Tuesday, March 1, 2011

சந்தோசமாக குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வாழ


* நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

* எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள் 

* சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று  
  உணருங்கள்

* நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

* குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

* அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்
   உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

* கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

* உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம்
  தளர்த்திக்கொள்ளுங்கள்

* மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக
  புரிந்து கொள்ளாதீர்கள்

* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட
   நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

* பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் ,
   தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் 
   பண்பையும் காட்டுங்கள்

* பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும்
  என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்..

நன்றி மின் அஞ்சலில் அனுப்பிய தோழிக்கு....

24 comments:

  1. அருமையான யோசனைகளை சூப்பர் மக்கா...

    ReplyDelete
  2. /////
    உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம்
    தளர்த்திக்கொள்ளுங்கள்
    /////
    இந்த கருத்து என்னையும் பாதித்திருக்கிறது..

    இதை எல்லாவற்றையும் ஒவ்வோறுவரும் பின் பற்றினால் கண்டிப்பபாக உலகம் வசந்தம் சூடிக்கொள்ளும்..

    வாழ்த்துக்கள்.. மற்றும் வாக்குகள்..

    ReplyDelete
  3. // பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும்
    என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்..//

    Nice Lines..

    ReplyDelete
  4. நல்ல நல்ல விஷயங்களின் தொகுப்பு. ஏற்கனவே படித்திருந்த போதிலும் எப்போதும் தேவையான ஒன்று..
    பகிர்வுக்கு நன்றிகள் ..

    ReplyDelete
  5. முதல் கத்தி குத்து எனக்குதான் ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  6. இவை வேதாத்திரி மகரிஷி கூறியவை.

    கடைபிடிப்பது சற்று கடினமாகினும் பழக்கத்தில் சாத்தியமே.

    நன்றி சங்கவி

    ReplyDelete
  7. சமய சஞ்சீவி மாதிரி ஒரு நல்ல பகிர்வு. :-)

    ReplyDelete
  8. இவை வேதாத்திரி மகரிஷி கூறியவை.

    கடைபிடிப்பது சற்று கடினமாகினும் பழக்கத்தில் சாத்தியமே.

    நன்றி சங்கவி

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு
    நன்றி

    ReplyDelete
  10. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று
    உணருங்கள்..............//////////////////

    இதை புரிந்து கொண்டால் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம் .......

    ReplyDelete
  11. பதிவிட்ட அனைத்து குறிப்புகளையும் நாம் சரிவர கடைபிடித்தால் நீங்கள் சொல்வதுபோல சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்..

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  12. நல்ல விஷயம் பாஸ்

    ReplyDelete
  13. >>
    * கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

    சங்கவி சித்தார்க்காரர்,ரொம்ப நல்லவ்ர்னு கேள்விப்பட்டேன்.. இதை நம்பவா? வேணாமா? ஹி ஹி

    ReplyDelete
  14. மின்னஞ்சலில் வந்த நல்ல கருத்துக்களின் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

    பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

    ReplyDelete
  16. அத்தனை பொன்மொழியும் வாழ்வைச் சிறப்பாக்கும்.நன்றி சங்கவி.

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  19. ராம்ராஜ் பனியன் கம்பெனி ஸ்டிக்கர் விளம்பரத்துல இதை படிச்சிருக்கேன்...இந்த கருத்துக்களை அவர்கள் இலவசமாகவே வினியோகம் செய்கிறார்கள்..நானும் இதை இரண்டு வாங்கி வந்து அலுவலகத்தில் ஒட்டியிருக்கிறேன் -;))

    ReplyDelete