Wednesday, September 5, 2012

அஞ்சறைப்பெட்டி 06/08/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
ஸ்பெக்டம் ஊழலில் போது விசாரணைக்கு இருந்த வேகம் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் இல்லை மீடியாவும் அந்த அளவிற்கு இந்தப்பிரச்சனையை பெரிது படுத்தியதாக தெரியவில்லை. வழக்கு மேல் வழக்கு போடும் ஐயாக்கள் எல்லாம் இந்த பிரச்சனையில் எங்கு சென்றார்கள் என்பது ரொம்ப யோசிக்க வைக்கிறது...
..............................................................................................

.சிவகாசியில் வெடிவிபத்து ரொம்ப வருந்ததக்க செய்தி 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது பெரிய இழப்பு அவர்களின் குடும்பத்துக்கு மிக ஆழ்ந்த இரங்கல்கள்.. காயமானவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவோம்...

..........................................................................................

எத்தனை பிரச்சனைகளை தீர்த்தாலும் தமிழக மீனவர் பிரச்சனைகளை தீர்ப்பது என்பது நடக்காத ஒன்றுதான்.. பாதிக்கப்படுபவன் தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக தீர்க்கப்படாத பிரச்சனையாவே போகிறது...
................................................................................................

நேற்று மருத்துவமனை சென்று திரும்பும் போது அன்னபூர்னாவில் சாப்பிட்டோம் எப்பவும் புரோட்டா சாப்பிட்டால் அதற்கு 1 கப் குருமா தான் வைப்பார்கள் நான் புரோட்டாவை விட குருமாவை விரும்பி சாப்பிடுபவன் நேற்று கொஞ்சம் ஓவராத்தான் போச்சு 1 புரோட்டாவிற்கு 7 கப் குருமா வாங்கினால் சர்வ் செய்த சர்வர் சார் இன்னும் வேனுமா வேனுமா ன்னு கேட்டான் நக்கல் செய்கிறானா இல்லை உண்மையான உபசரிப்பில் கேக்கறானான்னு தான் தெரியல.. ஆனா சாப்பிட்டு முடிச்சதும் எங்க வீட்டம்மா சொன்னது தான் பஞ்ச்... 1 புரோட்டாவிற்கு 7 கப் குருமா ஓவர் தான் ஆனால் அவுங்க 1 புரோட்டாவ 40 ரூபாய்க்கு விக்கறது இன்னும் ஓவர்...

...............................................................................................

ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் பிரான்சும் ஒன்று. ஆனால் இப்போது அங்கு பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது. கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தபடி உள்ளது. அதுவும் சோசலிச ஆட்சி வந்த பிறகு அங்கு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது.

தற்போது அங்கு 30 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதுதொடர்பாக அந்த நாட்டு தொழில்துறை மந்திரி மைக்கேல் சபீன் கூறியதாவது:-

பிரான்சில் 30 லட்சம் பேர் வேலை தேடி காத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் உயரலாம். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க நாட்டில் பொருளாதார வளர்ச்சி தேவை. ஆனால் ஐரோப்பிய முடிவுகளே நமது பொருளாதார முடிவுகளாக இருப்பதால் நாம் போராடி வேலையில்லாக் கொடுமையை மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டின் நிலை எவ்வாறு இருக்கும்? என்று யாருக்கும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
...............................................................................................


 
இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அங்கு நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற அவர்கள் நிர்வாணநிலையில் இருந்தனர். இளவரசர் ஹாரியும் நிர்வாணமாக இருந்தார். அப்போது இளம் பெண்கள் சிலர் அவருக்கு முத்தம் கொடுத்ததாக தகவல் வெளியானது.

