Showing posts with label மதிமுக. Show all posts
Showing posts with label மதிமுக. Show all posts

Sunday, March 20, 2011

தன்மானமுள்ள வைகோவிற்கு பகிரங்கமான 10 கேள்விகள்...


தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.

திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது அப்போதாவது வைகோ சுதாரித்திருக்க வேண்டும். கடைசியாக நடந்த லோக்சபா தேர்தலில் 4 இடங்களை மட்டுமே ஜெவிடம் வாங்க முடிந்தது ஆனால் கடைசியாக வந்து சேர்ந்த பாமக 7 இடங்களை வாங்கியது தனிக்கதை. இதற்கெல்லாம் காரணம் தன்னுடன் ஆரம்பத்தில் இருந்த தலைவர்கள் தற்போது இல்லை என்பதை வைகோ உணரவேண்டும்.

வைகோவிற்கு சில பகிரங்கமான கேள்விகள்...

1. இன்று தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் கட்சி மதிமுக என்றால் அன்று  கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தது ஏன்? அப்போது எங்க போச்சு உங்க சுயமரியாதை?

2. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டி போடுவது என்பது தார்மீக கடமை.இப்போது ம தி மு க எடுத்து உள்ள முடிவு ஏன்?தேர்தல் முறை சரி இல்லை என்பதாலா? அல்லது அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கபடுகின்றது என்பதாலா? கூட்டணி கட்சியில் பிரச்சனை என்றால் ஏன் பேசி தீர்க்க முயலவில்லை?

3. நீங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது உங்களுடன் வந்த தலைவர்கள் எல்லாரும் அப்போது திமுகவின் ஜம்புவான்கள் அவர்கள் திரும்பி மாற்று கட்சிக்கு செல்லம் போது ஏன் அவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை? உங்கள் கட்சியை விட்டு ஒரு சில தலைவர்கள் வெளியேறிய போதும் மற்றவர்களை வெளியேற விடாமல் ஏன் அரவணைக்கவில்லை?

4. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகத்தான் நீங்கள் ஒரு அரசியல் கட்சியை இவ்வளவு நாள் நடத்துனீங்களா?

5. ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து ஏன் 3 ம் அணி துவங்க முயற்சிக்கவில்லை (நிச்சயம் ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்சியிட்டு இருந்தால் கணிசமாக வெற்றி பெற்று இருக்கலாம்)

6. அரசியலில் உணர்ச்சிக்கு இடம் இல்லை, தந்திரமே வெல்கிறது என்பதை இப்போதாவது உணர்தீர்களா? ஏன் கிளை, கிளையாக, ஊர் ஊராக சென்று உங்கள் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை?

7. மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இந்த முடிவை அறிவித்ததும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்களா? இன்று உங்கள் தொண்டர்களின் மனநிலைமையை நினைத்து பார்த்தீர்களா?  ஏன் உங்கள் முடிவை மறுபரீசீலனை செய்யக்கூடாது?

8. இது வரை யாருக்கும் பயபடாமல், யாருக்கும் இறங்கி வராமல் இருந்த ஜெ அவர்கள் இறங்கி வந்து தொகுதிகளை உயர்த்தி 13 தொகுதிகளை தருகிறேன், ஒரு MP தருகிறேன் என்று கூறிய பின்பும், நீங்கள் தன்மானம், சுயமரியாதை என்று சொல்லி உங்கள் கட்சி தொண்டர்களையும், கிடைக்கப்போகும் சில எம்எல்ஏக்களையும் முக்கியமாக எம்பி பதவியையும் ஏன் விட வேண்டும்?

9. 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்?

10. இதுவரை உங்களுடன் இருந்து வெளியேறியவர்களை விடுங்கள் தற்போது உங்களுடன் இருப்பவர்கள் உங்கள் மேல் உள்ள அன்பால் இருப்பவர்கள் அவர்களுக்காக ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது?