Showing posts with label Arasiyal. Show all posts
Showing posts with label Arasiyal. Show all posts

Monday, March 21, 2011

அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்


அதிமுகவின் புதிய வேட்பாளர் பட்டியலை பொது செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

  1. ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
  2. பொன்னேரி தனி - பொன். ராஜா
  3. திருவள்ளூர் - பி.வி. ரமணா
  4. பூந்தமல்லி - மணிமாறன்
  5. ஆவடி - அப்துல் ரஹீம்
  6. அம்பத்தூர் - வேதாச்சலம்
  7. மாதவரம் - வி.மூர்த்தி
  8. திருவொற்றியூர் - குப்பன்
  9. ஆர்கே நகர் - வெற்றிவேல்
  10. கொளத்தூர் சைதை துரைசாமி
  11. வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
  12. திரு.வி.க.நகர் தனி - வ.நீலகண்டன்
  13. ராயபுரம் - ஜெயக்குமார்
  14. துறைமுகம் - பழ. கருப்பையா
  15. ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
  16. அண்ணா நகர் - கோகுல இந்திரா
  17. சைதாப்பேட்டை - செந்தமிழன்
  18. தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
  19. மயிலாப்பூர் - ராஜலட்சுமி
  20. வேளச்சேரி எம்.கே. அசோக்
  21. சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
  22. ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் பெருமாள்
  23. பல்லாவரம் - தன்சிங்
  24. தாம்பரம் - .டிகே.எம்.சின்னையா
  25. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
  26. செய்யூர் தனி - வி.எஸ்.ராஜி
  27. மதுராந்தகம் தனி - கணிதா சம்பத்
  28. உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
  29. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
  30. அரக்கோணம் தனி - சு.ரவி
  31. காட்பாடி - அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
  32. ராணிப்பேட்டை - முஹம்மத்ஜான்
  33. ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
  34. வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்
  35. வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
  36. ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
  37. திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
  38. ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
  39. பர்கூர் - கிருஷ்ணமூர்த்தி
  40. கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி
  41. பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
  42. பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
  43. திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
  44. கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
  45. கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  46. போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
  47. செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
  48. வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
  49. மைலம் - கே.பி.நாகராஜன்
  50. திண்டிவனம் தனி - டாக்டர் அரிதாஸ்
  51. வானூர் தனி - ஜானகிராமன்
  52. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
  53. உளுந்தூர்ப்பேட்டை - குமரகுரு
  54. சங்கராபுரம் - ப.மோகன்
  55. கள்ளக்குறிச்சி தனி - பா.அழகுவேல்
  56. ஆத்தூர் தனி - எஸ்.மாதேஸ்வரன்
  57. ஏற்காடு - செ.பெருமாள்
  58. ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
  59. எடப்பாடி - கே.பழனிச்சாமி
  60. சங்ககிரி - விஜயலட்சுமி
  61. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
  62. சேலம் - தெற்கு செல்வராஜ்
  63. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
  64. ராசிபுரம் தனி - தனபால்
  65. நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
  66. குமாரபாளையம் - பி.தங்கமணி
  67. ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
  68. மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுச்சாமி
  69. தாராபுரம் தனி - கே.பொன்னுச்சாமி
  70. காங்கேயம் - எஸ்எஸ்என் நடராஜ்
  71. பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம்
  72. பவானி - பி.ஜி.நாராயணன்
  73. அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன்
  74. கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
  75. உதகமண்டலம் - புத்தி சந்திரன்
  76. மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
  77. அவினாசி தனி - ஏ.ஏ கருப்பசாமி
  78. திருப்பூர் வடக்கு - எம்.எஸ்.எம். ஆனந்தன்
  79. பல்லடம் - பல்லடம் கே.பி. பரமசிவம்
  80. கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி
  81. கோவை வடக்கு - தா.மலரவன்
  82. தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
  83. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை
  84. சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
  85. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
  86. பொள்ளாச்சி - முத்துக்கருப்பண்ணசாமி
  87. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
  88. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
  89. பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு
  90. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி
  91. நத்தம் - இரா.விசுவநாதன்
  92. வேடசந்தூர் - ச.பழனிச்சாமி
  93. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
  94. கரூர் - வி.செந்தில்பாலாஜி
  95. கிருஷ்ணராயபுரம் தனி - எஸ்.காமராஜ்
  96. குளித்தலை -பாப்பா சுந்தரம்
  97. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
  98. திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
  99. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
  100. மணச்சநல்லூர் - டி.பி.பூனாட்சி
  101. முசிறி - என்.ஆர்.சிவபதி
  102. துறையூர் தனி - டி. இந்திரா காந்தி
  103. பெரம்பலூர் தனி - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
  104. அரியலூர் - துரை மணிவேல்
  105. ஜெயங்கொண்டம் - பா. இளவழகன்
  106. நெய்வேலி - எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
  107. கடலூர் - மு.சி. சம்பத்
  108. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இராஜேந்திரன்
  109. புவனகிரி - செல்வி ராமஜெயம்
  110. காட்டுமன்னார் கோவில் தனி- என்.முருகுமாறன்
  111. சீர்காழி தனி - ம. சக்தி
  112. பூம்புகார் - பவுன்ராஜ்
  113. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
  114. வேதாரண்யம்- என்.வி.காமராஜ்
  115. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
  116. திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன்
  117. நன்னிலம் - ஆர்.காமராஜ்
  118. திருவிடைமருதூர் தனி - பாண்டியராஜன்
  119. கும்பகோணம் - இராம. ராமநாதன்
  120. பாபநாசம் - துரைக்கண்ணு
  121. திருவையாறு - ரத்தினசாமி
  122. தஞ்சாவூர் - ரங்கசாமி
  123. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
  124. கந்தர்வக்கோட்டை தனி - ந.சுப்பிரமணியன்
  125. விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
  126. திருமயம் - பி.கே.வைரமுத்து
  127. ஆலங்குடி - கு.ப.கிருஷ்ணன்
  128. அறந்தாங்கி - மு.ராஜநாயகம்
  129. காரைக்குடி - சோழன் சித.பழனிச்சாமி
  130. திருப்பத்தூர் - ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
  131. மானாமதுரை தனி - ம.குணசேகரன்
  132. மேலூர் - ஆர்.சாமி
  133. மதுரை கிழக்கு - கே.தமிழரசன்
  134. சோழவந்தான் தனி -எம்.வி. கருப்பையா
  135. மதுரை வடக்கு - ஏ.கே.போஸ்
  136. மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு
  137. திருமங்கலம் - ம.முத்துராமலிங்கம்
  138. ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்
  139. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
  140. ராஜபாளையம் - கே.கோபால்சாமி
  141. சாத்தூர் - ஆர்.பி.உதயக்குமார்
  142. சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி
  143. அருப்புக்கோட்டை - வைகைச் செல்வன்
  144. பரமக்குடி தனி - எஸ்.சுந்தர்ராஜ்
  145. முதுகுளத்தூர் - மு.முருகன்
  146. விளாத்திகுளம் - ஜி.வி மார்க்கண்டேயன்
  147. தூத்துக்குடி - ஏ.பால்
  148. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
  149. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
  150. கோவில்பட்டி - கடம்பூர் செ.ராஜு
  151. சங்கரன்கோவில் தனி - சொ.கருப்பசாமி
  152. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
  153. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
  154. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
  155. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
  156. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
  157. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
  158. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
  159. குளச்சல் - பி.லாரன்ஸ்
  160. கிள்ளியூர் - ஆர்.ஜார்ஜ்

Monday, January 31, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?


வருகிற மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் எந்த கட்சியிலும் கூட்டணி இறுதியாகவில்லை காலம் மாறுவது போல் கூட்டணியும் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்வது பொதுமக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

அனைவரும் ஓட்டு போட வேண்டும்

முதலில் நாம் செய்வது நமது ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் வாக்குச்சவாடிக்கு சென்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கு எந்த கவலை இல்லை என்று நினைக்காமல் ஓட்டளிக்க வேண்டும். நம் நாட்டில் எவ்வளவு பெரிய தலைவனாக இருந்தாலும் அவன் பயப்படுது நம்முடைய ஓட்டுக்காகத்தான். நம் அரசியமைப்புபடி நமக்கு நிறைய உரிமைகள் கொடுத்து இருந்தாலும் நாம் சுயமாக சிந்தித்து யாரையும் சாரமல், எதற்கும் பயப்படாமல் செய்யும் ஓர் உரிமை ஓட்டுப்போடுவது தான். நிறைய ஓட்டுக்கள் விழ விழத்தான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். இதுவரை நடந்த தேர்தலில் 60 சதவீதம் தான் அதிகபட்ச ஓட்டுக்கள் விழுந்து இருக்கின்றன என்று 90 சதவீதத்தை எட்டுகிறதோ அன்று தான் உண்மையான ஜனநாயக ஆட்சி நம் நாட்டில் நடக்கும்.

யாருக்கு உங்கள் ஓட்டு

நமது ஓட்டை நாம் தான் முடிவு செய்கிறோம் என்னதான் பணம், பிரியாணி கொடுத்தாலும் ஓட்டுச்சவாடிக்கு சென்று இறுதியாக வாக்களிப்பது நாம் தான். நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டுப்போடும் முன் மனதை கேட்க வேண்டிய சில கேள்விகள்.

1. இத்தேர்தலில் நிற்கும் முதல்வர் வேட்பாளர்களிடம் என்ன குறை? நிறை? இவர்கள் இருவரும் இதற்கு முன் எதவாது நல்லது செய்திருக்கிறார்களா?

2. இந்த 5 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன?

3. விலைவாசி உயர்வு எப்படி இருந்தது அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

4. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி எப்படி கிடைத்தது முழுவதும் கிடைத்ததா

5. கல்விக்காக என்ன செய்தார்கள்? அவர்கள் சொன்னதை நிறைவேற்றினார்களா?

6. வேலை வாய்ப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் புதிய வேலைகளை அறிமுகப்படுத்தினார்களா

7. மின்சார தடைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் அடுத்த வரும் ஆண்டுகளுக்கு தடை இல்லா மின்சாரம் கொடுக்க முடியுமா

8. இரயில் போக்குவரத்து தூரத்தை அதிகப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? புதிதாக இரயில் நிலையம் அமைக்கப்பட்டதா?

9. ஏற்றுமதிக்கு என்ன உதவி இதுவரை செய்துள்ளார்கள்?

10. பேருந்து, மின்சாரம், இரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதா? பேருந்து வசதி சரியாக உள்ளதா?

11. அரசாங்க ஊழியர்களுக்கு என்ன செய்தார்கள் அந்த அளவிற்கு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதா?

12. மருத்துவத்துறையில் என்ன மாற்றம்? மாற்றம் செய்யப்பட்ட மருத்துவம் ஏழை, எளிய மக்களுக்கு உதவுகிறதா?

13. எதுஎதுக்கொல்லாம் இலவசம் கொடுத்தார்கள்?  இலவச பொருட்கள் அனைத்தும் தரமானதா? அந்த இலவசம் தேவையா?

14. சாலை போக்குவரத்து எந்த அளவிற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது?

15. கலாச்சாரம், மொழிக்கு எந்த அளிவிற்கு முன்னுரிமை அளித்தார்கள்?

16, அதிக ஊழல் செய்தவர்கள் யார்? பொதுமக்களுக்கு திட்டம் என்னும் பெயரில் ஊழல் செய்தார்களா? ஊழல் எந்த நிலையில் உள்ளது?

இதற்கு மேலும் நிறைய கேள்விகள் உள்ளன இந்த கேள்விகளை எல்லாம் உங்கள் மனதில் கேட்டு இரு முதல்வர் வேட்பாளர்களும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன கூறிஉள்ளனர் இதற்கு முன் தேர்தல் அறிக்கையை சரியாக நிறைவேற்றியது யார் என்று சிந்தித்து உங்களது வாக்கை சரியான முறையில் வாக்களித்து ஜனநாயத்தை நிலை நிறுத்துங்கள்..