உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த ஒரு மாதமாக தமிழக போலீசுக்கு தண்ணிகாட்டிக்கொண்டு இருந்த கொள்ளையர்கள் நேற்று இரவு சென்னையில் போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர் என்று காலை செய்தியில் பார்த்ததும் மிக மகிழ்ச்சி...
கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு போனவங்க எல்லாம் திரும் வந்துட்டானுக என்று என்ன கிழி கிழி என்று கிழித்தவர்கள் எல்லாம் இன்று காலை கிலி வந்திருக்கும்..
தமிழ்நாட்டு திருடன் என்றால் நம் போலீசார் 15 நாட்களில் கண்டு பிடித்து விடுவர் காரணம் அவனுக பல இடங்களில் திருடி இருப்பானுக அதனால் கைரேகை எப்படியும் கிடைத்து விடும்..
இப்ப தமிழ்நாட்டில் அதிகம் இருப்பது பீகார், உபி, மேற்கு வங்க திருடர்கள் தான் அதிகம் இவனுக ஒரு முறை திருடிவிட்டு அவனுக ஊருக்கு போய்விடுகிறானுக இந்த புது கைரேகையை வைத்து எங்க போய் பிடிக்கறது இதனால் தான் நம்ம போலீசுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்திருந்து புதுசு புதுசா யோசிச்சு இந்த திருடர்களை என்கவுண்டர் செய்த தமிழக போலீசுக்கு ஒரு ராயல் சல்யூட்....
சங்கரன்கோயில் இடைத்தேர்தல் ஏற்கவே சூடு பிடித்த நிலையில் தேமுதிகவும் அம்மாவின் சவாலை ஏற்று போட்டி இடுவதாக அறிவித்துள்ளது. இன்னும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மந்திரிகள் கூட்டம் அங்கு முகாமிட்டு தீவிர ஓட்டு வேட்டையாடிக்கொண்டு இருக்கின்றனர். திமுகவும், மதிமுகவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டன ஆக மொத்தம் இந்த இடைத்தேர்தல் பணம் கொட்டும் தேர்தலாக இருக்கும்... வாழ்த்துக்கள் சங்கரன்கோவில் அதிஷ்டசாலி வாக்களர்களுக்கு...

............................................................ .............................. .....

பெங்களூர் வழக்கில் மாற்றம் ஏற்பட்டு அம்மாவுக்கு இந்த வழக்கில் பிரச்சனை இருக்காது என்பது போல் இருப்பதால் உடனே சிபிஐ அம்மாவின் மேல் உள்ள பிறந்தநாள் பரிசு வழக்கை தூசி தட்டு எடுத்து மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர் உச்சநுதிமன்றமும் ஏற்று நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.. இந்த வழக்கு அம்மாவின் மேல் உள்ள கோபத்தில் அவரை மனஉளைச்சல் ஏற்படுத்துவதற்காகவே போடப்பட்டுள்ளது போல் உள்ளது..
எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா சொன்னது போல் எதையும் சந்திக்கும் மனதைரியம் அம்மாவிற்கு உண்டு..
எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா சொன்னது போல் எதையும் சந்திக்கும் மனதைரியம் அம்மாவிற்கு உண்டு..
............................................................ .............................. ......
கேரள கடல்பகுதியில் 2 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் இன்று டெல்லி வருகிறார். இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் வருகிறாராம்..
நம்ம ஆளுங்கல இந்தப்பக்கம் தினமும் அடிச்சு விரட்டறானுக ஆனா நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் உடனே போகிறாரா இல்லை மாநிலத்தில் ஆளும் கட்சிகள் தொடந்து கடிதம் அனுப்பினாலும் அதை அந்த நாட்டிடம் பேசுவதற்காக இது வரை சென்ற மாதிதி தெரியவில்லை... இத்தாலிக்காரங்கள பாருங்க ஒரு வாரத்தில் அவர்கள் ஆட்களை பாதுகாக்க எத்தனை முயற்சிகள் எடுதிது வருகின்றனர்.. நாமூம் தான் இருக்கோமே...
நம்ம ஆளுங்கல இந்தப்பக்கம் தினமும் அடிச்சு விரட்டறானுக ஆனா நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் உடனே போகிறாரா இல்லை மாநிலத்தில் ஆளும் கட்சிகள் தொடந்து கடிதம் அனுப்பினாலும் அதை அந்த நாட்டிடம் பேசுவதற்காக இது வரை சென்ற மாதிதி தெரியவில்லை... இத்தாலிக்காரங்கள பாருங்க ஒரு வாரத்தில் அவர்கள் ஆட்களை பாதுகாக்க எத்தனை முயற்சிகள் எடுதிது வருகின்றனர்.. நாமூம் தான் இருக்கோமே...
............................................................ .............................. ......
அமெரிக்காவின் நியூயோர்க் மாநில பள்ளியொன்றில் 12 இளம் மாணவிகளுக்கு ஒரே வகையான அதிசயமான நோய் அறிகுறியொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Conversion Disorder அல்லது Mass Hysteria என அழைக்கப்படும் இந்நோய் அறிகுறி, அவர்கள் மன உளைச்சலுக்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ ஆளாகும் போது திடீரென அவர்களது உடலில் ஏற்பட்டுவிடுகிறது.
தங்களுக்குள் இந்நோய் அறிகுறி ஒரே மாதிரியாக இருப்பதே நீண்ட தேடுதலுக்கு பின்னர் தான் அந்த மானவிகளுக்கு தெரியவந்துள்ளது. மிக அரிதான நிகழ்வாக இதை குறிப்பிடும் டாக்டர்கள், அவர்கள் நடிக்கவில்லை. உண்மையில் இதனால் வலியை உணர்கின்றனர். முன்னர் உலகெங்கிலும் பல பாகங்களில் இது நடைபெற்றுள்ளது. ஆனால் இதை உளவியல் சிகிச்சை மூலம் முற்றாக குணப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பார்வை மங்குதல், பேச முடியாமல் தவித்தல், உடல் உதறுதல், நரம்பியல் சார்ந்த சில பிரச்சினைகளை எதிர்கொள்ளல், என அனைத்தும் ஒரே நேரத்தில் இவர்களுக்கு திடீர் திடீரென வந்து போகிறது. 'நன்றாகத்தான் இருக்கிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் நித்திரையிலிருந்து காலையில் எழுந்ததும் இப்பிரச்சினை தொடங்கிவிடுகிறது
............................................................ .............................. ........
இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் டாரென் (41). இவரது மனைவி தெரசா (32). இவர்களது மூத்த மகன் ஷாஜெரி ஜாக் ஏவெரி (5). இவர்களுக்கு அலெக்ஸ் என்ற மற்றொரு மகனும் இருக்கிறான். ஷாஜெரியின் 3-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவன் தான் ஆண் அல்ல, பெண் என்பதை உணர்ந்தான். தனது பெற்றோரிடம் நான் பெண் குழந்தை என கூறி அடம்பிடித்தான்.
ஆண் குழந்தைகள் விளையாடும் பொம்மையை தூக்கி எறிந்து விட்டு பெண் குழந்தைகளுக்கான பொம்மையை எடுத்து விளையாட தொடங்கினான். அவனின் இந்த நடவடிக்கைகள் பெற்றோருக்கு அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியது. உடனே, அவனை மனோதத்துவ டாக்டரிம் அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை என அவனது மூளையும் மனதும் சொல்கிறது.
எனவே அவன் மனதளவில் பெண் குழந்தைதான் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவன் தனது 5 வயதில் பெண்ணாக மாறினான். பெண் குழந்தைகளுக்குரிய ஆடைகள், அணிகலன்களை அணிகிறான். நீண்ட முடி வளர்த்து இருக்கிறான். தற்போது அவன் படிக்கும் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கான கழிவறையை பயன்படுத்தி வருகிறான். அவனது இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் சம்மதித்து பெண் குழந்தையாக வளர்த்து வருகின்றனர்.
........................................................... .............................. ........
தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
தியானத்தோடு கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்அப் செய்து கொள்ளவேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு வர எளிதான சுகப்பிரசவம் ஏற்படும்.
........................................................... .............................. ........
தகவல்
உண்ணாவிரதம் இருந்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்
உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? அல்லது கேடு விளைவிக்குமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. எனவே லண்டனில் உள்ள ஒரு நிறுவனம், சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், வாரத்துக்கு ஒருநாள் அல்லது 2 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.

அவர்கள் நீண்டநாள் உயிர் வாழமுடியும் என தெரிய வந்துள்ளது. ஏனெனில் உண்ணா நோன்பை கடைபிடிப்பதன் மூலம் அல்சமீர்ஸ், மறதி நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் மூளையை தாக்க கூடிய எதிர்ப்பு மிகவும் குறைகிறது. குறைவான அளவு உணவு சாப்பிடுவதால் மூளைக்கு அதில் உள்ள ரசாயன கடத்திகள் குறைவான அளவு சக்தியை மட்டுமே கொண்டு வருகின்றன.
இதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக தொடக்கத்தில் இந்த ஆய்வு எலி மற்றும் சுண்டெலிகளிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. அதே விளைவு மனிதர்களின் உடலிலும் ஏற்பட்டதை தற்போது நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உடல் நலத்தை பேணி பாதுகாத்து நீண்ட நாட்கள் உயிர்வாழ உண்ணா நோன்பை கடைபிடிக்கலாம்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் கீதாமஞ்சரி என்ற பெயரில் எழுதி வருகிறார். ஆஸ்த்திரேலிய பள்ளிகள் பற்றி அற்புதமான தொடர் கட்டுரை எழுதி வருகிறார் நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று...
http://geethamanjari.blogspot.
தத்துவம்
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?
ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.
நாளைய பிரதமரா? பிறந்த நாள் அன்று பிரதமர் ஆகப்போவதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்த குறைந்தட்சம் ஒரு வயதாவது இருக்கணுமே...சும்மா வாழ்த்துங்க சங்கவி !!
Thanks for writing about fasting & meditation.
ReplyDeleteSUPERAA IRUKU UNGAL ANJARAIP PETTI
ReplyDeleteஅஞ்சறை பெட்டி தகவல் நிறைந்து வழிகிறது. நல்ல தகவல்கள் சங்கவி.
ReplyDeleteதகவலுக்கு நன்றி சங்கவி. தற்போது தான் சென்ற ஆகஸ்ட்டில் நீங்கள் எழுதிய அந்தியூர் குதிரை சந்தை பற்றி மூன்று பதிவுகளையும் படித்தேன். அட்டகாசம், அடுத்த முறை கண்டிப்பாக வருவேன். ஒவ்வொரு குதிரையும் கதை சொல்கின்றன.
ReplyDeleteவழக்கம்போல் அஞ்சரைப்பெட்டி சூப்பர்..
ReplyDeleteஎன்கவுண்டர் என்பதை இவர்கள் எப்போது கைவிடுவார்கள் என்பதுதான் புரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட ஐவரும் குற்றவாளிகள்தானா என்பதும் உறுதி இல்லை. ஏதோ போலீஸ் சொல்வதை வேறு வழி இல்லாமல் நம்பித் தொலைக்க வேண்டி இருக்கிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
5 வயசில் கழிவரையை மாத்தி உபயோகிப்பது சரி, 10 -12 வயதில் போனா மாத்து தான் விழும்.
ReplyDeleteஇந்த காலத்தில் சுக பிரசவம் நடக்குதோ இல்லையோ சிசேரியன் பண்ணிக்கவே விரும்புராங்க.
ReplyDeleteநல்ல விசயங்களை அறிந்து கொள்ள உதவியது அஞ்சறைப் பெட்டி..பிடித்தது.
ReplyDeleteநல்ல தொகுப்புகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
அனைத்துப் பகுதிகளும் அருமை. அஞ்சறைப்பெட்டியில் அறுசுவைகளும் உள்ளன சார். பல தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டேன். மற்ற பெரிய பதிவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் இப்படி சான்வெஜ்,நான்வெஜ், கொத்துப்புரோட்டா அப்படி இப்படின்னு எழுதுறாங்க. ஆபாசமும், அறுவெறுப்பும் தாங்க முடியல.ஆனால் உங்களுடையது வித்தியாசமாகவும் அருமையாகவும் உள்ளது. 18+ ஜோக்ஸ் என்ற பெயரில் அருவெறுப்பான விஷயங்கள் இல்லாதது அழகு. தொடருங்கள்.
ReplyDeleteதமஓ 8.
ReplyDeleteஅஞ்சரபெட்டி அருமை...
ReplyDelete