Wednesday, June 12, 2013

அஞ்சறைப்பெட்டி 13/06/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றினாலும் அதன் உட்கட்சி பூசலால் ஆட்சியை பிடிப்பது கஷ்டமே என்று தோன்றுகிறது.. நரேந்திர மோடியை ஆதரித்தால் எங்கே அவர் பிரதமர் ஆகிவிடுவாரோ என்ற நம்பிக்கையில் பலர் அவரை எதிர்க்கின்றனர்.. குஜராத்தில் அவரின் ஆட்சி பத்திரிக்கைகள் பாராட்டும் அளவில் இருக்கிறது.. இது உண்மை என்றும் இல்லை என்றும் பலர் பல கருத்துக்களை சொல்கின்றனர்...

நரேந்திமோடி பிரதர் ஆவதை எதிர்க்க எதிர்க்க பாஜகமேல் இருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது... 3 வது முறை காங்கிரஸ் ஆட்சியை தக்வைத்துக்கொண்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை... எதிரி இல்லாதவன் எளிதாக வெல்வது போலத்தான் இப்போதும்....
  ................................................................

தமிழகத்தில் இருந்து மேல்சபை உறுப்பினர் தேர்வுக்கு எப்போதும் போ இந்த முறையிம் அதிமுக வேட்பாளர்களை முதலில் அறிவித்து அனைவரும் அறிந்த விசயமே... மீதமுள்ள ஒரு இடம் நிச்சயம் கூட்டணி பலமாக அமையா விட்டால் அப்புறம் அந்த இடம் இல்லாமலே போய்விடும்... இத்தேர்தலால் புதிய கூட்டணி உருவாகுமா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்து கிடக்கின்றனர் அரசியல் விமர்ச்சகர்கள்...

..........................................................................................


காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வருவது காணல் நீராகவே போய்விடும் போல.. கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் அறிவிப்பே தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான்... இந்த முறை  பருவமலை நன்றாக இல்லை அதனால்  எங்களுக்கே தண்ணீர் இல்லை என்ற பாட்டைத்தான் திரும்ப திரும்ப பாடுகின்றனர்...

அங்கு மட்டுமா பருவமழை இல்லை இங்கும் தான் இல்லை... வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளிக்கிறது ஆனால் மழை பெய்த பாட்டைத்தான் காணம்... குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் வாசல் தெளிக்கத்தான் தண்ணீர் தருகிறார் வருணபகவான்...

................................................................................................


கோவை உக்கடம் ஏரியை சிறுதுளி அமைப்பினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் என 390 ஏக்கர் ஏரியை சுத்தப்படுத்தி அதில் பறவைகள் வந்தால் இருப்பதற்கு இடையில் மண் மேடு ஏற்படுத்தி வியக்க வைத்துள்ளனர்.. அது நிரம்பும் அளவிற்கு இன்னும் கோவையில் மழை இல்லை என்பது தான் வருத்தமான விசயம்...

...............................................................................................

 தேமுதிகவில் இருந்து மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் முதல்வருக்கு ஆதரவாக வெளியே வந்துள்ளார். முதலில் ஒருவர் வந்த உடன் மற்ற உறுப்பினர்களை அழைத்து என்ன பிரச்சனை என்ன ஏது வென்று அலசி ஆராய்ந்திருந்தால் எதோ ஒருத்தர் போவதையாவது நிறுத்தி இருக்கலாம் இனி இன்னும் எத்தனை பேர் க்யூவில் இருக்கின்றனரோ...
...............................................................................................


இப்போதைய தினசரி செய்திகளில் நிச்சயம் யாணைக்கு இடம் உண்டு.. யாணை இருக்கும் இடத்தில் வீட்டைகட்டி குடிபெயர்ந்துவிட்டு யாணை ஊருக்குள் வருகிறது என்று கூக்குரல் இடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை...
...............................................................................................


சமீபத்தில் கோவைகுற்றாலம் சென்றிருந்தேன் உலகில் இரண்டாவது சுவையான நீர் என்று பெயர் எடுத்த சிறுவாணி நீரில் குளிக்க சென்றிருந்தோம்... மழையில் இருந்து கொட்டும் நீர் சில் என்று சிலிர்க்க வைக்கும் அளவில் இருந்தது யாரும் குளிக்காத இடமாக பார்த்து கொஞ்சம் மேலே சென்று குடிக்க தண்ணீர் பிடித்து வந்தேன்... என்ன சுவை என்ன சுவை.. அந்த மூலிகை நீரை குடித்து விட்டு, அந்த நீரில் குளித்ததும் உடலுக்கும் மனதுக்கும் என்ன ஒரு புத்துணர்வு... நிச்சயம் அனுபவிக்க வேண்டிய ஒன்று...

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் நிச்சயம் போக வேண்டிய இடம்... அதுவும் தற்போது ஆர்பறிக்கும் நீரில் குளிக்கும் போது உடல் சூட்டை நிச்சயம் தணித்து புத்துணர்வு பெறுவோம்....



தகவல்


11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தூங்கிக்கொண்டிருக்கும் கருங்குழி கண்டுபிடிப்பு

அண்டத்தில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள சிற்ப விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கரும்பள்ளம் அண்டவெளியில் சுற்றிவரும் குப்பைகளை விழுங்கி அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கிருந்து மிக அதிவேகத்தில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பால் வீதியில் கரும்பள்ளத்தின் செயல்பாடுகளும், நட்சத்திர உற்பத்தியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது வானியல் ஆராய்ச்சியாளர்களை பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

சிற்ப விண்மீன் திரளுக்குள் இருக்கும் இந்த கருங்குழியின் அளவானது நமது சூரியனை விட 5 மில்லியன் மடங்கு பெரிது என்று கூறப்படுகிறது. சந்திரா மற்றும் நஸ்டர் விண்கல ஆய்வகத்தில் பாதிவாகியுள்ள இந்த கருங்குழி மீண்டும் இன்னும் சில வருடங்களில் காணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
 
தத்துவம்

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மனம் விட்டு பேசுங்கள்... அன்பு பெருகும்....

உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது.. அது செயலில் வெளிப்படவேண்டும்...

முதலில் சிந்தனை செய்; பிறகு பேசு.

4 comments:

  1. தத்துவம் நல்லா இருக்கு.., கோவை குற்றாலம் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.., யானைக்கு உணவும், தண்ணீரும் கொடுத்தா அது ஏன் நம்ம பக்கம் வரப்போகுது.., அப்புறாம் உங்க பொது மக்களின் முயற்சிக்கும், உழைப்புக்காகவ்து மழை பெய்து ஏரி நிரம்புதான்னு பார்ப்போம்..

    ReplyDelete
  2. சுவையான பல தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. பல சங்கதி, சொல்லும் அஞ்சல் பெட்டி!

    ReplyDelete
  4. தத்துவங்கள் நன்று.....

    கோவைக் குற்றாலத்தில் குளிக்க ஆசை! ம்ம்ம்ம்ம்...

    ReplyDelete