Saturday, March 19, 2011

கதாநாயகியின் இலவச கவர்ச்சி....

தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று வர்ணித்தார் கலைஞர். அவர் கூறியது கதாநாயகியின் கவர்ச்சி நிறைய...
 
*1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும்.
 
*ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு.
 
* குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னூரிமை வழங்கப்படும்.
 
*வீடுதோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் வழங்கப்படும். ஏற்கனவே கிரைண்டர் உள்ள வீடுகளுக்கு இலவசமாக மிக்ஸி வழங்கப்படும்.
 
*பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் இலவசமாக 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
 
*அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதம் ஆக உயர்தப்படும்.
 
* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை. 
 
*அரசு கல்லூரியில்  பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு லேப்டாப்
 
*அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம்
 
*எல்லா மாவடட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.
 
*60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை.
 
*முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
 
* கோவை  மதுரை நகரில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல் படுத்தப்படம்.
 
*விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.
 
 *சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.
 
*அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்
 
*மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும்.
 
*திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.
 
 *உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும்.
 
*அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும்.
 
*சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும்.
 
*மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
 
*தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும்.
 
*சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை
 
*பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்
 
*திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
*தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.  
 
*சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
 
*மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும்.
 
*நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 
* மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை
 
*சென்னையிலிருந்து கோவைக்கு  புல்லட் ரெயில் அமைக்க நடவடிக்கை.
 
*தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். 
 
நம் தமிழநாட்டு மக்கள் இந்த கவர்ச்சியை எந்த அளவிற்கு வரவேற்கிறார்கள் என்று பார்ப்போம்....

11 comments:

  1. Everything is good ecept one.
    //*விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.//

    ReplyDelete
  2. இதையும் சேத்திக்கோங்கோ.

    துணையில்லா வயதானவர்களுக்கு துணைக்கு ஆள் அனுப்பப்படும்.

    ReplyDelete
  3. மக்களிடம் இது எடுபடுமான்னு பார்க்களாம்..

    ReplyDelete
  4. ilavasangalaal naam taramizhanthu pogirom... sinthippom...

    ReplyDelete
  5. நம்ம கடையிலும் இன்னிக்கு இதான் நியூஸ்
    http://ragariz.blogspot.com/2011/03/dmk-manifesto.html
    வாழ்க கலைஞர், வாழ்க கலைஞரின் கதாநாயகி

    ReplyDelete
  6. //திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.//

    திமுக வந்தால் கண்டிப்பா மேற்சொன்னது தேவை படும்...

    ReplyDelete
  7. இனி மற்ற அறிக்கைகளையும் பார்த்து சந்தோஷப்படலாம்! (இதே இம்ப்ரூவ் பண்ணி வரும்!)

    ReplyDelete
  8. கர்ப்பிணிகளுக்கு ரூபாய்.10000 கொடுப்பது போல் கர்ப்பமாக்குபவர்களுக்கும் மானியமாக ரூபாய்.5000 கொடுத்தால் நிறைய ஒட்டு கிடைக்கும்.

    ReplyDelete
  9. "இதையும் சேத்திக்கோங்கோ.

    துணையில்லா வயதானவர்களுக்கு துணைக்கு ஆள் அனுப்பப்படும்."

    >>>>>>>>>>>

    வாத்தியார் புடிச்சாரு பாரு பாயிண்ட இதையும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா ஹிஹி!

    ReplyDelete
  10. இந்த கவர்ச்சி அதிமுக-வையும் ஆட்டிப்படைத்து அவர்களையும் இதற்கு போட்டியாக இலவசங்களை வழங்க வைக்கும்..

    ReplyDelete