Sunday, September 9, 2012

குரங்கு போல மனம்....


மனம் ஒரு குரங்கு
குரங்கு மரத்துக்கு மரத்
தாவுவது போல் மனமும்
தாவுகிறது..

எங்கு குதிக்க வேண்டும்
எங்கு குதிக்க கூடாது
என்ற சாட்டையை சுழற்றுவது
நம் கையில் தான் உள்ளது.....

சாட்டையை சுழற்றி குரங்கை அடக்க முடியுமா என்றால் நிச்சயம் கஷ்டமே அதுபோலத்தான் மனமும் இதை செய்யக்கூடாது என்று சொல்லி செய்யமல் இருப்போம் நம் விருப்பமானவர்கள் அதை கேட்டால் நிச்சயம் செய்வோம். அப்போது மாறத்தொடங்குகிறது நம் மனம்...

"மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்" என்று அவ்வையின் முதுமொழி.. ஆனால் நினைத்த மாத்திரத்தில் நினைத்தை நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம் அதை யோசித்து நிதானித்து இப்ப செய்யக்கூடாது அப்புறம் செய்யலாம் என்பவர் தான் தன் மனத்தை கொஞ்சம் அடக்கி தன்னுள் வைப்பார்.

"பதறாத காரியம் சிதறாது" என்பார்கள் அந்த பதற்றத்தை உண்டாக்குவதே மனம் தான். என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று நின்று நிதானிக்கும் போது மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.. உணர்ச்சி வசப்பட்டால் நிச்சயம் கட்டுப்பாட்டிற்குள் வராது.

நம் மனம் சிதறுவதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்

பல மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்காமல்  உடலை வகுப்பறையில் விட்டு விட்டு மனதை அலைபாயவிடுகிறார்கள்.

பல பொதுக்கூட்டங்களில் பெரிய மனிதர்கள் தூங்குகின்றனர் அல்லது உடலினை அங்கே விட்டு விட்டு மனதை அலைபாய விடுகின்றனர்.

ஏறினால் இறங்கும், இறங்கினால் ஏறும் அது தான் மனம்..

இந்த மனத்தை கட்டுப்படுத்துவதால் நாம் பல வகைகளில் நன்மை அடைகின்றோம். இதை கட்டுப்படுத்த தெரியாததால் தான் இன்று பல யோக மையங்களும், தியான மையங்களும் கல்லா கட்டுகின்றன.

மனம் பற்றி என் நண்பன் எனக்கு சொன்ன கதை...

சாமியார் ஒருவர் குரங்கு ஒன்றை பணியாளாக வைத்திருந்தார். சாமியைப் பார்க்க வந்திருந்தவருக்குப் பணிவிடைகள் செய்ய குரங்கை ஏவிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வேலை சொல்லும் முன்னாலும் குரங்கில் தலையில் கையில் இருந்த குச்சியால் ஒரு அடி அடித்து அனுப்பிக் கொண்டிருந்தார். வந்தவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்். என்ன இது, அது பாவம், வாயில்லா உயிர், அமைதியாக இவர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இவர் சும்மா அடித்துக் கொண்டே இருக்கிறாரே என்று பரிதாபப்பட்டு “சாமி கொஞ்ச நேரம் அந்தக் குச்சிக்கு ஓய்வு கொடுங்களேன்” என்று கொஞ்சம் கடிதலாகவே சொன்னார்.

சற்று நேரத்தில் குரங்கு வந்தவரின் அருகில் வந்து அமர ஆரம்பித்தது. யாரும் எதுவும் சொல்லவில்லை. அவரது சட்டையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. இவ்வளவு நல்ல குரங்கு, விளையாடி விட்டுப் போகட்டும் என்று அவரும் கண்டு கொள்ளவில்லை. இப்படியே போய், கடைசியில் அவர் தலையில் ஏறி முடியைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்த பிறகுதான் “சாமி, உங்க குச்சிக்கு வேலை கொடுங்க” என்று கேட்க மனம் வந்தது அவருக்கு.

நம் மனம் என்னும் எண்ணங்களும் அப்படித்தான். குதித்து கும்மாளம் போட்டு நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் சிக்கலில் மாட்டி வைப்பதில் கில்லாடி. அதற்காக குச்சியைக் கையில் எடுத்தால் சாதுவாக மாறி விடுகிறது. சாதுவாகி விட்டதே என்று குச்சியைக் கீழே போட்டு விட்டால் திரும்பப் பழைய புத்தி திரும்பி விடுகிறது.

மனத்தைப்பற்றி சமீபத்தில் நான் படித்த எனக்கு மிக பிடித்த கவிதை...

என் கண்கள் 
இறுக்கமாக கட்டப்பட்டன
நான் தீயதையே பார்க்கிறேனாம்....

என் காதுகள்
பஞ்சால் அடைக்கப்பட்டன
நான் தீயதையே கேட்கிறேனாம்....

