Wednesday, February 8, 2012

அஞ்சறைப்பெட்டி 08/02/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தமிழகம் முழுவதும் இன்று பரபபரப்பாக உள்ள ஒரே பிரச்சனை மின்வெட்டு தான். தினமும் 8 மணி நேரம் என்பது ரொம்ப கொடுமையான விசயம். இதில் சென்னைக்கு மட்டும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு என்பது சென்னைவாசிகள் சந்தோசப்பட வேண்டிய விசயம்.  மின்வெட்டு பிரச்சனையை முதல்வர் சீக்கிரம் தீர்க்க வேண்டும் இல்லையேல் வருகிற கோடை காலத்தில் மக்கள் படாதபாடு படவேண்டிய இருக்கும்...

...............................................................................................
நண்பர்கள் எல்லாம் KFC இல் சாப்பிடலாம் என்று போனோம் இது தான் எனக்கு முதல் முறை.. இங்க சிக்கன் என்னடா ஸ்பெஷல்ன்னு பார்த்தா நம்ம ஊரு வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய்க்கு பதில் சிக்கன் வைத்திருக்கிறார்கள்... காரமே இல்ல... அதுவும் உப்பு வேற அதிகம்... இதைத்தான் உலகம் முழவதும் விரும்பி சாப்பிடுகிறார்களாம்... என்ன இருந்தாலம் நம்ம ஊரு நாட்டுக்கோழி சாருக்கும் கருவாட்டுக்குழம்புக்கு ஈடாகதப்பா... 
...............................................................................................
 
அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது டிவிட்டர் இணையதளத்தில், சிகிச்சை முடிந்து திடகாத்திரமான மனிதராக இந்தியா திரும்புவேன். எனக்காக பிரார்த்திருக்கும் இந்திய மக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன், என்று கூறியுள்ளார்.

மீண்டும் திரும்பி வந்து உங்கள் கிரிக்கெட் உடையையும், தொப்பியையும் அணிந்து கொண்டு இந்தியாவிற்காக விளையாட வேண்டும் நீங்கள் மீண்டும் ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸ் அடிச்சு உங்கள் சாதனையை நீங்களே முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்... மீண்டும் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...
................................................................................................

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்.) இந்திய போலீஸ் பணி (ஐ.பி.எஸ்.) இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) ஆகிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் இதுவரை 30 ஆண்டுக்கு ஒரு முறை தான் அவர்கள் திறன் ஆய்வு செய்யப்பட்டது இனி 15 ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு திறமையற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு என்று புதிய திருத்தம் கொண்டுவந்துள்ளனர்... அ

ப்படியே அவர்கள் வேலைக்கு சேரும் போது இருந்த சொத்து மதிப்பும் 15 வருடத்துக்கு அப்புறம் இருக்குற சொத்து மதிப்பையும் கணக்குபோடுங்க...
 
...............................................................................................

ஜான் எப் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் பிரஸ் அலுவலகத்தில் பயிற்சி பெற வந்தவர் மிமி ஆல்போர்ட்(69). அப்போது அவருக்கு வயது 19. அவர் முன்னாள் அதிபர் கென்னடியுடன் தனக்கிருந்த ரகசிய உறவு குறித்து ஒரு புத்தம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வெள்ளை மாளிகையில் பயிற்சிக்கு சென்ற 4வது நாளே அங்குள்ள நீச்சல் குளத்திற்கு வருமாறு என்னை கென்னடி அழைத்தார். அதன் பிறகு கென்னடியின் நெருங்கியநண்பர் டேவ் பவர்ஸ் என்னை ஒரு பார்ட்டிக்கு அழைத்தார். கென்னடி நிறைய குடித்துவிட்டு எனக்கு வெள்ளை மாளிகையை சுற்றிக்காண்பித்தார். அப்போது அவர் தனது மனைவியின் அறைக்கு அழைத்துச் சென்று எனக்கு மிக அருகில் வந்தார்.

