Thursday, May 19, 2011

அஞ்சறைப்பெட்டி 19.05.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தமிழக மக்கள் என்றும் குறைவைக்க மாட்டார்கள் என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. தொங்கு சட்டமன்றம் அமையும் திமுக தான் மீண்டும் வெற்றி பெரும் என்று நிறைய கருத்துக்கள் வந்த நிலையில் மக்கள் அமைதியாக ஆப்பு வைத்தார்கள் அராஜக ஆட்சிக்கு. யாரும் எதிர்பாராத வேளையில் அம்மா மேல் நம்பிக்கை வைத்து 202 இடங்களை அம்மா கூட்டணிக்கு கொடுத்து இருக்கிறார்கள். 
பணநாயகம் தோற்று ஜனநாகத்தை வெற்றி பெற வைத்ததற்காக தலைவணங்குகிறேன் என் தமிழ் இனத்துக்கு...

...............................................................................................

வாழ்த்துக்கள் அம்மா...

அம்மாவிற்கு பல இடங்களில் வாழ்த்து சொன்னாலும் அஞ்சறைப்பெட்டியில் வாழ்த்து சொல்வது தான் எனக்கு பெருமை...

தமிழகமக்கள் உங்கள் மேல் அசாராத நம்பிக்கை வைத்து தமிழகத்தை உங்களிடம் அளித்துள்ளனர் அந்த நம்பிக்கையை உயர கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறோம்...


...............................................................................................

திமுகவிற்கு இது வரலாறு காணத தோல்வி என்று கூறினால் அது மிகையாகது. 1991ல் திமுக தோற்றாலும் அது ராஜீவ் இறந்த அலை என்று சொல்லலாம். ஆனால் தற்போது ஏற்பட்ட தோல்வி அலையல்ல மக்கள் அமைதியாக வைத்த ஆப்பு..

திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் கலைஞரோ, ஸ்டாலினோ, அழகிரியோ அல்ல அக்கட்சியின் நிறைய மந்திரிகளும், எம்எல்ஏக்களும் பொதுமக்களை மட்டுமல்ல கட்சி தொண்டனை அரவணைக்காதது தான் மிகப்பெரிய காரணம்.

கலைஞர் நிறைய திட்டங்கள் போட்டார் ஆனால் தன் அமைச்சரவை, எம்எல்ஏக்கள் மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என்ன செய்கிறார்கள் என்று அதை கவனிக்க ஒரு திட்டம் தீட்டி இருந்தால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும்.

........................................................................................................

 
கட்சி ஆரம்பித்து சில வருடங்களில் எதிர்கட்சி தலைவர் என்றால் அது சும்மாவா? கேப்டனுக்கு மக்கள் ஓர் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் கேப்டன் பயன்படுத்துவாரா என்று போக போகத்தான் தெரியும்.

எத்தனையோ ஜாதிக்கட்சிகள் இருந்தாலும் ஜாதியை முன்னிருத்தாமல் கேப்டனை மட்டுமே முன்னிருத்தி இன்று 29 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியே..

கேப்டன் முதல் தேர்தலில் 1 சட்ட மன்ற உறுப்பினராக 2006ல் சட்டமன்றம் சென்றார் 2011ல் 29 பேருடன் எதிர்கட்சி தலைவர் என்ற பெரும் தகுதியோடு வீறு நடைபோட்டு சட்டசபைக்குள் செல்ல இருக்கிறார்.

கேப்டனுக்கு வாழ்த்துக்கள்...
........................................................................................................
 

அம்மாவின் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் நிறைய பெரும் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சென்னையை திக்குமுக்காடச் செய்தனர் என்றால் அது மிகையாகது.

........................................................................................................

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து சகஜநிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நாட்டு நடப்பு
அதிக தொகுதிகள் வென்று தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்த அம்மா தலைமை செயலகம் சென்று மந்திரிசபை கூட்டத்தில் நவீன தகவல் தொழில் நுட்பத்தோடு அமைச்சர்களுக்கு  துறை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி மந்திரிகளுக்கு பொதுமக்களிடம் நல்ல பேர் வாங்கும் வேண்டும் அந்த அளவிற்கு உங்கள் செயல் இருக்க வேண்டும் என அறிவுரை கூறியது வரவேற்கத்தக்கது..

தகவல்

ஒரு மனிதனின் ஆயுட் காலத்தை குரோம்சோம்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒருவரது குரோம்சோம்களின் நுனிப் பகுதி “டெலோமியர்” என அழைக்கப்படுகிறது. அவை நீளமாக இருந்தால் ஒருவரது ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்.

அதே பட்சத்தில் நுனிப் பகுதி சிறிதாக இருந்தால் அவரின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டெலோமியரின் அளவை கண்டுபிடிக்க ஒரு சிறிய ரத்த பரிசோதனை மட்டுமே போதும்.

இச்சோதனையை மாட்ரிட் நகரில் உள்ள ஸ்பெயின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரியா பிளாஸ்கோ மேற் கொண்டார். ஐரோப்பாவின் பல நாடுகளில் ரத்த மாதிரி எடுத்து இப்பரிசோதனை நடத்தப்பட்டது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் எனது பயணங்கள் என்ற தலைப்பில் எழுதி வருகிறார்கள். நிறைய பயனுள்ள பல கட்டுரைகள் இப்பதிவில் காணலாம்

http://enathupayanangal.blogspot.com/

தத்துவம்
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

2 comments:

  1. இன்னிக்கு கொஞ்சம் கிக் கம்மிதான்

    கும்தலக்கா


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

    நாமே ராஜா, நமக்கே விருது-7

    http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

    ReplyDelete
  2. ஒரு மனிதனின் ஆயுட் காலத்தை குரோம்சோம்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒருவரது குரோம்சோம்களின் நுனிப் பகுதி “டெலோமியர்” என அழைக்கப்படுகிறது. அவை நீளமாக இருந்தால் ஒருவரது ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்.

    ...interesting... I will try to read more on this topic. :-)

    ReplyDelete