Monday, September 17, 2012

கிராமத்து மனசு.... 5 (தேன்மொழி)


பாவாடை சட்டை அணிந்து முக்கை ஒழுகிக்கொண்டு இருக்கும் போது இருந்து பழக்கம் தேனு என்கிற தேன்மொழியை. செம்மண் காட்டில் விடுமுறை நாட்களில் ஆடு ஓட்டிக்கொண்டு காலையிலேயே குடும்பத்தோடு சென்று விடுவான் சத்தி. பழையசோறும் தொட்டுக்க பச்சமிளாகாய், வெங்காயமும்...

அம்மாவோடு ஆட்டை ஓட்டிக்கொண்டு வருவாள் தேன்மொழி. சிறுவயது சிநேகம் எக்காரணம் கொண்டு தவறாக செல்லாது என் அம்மாக்கள் ஆடு மேய்க்க, இவர்கள் இருவரும் நொண்டி விளையாடி மகிழ்வார்கள். அப்படியே மதிய வேளையில் வேப்பமர நிழலில் அஞ்சாகல் ஆடுவதும் பின் மாலை மீண்டும் ஆட்டை ஓட்டிக்கொண்டு வீடு வருவதும் இவர்களின் வார இறுதி நாள் பொழுது போக்கு...

சைக்கிள் ஓட்டி பழகும் போது தேனுக்கும் இவன் தான் பழக்கிவிட்டான். தேனுக்கு எப்பவும் இவனை பிடிக்கும் இவன் இல்லாமல் விளையாட செல்ல மாட்டாள் அப்படியே இருவரும் 12ம் வகுப்பு வரை படித்தனர். 12ம் வகுப்பு படிக்கும் போது தேனு பிறந்தநாளுக்கு வகுப்பில் உள்ள எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து வந்தாள் சத்தியின் இருக்கை வரும் போது சட்டென்று சத்தி எழுந்து வெளியே சென்றான் தேனுக்கும் குழப்பம் ஏன் எழுந்து சென்றான் என்று. மாழை பள்ளி முடிந்ததும் இருவரும் சைக்கிளில் வீடு செல்லும் போது முதன் முதலாக தேனுக்கு மிக பிடிச்ச ரொம்ப நாள் ஆசைப்பட்ட வாக்மேனை பரிசாக அளிக்கும் போது தேன் ஏன் என்னிடம் மிட்டாய் வாங்கவில்லை என்றதும் எல்லாருக்கும் கொடுக்கும் மிட்டாய் எனக்கு வேண்டாம் நான் எப்போது உன்னிடம் மட்டும் தனியாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான்...

தேனுக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லை ஏன் அவன் இப்படி சொன்னான் என்று ஒரு வேளை இவன் நம்மை சைட் அடிக்கிறானே என்றும் அவளுக்கு டவுட்... தேன் ஒரு மிக தில்லான பெண் யாராக இருந்தாலும் எதிர்த்து பேசுவாள் எகிறி நின்றாள் கையை வீசவும் தயங்காதவள் தயங்காமல் பேசும் தரமான சொற்களுக்கு சொந்தக்காரி. தேனிடம் உள்ளூர் பசங்க  பேசமாட்டாங்க அந்த அளவீக்கு மிரட்டி பேசுவாள்.. சக்தியிடம் காதலை சொன்னதே தேனுதான் அந்த அளவிற்கு தைரியசாலி, உழைப்பாளி இப்படி இருந்தவள் சக்தியை காதலிக்கும் போதும் வாழ்ந்த உன்னோடு தான்டா இல்லன்னா இப்படியே படிக்காமல் ஆட்டுக்குட்டிய மேச்சிகிட்டே இருந்திடுவேன். மறந்தும் கூட நீ வேற யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கனவில் கூட நினைக்கதே என்று மிரட்டினாளும் பாசக்காரி.

சக்திக்கும் அவளை ரொம்ப பிடிக்கும் தேனு கருப்பும் இல்லாமல் சிகப்பும் இல்லாத இடைப்பட்ட நிறம் குறிப்பா சொல்லனும் என்றால் செஞ்சு வைச்ச சிலையழகி. அவளின் திகட்டாத பேச்சும், சினுங்கும் கண்களும் கான கொள்ளை அழகு என்பர்.

இந்நிலையில் இவர்கள் காதல் தேனுவின் மாமவிற்கு தெரியவர அவர் சக்தியை கூட்டி வரச்சொல்லி தம்பி உங்க குடும்பமும் எங்க குடும்பமும் சிறுவயது முதல் நண்பர்கள் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் நீ உங்க அப்பா சொத்தில் வாழ்கிறாய் நீயும் சந்தோசமாக இரு நாங்களும் சந்தோமாக இருக்கிறோம் எல்லாம் விட்டு விடு என்றார் தலையாட்டி சென்றான் செந்தில்.

