Monday, May 16, 2011

2011 தேர்தலின் நாயகன் பிரவீன்குமார் ஒரு பார்வை....

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் 2011ம் ஆண்டு தேர்தலின் நாயகன் என்று சொன்னால் அது மிகையாகது. அதிக வாக்குகள் பதிவானதுக்கும், பொதுமக்கள் தைரியமாக வாக்களித்தற்கும் இவரின் செயல்களும் ஆக்கமும் முக்கிய காரணம் என்று சொல்லலாம். தமிழக தேர்தலில் இவரின் பெயர் காலத்திற்கும் இருக்கும் என்பது நிச்சயமான உண்மை...

இவரது சொந்த ஊர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அசாரிபாக் (முன்பு பீகார்) ஆகும். இவர், 1987-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். 1961-ம் ஆண்டில் பிறந்த அவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக், எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றபின், முதலில், 1988-ல் சேலத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். 1989-ல் தஞ்சையில் சப்-கலெக்டராகவும், 1989-ல் செட்டில்மென்ட் அதிகாரியாகவும், 1991-ல் தஞ்சை கூடுதல் கலெக்டராகவும், 1996-97-ல் விழுப்புரம் கலெக்டராகவும் பணிபுரிந்தார்.

1997-ல் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், 2000-த்தில் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகவும் பணிபுரிந்தார் பிரவீன்குமார். பின்னர், 2001-ம் ஆண்டில் டெல்லியில் மத்திய அரசு பணிக்குச் சென்ற அவர் அங்கு கல்வித்துறை இயக்குனராகவும், கம்பெனி விவகாரத் துறையில் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

2001 முதல் 2007 வரை மத்திய அரசு பணியில் இருந்த அவர், தமிழகம் திரும்பி, நிதித்துறையில் சிறப்பு செயலாளராக இருந்தார். தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

இவரது மனைவி அனிதா பிரவீன். இவரும், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கணவர் பணிபுரியும் நிதித்துறையிலேயே செயலாளராக (திட்டம் மற்றும் வளர்ச்சி) பணி புரிந்து வருகிறார். பீகார் மாநிலம் பாட்னா இவரது சொந்த ஊராகும். 1989-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அனிதா பிரவீன் பணியில் சேர்ந்தார்.
தமிழக தேர்தல்
தமிழக தேர்தல் அதிகாரியாக இவரை நியமித்தபோதும் அனைவரும்  இவரும் சராசரி அதிகாரியாகத்தான் இருப்பார் என நினைத்திருப்பர். ஆரம்பத்தில் இவர் தேர்தல் வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது இவரை யாருக்கும் தெரியவில்லை.
தேர்தல் அறிவித்த நாளில் இருந்து தான் ஆரம்பித்தது இவரின் அதிரடி பணபுழக்கத்தை நிறுத்த நடவடிக்கை, பிரச்சாரத்தில் கெடுபிடி, ஒரு கொடி இல்லை ஒரு ப்ளக்ஸ் பேனர் இல்லை, போஸ்டர் இல்லை அனைத்து சுவரும் வெறிச் என தனது கெடுபிடிகளை அனைவரிடமும் காட்டி அதை நடத்தியும் காட்டினார். இவரின் பேட்டிகள் அனைத்து சுருக்கமாகவும் நறுக்கென்றும் இருந்தது.
தேர்தல் கமிஷன் பற்றி புகார் கூறியபோது அதற்காக அதிகம் அலட்டிகொள்ளாமல் தனது பணியை நச் என்று செய்தார். தற்போது உள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி அதில் தவறுகள் ஏற்பட வண்ணம் பார்த்துக்கொண்டார்.

ஓட்டுப்பதிவின் போது தமிழகத்தில் இப்படியொரு தேர்தலை இது வரை யாரும் பாத்திருக்க வாய்ப்பில்லை கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.

இந்த தேர்தலில் ஓட்டு போட வந்த மக்களைப் பார்க்கும் போது ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் எப்படி ஒரு மாதம் பெட்டியை பாதுகாக்கப் போகிறார்கள்  என்று அனைவரது கவனமும் அதில் இருந்தது அதையும் அழகாக திட்டமிட்டு யாரும் குறை கூறமுடியாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தி அங்கேயும் புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி அனைவரையும் அசத்தினார்.

எங்கேயும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அடக்கமான பதில் தேர்தலின் விதிமுறைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை அனைத்தையும் செயல்களில் காண்பித்தார். தேர்தல் கமிஷன் என்றால் அனைவருக்கும் சேஷன் ஞாபகம் வரும் தற்போது பிரவீன்குமார் ஞாபகத்திற்கு வருகிறார்.

குக்கிராமம் முதல் நகரெங்கும் தேர்தல் கமிஷன் போட்டு ஆட்றாங்களாம் அதனால் எல்லா வேட்பாளரும் பம்பறாங்க என்ற வார்த்தையை நிறைய இடங்களில் கேட்க முடிந்துது இவரின் வெற்றியைக்காட்டுகிறது.

மொத்தத்தில் தமிழகத்தில் நேர்மையாக தேர்தல் நடத்தி ஓட்டு எண்ணிக்கையும் சிறப்பாக செயல்படுத்தி அனைவரிடமும் சபாஷ் வாங்கியவர் பிரவீன்குமார். அவருக்கு என் வாழ்த்துக்கள்...

இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகளை பதிவதால் நம் பதிவுலகிற்கு பெருமையே... நாளைய தலைமுறை நிச்சயம் அறிய வேண்டும்..

7 comments:

  1. Thank you so much. At least there is a soul that recognized the best efforts of Mr.Praveen kumar.

    ReplyDelete
  2. ஒரு ராயல் சல்யூட்...

    ReplyDelete
  3. நிச்சயம் இத்தேர்தலில் நாயகன் இவர்தான்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே

    http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html

    ReplyDelete
  4. உங்கள் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் .!!

    ReplyDelete
  5. ப்ரவீன் குமார் அவர்களின் செயல்பாடு வெகு சிறப்பு!
    பதிவு செய்த சங்கவிக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. மேலும் நான் படித்த ஒரு செய்தி. ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு மனைவியுடன் வந்து இருந்தவர் , பதவி ஏற்பு முடிந்தவுடன்,வெளியே கிளம்பிவிட்டார். வெளியில் இருந்த அதிமுக தொண்டர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு, இவரை வாழ்த்தி ,இவர் காலில் விழுந்து நமஸ்க்காரம் பண்ண, பிரவின்குமார் மனைவி இச்செயலை தடுக்க , இதை தடுக்க இவர் யார் என்று கேள்வி கேட்டு, பிரவின்குமார் மனைவி என்று அறிந்தவுடன் அவருடைய காலில் விழ ஆரம்பிக்க, ஒரேதமாஷ்தான் .

    மணியன்

    ReplyDelete