Thursday, March 24, 2011

அதிமுக தேர்தல் அறிக்கை


திருச்சியின் இன்று அதிமுகவின் பொதுச்செயலார் ஜெயலலிதா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் விவரம்


1. அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

2. பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்

3. கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.

4. சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும்.

5. அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும்.

6. 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

7. கேபிள் டி.வி., அரசுடைமையாக ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.

8. இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும்.

9. நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும்.

10. ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும்.

11. மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்

12. அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும்.

13. 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்.

14.திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும்.

15. 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

16. கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படுகிறது

17. வீடு, தொழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்.

18. மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

19. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

20. 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும்....

- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.

- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

- சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும்.

- இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

- இளநிலை அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை

- தமிழக நதிகளை நீர்வழிச்சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை

- 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தொலை மருத்துவ மையங்கள்

- அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்

- மின் திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட படை அமைக்கப்படும்.

- விவசாயிகளைப் பங்குதாரர்களைக் கொண்ட விவசாய நிறுவனங்கள் தொடங்கப்படும்.

- அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

- திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் ஆராய்ந்து சரி செய்யப்படும்.

- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

11 comments:

  1. சபாஷ்.. சரியான போட்டி...

    ReplyDelete
  2. super ..amma sure came back again

    ReplyDelete
  3. //கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

    சரியான தீர்வு கடிதம் எழுதிக்கொண்டிருக்காமல்
    இதை செய்தால் நிச்சயம் பயன்

    ஜெ அவர்களால் இதை செய்ய முடியும் என்பது என் நம்பிக்கை

    ReplyDelete
  4. அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.. ! அம்மா சுரத்தே இல்லம் தேமே என்று பேசியது அவரின் பயத்தை காட்டியது.. மேலும் கலைஞ்சர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அருகில் பல கட்சி புள்ளிகள், .. இங்கே அம்மா மட்டுமே .. தான் என்ற அகங்காரம் போகவில்லை போலும்..

    ReplyDelete
  5. அய்யாவைக்காப்பி அடித்த அம்மா

    ReplyDelete
  6. ரெண்டுக்கும் சரியா போச்சி

    ReplyDelete
  7. கேபிள் திட்டம் சூப்பர்

    ReplyDelete
  8. இத ஒரு வாரம் முன்னடி படிச்ச மாதிரி இருக்கே.........

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. So soon i can buy laptops for Rs.500/- from the street vendor like they sold Free TVs. Cool!!!!

    ReplyDelete