Monday, March 14, 2011

சாதிக்கட்சிகளை தோளில் சுமக்கும் திமுகவும், அதிமுகவும்...

இதுவரை நடந்த தேர்தலை விட இத்தேர்தலில் சாதிக்கட்சிகளுக்கு அதிக உரிமையும், அதிக தொகுதிகளையும் இரு கழகங்களும் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை அள்ளி வழங்குகிறது.

இதுவரை நடந்த தேர்தலில் சாதிக்கட்சிகளின் பங்கு உண்டு ஆனால் சாதிக்கட்சியின் தயவால்தான் ஆட்சிக்கு வந்தோம் என்று எந்த கழகமும் சொல்லும் அளவிற்கு இல்லை.

திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக இந்த கட்சிகளில் எல்லா சாதியினரும் போட்டி போடும் வாய்ப்பு அளிக்கின்றனர். ஆனால் தற்போது இந்த பெரிய கட்சிகளிலும் பல மாற்றம் தொகுதிக்கு எத்தனை சாதி உள்ளது, அதில் எந்த சாதி அதிக எண்ணிக்கையில் உள்ளனர், அந்த சாதியில் செல்வாக்கு மிக்க மனிதர் யார், எவ்வளவு பணம் செலவு செய்வார் இந்த கேள்விகளையே அதிகம் முன் வைக்கின்றனர். இதில் சாதிக்குத்தான் முக்கியத்துவம்.

இப்படி ஒவ்வொரு கட்சிகளும் சாதிக்கு முக்கியத்துவம் அளித்து வெற்றி பெற்று குறிப்பிட்ட சாதிக்கு இவ்வளவு என்று மந்திரி பதவியையும் பிரித்து அளிக்கின்றனர் இன்றளவும் இது தான் நடை முறை.

நிறைய சாதிக்கட்சிகள் தோன்றி காணமல் சென்றுவிட்டது. அதில் நிலைத்து நின்றதில் முக்கிய இடம் பாமகவுக்குத்தான். இவர்கள் போட்டியிட்ட முதல் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நான்கு இடங்களை கைப்பற்றினர். இதை வைத்து சுதாரித்தார் மருத்துவர். ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாற்றி இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் பெற்று மத்திய மந்திரி சபையில் இடம் பெரும் அளவிற்கு முன்னேறினார். அவருக்கும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பலத்த அடி.

தலித்துக்களை பொறுத்த மட்டில் நிறைய சாதிக்கட்சிகள் தோன்றினாலும் அதில் கரையேறியவர் திருமாவளவன் மட்டுமே. மற்ற கட்சிகள் எல்லாம் காணமல் தான் போனது. இவரும் கூட்டணி அமைத்து சில எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் பெற்ற தனியாக நின்றார்.

தேவர், நாடார், முதலியார் போன்ற அதிக மக்கள் தொகை எண்ணிக்கை கொண்ட இனத்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து பின் தனியாக போட்டி அடுத்த முதல்வர் நாங்கள் தான் என்று ஆரம்பத்தில் கூறுவர் கடைசியாக திமுக அதிமுக விடம் 3 சீட் 4 சீட்டுக்கு கூட்டணியில் இருப்பர்.

சாதிக்கட்சிகளை பொறுத்த மட்டில் ஒவ்வொரு சாதியிலும் குறைந்தது இரண்டு கட்சிகள் இருப்பதால் அந்த குறிப்பிட்ட சாதிமக்கள் அவர்கள் சாதிக்கட்சியை நிச்சயம் ஆதரிக்கமாட்டார்கள் நிச்சயம் அவர்கள் திமுகவிலோ இல்லை அதிமுகவிலோ தான் நிச்சயம் இருப்பர்.

தற்போது கொங்கு முன்னேற்றப் பேரவை இக்கட்சி ஆரம்பித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் கவுண்டர் சமூக மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அதிக வாக்குக்கள் வாங்கி வெற்றி பெறாவிட்டாலும் அவர்களின் ஓட்டு வங்கியை மக்கள் மன்றத்தில் நிருபித்தனர். இந்த தாக்கம் அடுத்த தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் இல்லை அப்போது கொமுகழகம் வாங்கிய ஓட்டுக்கள் 19 ஆயிரம் மட்டுமே. திமுக அதிமுக இரண்டு கட்சிகளிலும் கவுண்டர் இனத்து தலைவர்கள் நிறைய.

பாரளுமன்ற ஓட்டு விகித்தை கணக்கில் கொண்டு இத் தேர்தலில் தனித்து நின்றாலும் சில இடங்களில் வெற்றி வாய்ப்பு கொமுகவிற்கு உண்டு என்று சொல்லலாம். ஆனால் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இரு கழகங்களும் தங்கள் வேட்பாளர்கள் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை நிறுத்துகின்றனர் அப்போது ஓட்டுக்கள் பிரிந்து அவர்களில் யார் எல்லா சமுதாய மக்களிடம் செல்வாக்கு பெற்று இருக்கிறாரோ அவர் தான் வெல்வார்.

ஒவ்வொரு சாதிக்கட்சிக்கும் அவர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் செல்வாக்கு இருக்கும் இச்செல்வாக்கு எப்பவும் இருக்கும் என்று கூறமுடியாது. சாதிக்கட்சியின் தனித்து நிற்கும் போது வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு மிக குறைவுதான். இரு கழகமும் சாதிக்கட்சியிடன் சேர்ந்து வெற்றி பெரும் போது இந்த கட்சியால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று குறிப்பிட்ட சாதியை இரு கழகங்களும் நிச்சயம் குறிப்பிட்டுக்காட்டது.

சாதிக்கட்சிகளுடன் கூட்டு சேரும்போது கழகங்களுக்கு நிச்சயம் வெற்றி என்றும் கூற முடியாது. ஆனால் இச்சட்டசபை தேர்தலில் திமுகவும், அதிமுகவும் முதலில் சீட் ஒதுக்கியது சாதிக்கட்சிக்குத்தான். திமுக காங்கிரசுடன் ஒப்பந்தம் கடைசியாகத்தான் கையெழுத்திட்டது. அதிமுக இன்னும் நீண்டகால நண்பண் மதிமுகவிற்கு இன்று வரை சீட் ஒதுக்க வில்லை.

திமுகவும், அதிமுகவும் சாதிக்கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏன் தருகின்றனர் ??? அப்படி தருவதால் அந்த சாதிக்கட்சி மக்கள் இவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நிச்சயமாக கூறமுடியுமா?? சாதிக்கட்சியை முதுகில் தூக்கிக்கொண்டு கழகங்களின் வெற்றிக்கு பாடு பட வைப்பார்கள் வெற்றி பெற்றதும் இவர்களை கண்டு கொள்வார்களா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கழகங்கள் தற்போது சாதிக்கட்சிகளை விழதுகளாக நினைக்கின்றனர்.. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

29 comments:

  1. சாதிக்கட்சிகள் என்றைக்குமே அபாயம்தான்...அதை ஏன் இன்னும் இவர்கள் உணரவில்லை..

    ReplyDelete
  2. நாத்திகம் பேசும் தி.மு.க +சாதிக் கட்சிகள்..:)

    ReplyDelete
  3. சாதியை முன்னிறுத்தும் வழக்கம் இன்றும் தொடர்வது சோகம்...

    ReplyDelete
  4. இது ஒன்றும் புதுமை அல்லவே!. எந்த கட்சியாக இருந்தாலும் அந்த குறிப்பிட்ட தொகுதியில் அதிக மக்கள் தொகையுள்ள குறிப்பிட்ட ஜாதி சேர்ந்த நபர்களைத்தானே இவர்கள் வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர். நம் நாட்டில் இருக்கும், மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தி எல்லா கட்சிகளுமே பயன் அடைந்துள்ளன. இந்த போக்கினால்தான் ஜாதிகள் சங்கம் வைத்து தேர்தல் நேரங்களில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்கின்றன.இப்போது தனிகட்சிகளாக வளர்ந்து பேரம் பேசுகின்றன.

    ReplyDelete
  5. ஜாதிகள் அழிவதில்லை( கட்சிகளுக்கு மட்டும்)

    ReplyDelete
  6. ஜாதி அரசியல் என்பது நம்மாளுங்களுக்கு கருவேப்பிலை மாதிரி. மக்கள்தான் புரிந்துகொள்கிற வழியைக் காணோம். :-)

    ReplyDelete
  7. sathikkatchikalin tholil savari seithaal thaan antha antha areavil ulla sathi ottukkalai pera mudiyum enpathuthaan indraiya thiravida katchikalin nilamai...

    ReplyDelete
  8. சாதிக் கட்டிகள் நாட்டின் அவமானங்கள்..

    ReplyDelete
  9. திமுக.. அதிமுக..
    இவங்க சாதிக்கட்சி இல்லாம வேலையாகாது..

    ReplyDelete
  10. 'சாதிகள் இல்லையடி பாப்பா' - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும்!!

    ReplyDelete
  11. இந்த ஜாதிக்கட்சிகள் எல்லாம் வெறுமனே லெட்டர் பேட் கட்சிகள் தான்... கழகங்கள் அவர்களை வளர்த்து விடுகின்றன, ஓட்டு ஆதாயத்திற்காக...

    பின்னாளில் அவர்கள் இவர்களையே மிரட்டும் சூழல் வருகிறது...

    ReplyDelete
  12. //வேடந்தாங்கல் - கருன் said...

    Vadaya?//

    வட என்ன லஞ்ச்சே உங்களுக்குத்தான்...

    ReplyDelete
  13. //வேடந்தாங்கல் - கருன் said...

    சாதிக்கட்சிகள் என்றைக்குமே அபாயம்தான்...அதை ஏன் இன்னும் இவர்கள் உணரவில்லை..//

    மே 13க்கு அப்புறம் உணர்வார்கள்...

    ReplyDelete
  14. //சமுத்ரா said...

    நாத்திகம் பேசும் தி.மு.க +சாதிக் கட்சிகள்..:)//

    உண்மைதான்...

    ReplyDelete
  15. ..அகல்விளக்கு said...

    சாதியை முன்னிறுத்தும் வழக்கம் இன்றும் தொடர்வது சோகம்.....

    அதுவும் பெரியார் வழிவந்தவர்கள்...

    ReplyDelete
  16. ..ஆர்.கே.சதீஷ்குமார் said...

    m..super post..

    நன்றி...

    ReplyDelete
  17. ..கக்கு - மாணிக்கம் said...

    இது ஒன்றும் புதுமை அல்லவே!. எந்த கட்சியாக இருந்தாலும் அந்த குறிப்பிட்ட தொகுதியில் அதிக மக்கள் தொகையுள்ள குறிப்பிட்ட ஜாதி சேர்ந்த நபர்களைத்தானே இவர்கள் வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர். நம் நாட்டில் இருக்கும், மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தி எல்லா கட்சிகளுமே பயன் அடைந்துள்ளன. இந்த போக்கினால்தான் ஜாதிகள் சங்கம் வைத்து தேர்தல் நேரங்களில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்கின்றன.இப்போது தனிகட்சிகளாக வளர்ந்து பேரம் பேசுகின்றன...


    பொதுமக்கள் ஆப்பு அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்...

    ReplyDelete
  18. ..வைகை said...

    ஜாதிகள் அழிவதில்லை( கட்சிகளுக்கு மட்டும்)..


    சாதி வெறியர்கள் இருக்கும் வரை நிச்சயம் அழியாது...

    ReplyDelete
  19. ..சேட்டைக்காரன் said...

    ஜாதி அரசியல் என்பது நம்மாளுங்களுக்கு கருவேப்பிலை மாதிரி. மக்கள்தான் புரிந்துகொள்கிற வழியைக் காணோம். :-)..

    சீக்கிரம் புரிந்து கொள்வார்கள்...

    ReplyDelete
  20. ..சே.குமார் said...

    sathikkatchikalin tholil savari seithaal thaan antha antha areavil ulla sathi ottukkalai pera mudiyum enpathuthaan indraiya thiravida katchikalin nilamai.....


    சரிதான்...

    ReplyDelete
  21. சி.பி.செந்தில்குமார் said...

    ada..அட.....

    அடராசக்கைல முதல் இரண்டு எழுத்து கூட கமெண்ட்டுக்கு உதவுகின்றது போல..

    ReplyDelete
  22. ..# கவிதை வீதி # சௌந்தர் said...

    சாதிக் கட்டிகள் நாட்டின் அவமானங்கள்....

    உண்மை

    ReplyDelete
  23. ..# கவிதை வீதி # சௌந்தர் said...

    திமுக.. அதிமுக..
    இவங்க சாதிக்கட்சி இல்லாம வேலையாகாது....

    இன்னிக்கு நடைமுறையே அதுதானே...

    ReplyDelete
  24. ..middleclassmadhavi said...

    'சாதிகள் இல்லையடி பாப்பா' - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும்!!..

    10ம் வகுப்பு படிக்கும் போதே சாதி சான்றிதழ் கேட்டு சாதிய சொல்ல வைக்கிறாங்களே...

    ReplyDelete
  25. ..R.Gopi said...

    இந்த ஜாதிக்கட்சிகள் எல்லாம் வெறுமனே லெட்டர் பேட் கட்சிகள் தான்... கழகங்கள் அவர்களை வளர்த்து விடுகின்றன, ஓட்டு ஆதாயத்திற்காக...

    பின்னாளில் அவர்கள் இவர்களையே மிரட்டும் சூழல் வருகிறது.....

    இன்றைய நடைமுறையே அதுதானே...

    ReplyDelete