Sunday, March 20, 2011

தன்மானமுள்ள வைகோவிற்கு பகிரங்கமான 10 கேள்விகள்...


தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.

திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது அப்போதாவது வைகோ சுதாரித்திருக்க வேண்டும். கடைசியாக நடந்த லோக்சபா தேர்தலில் 4 இடங்களை மட்டுமே ஜெவிடம் வாங்க முடிந்தது ஆனால் கடைசியாக வந்து சேர்ந்த பாமக 7 இடங்களை வாங்கியது தனிக்கதை. இதற்கெல்லாம் காரணம் தன்னுடன் ஆரம்பத்தில் இருந்த தலைவர்கள் தற்போது இல்லை என்பதை வைகோ உணரவேண்டும்.

வைகோவிற்கு சில பகிரங்கமான கேள்விகள்...

1. இன்று தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் கட்சி மதிமுக என்றால் அன்று  கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தது ஏன்? அப்போது எங்க போச்சு உங்க சுயமரியாதை?

2. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டி போடுவது என்பது தார்மீக கடமை.இப்போது ம தி மு க எடுத்து உள்ள முடிவு ஏன்?தேர்தல் முறை சரி இல்லை என்பதாலா? அல்லது அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கபடுகின்றது என்பதாலா? கூட்டணி கட்சியில் பிரச்சனை என்றால் ஏன் பேசி தீர்க்க முயலவில்லை?

3. நீங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது உங்களுடன் வந்த தலைவர்கள் எல்லாரும் அப்போது திமுகவின் ஜம்புவான்கள் அவர்கள் திரும்பி மாற்று கட்சிக்கு செல்லம் போது ஏன் அவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை? உங்கள் கட்சியை விட்டு ஒரு சில தலைவர்கள் வெளியேறிய போதும் மற்றவர்களை வெளியேற விடாமல் ஏன் அரவணைக்கவில்லை?

4. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகத்தான் நீங்கள் ஒரு அரசியல் கட்சியை இவ்வளவு நாள் நடத்துனீங்களா?

5. ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து ஏன் 3 ம் அணி துவங்க முயற்சிக்கவில்லை (நிச்சயம் ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்சியிட்டு இருந்தால் கணிசமாக வெற்றி பெற்று இருக்கலாம்)

6. அரசியலில் உணர்ச்சிக்கு இடம் இல்லை, தந்திரமே வெல்கிறது என்பதை இப்போதாவது உணர்தீர்களா? ஏன் கிளை, கிளையாக, ஊர் ஊராக சென்று உங்கள் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை?

7. மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இந்த முடிவை அறிவித்ததும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்களா? இன்று உங்கள் தொண்டர்களின் மனநிலைமையை நினைத்து பார்த்தீர்களா?  ஏன் உங்கள் முடிவை மறுபரீசீலனை செய்யக்கூடாது?

8. இது வரை யாருக்கும் பயபடாமல், யாருக்கும் இறங்கி வராமல் இருந்த ஜெ அவர்கள் இறங்கி வந்து தொகுதிகளை உயர்த்தி 13 தொகுதிகளை தருகிறேன், ஒரு MP தருகிறேன் என்று கூறிய பின்பும், நீங்கள் தன்மானம், சுயமரியாதை என்று சொல்லி உங்கள் கட்சி தொண்டர்களையும், கிடைக்கப்போகும் சில எம்எல்ஏக்களையும் முக்கியமாக எம்பி பதவியையும் ஏன் விட வேண்டும்?

9. 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்?

10. இதுவரை உங்களுடன் இருந்து வெளியேறியவர்களை விடுங்கள் தற்போது உங்களுடன் இருப்பவர்கள் உங்கள் மேல் உள்ள அன்பால் இருப்பவர்கள் அவர்களுக்காக ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது?

35 comments:

  1. இந்த தேர்தலை வைகோ புறக்கணிப்பதால் அந்தக் கட்சியின் எதிர்காலம் அழிந்து போகக்கூடும்..

    ReplyDelete
  2. வை.கோவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு வருந்தத்தக்கது. தமிழக அரசியலுக்கு நல்ல அறிகுறியல்ல.

    ReplyDelete
  3. இந்தக் கேள்விகளை அவருக்கு அனுப்பிவைத்து அதன் பதில்களையும் பிரசுரிங்கள்

    சுயநல அரசியல்வாதிகள்

    ReplyDelete
  4. melotamaga padithal unga kelvi nyayam pola therigiradhu.. aanal.. sila kelvigam konjam AMMA jalra pola theriyudhu..


    24 ketu , 6 - 7 - 6 - 8 - 9 - 12 nu kevala paduthinadhu theiryalaya ungaluku?????

    OPS , sengaotaiyaney vaiko vidam 8 illai ippo 6 dhan enru solla migavum sangojapattargalam..

    amma ivarkalai thorathi vida mudivu seithuvittu dhan 160 seat candidates announce pannargal..

    2006 il 6 dhan win panneenga.. so only 7 nu solranga.. appo pona election la admk 50 dhaney win panniyadhu.. admk ippo max 80 dhaney poti podanum???

    ReplyDelete
  5. அதிமுக இவரை கடைசிவரை காக்கவைத்து புறக்கணித்தது வேண்டுமானால் தவறு என்கலாம்... ஆனால் இவரை புறக்கணித்தது தவறு இல்லை!

    ReplyDelete
  6. என்னிடம் பதில் தற்போது இல்லை

    - இப்படிக்கு வை....

    ReplyDelete
  7. கேள்வி எண் 5, 6 & 7 ஆகியவைகளுக்கு நிச்சயம் வைகோ பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறைந்த பட்சம் மனச்சாட்சிக்காவது?

    ReplyDelete
  8. புறக்கணிப்பது தவறான முடிவாகும்...அதற்கு பதில் 13 இடத்தில் நிற்கலாம் இப்படியே வைகோ செய்தால் அந்த கட்சி அழிந்து விடும்...

    ReplyDelete
  9. இப்போதைக்கு வை கோ எடுத்த முடிவு சரிதான்.. வேறு வழி இல்லை

    ReplyDelete
  10. //இப்போதைக்கு வை கோ எடுத்த முடிவு சரிதான்.. வேறு வழி இல்லை//

    Yes.

    ReplyDelete
  11. இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு வருந்தத்தக்கது. தமிழக அரசியலுக்கு நல்ல அறிகுறியல்ல.

    ReplyDelete
  12. இனியும் வைகோ திருந்துவார்னு நினைகிரீன்களா நோ நெவர். பொருத்து இருந்து பாருங்க....

    ReplyDelete
  13. நியாயமான கேள்விகள் தான், ஆனால் எப்போதும் பதில் கிடைத்திடாத கேள்விகள்.
    தனித்து போட்டியிட துட்டு வேணுமே...!! பிரபாகரன் இருந்தால் நிலைமையே வேறு

    ReplyDelete
  14. வை.கோ இல்லாதது அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் பின்னடைவுதான்.தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா எடுத்த மிகத்தவறான முடிவு இது.நம்பி இருந்தவரை நட்டாற்றில் விட்ட இவர் நல்லாட்சியை தருவாரா..? என்று மக்கள் மனதில் சந்தேகத்தை உண்டாக்கி விட்டார்.நிச்சயம் இதன் பலன் அ.தி.மு.க விற்கு பாதகமாகவும் தி.மு.க விற்கு சாதகமாகவும் தேர்தலில் எதிரொலிக்கும்.

    ReplyDelete
  15. வைகோ விற்கு பிறகு, ஜெ வின் கடிதம் தங்களுக்கு தான்,அவரின் சார்பாக தாங்கள் எழுதிய கடிதத்திற்கு நன்றி சொல்லி, காத்திருங்கள். வை கோ ஒரு நம்பிக்கை துரோகி. 2006 ல் 2 சீட்டிற்காக, கருணாநிதியை விட்டு ஜெயிடம் அடிமை சாசனத்தில் கையழுதிட்டவர், இன்று சுயமரியாதை என்று கூவுகிறார். அவருக்கு தெரியும், 12 இடங்களில் போட்டியுடுவதும், தேர்தலை புறக்கணிப்பதும் ஒன்றே என்று, மொத்தத்தில் கட்சியை கைகழுவி விடவேண்டியதுதான், அவருடைய இன்றைய எண்ணமெல்லாம், கட்சி அழிந்தாலும், அவருக்கு துரோகம் செய்த ஜெ வை பழிவாங்கவேண்டுமேன்பதே. ஆனால் நடுநிலையாளரகிய ? நீங்கள் இன்னு சிலகேள்விகளையும் கேட்டிருக்கலாம். 1994 ஊழல் ராணியின் ஆட்சியை எதிர்த்து நடைபயணம் போன அவர் ஏன் அவருடன் 1998 ல் கூட்டணி அமைத்தார், பொடாவின் சிறைவாசத்திற்கு பின் ஏன் 2006 ல் கூட்டணி அமைத்தார் என்று. அவருக்கு வேண்டியது எல்லாம் தனக்கு MP பதவிதானே தவிர தன்னுடைய தொண்டர்களுக்கு MLA இல்லை.முருகவேல் ச. சென்னை 18 .

    ReplyDelete
  16. சங்கவி...

    அருமையான கேள்விகள்...

    வை.கோ.. ஜெயலலிதாவுடன் இணைந்து போட்டியிட்டால் தான், தி.மு.க.வை வலுவிழக்க செய்ய முடியும்... இந்த நிலையில், ஒதுங்கி போவது நல்ல செயலில்லை... கூட்டணிக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் செயல்...

    இவர் இது போல் செய்தது, தி.மு.க.விற்கு வலு சேர்ப்பது போல் உள்ளது...

    ReplyDelete
  17. சரியா கேள்விகள் தான்..

    தேர்தல் புறக்கணிப்பு அரசியல் கட்சிக்கு அழகல்ல..

    ReplyDelete
  18. போராடுவதே வீரனுக்கு அழகு

    ReplyDelete
  19. 1. இன்று தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் கட்சி மதிமுக என்றால் அன்று கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தது ஏன்? அப்போது எங்க போச்சு உங்க சுயமரியாதை//

    தனிக்குடித்தனம் சென்ற மகன் தந்தையை பார்க்க வருவதில்லையா என்று அப்போது கேட்டார் .பேசாமல் சண்டை போட்டுக்கொண்டாவது கூட்டுக் குடித்தனம் செய்திருக்கலாம் .

    2.உங்கள் கட்சியை விட்டு ஒரு சில தலைவர்கள் வெளியேறிய போதும் மற்றவர்களை வெளியேற விடாமல் ஏன் அரவணைக்கவில்லை?
    இவர் பலத்தின் மேல் இருந்த நம்பிக்கை பொய்த்ததால் அவர்கள் போனார்கள் .இறுதியில் கலைப்புலி தாணு திருமண அழைப்பிதழ் கொடுக்க கூட appointment கொடுக்க மறுத்ததாக அவர் சொல்லி பிரிந்து போனார் .

    .3.அரசியலில் உணர்ச்சிக்கு இடம் இல்லை, தந்திரமே வெல்கிறது என்பதை இப்போதாவது உணர்தீர்களா//
    அவர் கலைஞரிடம் அரசியல் அரிச்சுவடி படித்தவர் .அவருக்கு தெரியாது என்கிறீர்களா ?

