Sunday, February 12, 2012

காதலர் தினம்


தந்தை தினம் வருகிறது  பல பேர்களுக்கு அது வந்து  போவதே தெரிவதில்லை. தாய் தினம் வருகிறது அதை நாம் யாரும் அந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை இன்னும்  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பித்த பல தியாகிகளின் பிறந்த நாட்கள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. ஆனால் இந்தக் காதலர் தினம் மட்டும் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி அனைவரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம். இந்த வருடம் வாரப்பத்திரிக்கைகளில் எல்லாம் நல்ல முக்கியத்துவம் கொடுத்து நிறைய கவிதைகளை வெளியிட்டு காதலர் தினத்தை இளம் தலைமுறையினரிடையே சூடக்கி உள்ளது.

இன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து பயணம் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு காதலர் தினம் தான் நிறைய கடைவீதிகளில் பரிசுகள் வாங்க கூட்டங்களாக இருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் சிறு குழந்தைகள் கூட காதலர் தினத்தை பற்றி அறிந்து வைத்துள்ளனர். என் பக்கத்து வீட்டுப்பையன் 5 ம் வகுப்பு படிக்கிறான் அவன் அம்மாவிடம் அம்மா எனக்கு அந்த பொம்மை வேண்டும் என அடம்பிடித்துள்ளான் அம்மா எதுக்குடா என்று கேட்டதற்கு என் Girl Friend சுபாவிற்கு நான் இதை பரிசா கொடுக்கிறேன் என்று அடம்பிடித்து அவன் அம்மாவிடம் வாங்கிவிட்டான் அவர்கள் இதை சொல்லி சொல்லி சிரிக்கின்றனர்.. அந்த அளவிற்கு இன்று மிக அதிகமானோர் விரும்புவது காதலர் தினத்தை..

ஒருவருக்கு அன்புடன் பரிசு கொடுப்பதில் தவறொன்றுமில்லை. பரிசு கொடுக்க கொடுக்கத்தான் எதிர்பார்ப்புகள் அதிகமாகி அன்பு அதிகமாகும். பரிசுகளை காதலர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நாம் அன்பு வைத்திருக்கும் எவருக்கும் கொடுக்கலாம்..

நம் நாடு பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு தாய் தந்தையைப் பராமரித்து கடைசிவரை அவர்களைப்  பாசத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமை. ஆகையால்  தனியாக தாய், தந்தை தினம் நமக்கு தேவையே இல்லை. நம் மனத்தில் தினமும் அவர்கள் குடியிருக்கிறார்கள். மேல் நாட்டினிலே மகன், மகள் 16 வயது வந்தால் தனியாக குடிபோகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆகையால் இந்தத் தந்தை  தினம் ..,தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள். அதை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். அது போலத்தான் வேலண்டைன் என்பவரது நினைவு நாளை காதலர் தினமாக அறிவித்து அன்று பரிசுகள் கொடுத்து மகிழ்கின்றனர்.
நம்நாட்டுக்கலாசாரம். காதலைப் புனிதமாக மதிக்கிறது.  இலை மறைவு தலை மறைவு என்பார்கள் அது தான் நம் கலாச்சார காதல். இந்த காதலர் தினம்  ஒரு பதினைந்து வருடங்களாகத்தான் நம் ஊரில் பிரபலமாகிவிட்டது. காதலர் தினத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அதை ஆரோக்கியமாக உண்மையான அன்பை தன்னலமில்லாத அன்பைச்செலுத்தி கொண்டாட அதைவிடச் சிறந்தது வேறில்லை. என்னைப்பொறுத்த வரை நாம் மிகுந்த அன்பு வைத்திருப்பவரை தினமும் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே..

