

..................................................................................................

கேரள சேச்கிளுக்கும், சேட்டன்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள்...

..................................................................................................

ரெட்டிகளுக்கு போதாத நேரம் போல ஆந்திராவில் ஜெகன் மோகன் சிபிஜயிடம் பாடாத படுகிறார்.  கர்நாடகாவின் பொருளாதாரம் என்றழைக்கப்பட்ட ரெட்டி சகோதரர்கள் இப்ப உள்ளே... இவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பொடும் பொருட்களைப் பார்த்தால் தலை சுற்றுகிறது...

..................................................................................................

சீனாவில் மெட்ரோ ரெயில்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களை உற்சாகப்படுத்த புது உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இளம் அழகிய கவர்ச்சி அழகிகள் தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து ஆண்களை கிளு கிளுப்பூட்டி வருகின்றனர்.
இச்சம்பவம் ஷாங்காய் மெட்ரோ ரெயில்களில் கடந்த சில வாரங்களாக நடை பெற்று வருகிறது. ரெயில்களின் இருக்கைகளுக்கு இடையில் நடந்து செல்லும் அழகிகள் தங்களது உள்ளாடைகளை கழற்றி வீசி கவர்ச்சியில் உச்சத்துக்கு செல்கின்றனர்.
இதை ரெயில் பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ படமாக எடுத்து இண்டர்நெட்களில் பதிவு செய்து பரவ விடுகின்றனர். இதனால் ஷாங்காய் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதன் மூலம் ரெயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மேலும் பல ரக டிசைன் கவர்ச்சி உடைகளை அணிந்தும் போஸ் கொடுக்கின்றனர். அந்த உடைகளை அணிந்து ஷாங்காய் நகர வீதிகளில் ஏராளமான பெண்கள் வலம் வருகின்றனர்.
தகவல்

ஜனவரியில் பிறப்பவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகராகவும் ஆவர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.   குழந்தைகள் பிறக்கும் மாதத்துக்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இது குறித்து லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக கடந்த முறை நடந்த தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்களின் டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிகின்றனர்.

 அதே போன்று ஜனவரியில் பிறந்தவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளனர். மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.

அதே வேளையில் கோடை கால மாதங்களில் பிறந்தவர்களில் பெரும் பாலோர் கால்பந்து வீரர், டாக்டர் மற்றும் பல் டாக்டர் பதவியில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையி¢ல் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் மகேந்திரன் வசந்த மண்டபம் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. இவரின் கவிதைகள் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.. அவர் கவிதையின் ஒரு சில வரிகள்...

சொகுசுக்காரை எடுத்துகிட்டு

கொஞ்சதூரம் போனாலும்
நறுமணம்தான் வீசுதைய்யா
மக்காத குப்பையெல்லாம்!!

http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post.html


 
தத்துவம்

சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.

அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.


தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.


நண்பர்களுக்கு வணக்கம்..

எனது புதிய தொழிலுக்கு  i5 Processor, 4 GB Ram, 1 GB NVidia Graphic Card, 500 GB hard disk இந்த திறன் கொண்ட லேப்டாப் தேவைப்படுகிறது. இந்தியாவில் விசாரிக்கையில் 40000க்கும் மேல் வருகிறது. விசாரித்ததில் US, UK, Singapore, Dubai இங்கு  விலை குறைவாக இருக்கும் என்று அறிந்தேன். இங்கு பணிபுரியும் நம் தமிழ் சகோதர சகோரரிகள் விவரம் தெரிந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். எனக்கு டிசம்பரில் கிடைத்தால் போதுமானது.

சகோதர, சகோதரிகள் உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்...

தொடர்புக்கு sat10707@gmail.com



12 comments:

  1. ம் ...தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன் .

    ReplyDelete
  2. விசாரித்ததில் US, UK, Singapore, Dubai இங்கு விலை குறைவாக இருக்கும் என்று அறிந்தேன்.//

    'பீட்ரூட் பன்னிகுட்டி" ஹி ஹி இதெப்பிடி இருக்கு...?

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு

    சூப்பர்

    ReplyDelete
  4. அஞ்சறைப்பெட்டி சூப்பர்...

    ReplyDelete
  5. அன்பு நண்பரே
    நான் வரும் பதினான்காம் தேதி ஊருக்கு வருகிறேன்
    வருகையில் விலை விசாரித்து சொல்கிறேன்.

    இன்றைய அஞ்சறைப்பெட்டி
    மனம் மிகுந்து வாசம் வீசிற்று.

    ReplyDelete
  6. நீங்க ம.தி.மு.க சப்போர்ட்டா....???

    ReplyDelete
  7. குண்டு வெடிப்பு... எத்தனை உயிர் இழப்பு.... தமிழகத்தில் இருந்து வந்த ஒருவர் கூட இறந்து விட்டார் இந்த சம்பவத்தில்.... :(

    எப்போது இவையெல்லாம் நடப்பது நிற்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி....

    ReplyDelete
  8. பிறந்த தேதிய விட்டாச்சா?

    இப்ப மாசத்த புடிச்சிருக்காங்க.

    அடுத்து வருஷத்த கணக்கெடுப்பாங்க போல!

    ReplyDelete
  9. அஞ்சறைப் பெட்டி ரொம்ப நல்லா வந்திருக்கு... எல்லாச் சுவையும் கலந்து இருக்கு.

    ReplyDelete
  10. அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:
    இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

    ஒருமுறை வாருங்களேன் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

    ReplyDelete
  11. உள்ளாட்சி தேர்தலில் நான்கு முனை போட்டியா? நீங்க வேற சங்கவி. ஒரு முனை போட்டி தான். நான்கு பேர் நின்னால் நான்கு முனை போட்டி ஆகிடுமா?

    ReplyDelete