    4.ஏன் கிளை, கிளையாக, ஊர் ஊராக சென்று உங்கள் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை?
    ஆரம்பத்தில செய்தார்கள் ,தொடர்ந்து செய்யவில்லை .ஏனோ ஊக்கமற்று போனார்கள்

    5.ஏன் உங்கள் முடிவை மறுபரீசீலனை செய்யக்கூடாது?
    தியாகி பட்டம் வாங்க தான்

    6. இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்?
    இதில் வேறு ஏதோ சிக்கல் இருக்கிறது .இவரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று முதலிலேயே கலைஞர் சொல்லிவிட்டார் .இவரோ எந்த அணியையும் எதிர்க்கப் போவதில்லை என்று சொல்கிறார் .இவர் சொல்லும் காரணம் பொருத்தமாக இல்லை .

    7.இதுவரை உங்களுடன் இருந்து வெளியேறியவர்களை விடுங்கள் தற்போது உங்களுடன் இருப்பவர்கள் உங்கள் மேல் உள்ள அன்பால் இருப்பவர்கள் அவர்களுக்காக ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது.
    அவர் தலைவர் அதனால் அவர் இஷ்டம்

    8. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகத்தான் நீங்கள் ஒரு அரசியல் கட்சியை இவ்வளவு நாள் நடத்துனீங்களா

    அதானே ....

    ReplyDelete
  20. காற்றுப்போன பலூன் இந்த சிங்கம் இனி எனனத்த செய்வது கட்சியை கலைக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  21. திரு. வைகோ அவர்கள் தனது கட்சியை வளர்க்காதது அவர் செய்த மிகப்பெரிய தவறு. அதன் பலனை இன்று அறுவடை செய்கிறார்.

    ReplyDelete
  22. All maters copy past from Dinamani........!!!!!!!!!

    ReplyDelete
  23. அன்று (2006) 21 தந்த கலைஞரை எதிர்த்து ஜெ விடம் ஐக்கியம் ஆனார், இன்று அதே 21 கெஞ்சி கேட்டும் இல்லை என்று அம்மா துரத்தி விட்டது.. பாவம்.. தன வினை தன்னை சுடும்..

    ReplyDelete
  24. "வை கோ" வை ஜெயலலிதா நடத்திய விதம் சற்றும் ஏற்று கொள்ள முடியாத அநாகரிகமான ஒன்று...
    இதை விட இவரை ஆதரிப்பதாக தினமலர்(மலம்) செய்தி தாள் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை.. நமது எம் ஜி யார் பத்திரிகையே தோற்றுவிடும் போல... இன்றைய தலைப்பு செய்தியில் "வை கோ ஓட்டம்" என்று பெரிதாக போட்டு அவரை அவமான படுத்தியுள்ளது...

    "வை கோ" எப்போதும் எங்கும் ஓட மாட்டார்... இந்த அம்மா தான் தோற்றால் கொட நாடு ஓடி ஒளிந்து கொள்ளும்...

    ReplyDelete
  25. \\1. இன்று தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் கட்சி மதிமுக என்றால் அன்று கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தது ஏன்? அப்போது எங்க போச்சு உங்க சுயமரியாதை?\\இதெல்லாம் உணர்ச்சி வேகத்துல வரும் வார்த்தைகள். இதையெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு அர்த்தமெல்லாம் கேட்கப் படாது.

    ReplyDelete
  26. \\அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டி போடுவது என்பது தார்மீக கடமை.இப்போது ம தி மு க எடுத்து உள்ள முடிவு ஏன்?\\ தார்மீக கடமை நாமாக வைத்துக் கொள்வது, பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இப்போது தேர்தலில் நிர்ப்பதால் ஓட்டுகள் பிரிக்கப் பட்டு வேறு யாருக்காவது தான் நமையாகப் போகுமே தவிர பலனேதும் இருக்காது

    ReplyDelete
  27. \\. நீங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது உங்களுடன் வந்த தலைவர்கள் எல்லாரும் அப்போது திமுகவின் ஜம்புவான்கள் அவர்கள் திரும்பி மாற்று கட்சிக்கு செல்லம் போது ஏன் அவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை? உங்கள் கட்சியை விட்டு ஒரு சில தலைவர்கள் வெளியேறிய போதும் மற்றவர்களை வெளியேற விடாமல் ஏன் அரவணைக்கவில்லை?\\ தடுக்காமலா இருந்தோம், முடிஞ்சவரைக்கும் முயற்சிப் பண்ணித்தான் பார்த்தோம், இங்கே இருந்தா பொழக்க முடியாதுன்னு ஓடிட்டாங்க என்ன பண்ணுவது.

    ReplyDelete
  28. \\தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகத்தான் நீங்கள் ஒரு அரசியல் கட்சியை இவ்வளவு நாள் நடத்துனீங்களா?\\ எதையோ நினைச்சோம், எதுவோ ஆயிடுச்சு. இப்படியாகும்னு முன்னமே
    தெரியாமப் போச்சே!!

    ReplyDelete
  29. ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து ஏன் 3 ம் அணி துவங்க முயற்சிக்கவில்லை (நிச்சயம் ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்சியிட்டு இருந்தால் கணிசமாக வெற்றி பெற்று இருக்கலாம்)ரொம்ப தமாசு பண்றீங்க. ஈழப் பிரச்சினையை வச்செல்லாம் இன்னைக்கு ஓட்டு வாங்க முடியாது. ஜெயிக்கணும்னா ஓட்டுப் போடுறவங்களுக்கு பணத்தை அள்ளி வீசணும், இலவசங்கள் குடுக்கணும், பிரியாணி போடணும், சாராயம் ஊத்தணும். இத்தனைக்கும் நாங்க எங்கே போவது.

    ReplyDelete
  30. \\ஏன் கிளை, கிளையாக, ஊர் ஊராக சென்று உங்கள் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை?\\ அங்கங்கே மேடையில் பேசித்தான் பார்க்குறோம், கைதட்டுறாங்க, ஓட்டு போட மாட்டேங்கிறாங்க.

    ReplyDelete
  31. பத்து என்ன நூறு வேண்டுமானாலும் கேளுங்கள் !!! அவர் படித்தால் தானே.. பாவம் அவர் என்ன செய்தாலும் கேள்வி கேட்கப்படுவார் !!!!

    எலிக்கு செல்போன் கிடைத்தால் புலிக்கு மிஸ்டு கால் கொடுக்குமாம்.. அப்படி இருக்கிறது நமது பதிவுலகம்... இலவசமாக எழுத முடிவதற்காக எல்லோரையும் பதிலே கிடைக்காதென தெரிந்தும் கேள்வி கேட்பது !!!

    ReplyDelete
  32. \\நீங்கள் தன்மானம், சுயமரியாதை என்று சொல்லி உங்கள் கட்சி தொண்டர்களையும், கிடைக்கப்போகும் சில எம்எல்ஏக்களையும் முக்கியமாக எம்பி பதவியையும் ஏன் விட வேண்டும்?\\ இதெல்லாம் இருக்கிறவன் எவனாச்சும் போய் ஜெயலலிதா கூட கூட்டு வைப்பானா என்று நீங்க யோசிக்கவேண்டாமா?

    ReplyDelete
  33. http://pichaikaaran.wordpress.com/2011/03/21/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/

    ReplyDelete
  34. you asked 10 questions to vaiko...

    can you ask one question to Jayalalitha?
    1) what was the reason you started you offer with 7 seats and went to 8 and again came down to 7? when you can call and talk to tha.pandian to solve issues, why cant you do the same to vaiko?

    ReplyDelete
  35. வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல
    அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
    தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
    அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறதா??
    "தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து
    அழ , கருணாநிதி அழ நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து
    தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது
    ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
    அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
    கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.

    வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??

    என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.

    ReplyDelete