என் வாய்
துணிகள் கொண்டு பொத்தப்பட்டன
நான் தீயதையே பேசுகிறேனாம்....

என் உடல் 
யாருமற்ற தீவில்
தூக்கி வீசப்பட்டது

என் மனம் 
தன் கோரைப் பல் கொண்டு
என் உடலை கிழித்து வெளிவந்து
அவர்கள் தீயது என்று சொன்னதை 
தேடிச் சென்றது!!!

மனதை அடக்க முயலுகிறேன்... ஆனால் முடியவில்லை என்று சொல்பவர்கள் தான் ஏராளம் அதில் நானும் ஒருவன் என்றால் அது பொய்யாகாது...

22 comments:

  1. அருமையான கவிதை. மனக் குரங்கை அடக்க நானும் கூட முயன்று கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே துணையாக...

    ReplyDelete
  2. உண்மை தான். தினப்பயிற்சியின் மூலம் கட்டுக்குள் மகிழ்ச்சியாய் வைத்திருக்க முடியும்.

    நல்ல பதிவு சங்கவி.

    ReplyDelete
  3. அருமை நண்பா உன்னை உணர ஆரமித்து இருகிறாய் ஞானத்தின் திறவுகோல் அது .........குரங்கின் பரிணாமத்தின் எல்லையில் இருக்கிறோம் நமக்கு குசிகள் தேவை இல்லை என்று நம்பிக்கை கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. “பிடித்த கவிதை“ எங்களுக்கும் பிடிச்சிருந்தது.

    ReplyDelete
  5. மச்சி....மனதை கட்டு படுத்து...உனக்கு நிறைய ஆபர் வருது போல...

    ReplyDelete
  6. //பால கணேஷ்

    அருமையான கவிதை. மனக் குரங்கை அடக்க நானும் கூட முயன்று கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே துணையாக...//

    ஆமாங்கண்ணே நம்பிக்கைதான் வாழ்க்கை...

    ReplyDelete
  7. சத்ரியன்

    உண்மை தான். தினப்பயிற்சியின் மூலம் கட்டுக்குள் மகிழ்ச்சியாய் வைத்திருக்க முடியும்.

    நல்ல பதிவு சங்கவி.,,,

    பயிற்சி எடுத்தும் அடங்க மாட்டிங்குது...

    ReplyDelete
  8. ...கோவை மு சரளா said...

    அருமை நண்பா உன்னை உணர ஆரமித்து இருகிறாய் ஞானத்தின் திறவுகோல் அது .........குரங்கின் பரிணாமத்தின் எல்லையில் இருக்கிறோம் நமக்கு குசிகள் தேவை இல்லை என்று நம்பிக்கை கொள்ளுங்கள் ...

    நிச்சயம் தோழி... மனம் படுத்தும் பாடு புரிகிறது...

    ReplyDelete
  9. ..இந்திரா said...

    “பிடித்த கவிதை“ எங்களுக்கும் பிடிச்சிருந்தது...


    இந்திராவுக்கு பிடிக்கும் என எனக்கு தெரியும்...

    ReplyDelete
  10. ...கோவை நேரம் said...

    மச்சி....மனதை கட்டு படுத்து...உனக்கு நிறைய ஆபர் வருது போல......

    ஆமாம் மச்சி....

    ஆபர் அப்புறம் ஆப்படிச்சிடும்...

    அதனால் கட்டுப்படுத்த வேண்டும்...

    ReplyDelete
  11. பதிவும் கடைசியாகப் பதிவு செய்துள்ள கவிதையும்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நான் அதை கட்டுபடுத்த முயற்சி எல்லாம் செய்வதில்லை ...........அது பாட்டுக்கு குதிச்சி ஆடி ஓடி டையர்டு ஆகட்டும்ன்னு விட்டுடேன் ................

    ReplyDelete
  13. உங்கள் கவிதையும் எடுத்தாளப்பட்ட கவிதையும் அருமை . கடிவாளம் நம் கையில் தானே நண்பா.உறுதியாகப் பிடித்து நமக்கான வழியில் செலுத்தலாம்

    ReplyDelete
  14. அருமையான எளிமையான விளக்கம்! மனதை கட்டுப்படுத்தினால் மகான் ஆகலாம்! முயலுவோம்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  15. sooper sangavi.keep it up.

    ReplyDelete
  16. அருமையான கட்டுரை...

    கவிதை அருமை.

    ReplyDelete
  17. கதையும், கவிதையும் நன்று..

    மனதை கட்டுப்படுத்த நினைத்ததே முதல் வெற்றி... ஒரு லிஸ்ட் போடுங்க - உங்களைப் பற்றி - ஒவ்வொன்றாக மாற்றி கொண்டே வாங்க...

    அப்புறம் பாருங்க - உங்க பதிவுகளே மாறிடும்...

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

    லிஸ்ட் : உங்களின் பலவீனங்கள்...

    நன்றி...

    ReplyDelete
  18. நல்ல கவிதை... நல்ல பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete