Wednesday, March 9, 2011

அஞ்சறைப்பெட்டி +கும்தலக்கா 10.03.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. எந்த கட்சி அதிக இலவசங்களை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது!!

நம் மக்கள் இலவசம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் அதனால் அதிக இலசவசங்களை எதிர்பார்க்கின்றனர். அநேகமாக மிக்ஸி, கிரைண்டர் கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது!


காத்திருப்போம் இலவசங்களை பெற!!!!

இப்படிக்கு
இலவசங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்....

...............................................................................................

தேர்தல் தேதியை தள்ளிவைக்கும் படி அனைத்து கட்சிகளும் கூறியதை செவிமடுக்காதே தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்துவது சந்தோசமான விஷயந்தான்.

தேதியில் காட்டும் கெடுபிடிகளை இலவசங்கள் கொடுக்கும் போதும், பணம் கொடுக்கும் போது நடவடிக்கை எடுப்பார்களா???
...............................................................................................

தமிழகத்தில் 63 சீட் தான் வேண்டும் என்று கேட்ட தொகுதியை பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் 60 தான் கொடுப்பேன் என்று சொல்லும் மம்தாவை எப்படி அவர்கள் வழிக்கு கொண்டு வருவார்கள் என்று பார்க்கலாம்.

...............................................................................................

அதிமுக கூட்டணியில் விஜய்க்கு 3 தொகுதிகள் என்று அவரின் தந்தை பேட்டி கொடுத்துள்ளார்.

அவரின் அடுத்த பேட்டியில் வேட்பாளர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது. அப்படி அறிவித்தால்  விஜய், சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இவர்கள் மூன்று பேரையும் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.

...............................................................................................
தேர்தல் தேதியை மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்த போது உயர்நீதிமன்றம் தேர்தல் கமிஷன் கடுமையாக கவனிக்கவேண்டிய சில விதிமுறைகளை கூறிஉள்ளது வரவேற்கத்தக்கது.

*தேர்தல் நடக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் யாரையும் தேர்வு முடிவதற்கு முன்னதாக தேர்தல் பணிக்காகவோ, பயிற்சிக்காகவோ நியமிக்கக்கூடாது.

*தேர்வுகள் நடக்கும் நாள்வரை பள்ளி வாகனங்களோ, பள்ளிக்கு சொந்தமான மற்ற வாகனங்களோ தேர்தல் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது.

*மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் அரசு பஸ்களை தேர்தல் கமிஷன் பயன்படுத்த வேண்டும்.

*தேர்வு மையங்களாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து 200 மீட்டருக்குள் எந்த ஒரு அரசியல் கட்சியும், அதன் ஆதரவாளர்களும் பிரசாரம் செய்யக்கூடாது.

இவ்விதிமுறைகளை கடைபிடிப்பார்களா? அரசியல் கட்சிகள்????
 
நாட்டு நடப்பு
தமிழக தேர்தலில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி அமைக்கும் விசயத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து தமிழகத்தில் இரு முனை போட்டிதான் நடக்க உள்ளது.

அதிமுக, திமுக என்ற இரு முனை போட்டி தான் என்பது உறுதியாகி விட்டது ஆடுத்து எங்கு யார் போட்டி இடுகிறார்கள் என்று பரபரப்பான செய்திகள் இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்கும்.

அதிமுகவை இத்தனை காலம் நம்பி இருக்கும் வைகோவிற்கும், கம்யூனிஸ்டுகளும் எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள் என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். இன்னும் உடன்பாடு முடிந்த பாடில்லை.

தகவல்

பொதுவாக சிலந்தி பூச்சிகள் கடித்தால் உடலில் காயங்கள் ஏற்படும். அதன் மூலம் நோய்கள் உருவாகும். ஆனால் பிரேசிலியன் வகை சிலந்தி பூச்சிகள் கடித்தால் ஆண்களின் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை அமெரிக்காவில் ஜார்ஜியா மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது, பிரேசிலியன் வகை சிலந்தியின் விஷம் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை தூண்டி நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க செய்ய வல்லது என கண்டறிந்தனர்.
இந்த வகை சிலந்தி பூச்சிகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ளன. இவற்றில் உள்ள விஷத்தின் பல விதமான மூலக்கூறுகள் உள்ளன. அவை உடலுக்குள் சென்றவுடன் பல வித மாற்றங்களுடன் ஒருவித கிளு கிளுப்பை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர் டாக்டர் கெனியா நன்ஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பல பக்க விளைவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் தசைகளின் கட்டுப்பாடு இழப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமமும் உண்டாகும். இதன் மூலம் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகும். எனவே “செக்ஸ்” உணர்வை அதிகரிப்பதற்காக பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் வச்சிட்டாங்கய்யா ஆப்பு என்ற பெயரில் இப்பதிவு எழுதப்படுகிறது. தமிழகத்தில் அன்றாடம் யார் யார் லஞ்சம் வாங்கி கைதாகிறார்களோ அவர்களைப்பற்றிய அறிய இப்பதிவு. லஞ்ச ஊழலில் கைதாகிறவர்கள் பற்றிய விளக்கத்துடன் பதிவிடுகிறார்.

http://stopbribe.blogspot.com/

தத்துவம்
"இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது"

"அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது"

"கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் -மனிதனை நாசமாக்கிவிடும்"

கும்தலக்கா

இந்த வாரம் நம்ம ஊர் அரசியலில் பல உள்ளடி வெளியடி வேலைகள் நடந்தது அனைவரும் அறிந்ததே. இவர்களை நம்பி இத்தனை தொண்டர்கள் இருக்கும் போது காங்கிசுடன் தான் கூட்டணி வேண்டும் என்று அடம் பிடித்து 60 தான் தருவோம் என்று சொன்னவர்கள் இன்று 63 தர சம்மதித்துள்ளனர் ஏன்? ஏன்?

திமுகவில் உள்ள கடைநிலைத் தொண்டனுக்கு கூட இக்கூட்டணி நிச்சயம் வரவேற்பை ஏற்படுத்தி இருக்காது. காங்கிரசுக்கு 63 என்ன 75 சீட் கிடைத்தாலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக மாவட்டச் செயலாளரை போய் பார்த்து தான் ஆகவேண்டும் அவர்கள் வேலை செய்தால் தான் இவர்கள் வெற்றி பெற முடியும். அவர்கள் வேலை செய்வார்களா ?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு ஏற்பட்ட கதிதான் இன்று காங்கிரசுக்கு ஏற்படும். நிச்சயம் 63 தொகுதிகளில் இவர்கள் வெற்றிக்காக பாடுபடுபவர்களை விட தோல்விக்காகத்தான் நிறைய பாடுபடுவர்...

30 comments:

  1. வழக்கம் போல அஞ்சறைப் பெட்டி அருமை..

    ReplyDelete
  2. ///////////நம் மக்கள் இலவசம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் அதனால் அதிக இலசவசங்களை எதிர்பார்க்கின்றனர். அநேகமாக மிக்ஸி, கிரைண்டர் கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது!

    காத்திருப்போம் இலவசங்களை பெற!!!!////////

    சிரிப்பதா !? சிந்திப்பதா !? .

    இந்த வாரத் தத்துவம் அருமை நண்பரே .

    அருமையாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் . நன்றி நண்பரே

    ReplyDelete
  3. இந்த முறை அஞ்சறைப்பெட்டி அரசியல் வாசம் வீசுகிறது.

    ReplyDelete
  4. அஞ்சறைப்பெட்டி அரசியல் தகவல்களுடன் அருமையான தொகுப்பு :)

    ReplyDelete
  5. //இப்படிக்கு
    இலவசங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்..//

    இப்படிக்கு - இலவசங்களை எதிர்நோக்கும் இளிச்சவாய் ஏமாளிகள்..

    //விஜய், சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இவர்கள் மூன்று பேரையும் வேட்பாளராக//

    ஹலோ... ஏங்க.. ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு இருக்கற சோதனைகள் போதாதா?

    //யார் யார் லஞ்சம் வாங்கி கைதாகிறார்களோ//

    “தல”யோட ஃபோட்டோவ நிரந்தரமா வச்சு அப்புறமா பதிவ எழுத சொல்லுங்க. பொருத்தமா இருக்கும்..

    //63 தொகுதிகளில் இவர்கள் வெற்றிக்காக பாடுபடுபவர்களை விட//

    இதையே தானே காங்கிரஸ் காரர்களும் திமுக தொகுதிகளுக்கு செய்வார்கள்?

    ReplyDelete
  6. //காத்திருப்போம் இலவசங்களை பெற!!!!

    இப்படிக்கு
    இலவசங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்....//

    செல்போனை விட்டுட்டீங்களே மக்கா....

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  8. //தமிழகத்தில் 63 சீட் தான் வேண்டும் என்று கேட்ட தொகுதியை பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் 60 தான் கொடுப்பேன் என்று சொல்லும் மம்தாவை எப்படி அவர்கள் வழிக்கு கொண்டு வருவார்கள் என்று பார்க்கலாம்.//

    மம்தா திமுக மாதிரி மானங்கெட்டவர் அல்ல...

    ReplyDelete
  9. என்னணே அஞ்சறைப்பெட்டி அரசியல் பெட்டியா இருக்கு?

    அருமை.

    ReplyDelete
  10. // நிச்சயம் 63 தொகுதிகளில் இவர்கள் வெற்றிக்காக பாடுபடுபவர்களை விட தோல்விக்காகத்தான் நிறைய பாடுபடுவர்... //

    நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க....

    ReplyDelete
  11. தேர்தல் ஸ்பெஷலா? நைஸ்!

    ReplyDelete
  12. வழக்கம் போல அஞ்சறைப் பெட்டி அருமை..

    ReplyDelete
  13. இன்றைய தொகுப்பும் அருமை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. சில விஷயங்கள் யோசிக்க வேண்டியுள்ளது..

    இலவசங்க வாங்கியே பழகிவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்..?

    அரசியல் சுவை கலப்பு தேர்தல் ஸ்பெஷலா..

    ReplyDelete
  15. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு ஏற்பட்ட கதிதான் இன்று காங்கிரசுக்கு ஏற்படும். நிச்சயம் 63 தொகுதிகளில் இவர்கள் வெற்றிக்காக பாடுபடுபவர்களை விட தோல்விக்காகத்தான் நிறைய பாடுபடுவர்... //

    இவிங்க எப்பவுமே இப்பிடித்தான் பாஸ்!

    ReplyDelete
  16. அருமையாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் .. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  17. // திமுக மாவட்டச் செயலாளரை போய் பார்த்து தான் ஆகவேண்டும் அவர்கள் வேலை செய்தால் தான் இவர்கள் வெற்றி பெற முடியும். அவர்கள் வேலை செய்வார்களா ?

    சான்ஸே இல்ல

    ReplyDelete
  18. மிக்ஸி இல்லைனா கிரைண்டர் உறுதியாம்

    ReplyDelete
  19. காங்கிரஸ் பத்தி சைட் பாரில் உள்ள ஆப்ஷன்களில் ஒன்றுக்கும் குறைவு (அதாவது 0) அப்படின்னு ஒரு ஆப்ஷன் சேருங்க. நிறைய ஒட்டு அதுக்கு விழும்!

    ReplyDelete
  20. இந்த வார அஞ்சறைப் பெட்டியில் அரசியல் தான் நிறைய இருக்கு..

    ReplyDelete
  21. // நிச்சயம் 63 தொகுதிகளில் இவர்கள் வெற்றிக்காக பாடுபடுபவர்களை விட தோல்விக்காகத்தான் நிறைய பாடுபடுவர்...//

    அத இப்போ நினச்சாலும் சிரிப்பா வருது.

    ReplyDelete
  22. அஞ்சறைப்பட்டி மணக்கிறதே..காங்கிரஸுக்கு ஆப்பு தான்...

    ReplyDelete
  23. பதிவர் அறிமுகம் அருமை சதீஷ்

    ReplyDelete
  24. இப்படியும் சொல்லி அப்படியும் சொல்லிட்டீங்களே மக்கா நான் சிலந்தியை சொன்னேன்

    ReplyDelete
  25. தேர்தல் வரவர, அரசியல் தானா இனி?

    ReplyDelete
  26. அஞ்சரைப்பெட்டி... அறிவுப் பேட்டி...

    எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

    ReplyDelete
  27. கலக்குறீங்க சங்கவி

    ReplyDelete