Tuesday, September 11, 2012

அந்தியூர் கிடாவிருந்து....

 கோயில்

குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடா வருடம் நாங்கள் கிடா வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம் கடந்த 3 ஆண்டுகளாக பதிவில் பகிர்ந்து வருகிறேன் இத்திருவிழாவை ஆனால் கிடாவிருந்தை பதிவு செய்ய இயலவில்லை இந்த வருடம் அதை நிறைவேற்றுகிறேன்..

குருநாதசுவாமியிடம் வேண்டினால் நினைத்த காரியம் நனவாகும் என்பது இந்த ஏரியா மக்கள் மட்டுமல்ல தமிழகத்தில் பல பகுதியில் இருந்து வந்து கிடாவிருந்து இங்கு வைக்கின்றனர்.

 விருந்து நடக்கும் இடம்

திருவிழாக்காலங்களில் மட்டுமல்ல அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு விருந்து நடந்து கொண்டு தான் இருக்கும் மற்ற நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் திருவிழாக்காலங்களில் மிக அதிகமாக இருக்கும்.. சுமார் ஆயிரம் கிடாவெட்டி எங்க பார்த்தாலும் மரத்துக்கு மரம் ஆட்டை தோள் உரித்துக்கொள்டு இருப்பர்.

நிறைய பேர் கோழி அறுத்து அதையும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு மாலை தான் செல்வர். அந்த அளவிற்கு கிடா விருந்துக்கு பெயர் போன இடம் வனம் என்பார்கள்.
 எங்க விருந்து இங்க தான்...

பொங்கல் வைபோவம்
நாங்கள் எப்போதும் முந்தைய நாள் மாலை சென்று இடம் பிடித்து அந்த இடத்தை சுற்றி தடுக்கு அமைத்துக்கொள்வோம். காலை 7 மணிக்கு செல்லும் போது அப்போதே கறி மணக்கும் நிறைய விருந்துகளில்.. கர்நாடகாவில் இருந்து வந்து விருந்து வைப்பவர்கள் களியும், குடல் குழம்பும் வைத்து காலையே வெளுத்து வாங்குவார்கள்.

நாங்கள் 7 மணிக்கு சென்று அங்கேயே பொங்கல் வைத்து அப்புறம் ஆட்டுக்குட்டியை தூக்கிச்சென்று கோயில் முன் தீர்த்தம் போட்டு அறுக்க தயாரானபோது நண்பர் கோவை நேரம் ஜீவாவும் அவரது மகளும் வந்தனர் அவர்களையிம் அழைத்துக்கொண்டு கிடா வெட்ட தீர்த்தம் போட்டால் இந்த வருடம் கிடா கொஞ்ச நேரம் துலுக்கவில்லை நான் என் மகன், மாமா, அக்கா என் மாறி மாறி கயிறு பிடித்தோம் ஒரு பத்து நிமிடத்துக்கு பின் துலுக்கி விட்டது.

கிடா துலுக்கும் இடம்

அப்புறம் இரத்தத்தை கொடுத்து விட்டு கிடாவை தூக்கிக்கொண்டு பந்தலுக்கு வந்தோம் வந்ததும் அழைப்பு ஈரோடு கதிர் அழைத்தார் கிடா துலுக்கிவிட்டாதா நாங்கள் 2 மணிக்கு வந்து விடுகிறோம் என்றார்.. அடுத்து அழைப்பு நம்ம வால்பையன் தல புறப்பட்டுட்டேன் தலக்கறி எனக்குத்தான் மறந்திடாதீங்க வந்து கிட்டே இருக்கேன் என்றார்.

அடுத்து அண்ணன் தாமோதர் அழைத்தார் மாலை போட்டு இருக்கேன் நானும் விஸ்வமும் வர வில்லை அடுத்த முறை நிச்சயம் கலந்துகொள்வோம் என்றார். அப்புறம் நெருங்கிய நண்பர்கள் வட்டம் எல்லாம் வர கோழி பிரியாணியும், கறிச்சாரும் தயாராகிக்கொண்டு இருந்தது. இந்த கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் போது ஆட்டு ஈரலை சுட்டு மாவிலக்குடன் எடுத்து செல்வோம் எடுத்து சென்று பூஜை செய்துவிட்டு சரியாக 1 மணிக்கு மண மணக்கும் கறிச்சாருடன் பந்தியை ஆரம்பித்தோம்..

 நிறைய விருந்துகள்...

இந்த வனத்தில் இம்முறை அதிக கூட்டம் என்பதால் எந்த போனும் வேலை செய்யவில்லை எல்லாம் நாட் ரீச்லியே இருந்தது. நண்பர்களை அழைத்து வருவதற்குள் படாத பாடு பட்டு விட்டோம் அத்தனைக்கூட்டம் எங்க பார்த்தாலும் ஆட்குழம்பு மனம் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மனம் என களைகட்டியது அந்த ஏரியாவில் விருந்து..


 எங்க வீட்டு விருந்து



  சினிமா பாடல் புத்தகம்

 அருவாமனை, பனியாரக்கல்



 கையில் பச்சை குத்தும் பெண்...


வனத்தில் அதிக கடைகள் இல்லை என்றாலும் மண்ணின் மனம் கவர்ந்த தோசைக்கல், பணியாரக்கல், வீச்சருவாள் கடைகளும் கூடவே அந்த நாள் ஞபாகமாக பாட்டு புத்தகங்களும் இடம் பெற்று இருந்தது நண்பர் ஜீவா அவர்கள் எல்லாத்தையும் ஒன்னு விடாம போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்.

இந்த வருட கிடா விருந்துக்கு  இணைய நண்பர்கள் ஈரோடு கதிர், கார்த்தி, லவ்டேல் மேடி மற்றும் அவர் நண்பர், கோவையை சேர்ந்த ஜீவா, சுந்தரவடிவேலு, சுரேஷ் வந்திருந்தனர்.. அடுத்த வருட விருந்துக்கு இன்னும் நிறைய பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்...

8 comments:

  1. அடுத்த ஆண்டு வாரேன் ( எதையும் பிளான் பண்ணி பண்ணணுமோ) சரியா

    ReplyDelete
  2. இந்தபதிவை ஏற்கனவே படிச்ச மாதிரி நினைவு ஒருவேளை ஜீவானந்தம் பிளாக்ல படிச்சேனோ? இல்ல மீள்பதிவா?

    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

    ReplyDelete
  3. ரொம்ப லேட்டாயிடுச்சு பதிவு போட . அடுத்த ஆண்டு வந்துடறோம் பெருங்கூட்டத்துக்கு தயாராயிடுங்க.

    ReplyDelete
  4. அட்டகாசமான விருந்து தல :-)

    ReplyDelete
  5. படங்களுடன் பதிவு நேரடியாக திருவிழாவினைப்
    பார்ப்பது போல் இருந்தது

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. ஊருக்கு வரும் போது சொல்றேன் ..கூட்டிட்டு போங்க

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே,
    இந்த விடுமுறையில் முதல் வார ஞாயிறன்று
    ஒரு கோவில் விழாவில் கிடா விருந்தில்
    பங்கேற்றேன் ..
    அடுத்து இதோ உங்கள் பதிவின் ஊடாக...

    ReplyDelete
  8. துலுக்குதல் என்றால் என்ன? சொல்லவே இல்லை

    நான் இதுவரை இந்த மாதிரி விழா பார்த்ததில்லை; நம் நண்பர்கள் வந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete