Wednesday, September 19, 2012

அஞ்சறைப்பெட்டி 20/09/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

இன்று அகில உலக பந்துன்னு சொன்னாங்க ஆனா ஊரில் கடைகள் தான் சாத்தியிருக்காங்க பேருந்தும் வேலைக்கு செல்லும் மகா ஜனங்கள் எல்லாம் எப்பவும் போல போய்க்கிட்டுத்தான் இருக்காங்க. தனியார் பேருந்து ஓடலை ஆனால் அரசு பேருந்துகள் அனைத்து ஓடிகிட்டுத்தான் இருக்கு.. இதனால் நான் அறிந்து கொண்டது என்னவெனில் நீங்க என்னமோ அறிவிச்சுக்குங்க அதானல அவுங்க விலை குறைக்கப்போவதில்லை.. 


எங்களுக்கு வயிறு நிறைய சாப்பிடவேண்டும் என்றாலோ வண்டிக்கு பெட்ரோல் அடிக்கனும் என்றாலே நிச்சயம் பணம் வேண்டும் எங்களுக்கு இந்த பந்த், போராட்டத்தில் நம்பிக்கை இல்லை அதானால் எப்பவும் போல் வேலைக்கு செல்கிறோம் இதுதான் வெகுசாமானிய மக்களின் எண்ணமாக நிச்சயம் இருக்கும்..

இதன் காரணமாகத்தான் இப்பவெல்லாம் போரட்டம், பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் அதிகம் சேருவதில்லை என்பது அப்பட்டமான உண்மை.. வேலைக்கு சென்றால் என்ன கூலியோ அதை கொடுத்தால் கூட்டத்துக்கு வருவதற்குத்தான் மக்கள் தயராக உள்ளனர்.. ஆக மக்கள் தெளிவாகத்தான் உள்ளனர் என்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

..............................................................................................


சமீபத்தில் ஒரு சலூனில் முடிவெட்டிக்கொண்டு இருந்தேன் பக்கத்தில் ஒருவர் வந்து உட்கார்ந்து கட்டிங் சேவிங் என்றார் அண்ணே விலை ஏற்றிவிட்டோம் இப்ப 70 ரூபாய் என்றார்.. உடனே அவர் ஏம்பா உங்க பாட்டுக்கு விலை ஏத்திட்டீங்க ப்ளேடு, சோப்பு விலையா ஏறிபோச்சு என்றார் உடனே உட்கார்ந்திருந்த ஒருவர் ஆமாம்பா இவுங்க பாட்டுக்கு ஏத்திக்கறாங்க இதை எல்லாம் கேக்கனும் என்றார்.. உடனே அந்த சலூன் கடை தம்பி ப்ளேடு, சோப்பு விலை எல்லாம் ஏத்தலைங்க உங்க கடையில டீ விலையும் அவர் கடையில் புரோட்டா விலையும் ஏத்திட்டீங்க அதை சாப்பிட எங்களுக்கும் காசு வேண்டாமா என்றதும் இருவரும் கப்சிப்...

இன்று விலை ஏற்றம் அனைத்து இடங்களிலும் சகஜம் தான் யாரையும் யாரும் குறை சொல்ல இயலாது...

..........................................................................................

போய் விடுவேன், போய் விடுவேன் என்று சொல்லிக்கொண்டே, இன்றும் போகிறேன் என்று தான் சொல்லுகிறார். வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என மம்தா அறிவித்துள்ளார். இது இந்த முறை உண்மையாகுமா இல்ல கடந்த முறை மாதிரி கடைசி நேரத்தில் எல்லாத்தையும் சரி என்பார்களோ... எல்லாம் சம்பாரிப்பவர்களுக்கே வெளிச்சம்...
................................................................................................

மீண்டும் காவிரி பிரச்சனை இது எப்போதும் தீராது தீர்ந்தால் அங்க யாரும் அரசியல் செய்ய முடியாது... இந்த பிரச்சனைக்கு ஒரே வழி வருணபகவான் கண் திறந்து பொத்துகிட்டு ஊற்றினால் சரியாகிடும்...

...............................................................................................

இந்தியாவிற்கு வரும் ராசபக்சேவிற்கு கருப்பு கொடி காட்ட சென்ற வைகோ கைது இது அறிந்த விசயம் தான் ஆனாலும் ஒரு இனத்தை அழித்தவனை எப்படி வரவேற்க முடியும்.. அவர்களுக்கு நாம் எத்தனை செய்தாலும் ஒருநாள் நம்மை எதிர்க்க நிச்சயம் துணிவார்கள் என்பதே நிதர்சன உண்மை..


...............................................................................................


தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் புழக்கத்தில் இருக்கும் சாதாரணமான வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில்    பெரும்பாலானவை அவர்களின் காதுகளை செவிடாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. 

இதற்கான ஆய்வு 62 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவீதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவீதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை  வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவீதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


தகவல்


தெம்பு தரும் குளிர்பானம் தானே... என்று ஐஸ், டீயை தொடர்ந்து விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்...? உங்கள் தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டிய  நேரம் வந்து விட்டது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

சிறுநீரகங்களில் சாதாரண கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ், டீ குடிப்பதும் ஒரு முக்கியமான, மோசமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

ஐஸ், டீயில் அதிகமாக உள்ள ஆக்சலேட் என்னும் திடப்பொருள் கலவை சிறுநீரக கற்களை உருவாக்கும் மூல வேதியல் பொருள் என அறியப்பட்டுள்ளது. இவை சிறுநீரில் உப்பாகவும், தாதுக்களாகவும் தேங்கி நின்று சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன. 

பொதுவாக, இந்த படிமங்கள் தீங்கற்றவையாக கருதப்பட்டாலும், இவை பெரிய அளவில் வளர்ந்து சிறுநீரக பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. 

தண்ணீரை விட சுவையாக உள்ளது. குறைந்த கலோரிகளை கொண்டது என்பதற்காக ஏராளமான மக்கள், அதிகமாக ஐஸ், டீயை பருகும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஐஸ், டீ குடிக்கும் பழக்கத்தை நாம் கைவிடவேண்டும். மேலும், ஆக்சலேட் எனப்படும் மூலப்பொருள் அதிகம் கொண்ட பசலைக்கீரை, சாக்லேட், உப்பு, பயறு மற்றும் இறைச்சி வகைகளும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் காரணிகளான பிற உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

சிறுநீரக கற்களின் வளர்ச்சியை எலுமிச்சைப்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டுக்குள் வைக்கும். எனவே, நிறைய தண்ணீர், எலுமிச்சை ரசம், பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நம்மால் சிறுநீரக நோய்களில் இருந்து விடுபட முடியும்.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் நிஜமாகும் நிழல்கள் என்ற பெயரில் விஷ்னு என்பவர் எழுதி வருகிறார்.. இவரின் காதல் கவிதைகள் அனைத்து கொள்ளை கொள்கின்றன மனதை...

தத்துவம்

நம்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிற அளவிற்கு  . நம்மை முழுதாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறை நமக்கு இல்லை ....

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள செலவில்லாத ஒப்பனை புன்னகை.

12 comments:

  1. விலையேற்றம் எப்படி மறைமுகமா சாமான்ய மக்களையும் பாதிக்கும்ன்றத எளிமையா சொல்லி இருக்காரு அந்த சலூன்காரரு...

    ReplyDelete
  2. நல்லா கலெக்ட் பண்றாய்ங்கய்யா டீடெய்லு..

    ReplyDelete
  3. //நீங்க என்னமோ அறிவிச்சுக்குங்க அதானல அவுங்க விலை குறைக்கப்போவதில்லை.. //

    அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே..

    ReplyDelete
  4. //நீங்க என்னமோ அறிவிச்சுக்குங்க அதானல அவுங்க விலை குறைக்கப்போவதில்லை.. //
    அதுக்காக எதிர்பை தெரிவிக்காமலே இருந்துவிட முடியுமா? கொஞ்சமாச்சும் அவனுங்களுக்கு உறைக்கட்டுமே...

    ReplyDelete
  5. நம்ம சாப்பாட்டுக்கு நாம சம்பாதித்துதானே ஆகணும் . நம்மைத்தானே எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளச் சொல்லி சிதம்பரம் சொல்லியிருக்காரு. அரசு எந்தச் சிக்கனத்தையும் செயல்படுத்தாது. அரசியல் வாதிகளும்தான். நல்ல ஜன நாயகம்.

    ReplyDelete
  6. நியூஸ் பேப்பர் அளவுக்கு பல செய்திகள். :-)))

    ReplyDelete
  7. மிளகு, சோம்பு, சீரகம், வெந்தயம், கடுகு எல்லாம் சூப்பர்

    ReplyDelete
  8. பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர்
    >>
    ஓக்கே.., ஓக்கே...,

    ReplyDelete
  9. சலூன் - கேள்வி கேட்க முடியாத இடம், பயனுள்ள - தகவல், அறிமுக பதிவர் - சென்று பார்க்கிறேன்... தத்துவம் - உண்மை...

    ReplyDelete
  10. விலை ஏற்றம் என்பது இப்போது மக்களிடையே சாதாரணமாகிவிட்டது! அரசியல் கட்சிகளை நம்பத்தயாராக இல்லை என்பதையே பந்தில் கலந்து கொள்ளாதது காட்டுகிறது! சலூன் காரர் பதில் நச்! பயனுள்ள தகவல் பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  11. அஞ்சறைப் பெட்டி எப்பவும் போல மணக்கிறது.

    ReplyDelete
  12. FYI...

    http://www.taylorkubota.net/1/post/2012/08/making-studies-out-of-nothing-at-all.html

    ReplyDelete