Thursday, March 24, 2011

அஞ்சறைப்பெட்டி 24.03.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கூட்டணி முடிவாகி இனி அனைத்து கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் பிரச்சாரம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் வருவார்கள் இன்று பார்த்தால் தான் உண்டு அப்புறம் இனி அவர்களை அடுத்த 5 வருடத்துக்கு பார்க்க முடியாது அதனால் வருபவர்களை காபிதண்ணி கொடுத்து கவனியுங்கள்...

...............................................................................................

திமுக, அதிமுக இரண்டு அணிகளும் எண்ணற்ற இலவசங்களை அள்ளித் தெளித்துள்னர்.. பார்த்து மக்களே கொஞ்சம் சூதனமாக நடந்துக்குங்க....

...............................................................................................

இணைத்தளங்களில் உள்ள ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போன்களில் எம்.எம்.எஸ். ஆக அனுப்பும் அநாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. திரைமறைவு செக்ஸ் காட்சிகளை வக்ரபுத்தி கொண்ட பலர் பெண்களுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பி முதல் தடவை சிக்குபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும். அதே நபர் மீண்டும் ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பினால் ரூ.5 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

........................................................................................................

பழம்பெரும் ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. எலிசபெத் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.

2 மாதங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று திடீரென்று உடல் நிலை மோசமானது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருடைய 4 குழந்தைகளும் அருகில் இருந்தனர்.

நாட்டு நடப்பு
நாட்டு மக்கள் அனைவரும் யாருக்கு வாக்களிக்கலாம் என்று இரு கழகங்களின் தேர்தல் அறிக்கையை விவாதித்தபடி உள்ளனர். யாருக்கு வாக்களிப்பாங்களே மே 13 அன்னிக்குத்தான் தெரியும்...


எல்லா ஊர்களிலும் இனி பிரச்சாரம் எப்படி இருக்கிறது யார் என்ன பேசப்போகிறார்கள் என்ன புது இலவசம் தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எண்ணம் அதிகமாகியுள்ளது.
தகவல்


ஜப்பானில் உள்ள இயோடோ பல்கலைக் கழகத்தில் உள்ள ஷிகா குழந்தைகள் மற்றும் மருத்துவ மையத்தை சேர்ந்த குழந்தைகள் சிகிச்சை நிபுணர் தகாஷி குசுனோகி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
7 வயது முதல் 15 வயது வரையிலான 13 ஆயிரம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. அவர்களில் ஒரு பெற்றோருக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு அடுத்தபடியாக பிறக்கும் குழந்தைகளை விட அதிக அளவில் அலர்ஜி நோய் பாதிக்கும் என தெரியவந்தது.
இவர்களுக்கு ஆஸ்துமா, கண் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் உணவு பொருட்களால் ஏற்படும் அலர்ஜி நோய்கள் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர். இது அமெரிக்க அலர்ஜி அகாடமியில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் அன்பு செய்வோம் என்று பெயரிட்டு கோவையைச் சேர்ந்த ஜீவன்சிவம் என்பவர் எழுதி வருகிறார். தேர்தலைப்பற்றி அதிரடியாக பல பதிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார். ரசிக்க கூடிய யோசிக்கக்கூடிய வரிகள்...

http://nanbansuresh.blogspot.com/

தத்துவம்
”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்பதோடு சரி....

நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்

........................................................................................................

டிஸ்கி  இனி தேர்தல் முடியும் வரை கும்தலக்கா என்று எல்லாரையும் போட்டுத்தாக்கி எழுதலாம் என்று உள்ளேன்..

இந்த வார அலுவல் வேலை பளு காரணமாக அஞ்சறைப்பெட்டியில் தகவல்கள் குறைவாக இருக்கும் வரும் வாரங்களில் தகவல்களை அதிகரிக்க முயலுகிறேன்...

17 comments:

  1. சும்மா நச்சுனு இருக்கு ...

    ReplyDelete
  2. அஞசறைப் பெட்டி படு சூப்பருங்க...

    ReplyDelete
  3. பதிவுல பிரச்சனையை கிளப்பற மாதிரி எதுவும் இல்லையே.. இப்படியே சித்தோடும், சித்தாரும் கம்முன்னு இருந்தா எனக்கு எப்படி பொழுது போகும்? ஹி ஹி

    ReplyDelete
  4. //பதிவுல பிரச்சனையை கிளப்பற மாதிரி எதுவும் இல்லையே.. இப்படியே சித்தோடும், சித்தாரும் கம்முன்னு இருந்தா எனக்கு எப்படி பொழுது போகும்? ஹி ஹி//

    புலி பதுங்கறது பாயரதுக்குத்தான்... பொறுங்க சிபி பாயுவோம்...

    ReplyDelete
  5. கலைஞர் வழியில் ஜெயலலிதா.....
    தேர்தல் அறிக்கையை காப்பியடித்து உள்ளாரே...அதான் சொன்னேன்

    ReplyDelete
  6. வழக்கம் போல் அருமை

    ReplyDelete
  7. //இந்த வார அலுவல் வேலை பளு காரணமாக அஞ்சறைப்பெட்டியில் தகவல்கள் குறைவாக இருக்கும் வரும் வாரங்களில் தகவல்களை அதிகரிக்க முயலுகிறேன்...//
    ஆஃபிஸுக்கு தேர்தல் வரை லீவா?!!

    ReplyDelete
  8. தலைவா...

    இதெல்லாம் செல்லாது... என்னாது இது.. காரம், மணம் எதுவுமே இல்லையே... வழக்கமா படு ஜூப்பரா இருக்குமே...

    தேர்தல் அறிக்கை மாதிரி சும்மா கும்முனு ஒரு பதிவு போடுங்க...

    ReplyDelete
  9. இனி தேர்தல் முடியும் வரை கும்தலக்கா என்று எல்லாரையும் போட்டுத்தாக்கி எழுதலாம் என்று உள்ளேன்..


    ....... Warning!!!! எல்லோரையும்????!!!!! ஹா,ஹா,ஹா,ஹா..... நடத்துங்க.... நடத்துங்க.....

    ReplyDelete
  10. //இனி தேர்தல் முடியும் வரை கும்தலக்கா என்று எல்லாரையும் போட்டுத்தாக்கி எழுதலாம் என்று உள்ளேன்..//

    ஏ டண்டனக்கா டண்டனக்கா ஏ இந்தா இந்தா டண்டனக்கா போட்டு தாக்கேய் டண்டனக்கா.....

    ReplyDelete
  11. //இனி தேர்தல் முடியும் வரை கும்தலக்கா என்று எல்லாரையும் போட்டுத்தாக்கி எழுதலாம் என்று உள்ளேன்..//

    ஏ டண்டனக்கா டண்டனக்கா ஏ இந்தா இந்தா டண்டனக்கா போட்டு தாக்கேய் டண்டனக்கா.....

    ReplyDelete
  12. அஞ்சறைப் பெட்டி அருமை சங்கவி. "ஆபாச எம்.எம்.எஸ்" விஷயத்தில் பரிந்துரையை அப்படியே சட்டமாக்கலாம்.

    ReplyDelete
  13. மாடல் அழகியின் மரணம் , பதிவர் அறிமுகம் ,தத்துவம் என அனைத்தையும் தொடுத்து கொடுத்திருக்கும் விதம் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி நண்பரே . தொடருங்கள்

    ReplyDelete
  14. ஓட்டுக்கி 300 ரூபா தர்றாங்க..ஒரு காபி தண்ணி கொடுத்தா கொறைஞ்சா போயிடுவோம்.

    ReplyDelete
  15. அஞசறைப் பெட்டி சூப்பருங்க.

    கொஞ்சம் கழுத.....கலந்து கொடுக்கலாமா டவுட்டு!

    அப்பவாவது அறிவு வருமா!

    ReplyDelete
  16. நண்பர் சங்கவிக்கு,
    என்னை அறிமுகம் செய்து எனது வலைப்பதிவின் லிங்கையும் கொடுத்திருகிறீர்கள்.
    உங்களின் பெருந்தன்மை என்னை பெரிதும் வியக்க வைக்கிறது. பதிவுலகில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் பெரிதும்
    வரவேற்கதக்கது. மிக்க நன்றி

    ReplyDelete