பின்னர் என்னுடன் உறவு கொண்டார். நீ இதற்கு முன்பு உறவு கொண்டுள்ளாயா என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை என்று சொல்ல வந்த நான் பிறகு ஆமாம் என்று கூறினேன். உறவுக்குப் பிறகு அவர் ஆடையை அணிந்து கொண்டு ஒரு அறைக்கு சென்றுவிட்டார்.

நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் அவரோ மிகவும் சகஜமாக இருந்தார். அன்று வீட்டுக்கு செல்லும் வழியெல்லாம் இனி நான் கன்னியில்லை என்பது தான் என் நினைவுக்கு வந்தது.

மறுவாரம் நான் மீண்டும் அவருடன் நீச்சல் குளத்திற்கு சென்றேன். அதன் பிறகு ஒரு அறைக்கு சென்று உறவு வைத்தோம். அன்றில் இருந்து 18 மாதங்கள் எங்களுக்கு இடையே ரகசிய உறவு இருந்தது. அவர் அதிபர் என்பதால் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. நாட்டின் மிகவும் முக்கியமான நபர் என் மீது ஆசைப்படுகிறார் என்ற எண்ணத்தால் என்னால் அவரை ஒதுக்க முடியவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
..................................................................................................

அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினர் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் வரியாக 15 பில்லியன் டாலரை அந்த நாட்டுக்குச் செலுத்தியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.

பரவாயில்லை நம்ம மக்கள் அங்க போயாவது ஒழுக்கமா வரி செலுத்துகிறார்களே கொஞ்சம் பாராட்டப்பட வேண்டிய விசயந்தான்...

..................................................................................................

தற்போது இந்தியா முழுவதும் மிக பரபரபப்பாக பேசப்படும் விசயம் கர்நாடகாவில் அமைச்சர்கள் செல்போனில் சீன்படம் பார்த்த விசயந்தான்... இவர்களை சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையைப்பற்றி பேச அனுப்பினால் அங்க உட்கார்ந்து பொறுமையாக சீன்படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் இவர்களை எல்லாம் ஓடவிட்டு துரத்தனும்...

..................................................................................................

சீனாவில் ஏராளமான பெண்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குயிங்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஷாங் பெல்சுயான் தலைமையிலான குழுவினர் எய்ட்ஸ் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெண்களுக்கு அவர்களது கணவர்களால் எய்ட்ஸ் நோய் பரவியது தெரியவந்தது. அதுகுறித்து மேலும் விரிவாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் நாட்டின் கலாசார சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகும் தாங்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழாமல் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் தங்களது எய்ட்ஸ் நோயை மனைவிகளுக்கும் பரப்புகின்றனர்.

ஓரின சேர்க்கை ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மூலம் சுமார் 1 கோடியே 60 லட்சம் பெண் கள் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களால் அவதிப்படு கின்றனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சீனமக்கள் எல்லாவிசயத்திலேயும் உலகத்தில் முதல் இடத்தை சீக்கிரம் பிடித்துவிடுவார்கள் போல...

.................................................................................................

2ஜி வழக்கில் மீண்டும் திருப்பம் அடுத்த கைது யார்? கடந்த சில வருடங்களாக பத்திரிக்கைகளில் அதிகமாக வந்த செய்தி எதுவென்றால் அது 2ஜி விவகாரமாகத்தான் இருக்கும். இப்போது மீண்டும் இவ்வழக்கில் நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் நடந்து வருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து உள்ளே போகப்போவது யார் என்று...

.................................................................................................

இந்தியாவில் உள்ள அனைவரது கவனமும் உபியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலைத்தான் அனைத்து அரசியல் ஆர்வலர்களும் உற்று நோக்குகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் அதிக எம்எல்ஏக்களை கொண்ட சட்டமன்றம் அது. இங்கு மீண்டும் யார் ஆளப்போகிறார்கள் என்பது மட்டுமல்ல தற்போது நடக்கும் தேர்தல் தேர்தல் கமிஷன் தமிழகம் மற்றும் பீகாரில் நடத்தியது போல மிக கட்டுப்பாடுடன் நடத்துகின்றனர் இதனால் அங்கு இருக்கும் தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் வாக்களர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். எத்தனை பேர் ஓட்டு போட வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்... தமிழகம் போல் எதிர்பாராதவிதமாக 70 சதவீத வாக்குகள் பதிவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..



தகவல்
 
 
பனி படர்ந்து இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரிய வந்துள்ளது. இதை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரஷியாவின் ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் எந்திரம் மூலம் துளையிட்டனர். சுமார் 3,768 மீட்டர் ஆழத்துக்கு (4 கி.மீட்டர் ஆழத்துக்கு) பூமியில் துளையிட்டனர்.

அப்போது அதன் அடியில் ஏரி மறைந்து இருப்பது தெரியவந்தது. அதுவும் பனிக்கட்டியாகதான் உள்ளது. அந்த ஏரியின் மீது 2 கோடி ஆண்டுகளாக ஐஸ் மூடிக்கிடக்கிறது. அந்த ஏரியில் ஆக்சிஜன் உள்ளது. எனவே அங்கு சில நுண்ணிய உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த தகவல் ஐஸ்கட்டியை துளையிட்டு ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் தேன்சிட்டு என்ற பெயரில் தனது கவிதையை பதிவாக்கி வருகிறார் திவ்யா என்கிற தேன்மொழி அவர்கள்.. மிகவும் ரசிக்கவைக்கும் கவிதைகள் பதிவு... அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய பதிவு...

http://thiviyathanancheyan.blogspot.in/2012/01/blog-post_25.html

 
தத்துவம்
 
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.

உயிர் பிரியும் முன் பலமுறை இறப்பார்கள் கோழைகள், வீரனுக்கு மரணம் ஒருமுறைதான்.

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

8 comments:

  1. அன்புள்ள சதீஷ்க்கு நாட்டுக்கோழிச்சாறு செய்முறையை என் வீட்டம்மாவுக்காக அடுத்த அஞ்சறைப் பெட்டியில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. நாட்டு நடப்பு பற்றிய சிறப்பான பதிவு... இந்த அரசு உயர் அதிகாரிகளின் சொத்து மதிப்ப 15 வருசத்துக்கு பதிலா ஒவ்வொரு வருசமும் சர்வே செய்தால் கூட நன்றாக இருக்கும். அதுவும் அவுங்க குடும்பத்துல இருக்கர எல்லாரோட சொத்தையும் கணக்கெடுக்கணும்.. யார் கேட்பது..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நல்ல தொகுப்புகள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்ல தகவல் கொண்ட அஞ்சறைப்பெட்டி சிறப்பு....பிறகு செந்தில் நாட்டுகோழி குழம்பு பற்றி கேட்டிருக்கிறார் அது அவர் மனைவிக்கா அவருக்கா...ஒரு சின்னதா சந்தேகம்..ஹிஹி

    ReplyDelete
  5. /// வீடு K.S.சுரேஸ்குமார் said...

    நல்ல தகவல் கொண்ட அஞ்சறைப்பெட்டி சிறப்பு....பிறகு செந்தில் நாட்டுகோழி குழம்பு பற்றி கேட்டிருக்கிறார் அது அவர் மனைவிக்கா அவருக்கா...ஒரு சின்னதா சந்தேகம்..ஹிஹி ///

    என்னங்க சுரேஷ் இப்படி பப்ளிக்ல போட்டு உடைச்சிட்டீங்களே, நாளை யாராவது நான் தான் வீ்ட்ல சமைக்கிறேன்கிற உண்மைய கண்டுபிடிச்சிட்டா என்னங்க ஆகும்.

    ReplyDelete
  6. அட்டகாசமா இருக்குற பெட்டிய போட்ட மாப்ள சுட்டிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அட்டகாசமா இருக்குற பெட்டிய போட்ட மாப்ள சுட்டிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. பல தகவல்கள் ! வாழ்த்துக்கள் ! அறிமுக பதிவரின் கவிதை மனதை நெகிழச் செய்தது! தத்துவம், நம்ம திருவள்ளுவர் : குறள் எண் 863-யை ஞாபகப்படுத்தியது !

    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சார் !

    ReplyDelete