உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 19ம் தேதி
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள்: மார்ச் 26
வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 28
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு: ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை: மே 13
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள்: மார்ச் 26
வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 28
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு: ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை: மே 13
............................................................ .............................. .....
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போரடி வருகின்றனர். கடாபி மக்களுக்கு கட்டுப்படாமல் ராணுவத்தினரை கொண்டு அடக்குமுறையை கையாண்டு வருகிறார்.
அந்நாட்டு மக்களை விட, அங்கு பணிபுரியும் நம் இந்தியர்கள் படாதுபாடு படுகின்றனர் அவர்களை இந்திய அரசு விரைவில் மீட்க விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் வழி வகுப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
............................................................ .............................. .....
ஏ.ஆர். ரகுமானுக்கு எப்படியும் ஆஸ்கர் விருது கிடைத்து விடும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம் ஆனால் கிடைக்கவில்லை.
"ஒரு தமிழனுக்கு கிடைத்தால் நிச்சயம் நமக்கு சந்தோசம் தான் அடுத்த முறை ஆஸ்கர் கிடைக்கும் என நம்புவோம்".
............................................................ .............................. ..............
மனம் விட்டு பேச செல்போனில் எஸ்.எம்.எஸ் அழைப்பு அந்த அழைப்புகளில் பேசும் பெண்களுக்கு மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்! கோவையில் இப்படியும் ஒரு கேவலமான கால் சென்டரை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த கால் சென்டரை நடத்தியவர்கள் கணவனும் மனைவியும்.
இது ஒரு பொழப்பான்னு தெரியல! "ஏமாறும் ஆண்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்".
............................................................ .............................. ................
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த மீண்டும் ஒரு காமக்கொடூரன் கைது.
"சிறுமியை பலாத்காரம் செய்பவர்களை எல்லாம் அரபு நாடுகளில் நடப்பது போல் கொடூரமாக கொலை செய்ய வேண்டும்". அதப்பார்த்தாவது மத்தவனுக திருந்தனும்".
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் களை கட்டவில்லை எப்ப தொலைக்காட்சியை போட்டாலும் எதாவது ஒரு டம்மி அணி பெரிய அணியுடன் மோதிக்கொண்டு இருக்கிறது. இந்த அணி தான் வெற்றி பெரும் என்று முடிவு செய்து சேனலை மாற்றிய எனக்கு இன்று காலை பெரும் அதிர்ச்சி ஆம் இங்கிலாந்து தான் வெற்றி பெரும் என்று முடிவு செய்து தூங்கிவிட்டேன் காலை பத்திரிக்கையில் பார்த்தால் அயர்லர்ந்து வெற்றி.
கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் தொடக்கம் முதல் அவர்களின் விளையாட்டு நேர்த்தி மிகவும் அருமையாக இருந்தது இந்த உலககோப்பையை வெல்லும் அணி பட்டியலில் இங்கிலாந்தும் உள்ளது அந்த அணியை போட்டுத்தாக்கிய அயர்லாந்துக்கு வாழ்த்துக்கள்...
"சிறுமியை பலாத்காரம் செய்பவர்களை எல்லாம் அரபு நாடுகளில் நடப்பது போல் கொடூரமாக கொலை செய்ய வேண்டும்". அதப்பார்த்தாவது மத்தவனுக திருந்தனும்".
................................................................................................
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் களை கட்டவில்லை எப்ப தொலைக்காட்சியை போட்டாலும் எதாவது ஒரு டம்மி அணி பெரிய அணியுடன் மோதிக்கொண்டு இருக்கிறது. இந்த அணி தான் வெற்றி பெரும் என்று முடிவு செய்து சேனலை மாற்றிய எனக்கு இன்று காலை பெரும் அதிர்ச்சி ஆம் இங்கிலாந்து தான் வெற்றி பெரும் என்று முடிவு செய்து தூங்கிவிட்டேன் காலை பத்திரிக்கையில் பார்த்தால் அயர்லர்ந்து வெற்றி.
கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் தொடக்கம் முதல் அவர்களின் விளையாட்டு நேர்த்தி மிகவும் அருமையாக இருந்தது இந்த உலககோப்பையை வெல்லும் அணி பட்டியலில் இங்கிலாந்தும் உள்ளது அந்த அணியை போட்டுத்தாக்கிய அயர்லாந்துக்கு வாழ்த்துக்கள்...
நாட்டு நடப்பு
தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வரும் 4 ம் தேதி அம்மாவை விஜயகாந்த் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசு-திமுக பேச்சுவார்த்தை இந்தளவுக்கு இழுபறி செய்வதற்கு பதில் தனித்தனியா நின்று தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவுடன் கூட்டணி ஆட்சி என்று முடிவெடுத்தால் நிச்சயம் திமுக காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பார்கள்.
காங்கிரசு-திமுக பேச்சுவார்த்தை இந்தளவுக்கு இழுபறி செய்வதற்கு பதில் தனித்தனியா நின்று தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவுடன் கூட்டணி ஆட்சி என்று முடிவெடுத்தால் நிச்சயம் திமுக காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பார்கள்.
தகவல்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின். இவர் பூமியின் மதிப்பை கணக்கிட்டார். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற சக்தி வாய்ந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
அது விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. இதன் மூலம் கிரகங்களின் தன்மைகள் அவை குறித்த அதிசய தகவல்கள் கிடைத்து வருகின்றன.அதன்படி பூமி மீது பறந்து கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பூமியின் மதிப்பை அவர் கணக்கிட்டுள்ளார்.
அதன்படி பூமியின் மதிப்பு ரூ. 210 ஆயிரம் லட்சம் கோடி என தெரிவித்துள்ளார். பூமியின் வயது, அதன் அளவு மற்றும் தட்டவெப்ப நிலை உள்ளிட்ட மற்ற தன்மைகளை கொண்டு அவர் கணக்கிட்டுள்ளார். பூமி மிகவும் அதிசயமானது என்றும் வர்ணித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் மதிப்பு வெறும் ரூ. 7 லட்சம் மட்டுமே என்றும் வெள்ளி கிரகத்தின் மதிப்பு அதைவிட குறைவு என்றும் அவர் கணக்கிட்டுள்ளார். வாண்வெளியில் 1235-க்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ளன. அவை வாழ தகுதியற்றவைகளாக உள்ளன. இதனால் அவை மதிப்பற்றவைகளாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் ரேகா ராகவன். இவருடைய கதைகள் பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இவருடைய ஒவ்வொரு கதையிலும் வரும் டிவிஸ்டுகள் மிக அருமையாக இருக்கும்.
http://anbesivam2009.blogspot.com/
தத்துவம்
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும்.
கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் -மனிதனை நாசமாக்கிவிடும்
கும்தலக்கா
22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி !!!
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஆட்சியில் இருக்கம் அனைத்து கட்சிகளும் சொல்வது கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது அதனால் பெட்ரோல் விலை உயருகிறது !!!
அரசு விதிக்கும் வரியைப்பற்றி யாரும் பேசுவதே இல்லை ?
நம் நாட்டு அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டாஸ்மார்க் வரிகளில் தான் வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன்!
இந்தியாவிலேயே தமிழ்நாடில் தான் பெட்ரோலுக்கான சுங்க வரி 30% இருப்பது போலவும் தேர்தல் வந்ததும் 3% வரியை குறைத்துவிட்டு 30 பக்கத்திற்கு அறிக்கை விடுவார். தேர்தல் வருகிறது அவர் மட்டும் என்ன செய்வார்?
----------------------------------------------------------------------
கிராம நிர்வாக அலுவலருக்கு தர ஊதியம், கிராம உதவியாளருக்கு ஊதிய உயர்வு, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு மையம் வரை இலவச பஸ் வசதி, பெட்ரோல் விலை குறைப்பு இப்படி அடுக்கிகொண்டே போகலாம் தேர்தலுக்கான அறிவிப்புகளை.
---------------------------------------------------------------
கோடை காலம் துவங்குகிறது இது வரை இருந்த மின் வெட்டு மக்களுக்கு பழகிப்போனது ஆனால் வெய்யிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மின் வெட்டு பிரச்சனை ஆரம்பமாகும்.
"தேர்தல் ஏப்ரல் 13ல் வைத்தது திமுகவிற்கு நல்லது இதுவே மே 13 வைத்திருந்தால் மின்வெட்டு பிரச்சனையால் கிடைக்கும் ஓட்டுக்கள் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது".
கடந்த 5 வருடமும் மின் தடை இருந்து வருகிறது இந்த மின்தடையை போக்க என்ன செய்தீர்கள் என்று சட்டசபையில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு கடந்த 5 ஆண்டில் நீங்க எதுவும் செய்யாததால் தான் இப்ப மின் தடை என்றனர்.
5 வருடம் மின்தடையை போக்க என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினால் என்ன சொல்வார்களோ?
இன்று காலை படிச்ச ஒரு வாசகம் "பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை இல்லா மின்சாரம் உள் நாட்டு நிறுவனங்களுக்கு 2 மணி நேர தடையுடன் கூடிய மின்சாரம்"
----------------------------------------------------------------
ஏப்ரல் 13 தேர்தல் மே 13 வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இது தான் தலைப்பு செய்தி ஒரு மாதம் காத்திருந்து என்ன பயன்.
ஒரு மாதம் பெட்டிகளை பாதுகாக்க வேண்டும் அப்பாதுகாப்பு செலவு தேர்தல் கமிஷன் செய்ய வேண்டும். 30 நாள் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கில் செலவு தேவையில்லாத ஒன்று இதை நான் சொல்வதற்கு காரணம் "எல்லாம் நம்ம பணந்தான்".
மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் சமயங்களில் தேர்தல் பிரச்சாரத்தால் படிப்பு பாதிக்கும், பொதுத் தேர்வு முடிந்து விட்டாலும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போக வாய்ப்பு உண்டு.
கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 2 அன்று தான் முடிவடைகிறது அந்த சமயம் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருப்பார்கள் இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் தேர்தலா? கிரிக்கெட்டா என்ற யோசிக்க வைக்கும்.
ஏன் தேர்தல் தேதியை இவ்வளவு சீக்கிரம் வைத்தார்கள்? இத்தனை பிரச்சனை இருக்கும் போது மே முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்தலை வைத்திருக்கலாம்! யோசிக்குமா தேர்தல் ஆணையம்?
நாட்டின் அனைத்து விசயங்களுக்கு கவுட்டி கவுட்டியாக யோசிக்கும் தேர்தல் அதிகாரிகள் இந்த விசயத்தில் யோசிக்காதது ஏனோ?
நம் மக்கள் நிறைய பொது நல வழக்குகள் தொடருகிறார்கள் நியாயமான காரணங்கள் இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க கோர்ட் படி ஏறுவார்களா?
அஞ்சறைப்பெட்டி வர வர மெருகேறிக்கொண்டே வருகிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteசங்கவி.. அதென்ன கும்தலக்கா.. பொழிப்புரையுடன் விளக்கவும்.. ஹி ஹி
ReplyDeleteநம் மக்கள் நிறைய பொது நல வழக்குகள் தொடருகிறார்கள் நியாயமான காரணங்கள் இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க கோர்ட் படி ஏறுவார்களா? ////
ReplyDeleteநல்ல ஆலோசனையாக இருக்கிறதே...
//அங்கு பணிபுரியும் நம் இந்தியர்கள் படாது பாடு படுகின்றனர் அவர்களை இந்திய அரசு விரைவில் மீட்க விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் வழி வகுப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.//
ReplyDeleteஅதிலும் நிறைய தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் என்பதும் அவர்களில் பலர் தாயகம் திரும்பியிருப்பதும் ஆறுதல்.
//இது ஒரு பொழப்பான்னு தெரியல! "ஏமாறும் ஆண்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்".//
ReplyDeleteகோவையிலும் ஆரம்பித்து விட்டார்களா? சுத்தம்...!
//நம் நாட்டு அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டாஸ்மார்க் வரிகளில் தான் வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன்!//
ReplyDeleteபுகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரியும் சேர்த்துக்குங்க...! :-)
சிறப்பான பதிவு
ReplyDeleteதகவல் அணைத்தும் அருமை
அஞ்சறை பெட்டி வளர்கிறது....
ReplyDeleteகால் செண்டர்கள் இது போல விதம் விதமாக இருக்கத்தான் செய்கின்றன..
ReplyDeletekumthalakka superungo
ReplyDeleteஒரு மாதம் பெட்டிகளை பாதுகாக்க வேண்டும் அப்பாதுகாப்பு செலவு தேர்தல் கமிஷன் செய்ய வேண்டும். 30 நாள் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கில் செலவு தேவையில்லாத ஒன்று இதை நான் சொல்வதற்கு காரணம் "எல்லாம் நம்ம பணந்தான்".///
ReplyDeleteஎன் மனதில் உள்ள கேள்வியும் இதுதான்
இது ஒரு பொழப்பான்னு தெரியல! //
ReplyDeleteBSNL நம்பர்ல முக்காவாசி இந்த மெஸ்ஸேஜ்தான் வருது!:(
வழக்கம் போல கலக்கல் ஓகே ஓகே
ReplyDeleteமசாலா பெட்டி காரமும் மணமுமாய் கமகமவென...
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டியில் வழக்கம் போலவே வாசனை தூக்கலாக இருக்கிறது...
ReplyDeleteலிப்யாவில் நடைபெறும் கலவரங்கள் சீக்கிரம் ஒரு முடிவிற்கு வரும் என்று நம்புகிறேன்... நிறைய இந்தியர்கள் மாட்டி கொண்டுள்ளார்கள்...
மீட்பு பணியில் துரிதமாக செயல்படும் நம் அரசுக்கு வாழ்த்துக்கள்...
//ஏ.ஆர். ரகுமானுக்கு எப்படியும் ஆஸ்கர் விருது கிடைத்து விடும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம் ஆனால் கிடைக்கவில்லை//
ஆஸ்கர் என்பது அமெரிக்கர்களால், அமெரிக்கப்படங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு விருது... அதை பெறுவதில் எனக்கு அக்கறையில்லை.. (ஒலக நாயகனின் அருமையான ஸ்டேட்மெண்ட்..)
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற ஜாம்பவான் இசையமைப்பாளர்களின் வரிசையில் அடுத்த இடம் காலியாகவே உள்ளது.. தேவிஸ்ரீபிரசாத் அந்த இடத்தை நிரப்புவார்... (ஒலக நாயகன் மொக்கைப்படமான “மன்மதன் அம்பு” ஆடியோ வெளியீட்டு விழாவில் உளறியது...)
ஏன் வாக்கு பதிவு தேதிகள் பத்தி உங்க சொந்த கருத்த சொல்லவே இல்லை?
ReplyDelete/./அதென்ன கும்தலக்கா.. பொழிப்புரையுடன் விளக்கவும்..//
ReplyDelete//காங்கிரசு-திமுக பேச்சுவார்த்தை இந்தளவுக்கு இழுபறி செய்வதற்கு பதில் தனித்தனியா நின்று தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவுடன் கூட்டணி ஆட்சி என்று முடிவெடுத்தால் நிச்சயம் திமுக காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பார்கள்.//
ReplyDeleteஅதிமுக தொண்டர்கள் தான் வரவேற்பார்கள்..
//ஏன் வாக்கு பதிவு தேதிகள் பத்தி உங்க சொந்த கருத்த சொல்லவே இல்லை?//
ReplyDeleteஇறுதியில் இருப்பதை படித்து விட்டேன்... நன்றி..
அஞ்சறைப்பெட்டி அசத்தல்... :)
ReplyDeleteஅஞ்றைப்பெட்டியில் முக்கியமான செய்திகள் !
ReplyDelete