Tuesday, May 31, 2011

அழகுக்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ


ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

 

அழகுக்கு...

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.


3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.


4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.


6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.


7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.


சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.

10 comments:

  1. அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு தேவைதான் இந்தப் பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே . இன்று என்னவேன்றேத் தெரியவில்லை பதிவுலகில் எனக்குப் பார்த்தாலும் குங்குமப்பூ வாசனையாக இருக்கிறது

    ReplyDelete
  2. Daily use panna experience ah nanbaa asathuringa ponga

    ReplyDelete
  3. இது ஆண்களுக்கு செட் ஆகுமா

    ReplyDelete
  4. ஆகா இவ்வளவு நன்மை இருக்கா !!

    ReplyDelete
  5. குங்குமப்பூவைப்பற்றி தெரிந்துக்கொண்ஆடன்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. கழந்தைகளுக்குச் சளி குறைவாகத் தாக்கும் என்றே குங்குமப் பூவை தாய் வயிற்றில் இருக்கும்போதே கொடுக்கிறார்களாம் !

    ReplyDelete
  7. குங்குமபூவின் மங்களம்....!

    ReplyDelete
  8. அதன் விலை தான்...!!

    ReplyDelete
  9. அண்ணன் சங்கவி அலப்பறையை ஆரம்பிச்சுட்டாரே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வு தல..!! இந்த குங்குமப்பூவை ஆப்ரிக்காகாரர்கள் பயன்படுத்தினால் சிவப்பாவாங்களா..!?? தல..!! #டவுட்டு..!

    ReplyDelete