அவருக்கு முத்தம் கொடுத்த ஹெரி ரிச்சட் என்ற 32 வயது இளம்பெண் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். விருந்தில் கலந்து கொண்ட பலரும் ஆடையில்லாமல் இருந்தனர். நான் நீச்சல் உடை அணிந்திருந்தேன். அவர் அங்குள்ள நீச்சல் குளம் அருகே நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் அவருடன் கைகோர்த்து ஆடினேன். பின்னர் அவர் கையை பிடித்து இழுத்தபடி அவரது படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அப்போது அவருக்கு முத்தம் கொடுத்தேன். அவர் ஏற்கனவே ஆடையில்லாமல் இருந்தார். நானும் எனது ஆடையை அவிழ்த்தேன்.

அவர் என்னோடு 20 நிமிடம் தொடர்ந்து முத்தம் கொடுத்தார். மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டோம். நாங்கள் காதல் உணர்ச்சியுடன் முத்தம் கொடுக்க வில்லை. விளையாட்டாகதான் முத்தம் கொடுத்து கொண்டோம். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. இது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதுகிறேன்.
தகவல்

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி ஆகிய கிரகங்களில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற இரண்டு விண்கலங்களை அனுப்பியது. அவற்றை எட்ஸ்டோன் என்ற 76 வயது விஞ்ஞானி மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினார். அவை கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. அதாவது கடந்த 1977-ம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
 
அதில் வாயேஜர்-2 விண்கலம் இரண்டு வாரத்துக்கு முன்பு சூரிய குடும்பத்துக்குள் சென்றடைந்தது. தற்போது அது சூரியனில் இருந்து 1440 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையில் வாயேஜர்-1 விண்கலம் சூரிய குடும்பத்தை சென்றடையும் நிலையில் உள்ளது. அது சூரியனில் இருந்து 1770 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இரண்டு விண்கலங்களும் வியாழன் மற்றும் சனி கிரகத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளன. அங்குள்ள எரிமலைகள், கடல் மற்றும் பனி மண்டலங்கள், டீ, தேன், மழை, சனி கிரகத்தின் டைடன் துணை கோள் போன்றவைகள் குறித்து பல தகவல்களை அனுப்பியுள்ளது.
 
தற்போது சூரிய குடும்பத்துக்குள் பல கோணங்களில் நுழைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மனிதர்கள் தயாரித்து அனுப்பிய விண்கலங்களில் இதுதான் பல 100 கோடி மைல் தூரம் பறந்து சென்று பலவிதங்களில் செயல்படுவதாக விஞ்ஞானிகள் மகிழச்சி தெரிவித்துள்ளனர்.

அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர்  பிரியத்தோழி இவர் எனக்குள் தோன்றும் சில விஷயங்களை நான் சுவாசிக்கும் கவிதைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள,எனக்கென்ற ஒரு சிறு உலகத்தை படைக்கும் முயற்சி இது.. புன்னகை, கற்கள், வடுக்கள், நினைவுகள் பிரதிபலிக்கும் இங்கு என்று கூறி கவிதைகளை அற்புதமாக படைப்பாக்கி இருக்கிறார்...

http://priyathozhi.blogspot.com/
 
தத்துவம்
 
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.

உங்கள் பேச்சு,  எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்

17 comments:

  1. //1 புரோட்டாவிற்கு 7 கப் குருமா //

    அண்ணனை மிஞ்சிய தம்பி !!

    அஞ்சறை பெட்டியில் அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரம் கூட இருக்குது :)

    ReplyDelete
  2. விண்வெளி ஆய்வு பற்றிய தகவலுக்கு நன்றி.

    அப்புறம்... ஹாரி பற்றிய நல்ல்ல்ல்லதொரு தகவல்.
    (எப்புடித்தான் இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்றாங்களோ.. ஷ்ஷ்ஷ்ப்பா..)

    ReplyDelete
  3. புரோட்டா சாப்பிட பிரபல பதிவர்..

    ReplyDelete
  4. அன்பின் சங்கவி - அஞ்சறைப்பெட்டி அருமை - உள்ளூரிலிருந்து உலகம் வரையா - பலே பலே - தகவல்கள் - தத்துவம் - இதெல்லாம் போதாதென பதிவர் அறிமுக வேறு. இந்தப் பதிவர் அறிமுகத்ததானே நான் வலைச்சரத்துல செய்யச் சொல்றேன் - தள்ளிப் போட்டுக்கிட்டே போன எப்படி - செப்டம்பர் இறுதியில் - அக்டோர முதல் வாரத்தில் எழுத வேண்டும் - ஆமா சொல்லிப்புட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அடிக்கடி குடிசைகள் எரிவதும், அடிக்கடி பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்படுறதும்.... தொடர்ந்துகிட்டேதான் இருக்கு :(((

    ReplyDelete
  6. 7 கப் குருமா!!! சர்வரின் பொறுமைக்கு ஒரு சல்யூட்.

    ஃப்ரான்ஸ் மட்டுமா ஒட்டு மொத்த ஐரோப்பாவும் கொஞ்சம் தள்ளாடிட்டுதானே இருக்கு....

    அஞ்சரைப்பெட்டி நல்ல சுவை.

    ReplyDelete
  7. தகவல்... தத்துவம்... சூப்பர்...

    அறிமுக பதிவர்... நன்றி... சென்று படிக்கிறேன்...

    ReplyDelete
  8. /1 புரோட்டாவிற்கு 7 கப் குருமா
    >>
    கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஓவர்தான்

    ReplyDelete
  9. 35 வருடங்கள் 11 பில்லியன் தொலைவு பயணம்...மகத்தான் எதிரிபாராத சாதனை. இதனுள் எரிபொருள் இன்னும் 2020 வரை தாங்கும் எனச் தெரிவிக்கிறார்கள். விண்கற்களில் மோதாமல் செல்வது என்பது இன்னொரு சாதனை.

    ReplyDelete
  10. எல்லாம் புரோட்டாவையே ஏன் புரட்டுராங்க?

    ReplyDelete
  11. வழமைபோல அஞ்சறைப் பெட்டியில் தகவல்கள் நிறைந்துள்ளன.

    ReplyDelete
  12. ஒரு பரோட்டாவுக்கு ஏழு கப் குருமா சாப்பிட்ட சங்கவியை இன்றுமுதல் குருமாவளவன் என்று அனைவரும் அழைப்பார்களாக! :-)

    ReplyDelete
  13. சிறப்பான தகவல் பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

    ReplyDelete
  14. சங்கவி சார், இன்னைக்கு 06/09/2012. தலைப்ப மாத்துங்க. அப்புறம் வாயேஜர் சூரிய குடும்பத்துக்குள்ள நுழைஞ்சுதா? அது பூமிலர்ந்து கிளம்பும்போதே சூரிய குடும்பத்துல தானே இருந்தது...நாமளும் சூரிய குடும்பத்துல தான் இருக்கோம். வாயேஜர் விண்கலங்கள் சூரிய குடும்பத்தை விட்டு வெளிய போகலாம் இன்னும் சில வருடங்களில்..
    வரலாறு முக்கியம் இல்லாட்டியும் அறிவியல் முக்கியம் இல்லையா? :-)

    ReplyDelete
  15. நீங்க இந்த மாதிரி 7 கப் குருமா, ஒரு பரோட்டாவுக்கு சாப்பிடுவதால்தான், 40 ரூபாய் விலை வைத்திருக்கிறார்கள் :)

    ***

    அஞ்சறைப் பெட்டி தகவல்கள் அருமை.. சிவகாசி இன்னும் எத்தனை விபத்துகளை சந்திக்கப் போகிறது? மனித உயிருக்கு மதிப்பில்லை நம் நாட்டில்!!

    ReplyDelete
  16. தகவல் களஞ்சியம் ,நன்றி

    ReplyDelete
  17. 1 பரோட்டா - 7 கப் குருமா...

    ஏனுங்க்ணா, இப்படி....

    ReplyDelete