Monday, May 2, 2011

சித்திரை மாதமும் திருவிழாவும்...


சித்திரை மாதம் தொடங்கினாலே மனதில் குதுகலம் தான் இன்று நேற்றல்ல பிறந்ததில் இருந்தே. சித்திரை மாதம் தான் எங்கள் கிராமத்தில் மாரியம்மன் திருவிழா இதனால் தான் சிறுவயதில் இருந்தே சந்தோசம் இம்மாதம் வந்து விட்டால்.

தீபாவளி, பொங்கலுக்கு அப்புறம் சிறுவயதில் இருந்தே அதிக சந்தோசத்துடன் ஒவ்வொருவரும் கொண்டாடும் திருவிழா என்றால் அது அவர்களின் சொந்த ஊர் கோயில் திருவிழாவாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதம் கொண்டாடுவார்கள் எங்கள் ஊரில் சித்திரை மாதம் கொண்டாடுவோம். இந்த வருடம் எங்கள் ஊரில் திருவிழாவிற்கு கம்பம் நட்டு 10 நாள் ஆகிறது வருகிற வியாழக்கிழமை திருவிழா கொண்டாட குடும்பத்துடன் ஆயுத்தமாகிக்கொண்டு இருக்கிறோம்.
சிறுவயதில் எனக்கு ஞாபகம் தெரிய 9 வயதில் இருந்து கம்பம் நட்டு விட்டால் அசைவ உணவு வகைகள் சாப்பிடமாட்டோம் தினமும் காலையும், மாலையும் கோயிலுக்கு சென்று கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றுவோம் (அப்ப தான் கூடப்படிக்கும் தோழிகளும் தண்ணீர் ஊற்ற வருவார்கள் ஒரு சிலர் காலைய வருவாங்க, ஒரு சிலர் மாலையில் வருவாங்க யாரையும் மிஸ் பண்ணக்கூடதல்லவா) இரவு கோயிலில் பூஜை நடக்கும் பூஜை முடிந்த உடன் கம்பம் நட்டுள்ள 15 நாட்களுக்கும் இரவு கம்பத்தை சுற்றி ஆட்டம் ஆடுவோம். இதற்காகவே திருவிழாவை எதிர்நோக்குவோம்.

ஆட்டம் ஆடுவது என்றால் சும்மா குதிப்பதில்ளை அடிக்கு தகுந்தாற் போல் ஸ்டெப் வைத்து ஆடுவோம். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு பெயர் இருக்கும் முதல் ஆட்டம், 2 ம் அடி, 3ம் அடி, காவடி சிந்து என்று ஒவ்வொரு தாளத்திற்கும் ஒரு பெயர் சொல்லி ஆடுவோம். இந்த ஆட்டம் ஆட ஆரம்பிக்கும் போது வரிசையாக நிற்கவைத்து ஒரு வரிசைக்கு 10 பேர் வீதம் 5 அல்லது 6 வரிசை வரிசையாக நின்று ஆட பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள் அப்படி ஆடிப்பழகி 10 ம் வகுப்பு படிக்கும் போது முதல் வரிசையில் ஆடுமளவிற்கு அனைத்து ஆட்டங்களும் எனக்கு அத்துப்பிடி.. அப்பொழுது எல்லாம் ஊரில் தாளம் அடித்தால் முதல் ஆட்டம் என்னுடையது தான்.(கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் அடங்கியாச்சு)

கடைசியாக ஆடுவது திருவிழா அன்று காலை ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருவார்கள் அப்போது தீர்த்தத்துக்கு முன் ஊரே வேடிக்கை பார்க்க ஆட்டம் ஆடி வருவோம் அத்தோடு அந்த வருடத்து ஆட்டம் முடிஞ்சுது. அப்புறம் அடுத்த வருடத்து சித்திரையை எதிர்நோக்கி காத்திருக்கவேண்டியது தான்.


இந்த வருடம் திருவிழா போட்டதும் முதல்நாள் கோயிலுக்கு சென்று இருந்தேன் மழைகாரணமாக ஆட முடியல. விடுமுறை இல்லாததால் ஊருக்கு செல்ல முடியல வியாழக்கிழமையை எதிர் நோக்கி காத்துக்கொண் இருக்கிறேன் இந்த வருட ஆட்டம் ஆட....

8 comments:

  1. திருவிழா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சித்திரை திருவிழாக்கள் அதுவும் கத்திரி காலங்களில் திருவிழாக்கள் களைகட்டும்..
    எங்கள் கிராமத்திலும் கத்திரியில் தான் நடக்கும்...

    தங்கள் ஊர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அப்படி போடு ஆட்டத்தை!

    ReplyDelete
  4. /////ஆட்டம் ஆடுவது என்றால் சும்மா குதிப்பதில்ளை அடிக்கு தகுந்தாற் போல் ஸ்டெப் வைத்து ஆடுவோம்.////

    உங்கள் ஆட்டமும் பார்க்க ஆசையாயிருக்கு... சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  5. மக்கா நீங்க எப்பிடி ஆடுவீங்க...

    ReplyDelete
  6. //மக்கா நீங்க எப்பிடி ஆடுவீங்க...//

    அதான் “மக்கு மக்கா" (ஜக்கு ஜக்கா) உள்ள போகுமே! அப்புறம் தானா ஆடாது...?

    ReplyDelete
  7. திருவிழா நன்கு நடக்க வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete