Sunday, December 18, 2011

ஈரோட்டில் வரலாறு காணாத பதிவர்கள் சந்திப்பு...

 நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் நண்பர்களிடன் கூட்டத்தை எங்களின் அன்பினால் எதிர்பார்க்காத அளவு அழைத்து வருகிறோம். இந்த வருடம் வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் முகநூல், டிவிட்டர் நண்பர்களையும் அழைத்திருந்தோம் வருகை தரும் நண்பர்களை மின்அஞ்சல் செய்யுமாறு கூறி இருந்தோம்.




எங்களுக்கு வந்த மின்அஞ்சலைப் பார்த்ததும் எப்படியும் 175 பேரைத்தாண்டும் என்று நினைத்திருந்தோம் ஆனால் 230 நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் அன்பினால் திக்குமுக்காடச் செய்தனர் வந்திருந்த நண்பர்கள்.


தமிழ் பதிவுலகில் இது ஒரு வரலாறு காணத கூட்டம்... இது வரை எந்த ஒரு பதிவர் சந்திப்பிலும் இவ்வளவு நண்பர்கள் கூடியதில்லை முதன் முதலாக ஈரோட்டில் சங்கமத்தில் உங்களை எல்லாம் அழைத்து சந்திக்க வைத்ததில் எங்கள் மஞ்சள் மண்ணிற்கும் எங்களுக்கும் பெருமையே..
 
வெளியூரில் இருந்து தங்களது கடுமையான வேலைப்பளுவிற்கும், பல நிகழ்ச்சிகளுக்கும் நடுவே தங்கள் சிரமத்தை பார்க்காமல் ஈரோடு வந்து சங்கமத்தில் கலந்து கொண்ட தங்களுக்கு எப்படிச் சொல்வது நன்றியை... 

பல வேலைகள் இருக்கிறது எங்களால் வர இயலவில்லை என்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த வெளியூர், மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் நண்பர்களுக்கு எப்படிச் சொல்வது நன்றியை...

நன்றி என்ற ஒரு வார்த்தையில் அடக்கவில்லை தங்களின் மேலான அன்பை...

இச்சங்கமத்தை சிறப்பித்த பதிவர்களுக்கும், முகநூல் மற்றும் டிவிட்டர் நண்பர்களுக்கு எங்களது கோடான கோடி நன்றி....
நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்கள் இனி வரும் பதிவுகளில்... 

தற்போது கலந்து கொண்டபதிவர்கள் பெயர்கள் என் ஞாபகத்தில் உள்ள வரை பதிகிறேன் யாராவது பெயர் விட்டு இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க சேர்த்து கொள்கிறேன்... நான் இரவில் இருந்து வரிசையாக சந்தித்தவர்களை அசைபோடுகிறேன்..


மணிஜி, ஜாக்கிசேகர், மயில் ராவணன், அகநாழிகை வாசுதேவன், அபி அப்பா, பிரபாகரன், விந்தை மனிதன் ராஜாராம், வீடு திரும்பல் மோகன் குமார், கேஆர்பி செந்தில் மற்றும் அவர் தம்பி, மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், ஆரூர் முனா, நக்கீரன் ( இவரிடம் தொலைபேசியில் மாப்பு விக்கி, நாஞ்சில் மனோ, மான்புமிகு மாணவன் ஆகியோர் பேசிக்கொண்டு சந்தோசத்தையும், தங்கள் வர இயலாமையையும் கூறினர்) , முகநூல் நண்பர்கள் அன்பழகன், காவேரி கணேஷ், குறும்பட இயக்குநர் செல்வக்குமார் இவர்கள் நண்பர்கள் இரண்டு பேர் (சாரிங்க பேர் மறந்துட்டேன்) , கோபி இவர்களிடன் பேசிய பின் மதுரையில் இருந்து தருமி ஐயா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன் இவர்களுடன் இன்னும் ஒருவர், தமிழ்வாசி பிரகாஷ் இரவு சந்தித்தவர்கள்.. காலையில்  அண்ணன் உண்மை தமிழன் , மதுரை சீனா ஐயா தம்பதியனர், கோவை கந்தசாமி, மரவளத் வின்சென்ட், முளிகை வளம் ஐயா, தேனம்மை லட்சுமணன், ஜீவ்ஸ், அரவிந்தன், லக்கி யுவகிருஷ்ணா, அதிஷா, குருவை மாதேஸ்வரன், சுரேஷ், குணசீலன், திருப்பூர் வெய்யிலான் மற்றும் சேர்தளத்தைச் சேர்ந்த நண்பர்கள், உழவன், சேலம் தேவா, கோகுலத்தில் சூர்யன் வெங்கட், கோவை மோனி, ராஜசேகர், கோமாளி செல்வா,  தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமார், மதுரை கோவிந்தராஜ், ஆகாய மனிதன், சம்பத்குமார், கவிஞர் தமிழரசி, மயில் விஜி, தென்காசி தமிழ்பைங்கிளி, சாதாரணமானவள், எழுத்தாளர் பாலபாரதி, பேஸ்புக் கௌரி ராமமூர்த்தி, எவரெஸ்ட் துரை, ஈரோடு JCI R Erode Metro  சேர்ந்த ஈரோடு வெங்கடேசன். கரூர் அன்பழகன், வானம்பாடிகள் பாலா ஐயா, ஷர்புதீன்,  இன்னும் நிறைய நண்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

இவர்களுடன் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தைச் சார்ந்த தாமோதர் சந்துரு அண்ணா, கதிர், ஆருரன், ஜாபர், பாலசி, லவ்டேல் மேடி, செல்வம் அண்ணா, பாஸ் கார்த்தி, வால்பையன் அருண்ராஜ், வேலு, அகள்விளக்கு ராஜா, பவளசங்கரி, டாக்டர் ரோகிணி மற்றும் சங்கவி என்னும் நான்...

(நண்பர்களே யாராவது பெயரை விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் பதிந்து விடுகிறேன்... (இச்சந்திப்பு பதிவுலகில் ஒரு வரலாறு)

கடந்த 10 நாட்களாக நாங்க சங்கமத்துக்கு வாங்க வாங்க என்று அழைப்பிட்டு இருந்தோம்....

இனி ஈரோடு சங்கமத்தைப்பற்றி இணையமே எழுதித்தள்ளும் அத்தனை சுவாரஸ்யங்கள்...
 10 நாட்களுக்கு பதிவெழுத பதிவை தேத்தும் பதிவர்கள்


இதுவரை பதிவிட்டவர்கள் லிங்க்...

http://adrasaka.blogspot.com/2011/12/1_18.html
http://gunathamizh.blogspot.com/2011/12/blog-post_18.html
http://sadharanamanaval.blogspot.com/2011/12/2011.html
http://gokulathilsuriyan.blogspot.com/2011/12/blog-post_19.html
http://www.tamilvaasi.com/2011/12/blog-post_19.html
http://veeedu.blogspot.com/2011/12/blog-post_18.html

51 comments:

  1. இம்புட்டு லேட்டா போட்றிங்க.... மொத ஆளா பதிவு போடணும்னு ரெண்டு மணிக்கெல்லாம் பஸ் புடிச்சீங்க?


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...

    ReplyDelete
  2. தங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி சங்கவி. நானும் பதிவெழுதி நீங்கள் வெளியிடும் அதே நேரத்தில் பதிவு வெளியிட்டு விட்டேன். ஆனால் ஒரே பதிவு தான் பத்து நாளைக்கல்ல

    ReplyDelete
  3. நன்றி :) மகிழ்ச்சி :)

    ReplyDelete
  4. மதுரையில் இருந்து தருமி ஐயா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன் இவர்களுடன் இன்னும் ஒருவர், தமிழ்வாசி பிரகாஷ் இரவு சந்தித்தவர்கள்.. ///

    அந்த ஒருவர் சித்திரைவீதிக்காரன் வலைப்பதிவு ஓனர் சுந்தர்

    ReplyDelete
  5. மாப்ள கலக்கிட்டீங்க போல ஹஹா!

    ReplyDelete
  6. சங்கவி,

    உங்களின் விருதோம்பல் மகிழ்ச்சியளிக்கிறது... தொடருங்கள் பதிவுகளை...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. //இம்புட்டு லேட்டா போட்றிங்க.... மொத ஆளா பதிவு போடணும்னு ரெண்டு மணிக்கெல்லாம் பஸ் புடிச்சீங்க?//

    மச்சி எனக்கு முன் எல்லாம் ப்ளைட் புடிச்சி போட்டாச்சி...

    சிபி ஸ்பாட்லியே போட்டாச்சு... ஆக பதிவு போட்டால் சரி...

    ReplyDelete
  8. .. மோகன் அண்ணா...

    உங்கள் ஒரு பதிவு 10 பதிவுக்கு போட்டது போல் தான்...

    நீங்கள் வந்து சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா...

    ReplyDelete
  9. மாப்பு விக்கி அடுத்த முறை நீங்க வர்றீங்க... சந்திக்கிறோம்....

    ReplyDelete
  10. காவேரி கணேஷ் அண்ணா...

    நீங்கள் வந்து சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா...

    ReplyDelete
  11. அனுபவம்.... - கலக்கல்

    ReplyDelete
  12. கலந்துக்கலையேன்னு பொறாமையா இருக்கு

    ReplyDelete
  13. மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருந்தா இந்த திருவிழவில் கலந்துக் கொள்ளாதது மிகவும் வேதனையாக இருக்கிறது..

    ReplyDelete
  14. ராஜி...

    //கலந்துக்கலையேன்னு பொறாமையா இருக்கு//

    வரும் பதிவுகளைப் பாருங்க... இன்னும்...

    ReplyDelete
  15. //{ கவிதை வீதி... // சௌந்தர் // }

    மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருந்தா இந்த திருவிழவில் கலந்துக் கொள்ளாதது மிகவும் வேதனையாக இருக்கிறது..

    வாத்தியாரே உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
  16. http://anbudan-raja.blogspot.com/

    ReplyDelete
  17. 18-12-11 நடந்த சங்கமம் 2011 என்னை மிகவும் கவர்தது. நடத்திய ஈரோடு தமிழ் வலைபதிவர் குழுமம் நன்பர்கள் வந்த அனைத்து நபர்களையும் அன்புடன் வரவேற்று இனையத்தில் இருந்து சிறந்த 15 வலைபதிவுகளை தேற்வு செய்து அதை உருவாக்கி திறம்பட நடத்தி வரும் நன்பர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது என் நெஞ்சை நெகிழ வைத்தது. நிகழ்சியின் முக்கிய நிகழ்வான சிறப்பு விருந்தினர் திரு ஸ்டாலின் குனசேகர் அய்யா அவர்களின் சீர்மிகு உரை அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்தது. நிறைவாக வந்திருந்த நன்பர்கள் அனைவரும் தங்களை அறிமுகபடுத்திக் கொண்டது நல்ல ஒரு செயல்பாடு ஆகும். நிறைவாக மதிய உணவு சைவம் & அசைவம் என்று நன்றாக மற்றும் நிறைவாக கவனித்துக்கொண்டார்கள். நீங்காத நினைகளுடன் இன்று மனதால் சங்கமித்து உடலால் பிரிந்தோம் அடுத்த சங்கமம் 2012 எதிர்னோக்கி.

    ReplyDelete
  18. உடல்நிலை சரியில்லாததால் என்னால் வரமுடியவில்லை, பொருத்தருளவும்.நன்றி.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  20. அதெல்லாம் இருக்கட்டும் அண்ணாத்தே! பூவா எண்ணப் போட்டீங்க ????

    ReplyDelete
  21. மிக்க நன்றி தம்பி...

    எங்களை அன்போடு உபசரித்த ஈரோட்டு நண்பர்கள் மறக்கமுடியாதவர்கள்...

    ReplyDelete
  22. விழாவை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  23. கலக்கல் சந்திப்புய்யா, அசத்திபுட்டீங்க என் பெயரும் இந்த சந்திப்பில் பங்கெடுக்க செய்தமைக்கு நன்றி...!!! வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  24. சி.பி.செந்தில்குமார்,நந்தா F/O நிலா,செல்வம்.M மற்றும் நானும் எனது மனைவியும் விழாவிற்கு வந்திருந்தோம்.

    விழாவில் பங்கு பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

    மதிய உணவு ரொம்ப ஜோருப்பா.நம்ம செக்‌ஷன்.அசைவம் :)))

    ReplyDelete
  25. புகைப்படங்கள்.

    https://plus.google.com/101269569416313445820/posts/hJJwb72JEYJ

    https://plus.google.com/101269569416313445820/posts/YhVEpc12NQ3

    ReplyDelete
  26. விழா சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி நான் வராததற்கு மன்னிக்கவும் சங்கவி

    ReplyDelete
  27. //
    http://veeedu.blogspot.com/2011/12/blog-post_18.html //

    இந்த லிங்க் சரிபார்க்கவும்.!

    ReplyDelete
  28. //வெளியூரில் இருந்து தங்களது கடுமையான வேலைப்பளுவிற்கும், பல நிகழ்ச்சிகளுக்கும் நடுவே தங்கள் சிரமத்தை பார்க்காமல் ஈரோடு வந்து சங்கமத்தில் கலந்து கொண்ட தங்களுக்கு எப்படிச் சொல்வது நன்றியை... //

    எங்களை ஈரோட்டில் சங்கமிக்கவைத்த உங்கள் குழுமத்திற்க்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா..

    மென்மேலும் தொடருங்கள்..

    ReplyDelete
  29. ம‌ன்னிக்க‌ ச‌கா.. வ‌ர‌மால் போன‌ட‌ஹ்ற்கு.. ஒரு வார‌ இறுதியில் த‌னியே வ‌ந்துவிடுகிறேன்

    ReplyDelete
  30. " விழா சிறப்பாக நடந்தமைக்கு என் வாழ்த்துக்கள் "

    முத்து ரத்தினம், சவுதி அரேபியா .

    ReplyDelete
  31. இன்னைக்கு கணினி அரைப் பரிட்சையாம்.. எனக்கு இன்று விடுமுறை கொடுக்காத தலைமை ஆசிரியரை கண்டிக்கிறேன்..

    ReplyDelete
  32. அருமையான விழா இதில் எனக்கு மிகவும் பிடித்தது, பிரிட்டிஜ் மற்றும் ஆட்டு தலைகறி

    ReplyDelete
  33. சார். நான் பதிவெழுத வந்தே இரண்டு மாதம்தான் ஆகிறது. நம்ம எல்லாம் ஒரு பதிவரா அப்படின்னு நினைத்துதான் நான் வரவில்லை. அடுத்த வருடம் கண்டிப்பாக வருவேன். ரொம்ப வருத்தமாக இருக்கு சார். சாரி.

    இன்று என் வலையில்:
    பதிவர் சங்கம் தேவையா? - கவிதை
    http://duraidaniel.blogspot.com/2011/12/blog-post_19.html

    தமிழ்மணம் வாக்கு 10.

    ReplyDelete
  34. நல்லதொரு வாய்ப்பை, தவிர்க்க இயலாத வேலைப் பளுவினால் இழந்து விட்டேன். ஆனால் சங்கமம் தொடர்பான அனைத்து இடுகைகளையும் படித்து, அங்கு வந்து திரும்பிய ஒரு உணர்வினைப் பெற்றுவிட்டேன்.!!

    ReplyDelete
  35. தக தகவென ஒரு பொறாமை எல்லோர் மீதும்!

    ReplyDelete
  36. //நன்றி என்ற ஒரு வார்த்தையில் அடக்கவில்லை தங்களின் மேலான அன்பை...

    இச்சங்கமத்தை சிறப்பித்த பதிவர்களுக்கும், முகநூல் மற்றும் டிவிட்டர் நண்பர்களுக்கு எங்களது கோடான கோடி நன்றி....//

    முரண்பாடாகத் தெரியவில்லையா? ;)

    மிக சிறந்த முறையில் நட்பு பாராட்டும் தங்களுக்கு வாழ்த்துகள், இந்த சங்கமம் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். தொடரட்டும் நற்பணி.

    ReplyDelete
  37. சங்கமத்துக்கு வர இயலாத வெளிநாட்டு வாழ் தமிழர்களில்
    நானும் ஒருவன், சங்கமம் நடந்த விதம் பற்றி பதிவுகளை
    காணும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது நண்பரே.

    ReplyDelete
  38. சங்கவி எனக்கு இன்னும் போட்டோ வரவில்லை. சீக்கிரம் அனுப்புங்கப்பா.

    ReplyDelete
  39. ஈரோடு சங்கமம் குழுவினரின் ஆர்வம்,கற்பனைத்திறன் அனைத்தும் என்னை திக்குமுக்காட வைத்தது.நானும் அதில் சிறு வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  40. காதுல புகை வருது... ஒவ்வொரு இடுகைகளையும் படிச்சு ஆத்திக்க வேண்டியதுதான் :-))

    அசத்தலான சந்திப்பு..

    ReplyDelete
  41. அருமை! (நண்பர்களின் கருத்துகளும்)
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    படித்து விட்டீர்களா? :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  42. சங்கமேஸ்..
    உங்க உழைப்பு பாராட்டுதலுக்குரியது! :)

    ReplyDelete
  43. மஞ்சள் மண்ணில் நடைபெற்ற
    மகத்தான விழாவுக்கு
    மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  44. முதல்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். ஈரோடு பதிவர் சந்திப்பில் எடுத்த போட்டோக்கள், அங்கே இடம்பெற்ற நிகழ்வுகளை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்தலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  45. ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றி பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிரீகள் ஆனாலும் ஒவ்வொருவர் பதிவுமே வித்யாசமா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. என் பெயரை விட்டுட்டிங்க சங்கவி.
    சீனி மோகன்
    face book : seenimohan
    blog : seenimohan.blogspot.com

    ReplyDelete
  47. ''மதுரையில் இருந்து தருமி ஐயா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன் இவர்களுடன் இன்னும் ஒருவர், தமிழ்வாசி பிரகாஷ் இரவு சந்தித்தவர்கள்..''
    இவர்களுடன் இன்னும் ஒருவர்(சித்திரவீதிக்காரன்). என்னுடைய தள முகவரி www.maduraivaasagan.wordpress.com

    பகிர்விற்கு நன்றி. மற்ற ஈரோடு பதிவர் சங்கமம் குறித்த பதிவுகளையும் பார்த்தேன். அருமை.

    ReplyDelete
  48. தோழர் அடியேனும் ஒரு பதிவு போட்டிருக்கேன் பார்த்துட்டு அதையும் இதுல சேர்த்துங்க.. வரலாறு முக்கியம்

    ReplyDelete
  49. alagana sandosamana santhipu nanpa thankyou.www.kavithaimathesu.blogspot.com.by pala.mathesu.guruvareddiyur

    ReplyDelete