Tuesday, November 24, 2009

எனது எதிரிகள்

நமது சமுதாயத்தில் தினமும் நாம் பல முகங்களை பார்க்கிறோம், பழகுகிறறோம் நமக்கு அனைவரும் பிடிப்பதில்லை வெகு சிலரே நம்மை கவருகின்றனர் மீண்டும் அவர்களை சந்திக்க வாய்ப்புகிடைத்தால் நண்பர்கள் ஆகிவிடுகிறோம். இதில் நண்பர்கள் குறைவு, பிடிக்காதவர்கள் (எதிரிகள்) அதிகம். ஏன் அவர்கள்  பிடிக்கவில்லை இதுவே எனது எதிரிகள்.....


பொது இடத்தில்
புகை பிடிப்பவர்கள்.......

எச்சில் துப்புபவர்கள்.....

தண்ணி அடித்து விட்டு
வாகனம் ஓட்டுபவர்கள்...
பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்.....

பேசுகிறேன் என்று சொல்லி
மொக்கை போடுபவர்கள்......

நான் சொல்வது தான் சரி
என்பவர்கள்.......

தனது தவறை
ஓத்துக்கொள்ளாதவர்கள்......

மனைவியை அடிப்பவர்கள்.......

முககவசம் அணியாமல்
வாகனம் ஓட்டுபவர்கள்.......

ஏழை மக்களை வயிற்றில்
அடிப்பவர்கள்.......

வேலை வாங்கித்தருகிறேன் என்று
அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள்.......

கூடவே இருந்து குழி
பறிப்பவர்கள்........

என்னிடம் பணம் இருக்கிறது
என்னால் எல்லாம் செய்யமுடியும்
என்று அகந்தையில் இருப்பவர்கள்........

மக்களுக்கு சேவை செய்கிறேன்
என்று சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள்.......

இவை அனைத்தையும் விட
நம் வீட்டில் பழகி நமது நண்பன் / தோழி
என்னும் பெயரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும்
துரோகிகள்.......

இன்னும் நிறைய இருக்கு.........
என்ன செய்வது இதுதான் நமது சமுதாயம்.......

18 comments:

  1. என்ன செய்வது இதுதான் நமது சமுதாயம்.......
    வரதட்சணை வாங்க்கும் சோம்பேறிகள்..
    சந்தேக பேர்வழிகள்...
    அடிமாட்டு வேலை வாங்கும் முதலாளிகள்..
    சொல்லிக்கொண்டே போகலாம்.........

    ReplyDelete
  2. இன்னம் கொஞ்ச கோபத்தை எழுத்தில கூட்டுங்க தலைவா!!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கலையரசன்

    இப்பதான எழுத ஆரம்பித்து இருக்கேன்

    போக போக கோபத்தைக் காட்டலாம்........

    வந்ததற்கு நன்றி திருமதிஜெயசீலன்

    தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்.....

    இன்னும் நிறைய இருக்கு................

    ReplyDelete
  4. இதெல்லாம் இப்போ கலாச்சாரம் ஆகி விட்டதே...!!!
    நம்மால் முடிந்த ஒன்று உண்டு. அது, மேற்கூறிய ஒன்றும், நான் செய்யாமல் கடைபிடிப்பது.

    ReplyDelete
  5. //மக்களுக்கு சேவை செய்கிறேன்
    என்று சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள்.......//

    இந்த இடத்தில் நாம் அதிகமாய் ஒத்துப்போகிறோன்.

    ReplyDelete
  6. கடைசி வரி கொஞ்சம் முரண்பாடா இருக்கே.. அப்ப சமுதாயமே உங்களோட எதிரியா? நெறய எழுதுங்க... Word Verficationஐ எடுத்துருங்க

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி பாலாசி................

    நாகா சார்.. சமுதாயம் எனது எதிரி இல்லை
    சமுதாயாத்தில் உள்ளவர்கள் சிலர் தான் நான் குறிப்பிட்ட
    எதிரிகள்.......

    கருத்துக்கும், வருகைக்கும் நன்றி நாகா சார்..................

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி ஸ்டான்லி.....

    ReplyDelete
  9. நல்லா சொல்லியிருக்கீங்க சங்கவி.

    ReplyDelete
  10. எனக்கும் இந்த கோபம் உணடு. துரதிர்ஷ்டவசமாக நீங்கள் வகைப்படுத்தியதில் எனக்கும் ஒன்று இரண்டு உண்டு,..

    verification எடுத்துவிடுங்களேன்,..

    ReplyDelete
  11. //ஏழை மக்களை வயிற்றில்
    அடிப்பவர்கள்.......//

    அப்படிபட்டவர்களை வயிற்றிலே ஒரு மிதிமிதிக்க வேண்டும்.

    ReplyDelete
  12. ராமலஷ்மி, ஜோதி, துளசி......

    தங்கள் வருகைக்கு நன்றி............

    ReplyDelete
  13. //இன்னும் நிறைய இருக்கு//.....
    உண்மைதான்.
    நல்லா எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி Priya.........

    ReplyDelete
  15. எனக்கும் பிடிக்காதவர்கள் கண்ட இடத்தில் எச்சில் துப்புவர்கள்.

    நனறக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி கோமதி....

    ReplyDelete
  17. ungalaippol oru person than namma ulagathukku venum..... thanks.... innum niraya ethirparkirom.... neenga ezhuthiyirukkum athanayum en manathil kuthikondirukkum varthaigal.... ithai velikkonduvara ennal mudiyavillai.... ungalai parthathil migavum perumaippadugiren....

    ReplyDelete
  18. இவ்வளவு சுற்றி வளைப்பானேன்?

    கழகக் கண்மணிகள் எனது எதிரிகள் என்று ஒரே வரியில் கூறிவிடலாமே

    Sankara Narayanan,
    Erode,

    ReplyDelete