Thursday, March 10, 2011

ஓடிப்போனவள்


"ம்ம கிழக்கத்து வீட்டு செங்காத்தி மக ஓடிப்போயிட்டாளாம்!"

"என்னடி சொல்ற பாவாயி?"

"அட நெசத்தைத்தான் சொல்றேன் அம்மணிக்கா"

" குனிஞ்ச தல நிமிராம நடப்பாளே, அவளா?"

"அட ஆமாங்கர! ... சும்மாவா  சொன்னாங்க ஊமை ஊரைக் கெடுக்கும்ன்னு"

"அதுதான,  அவள தங்கமான பொண்ணுன்னு  நினைச்சிருந்தேனே!  கூட்டிட்டுப் போனது யாராம்?"

"தெரியலக்கா, நானும் அதத்தான் கேக்கற ஒரு பய புள்ளைக்கும்  தெரியல"

" எதுனாச்சும் அசலூரு   பசங்களா இருப்பாய்ங்களோ " ?

" இருக்கலாம். அட என்னக்கா இது அங்க பாருங்க போலீஸ் ஜீப் வருது. ஒரு வேளை கேசு கீசு  கொடுத்திருப்பாய்ங்களோ ?

"ஆமாண்டி! பொம்பள போலீசில்ல வருது"

"
ம்மா இங்க யாரு பாவாயி?"

" ஏனுங்க நாந்தானுங்க., ஏ...ஏ... கேக்கறீங்க! "

"உம்மகந்தான பாஸ்கரு"?

"ஆமா"

"அவன் ஒரு புள்ளைய  கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து பாதுகாப்பு கேக்கறான், அதைப் பத்தி விசாரிக்கோனும் வாங்க ஸ்டேசனுக்கு!"

"அய்யய்யோ  எம்மவனா அப்படி செஞ்சவன்? "
 " போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு போலீசுகாரங்க சொல்றத கேட்டுக்கிட்டு அதன்படி நடக்கிற  
வழியப் பாரு பாவாயி!" என்று சொல்லிவிட்டு...

"டியே, உம் மவனுக்கு நிறைய வரதட்சணை சீர் செனத்தியோடு பசையுள்ள இடமாக் கிடைச்சாத்தான்ஆச்சுன்னு உன்னோட  விருப்பத்திலேயே குறியா இருந்த நீ நல்ல மனசு, பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிற பொண்ணா தேடத் தவறிட்ட. ஆனா ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பே வாழப் போகிற வாழ்க்கைக்கு தேவையான மூலதனம்னு அவங்க இருவரும் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க. இதுக்கு நீ நிச்சயம் ஒத்துக்க மாட்டேங்கறதாலதான்  அந்த ஏழைப் பெண்ணை  கூட்டிட்டுப்  போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு போடான்னு சொன்னவரு என் புருஷந்தா " என்று மனசுக்குள் சொல்லிக்  கொண்டே அவளுடைய வீட்டுக்குப் போனாள் அம்மணி".

18 comments:

  1. //ஓடிப்போனவள்//

    hehe........

    ReplyDelete
  2. நல்ல சிறுகதை

    ReplyDelete
  3. ரெண்டு நாளா....தான் இவர் கவிதை எழுதிட்டு இருந்தார் அதுக்குள்ள ஓடி போய்ட்டாங்களாம் பாவம் சதீஷ்

    ReplyDelete
  4. மகனைப் பெற்ற தாய் தந்தையருக்கு
    "இனிமேலாவது பேராசை பெரும் நஷ்டம்
    என்பதை அறிந்து திருந்தி விடுங்கள்
    இல்லையேல் இதுபோன்ற இழப்புகளைச்
    சந்திக்க தயாராகுங்கள்"
    சங்கவி உங்கள் எச்சரிக்கைக் கதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //"அவன் ஒரு புள்ளைய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து பாதுகாப்பு கேக்கறான், அதைப் பத்தி விசாரிக்கோனும் வாங்க ஸ்டேசனுக்கு!"
    //

    பருத்தி வீரன் மாதிரி தெரியுதே

    ReplyDelete
  6. கதையின் கருத்து அருமை...

    ReplyDelete
  7. அருமையான சின்னஞ்சிறுகதை

    ReplyDelete
  8. நீங்க "கதை மாஸ்டர்" பாஸ்!!

    ReplyDelete
  9. ஆசை...ஆசை அழிவுதான் !

    ReplyDelete
  10. நானும் இது கவிதையோன்னு நினச்சி படிக்க ஆரம்பிச்சேன்.. அட சூப்பரா நெத்தியில பொட்டுன்னு அடிச்சா மாதிரி ஒரு கதை சூப்பர் மக்கா....

    ReplyDelete
  11. ஆனா ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பே வாழப் போகிற வாழ்க்கைக்கு தேவையான மூலதனம்னு அவங்க இருவரும் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க.


    ..... Super!

    ReplyDelete
  12. பருத்தி வீரன் ஸ்டைல்ல நீங்க கொளுத்தியிருக்கும் ஒரு பட்டாசு சிறுகதை....

    நல்லா இருக்கு....

    ReplyDelete
  13. போன கதைய விட இது நல்லா இருக்கு,

    ReplyDelete