இந்த தினம் அன்பை வெளிப்படுத்த. ஆனால் அதை ரசாபாசமாக உபயோகிப்பதற்கு அல்ல.  இந்த நாளில் பூக்களின் மூலமாகவோ, பொருட்களின் மூலமாகவோ  அன்பை வெளிப்படுத்துகின்றனர். காதலர் தினத்தில் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அன்பை மட்டுமின்றி, பரிசும் கொடுத்து அசத்துகின்றனர்.

உண்மைக் காதலுக்கு நாமும்  பச்சைக் கொடி காட்டுவோம். எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பை அள்ளி வழங்குவோம். உலகக்காதல்ர்களுக்கு என்  காதலர் தின நல்வாழ்த்துகள்.

14 comments:

  1. சரியாக சொன்னீர்கள் சங்கவி...!
    (உதரனத்திற்கு உங்களின் DPயில் ஏதாவது மலரின் போட்டோவை இணையுங்கள்...
    பலரிடமிருந்து வாழ்த்துக்கள் குவியும் உங்களுக்கும்...)

    ReplyDelete
  2. தாய், தந்தை, நாடு இவைகளையெல்லாம் மறந்து வெகுநாளாகிவிட்டது சங்கவி சார்....

    போகிற போக்கில் நாமும் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு போவாம்...

    ReplyDelete
  3. அன்பு கொண்ட யாரும் தன்னுடைய அன்பை பறிமாறிக்கொள்ளுகிற தருணம் இது ஆனால் இந்த தினம் காதலர்கள் மட்டும்தான் கொண்டாடவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது....

    ReplyDelete
  4. அருமையான பதிவு..நன்றி.

    ReplyDelete
  5. நாம் மிகுந்த அன்பு வைத்திருப்பவரை தினமும் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே

    பிடித்த வரிகள்..

    ReplyDelete
  6. மாப்ளே தினம் தினம் காதலர் தினம் தானே ஹிஹி!

    ReplyDelete
  7. இந்த எந்திர யுகத்தில் எத்தனை காதலர்கள் உண்மையான அன்புக்கும் , நேசத்துக்கும் காதலை தேடுகிறார்கள்.. அவர்களின் நோக்கமே வேறு ...
    ஒவ்வொருவரின் தேவையும் முடியும் பட்சத்தில் இரண்டு பெரும் அவரவர் திசைகளை நோக்கி ஓட்டமெடுக்கும் சூழலே பெருகி வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு கவர்ச்சி விளம்பரம் கொடுத்து இந்த தினத்தை முன்னிலை படுத்தும் மீடியாக்களை என்னவென்று சொல்வது ..

    உங்களின் பகிர்வுக்கு நன்றிகள

    ReplyDelete
  8. // வரை நாம் மிகுந்த அன்பு வைத்திருப்பவரை தினமும் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே..//

    நாங்க மட்டும் என்னவாம்....அதான் அதேதான்

    ReplyDelete
  9. மேல் நாட்டினிலே மகன், மகள் 16 வயது வந்தால் தனியாக குடிபோகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆகையால் இந்தத் தந்தை தினம் ..,தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள். அதை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். அது போலத்தான் வேலண்டைன் என்பவரது நினைவு நாளை காதலர் தினமாக அறிவித்து அன்று பரிசுகள் கொடுத்து மகிழ்கின்றனர்.///

    இந்த வரிகளை கொஞ்சம் அடிக்கோடிட்டு போட்டிருக்கலாம்

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நமது பண்பாட்டை வெளிப்படுத்துகிற பதிவு. அருமை

    ReplyDelete
  12. அன்பர்கள் தின வாழ்த்துக்கள் சங்கவி.

    ReplyDelete
  13. நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பதிவு. நன்றி சகோ

    ReplyDelete
  14. unga pathivu superaa irukku

    ungalukkum iniya kaathalar thina vaazthukkal...

    aadambaram illamal kondaaduvathil thavaru illai...

    aadambaram illama valentines day kondaadurathu enna periya paavamaa...

    sandai poduravangalaam antha naalil serurathukku niriya chance irukku ...

    ReplyDelete