Tuesday, September 25, 2012

நம்ம ஊரு வயாகரா.... ஜாதிக்காய்...

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.


உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் :-

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.


மேலும் சில குறிப்புகள் :-

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

எச்சரிக்கை :-

ஜாதிக்காய் அதிகம் சாப் பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி...

12 comments:

  1. சங்கவி இங்கு ஜாதிக்காயை விட வயாகரா மலிவா இருக்கின்றதே?;-) சரி சரி அதற்கான தேவை வரும்போது பார்கிறேன்!!.

    ReplyDelete
  2. ஜாதிககாயில் இத்தனை ‘முக்கிய‘ பயன்பாடு இருக்கிறதா... நல்ல தகவல்தான்.

    ReplyDelete
  3. வடக்கே ஜாதிக்காயை காபி,டீயில் ஒரு சிட்டிகையளவு பொடிச்சுச் சேர்த்துக்குவாங்க.

    ReplyDelete
  4. ஜாதிக்காயை தகுந்த அளவுடனே பயன்படுத்த வேண்டும் காபி டீ தவிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். மருந்து வேலை செய்யாது. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே இதை உட்கொள்ள வேண்டும். நீங்க கடைசில சொன்ன மாதிரி மலச்சிக்கல் உண்டாக்கிவிடும். நான் இதை பயன் படுத்தியதில்லை ஹி :) நமக்கெதுக்குங்க

    ReplyDelete
  5. மச்சி உபயோகப்படுத்துவது இதுதானா...?

    ReplyDelete
  6. ஜாதி வேண்டாம், ஜாதிக்காய் வேண்டும். இதன் உண்மையான பெயர் ஜாதிக்காய் தானா? தமிழ் நாட்டில் ஏன் இப்படியொரு பெயர் வந்தது. கன்னடத்தில் இதனை 'ஜாயிகாய்' என்றழைக்கிறார்கள் - இரவிச்சந்திரன், பெங்களூர்

    ReplyDelete
  7. ம்ம்ம் நல்ல தகவல்

    ReplyDelete
  8. அதிகம் சேர்த்தால் நல்லா தூக்கம் வரும்... பிறகு....?

    ReplyDelete
  9. இது ஒரே குலுகைக்கு அத்தனை நோய்க்கான நிவாரணி வியாபாரம் மாதிரிதான் தோன்றுகிறது.இந்திய மசாலா பொருட்கள் அத்தனையும் ஏதோ ஒரு வித நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருந்தாலும் கூட உணவு,உடல்,மூளை சார்ந்த ஒன்றே சமாச்சார விசயங்கள்.

    ReplyDelete
  10. //அதிகம் சேர்த்தால் நல்லா தூக்கம் வரும்... பிறகு....?//

    பின்னூட்ட தல தனபாலன்! நல்லா தூக்கம் கலைஞ்சிட்டா....பிறகு...?

    ReplyDelete
  11. நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete