Sunday, February 24, 2013

இதற்கு பெயர் தான் வியாபார தந்திரம்....


 

வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுததவும், வியாபாரத்தை அதிகப்படுத்துவும் சில கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஈர்த்துவருகின்றனர். அதன் பின்னனியில் அவர்களின் வியாபார தந்திரம் ஓரளவு இருக்கும் இது ஒரு 8 வருடங்களுக்கு முன் என்று சொல்லலாம். வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பதில் அதில் நமக்கு கழிவு அழிப்பதில் நாம் குறை சொல்லமுடியாது அவ்வாறு சொன்னால் பிரும்பம் இருந்தால் வந்து வாங்கு இல்லை என்றால் வரதே என்று தான் சொல்வார்கள்...

வணிக நிறுவனங்களின் இலக்கு மிடில்கிளாஸ் மக்களும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் தான். இவர்கள் தான் அங்க ஆப்பர் போட்டு இருக்காங்க இங்க ஆபர் போட்டு இருக்காங்க என்றுதான் ஏமந்தது மற்றும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரரையும் ஏமாற போங்க என்பது தான் இவர்களின் இலக்கு...

நாம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம் இது பகல்கொள்ளை தான் என்பது என் வாதம்... 

துணிக்கடைகளில் நாம் வாங்கும் துணிக்கு முதலில் 3 சதவீத கழிவு கொடுத்தார்கள் அப்புறம் அவர்களே ஒரு கார்டை கொடுத்து இதில் உங்க பாய்ண்டை தேர்வு செய்து கொள்ளுங்கள் அடுத்த முறை வரும் போது கழித்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் வியாபார தந்திரம்.. அவர்கள் தரும் 3 சதவீதத்துக்காக நாம் மீண்டும் அங்க தான் செல்லவேண்டி இருக்கும். நாம் அவர்கள் கொடுக்கும் கார்டை கொண்டு செல்லவில்லை என்றாலும் பராவாயில்லை மொபைல் நம்பரை சொல்லுங்க உங்க அக்கவுண்டில் உங்களுக்கான கழிவு வந்துவிடும் என்றார்கள்.

சமீபத்தில் எனது மொபைலுக்கு ஒரு பிரபல துணிக்கடையில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது நீங்கள் இதுவரை எடுத்த துணிக்கு உங்களுக்கு கொடுத்த கழிவு 450ரூபாய் என்றும் நீங்கள் வந்து துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பி இருந்தது. அந்த பக்கம் செல்ல வேண்டிய வேலை வந்ததும் அந்த கடைக்கு சென்று துணியை 2300 ரூபாய்க்கு வாங்கிவிட்டு பில் போடும் போது கழிவு இருக்கு என்று மெசேஜ் வந்ததுங்க பாருங்க என்றார் கார்டு ஊர்ல இருக்குங்க என்றதும் ஒன்னும் பிரச்சனையில்லை இன்னொரு கார்டு வாங்கிக்குங்க இதையும் அதில் ஏற்றி தருகிறோம் இன்னும் 1 முறை வந்து எடுத்ததற்கு பின் 2 வது முறை டிஸ்க்கவுண்ட் செய்து கொள்ளாம் என்றார். பில் போடும் போது மொபைல் எண் கொடுத்தால் போதும் என்கிறீர்கள் கழிவு என்றதும் கண்டிப்பாக கார்டு வேணும் என்கிறீர்கள் என்றதும்.. எங்களுக்கு வந்த ரூல்ஸ் இது தான் அதை நாங்க சரியாக செய்கிறோம் என்றனர்.. அங்கு இருந்த மேனேஜரிடமும் கேட்டேன் அவர் சிரித்துக்கொண்டே அழகாக முன்னர் சொன்னதையே சொல்கிறார்... ( அவர்களுக்கு இது வியாபார தந்திரம் ஆனால் ஏமாந்தது அங்கு நான் தான்... 450க்கு ஆசைப்பட்டு 2300 போய்யிருச்சு...)

