Thursday, March 3, 2011

வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் வெச்சுட்டாங்கய்யா ஆப்பு...

 
இன்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்  தேர்தல் கட்டுப்பாடு பற்றி அவர் கூறிய விதிமுறைகள்..

• கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

• ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.

• பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.

• பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.

• விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

• அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.

* தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

• தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.

• வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

• தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.

• கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.

• மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும். 
 
• தேர்தல் அறிவிக்கப்பட்ட 1.3.2011 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துவிட்டன. இதன்படி புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படக்கூடாது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படாத புதிய திட்டங்களையும் தொடங்கக் கூடாது.
 
வேட்பாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

24 comments:

  1. சும்மா நச்சினு இருக்குமா தேர்தல்..

    ReplyDelete
  2. என்னணே ஒரே தேர்தல் தகவல்லா கொடுத்துட்டு இருக்கீங்க?

    ReplyDelete
  3. tamilmanam ஓட்டு பட்டை வேலைசெய்யவில்லை..

    ReplyDelete
  4. அடடே இந்த தரவ பயங்கர எஃபக்டா இருக்கே

    ReplyDelete
  5. தேர்தல் ஆணையம் சொல்லிடிச்சி அதை எந்த அரசியல் கட்சிகாரங்க கடைபிடிக்கபோறாங்கன்னு பார்ப்போம்..

    ReplyDelete
  6. இவங்க சொல்லிட்டேதான் இருப்பாங்க அவங்க செஞ்சுட்டேதான் இருப்பாங்க...அட போங்கய்யா...போயி பிள்ளை குட்டிங்களை படிக்க வையுங்க போங்க...

    ReplyDelete
  7. அவங்க விதிச்சுட்டாங்க .. ஓக்கே.. யார் கேக்க்றாங்க../

    ReplyDelete
  8. தேர்தல் விதிகளை நடைமுறைப்படுத்துவதில்தான் தேர்தல் ஆணையத்தின் திறமையும்,இந்திய ஜனநாயகத்தின் வெற்றியின் ஒரு பகுதியும் உள்ளடங்கி இருக்கிறது.

    நிகழும் நிதர்சனமா?இல்லை குப்தா மாதிரி அறிக்கைவிட்டு ஆட்டத்தை வேடிக்கை பார்க்கும் தேர்தலா என்பதை கணித்து விடலாம் வரும் நாட்களில்.

    எனினும் முயற்சிக்கான அறிக்கைக்கு இந்திய குடிமகனாக தற்போதைக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  9. போன வாரம் தான் எங்களுக்கு கலர் டிவி தர்றதா எங்க கவுன்சிலர் சொன்னாரு வடை போச்சே

    ReplyDelete
  10. அப்படீன்னா, இந்த தேர்தலிலே மெய்யாலுமே நாம நம்ம ஓட்டைப் போட முடியுமா...? :-)

    ReplyDelete
  11. இந்த கண்டிசன் எல்லாம் எப்படி உடைக்கிறதுன்னு நம்மாளுகலுக்கு நல்லவே தெரியும்..

    ReplyDelete
  12. இந்த தேர்தல், விறுவிறுப்பாக இருக்கும் போல. சூப்பர்!

    ReplyDelete
  13. என்ன சங்கமேஷ் எவ்வளோ பண்ணிட்டாங்க இத பண்ண மாட்டாங்களா என்ன?

    ReplyDelete
  14. வேட்பாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது............................///////////////
    இதை எல்லாம் கட்சிகள் சீரியசாக எடுத்துக்க மாட்டாங்க ........அவங்களுக்கு தெரியாத தில்லு முல்லா ?

    ReplyDelete
  15. நீங்க விதிச்சா நாங்க கேட்டுருவோமா

    - இப்படிக்கு சமஉ

    ReplyDelete
  16. நீங்க விதிச்சா நாங்க கேட்டுருவோமா

    - இப்படிக்கு சமஉ

    ReplyDelete
  17. இதிலேயும் இந்த ஊழல் பெருச்சாளிங்க ஏத்தாவது ஓட்டைய போட்டு வெச்சு இருப்பானுங்க..

    ReplyDelete
  18. விதிமுறை போட்டா மட்டும் பத்தாது. மீறுபவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். ஜெயித்தாலும் அதை செல்லாததாக்க வேண்டும்.

    ReplyDelete
  19. இதை பார்த்தால் யாரும் தேர்தலில் நிற்க முடியாது போல உள்ளது.

    ReplyDelete
  20. அது சரி இத்தனை இருந்தும், இடைத் தேர்தல்களில் 80% ஓட்டு வாங்கி ஜெயிச்சிருக்காங்களே!! இவங்க ஆட்சி பண்ணும் முகரைக் கட்டைக்கு கழுதை கூட இவங்களுக்கு ஓட்டுப் போடாதே, அப்புறம் என்ன பணத்தை தள்ளித் தானே ஓட்டு வாங்கியிருக்காங்க? இந்த விதிகள் எல்லாம் இருக்கும், இந்த குண்டாம் போக்கிரிகள் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள்.

    ReplyDelete