Sunday, March 13, 2011

சென்னையில் போட்டியிட தயங்கும் திமுக தலைவர்கள்...


"சென்னையில் பெரும்பாலான தொகுதிகள் தி.மு.க., வுக்கு சாதகமாக இல்லை' என, உளவுப் பிரிவு மூலம் தெரிந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிடுவதைத் தவிர்த்து, தங்களுக்கு சாதகமான தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிடும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டு, தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிட ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கின்றன.

அதே போன்று, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன், காங்., கைவசம் வைத்துள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியைத் தேர்வு செய்துள்ளாராம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் அங்கு சேர்மனாக இருப்பதால், அவரது ஆதரவோடு அந்தத் தொகுதியில் எளிமையாக ஜெயித்து விடலாம் என, பன்னீர்செல்வம் ஆலோசனை கூறி யுள்ளார்.

துணை முதல்வர் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, பாளையங்கோட்டை தொகுதி பக்கம் போய்விடலாம் என திட்டமிட்டுள்ளார்.

ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளார்.

இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

8 comments:

  1. இந்தவாட்டி சென்னை இழுபறியென்பது என்னமோ உண்மைதான். ஆனால், இது போல முன்பும் பேசப்பட்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. :-)

    ReplyDelete
  2. சென்னையில் மின்வெட்டு இல்லை - மற்ற இடங்களில் அறிவித்து 2 மணி நேரமும் அறிவிக்காமல் கூடுதலாகவும் மின்வெட்டு இருக்கிறது! இதனால் வெயிலின் கொடுமை தெரியும் நாட்களில் தலைவர்கள் மற்ற இடங்களிலும் பாதகமான நிலையையே பார்ப்பார்கள்!

    ReplyDelete
  3. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் தாக்கம் அதிகமாக இருக்கும். அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று ஒரு வேலை நினைத்திருக்கலாம். அதன் காரணமாகவே அவர்கள் போட்டியிட தயங்குகிறார்கள் போல...

    ReplyDelete
  4. தான் தொகுதிக்கு நல்லதுதான் செய்துள்ளோம் என்று நினைத்தால் தொகுதி மாறவேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சரே தொகுதி மாறும்போது இவர்கள் லட்சணம் தெரிகிறது!

    ReplyDelete
  5. chennaiya keduththavanga ippa matra urukkum poyachcha... aiyyoooo...

    ReplyDelete
  6. //இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது//

    இப்பமே கிலி வந்துருச்சி போல...

    ReplyDelete
  7. அவ்வளவு சதனை சொஞ்சியிருக்காங்..

    தமிழ்நாடு பூரா எப்படியிருக்கு தெரியல..

    ReplyDelete
  8. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி

    ReplyDelete