காதலர் தினத்திற்கு மனைவிக்கு ஒரு புடவை எடுக்கலாம் என்று அவளுக்கு தெரியாமல் ஒரு பிரபல துணிக்கடைக்கு சென்றேன் உள்ளே சென்றதும் சார் நாங்க புதுசா சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்திருக்கிறோம் நீங்கள் இங்கு வாங்கும் பொருளுக்கு கழிவு கொடுப்பார்கள் அதை  உங்களுக்கு தேவையான வீட்டு சமையல் பொருட்களை அங்கு வாங்கிக்கலாம் என்றார்.. நானும் மனைவிக்கு புடவை, மகனுக்கு எனக்கு என்று  3500 ரூபாயக்கு வாங்கினேன் ஒவ்வொரு இடத்திலும் கேட்டேன் எவ்வளவு சார் கழிவு என்று ஒருத்தர் கூட தெரியல சார் கீழ போய்க்கேலுங்க என்று அற்புமான பதிலைத்தான் சொன்னார்கள். கீழே சென்று பில்லைக்கொடுத்ததும் 70 ரூபாய் கழிவு சார் போய் வாங்கிக்க என்றனர். அங்க போய் 4 பொருட்கள் வாங்கினேன் மொத்தம் 270 ரூபாய் பில் என்றனர்.. 70 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 200 ரூபாய் ஆப்பு...

ஆக வியாபார தந்திரம் என்ற பெயரில் இவர்கள் செய்வதற்கு கரண்ட் கொடுப்பது போல் கொடுத்து பிசை பிடுங்குவார்கள் என்று ஒரு பழமொழி உண்டு அது தான் ஞாபகத்திற்கு வருகிறது...

10 ரூபாய் கத்திரிக்காய் வாங்குவதற்கு அத்தனை பேரம் நடத்தும் நாம் ஏசி அறையில் அழகான லைட்டிங், லிப்ட் வசதியோடு அன்பான உபசரிப்பில் ஏமாறுகிறோம் என்பது தான் எதார்த்த உண்மை....


5 comments:

  1. நானும் அப்படித்தான் சென்னை சில்க்ஸ்ல ஏமாந்தேன்

    ReplyDelete
  2. இதைபற்றி கவலைப்பட வேண்டியவர்கள்
    குடும்பத்தலைவிகள்தான்

    ReplyDelete
  3. ஆடிமாசம் சில பெரியகடைகளில் உண்மையான டிஸ்கவுண்டில் கொடுக்கிறார்கள் ! தீபாவளிக்கு அப்போதே எடுத்து வைத்துவிடும்..சிகாமணிகளும் உண்டு!

    ReplyDelete
  4. சங்கவி,

    நல்ல அனுபவம், இப்போல்லாம் இந்த தந்திரம் பற்றி புரிந்துகொள்வதால் பெருசா ஏமாற்றம் இல்லை,மேலும் இந்த வியாபார தந்திரம் செய்யாத கடைகளே இல்லைனு ஆகிப்போச்சு.

    தள்ளுபடியில் ஆடை விற்கிறார்களேனு அதிகம் வாங்கக்கூடாது ,ஏன் எனில் அவை எல்லாமே ஓல்டு ஸ்டாக், நீங்க விலைப்பட்டியலில் விலையை பார்ப்பதோடு ,தயாரிப்பு தேதியை பாருங்க எப்படியும் கண்டிப்பாக ஓராண்டுக்கு முந்தைய தேதி இருக்கும்,பெரும்பாலும் அதுக்கு மேல ஸ்டிக்கர் ஒட்டி இருப்பாங்க,பிச்சு தான் கண்டுப்பிடிக்கணும் :-))

    ReplyDelete
  5. சரியான கேள்விகள்.
    வர வர இந்த தள்ளுபடிங்கிறதுக்கு ஒரு அளவு / விவஸ்தை ங்கிறதே இல்லாம போயிடுச்சு.
    வருஷம் 365 + 1 நாளும் தள்ளுபடின்னு பலகை வைக்கிற கடைகளும் வேற இருக்கு.

    இதுல ஒரு சில இணையக்கடைகள் செய்யும் அழும்பு இன்னும் சிரிப்பை வரவைக்கும். சமிபத்தில் ஒரு இணையக்கடையில் 80% தள்ளுபடி என பட்டை ஓடிக்கொண்டிருந்தது!! எனக்கு புதிதாக / வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் இதுவரை நான் பார்த்த அதிக பட்சம் 70% தள்ளுபடிதான். அப்போது நினைத்துக்கொள்வேன் 70% வரைக்கும் வந்தாச்சு இனிமே வேற யாராலயும் இத தாண்டி சாதனை பண்ண முடியாது என. அதையும் முறியடித்துவிட்டார்கள்!

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

    ReplyDelete