இதைக்கேட்ட தேனு சக்தியிடம் அவரு சொன்ன நீ எதுக்கு பயப்படுற இப்ப சொல்லு இப்படியே வந்துவிடுகிறேன் என்றாள் சக்தி இல்லம்மா வேண்டாம் நாம் இதைப்பற்றி ஏன் யோசிக்ககூடாது என்றதும் அவள் விட்டேனா பார் எனக்கு தெரியாது நீ தாலி கட்டனும் என்று சிட்டாக பறந்தாள். இவன் ஊரில் எங்க இருந்தாலும் இவனைப்பார்த்து எப்ப கட்டுற என்று மிரட்டியே திரிவாள், சத்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவுங்க அப்ப மஞ்சள் போட்ட பணத்தை எடுத்துக்கொண்டு இரண்டு நாள் சுற்றி பக்கத்து டவுனில் பேக்கரி அமைத்தான். நண்பர்கள் மூலம் தேனுவுக்கு தகவல் தந்தவன் தனது நண்பர்கள் அறிவுரையை ஏற்று தேனுவை திருமணம் செய்ய முடிவெடுத்தான்.

ஆனால் திருமணம் செய்தால் இரு வீட்டாருக்கும் செல்வாக்கு இருக்கிறது இருவரும் மோதி கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்தவன் தனது பேக்கரியை நண்பனை பார்க்க சொல்லிவிட்டு மீண்டும் ஊருக்குவந்து யோசித்தவன் திருமணம் நம்ம ஊர் எல்லை விநாயகர் கோவிலில் திருமணம் முடிந்ததும் உள்ளுரில் இருக்கும் நண்பனும் மச்சானுமான விஜி வீட்டில் தங்கிக்கொள்ளலாம் ஊருக்கு நடுவே இருக்கிறது விஜி வீடு ஊரில் என்ன நடந்தாலும் தெரியும் என முடிவெடுத்து தேனுவிக்கு சொல்லியும் அனுப்பினான்.

எதிர்பார்த்தது போலவே காலை பசுவிற்கு பால் கறக்க வரும் தேனுவை அதே புடவையில் கூட்டி வந்து ஊர் எல்லை கோயிலில் தாலிகட்டி விஜி வீட்டிற்கு வந்தான். யாரும் பார்த்தார்களா என்று பார்ப்பதற்கு ஆள் வைத்து விட்டு வீட்டின் ஓரத்தில் உள்ள அறையில் தங்கினான்..

பால் கறக்க சென்ற பிள்ளை ஆளைக்காணம் என்ற தீ போல ஊரெங்கும் பறவியது. நேராக சக்தியின் வீட்டில் விசாரிக்க சென்றால் அங்கு யாரும் இல்லை அவனுடன் ஓடிவிட்டாள் என்று முடிவு செய்யாமல் அவன் அப்பாவிடம் ஞாயம் கேட்க செல்ல முடியாது என்ன செய்வது என்று பங்காளிகள் எல்லாம் ஒன்று திரண்டு நிற்க இவன் அதே ஊருக்குள் நிம்மதியாக உறங்கினான்..

ஒரு வாரம் வீட்டிலேயே இருந்தவர்கள் பிரச்சனை தீரவுமில்லை யாரும் சமாதானமாக போவது போல் தெரியவில்லை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதே விஜி டேய் யாரும் சமாதானம் ஆகுவதற்கு வாய்ப்பே இல்ல.. நீ கிளம்பிடு நான் போய் கார் எடுத்துட்டு வருகிறேன் 9 மணிக்கு ஈரோட்டில் ரயில் ஏறி சென்னை போய்டு அங்க நம்ம சரவணன் பால்  விற்றுக்கொண்டு இருக்கான் அவனிடம் பேசிட்டேன் கிளம்ப தயராக இரு என்று பத்திரமாக காரில் ஏற்றி இவன் குடும்பத்துடன் ஊருக்கு செல்வது போல் ஈரோடு செல்லாமல் சேலம் சென்று வழியனுப்பி திரும்பினான்...

இன்று இந்த கிராமத்து கிளிகள் இரண்டும் 3 குழந்தைகளோடு சென்னையில் பேக்கரி வைத்து நல்ல நிலைமையில் உள்ளனர் என்பது மகிழ்வான நினைவே....

4 comments:

  1. உண்மைக் கதையா...? நல்லா வந்திருக்கு உங்க எழுத்து நடையில. தேன் போல தைரியமா எல்லாப் பெண்களும் இருந்திட்டா...? நினைக்கவே இனிக்குதுங்க.

    ReplyDelete
  2. ஆமா நானும் அதையே கேட்கிறேன் உண்மைக் கதையா ? நன்றாக இருக்கு.

    ReplyDelete
  3. யார் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே... வளமுடன் வாழ்க...

    ReplyDelete


  4. உண்மையான, கிராமிய மணம் கமிழும்
    காதல் கதை!சிறந்த எழுத்து நடை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete