Friday, February 10, 2012

மூக்குத்தி முத்தழகு...


மூக்குத்தியைப்பற்றி ஒரு காலத்தில் பல பாடல்கள் வந்து உள்ளன, அதற்கு காரணம் அப்போதெல்லாம் மூக்குத்திய பெண்களை நிறைய பார்க்க முடியும் ஆனால் இப்போது மிக மிக குறைவு....அழகாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. மூக்குத்தி குத்திய பெண்ணின் அழகு தனிதான். பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால் அவர்களின் அழகு மிளிர்கிறது என்பார்கள். மூக்குத்தி குத்துவது அமைத்தனம் என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். மூக்குத்தி அணிகலன் மட்டுமல்ல உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.

கிராமப்புறங்கிளில் மூக்குத்தி அணிந்த பெண்கள் அதிகம் காணலாம் அன்று. இன்று மூக்குத்தி குத்திய பெண்களை கிராமம் மட்டுமல்ல எங்கும் பார்த்தாலும் கிடைக்கமாட்டர்கள் தேடினால் தான் கிடைப்பார்கள். முன்காலத்தில் பெண்கள் மூக்குத்தி அணிந்தது மருத்துவக்காரணம் அதிகம் அதனால் தான் மூக்குத்தி அணிந்துள்ளனர் காலப்போக்கில் அது அடிமைத்தனம் என்று கூறி கணவன் இறந்தால் பெண் மூக்குத்தியையும் கழட்ட வேண்டும் என்ற அடிமைத்தனத்தால் பல பெண்கள் மூக்குத்தி குத்துவதை தற்போது விரும்புவதில்லை. அதனால் மூக்குத்தி குத்திய பெண்களை இப்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. மூக்குத்தியை பெண்கள் பலங்காலத்தில் குத்தியதற்கு மருத்துவ காரணங்கள் தான் அதிகம்.



மருத்துவ காரணங்கள்

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 

மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது.

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் காரணமாகத் தான் செய்கின்றனர் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் மூக்குத்தி...

9 comments:

  1. அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகளும் சரி வெளிநாட்டுப் பெண்களும்கூட மூக்குத்தி விரும்பிக் குத்திக்கொள்கிறார்கள்.உங்கள் விளக்கமும் அருமை சங்கவி !

    ReplyDelete
  3. mookuththi mattumalla...
    aniyum aabaranangal yellame oru arththamudanthaan irunthu varukirathu.

    metti..

    ithu kodukkum pressure uterus ku valu serkkum.

    rings..

    ullangai matrum viralkalil kodukkap padum pressure yellaame unavu mandalangalukku nanmai.

    kaathu kuthuthal,kammal..

    brain development
    plus heart functins.

    ippadi list remba perusu.

    impon - il varum 5 ulogangalume udalukku yeppavume remba nallathu.

    appuram..

    kanavan iranthatharkku piragu,
    aabaranangal pen anivathillai.
    thannai rasippavann illai,pin yetharkkaga ? yentra manopaavam,pinaalil kattaayamaaka maarivittathuthan thavaraaki ponathu. yenbathu yenakku karuthu.

    ReplyDelete
  4. நாங்களும் போட்டு இருக்கோம்ல...

    ReplyDelete
  5. இது நான் கேள்வியேப்படாத ஒரு புதுமையான தகவல்..அறிவியல் விளக்கம் கொடுத்து அருமையான பதிவை வழங்கிய தங்களுக்கு என் நன்றிகள்..நானும் எனக்கு தெரிந்தவரிடம் இதனை சொல்கிறேன்..எங்கள் வீட்டில் பெண்கள் எல்லாம் மூக்குத்தி அணிபவர்களே..நான் மலேசியாவில் பிறந்து வசித்து வருபவன்.

    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete
  6. mookkuthi aninthiruppathil maghizhchchi kolkiraen

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    அரிய தகவல்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு. நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  9. ஏன் ஆண்கள் முன்பிரிந்தே மூக்குத்தி அணியவில்லை என்று தெரியுமா ?

    ReplyDelete